Tamil Star |
- சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது
- விழுப்புரத்தில் 5 சத்துணவு அமைப்பாளர்கள் சஸ்பெண்டு: கலெக்டர் உத்தரவு
- கணவனை ஏமாற்றுவதில் செம கில்லாடிகளாக அமெரிக்கப் பெண்கள்
- ஸ்பெயின் ரயில் விபத்து : இரு மடங்கு வேகத்தில் சென்ற ரயில்
- சீனா: முதியோர் இல்லத்தில் தீ விபத்து
- சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 12-ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
- ஆஸ்திரேலிய படகு விபத்து: பலியானோர் தொகை 15
- பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் – பெபரல்
- இலங்கையில் ஊடக சுதந்திரம் என்ற கருத்துக்கு இடமில்லை; ப்ரீடம் ஹவுஸ் கவலை
- ஜாவா படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின – பலியானோர் தொகை 15 ஆகியது
| சரியாக படிக்காத, 8 வயது சிறுமியை அடித்துக் கொன்ற தந்தை கைது Posted: 26 Jul 2013 11:05 PM PDT சரியாக படிக்கவில்லை என்பதற்காக 8 வயது சிறுமியை பெற்ற தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெங்களூர் வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சத்யநாராயண் சிங் என்பவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனையடுத்து, அவரது 8 வயது மகள் சிமோகாவில் உள்ள தாய்வழி தாத்தா – பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தாள். சமீபத்தில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட அவர் கடந்த மாதம் சிமோகவுக்கு சென்று மகளை தான் படிக்க [...] |
| விழுப்புரத்தில் 5 சத்துணவு அமைப்பாளர்கள் சஸ்பெண்டு: கலெக்டர் உத்தரவு Posted: 26 Jul 2013 10:59 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மயிலம் ஒன்றியம் தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் நேரடி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை குறைவாக வழங்கப்பட்டதற்காகவும், சத்துணவு மையத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் சத்துணவு அமைப்பாளர் அனிதா என்பவரை தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கலெக்டர் சம்பத் உத்தரவிட்டார். இதேபோன்று சத்துணவு மையத்தில் பல்வேறு குறைபாடுகள் [...] |
| கணவனை ஏமாற்றுவதில் செம கில்லாடிகளாக அமெரிக்கப் பெண்கள் Posted: 26 Jul 2013 10:36 PM PDT
கணவருக்குத் தெரியாமல் இரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனர் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, இரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்பெயின் ரயில் விபத்து : இரு மடங்கு வேகத்தில் சென்ற ரயில் Posted: 26 Jul 2013 10:27 PM PDT ஸ்பெயினில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த ரயில் விபத்தில், ரயில் ஓட்டுநரின் தவறே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் ரயில் விபத்தில் 80 பேர் பலியாகினர். 130க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதில் 36 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான அந்த திருப்பத்தில், ரயில் 90 கி.மீ. வேகத்தில் சென்றிருக்க வேண்டும். ஆனால், விபத்து நடந்த போது, ரயில் 180 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. இதுவே விபத்துக்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது [...] |
| சீனா: முதியோர் இல்லத்தில் தீ விபத்து Posted: 26 Jul 2013 10:21 PM PDT தென் கிழக்கு சீனாவின் ஹெய்லோங்ஜாங் மாகாணத்தில் உள்ள ஹெய்லன் நகரில் ஏழ்மை நிலையில் உள்ள நோயுற்ற முதியோரை பராமரிக்கும் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் 283 பேர் தங்கியுள்ளனர். இங்குள்ள ஓர் அறையில் தங்கியிருந்த வாங் குயி என்பவர் வைத்திருந்த பணத்தை யாரோ திருடி விட்டனர். அறையில் இருந்தவர்களிடம் கேட்டு பார்த்தும் யாரும் பணத்தை திருப்பிதர முன்வராததால் ஆத்திரமடைந்த அவர் அந்த கட்டிடத்தை தீயிட்டு எரித்தார். இந்த சம்பவத்தில் வாங்குயி உள்பட 11 பேர் உடல் கருகி [...] |
| சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 12-ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 26 Jul 2013 10:12 PM PDT முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வகையில், பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதிலும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக எனது தலைமையிலான தமிழக அரசு விளங்கி வருகிறது. நான் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மேட்டூர் அணையின் நீர் இருப்பையும், விவசாயிகளின் எதிர்பார்ப்பையும், வேளாண் உற்பத்தி பெருக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, வழக்கமாக ஜுன் 12-ந்தேதி மேட்டூர் [...] |
| ஆஸ்திரேலிய படகு விபத்து: பலியானோர் தொகை 15 Posted: 26 Jul 2013 09:53 PM PDT இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கின. இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கிலோமீற்ரர் தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள [...] |
| பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் – பெபரல் Posted: 26 Jul 2013 09:52 PM PDT பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் [...] |
| இலங்கையில் ஊடக சுதந்திரம் என்ற கருத்துக்கு இடமில்லை; ப்ரீடம் ஹவுஸ் கவலை Posted: 26 Jul 2013 09:48 PM PDT இலங்கையில் ஊடக சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாக "ப்ரீடம் ஹவுஸ்" என்னும் உலக ஊடக சுதந்திர அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டிலும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான தேசிய செயற் திட்டத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது குறித்த பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் அந்தப் பரிந்துரைகளில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் [...] |
| ஜாவா படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின – பலியானோர் தொகை 15 ஆகியது Posted: 26 Jul 2013 09:39 PM PDT இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கின. இதையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள [...] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
