Tamil Star |
- சட்ட விரோத நுளைவுகளுக்கு அகதி அந்தஸ்து இல்லை – ஆஸ்திரேலியா
- இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு -ஆழ்ந்த கவலை தெரிவித்தார் ,கனடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்
- இலங்கை கப்பல் ஐக்கிய அரபு இராச்சிய கடற்பகுதியில் மூழ்கியது- அவுஸ்திரேலிய கடலில் 170 பேருடன் சென்ற படகு மூழ்கியது- 3பேர் பலி
- அஜீத்தின் 53வது பட டைட்டில் ‘ஆரம்பம்’
- ராஞ்சனா 100 கோடி வசூல்.. பாலிவுட்டை தூக்கி சாப்பிட்ட தனுஷ்
- கல்லுரியில் நானும் ரவுடிதான் தெரியுமுல்ல.. சொல்கிறார் சமந்தா
- நடிகை மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம்!
- அடையாள அட்டையில் கையெழுத்திட்ட தயா மாஸ்டர் வெளியில் : அதனை வைத்திருந்த இளைஞர்கள் உள்ளே – அனுரகுமார திஸாநாயக்க
- அடி வாங்குனா இவங்ககிட்ட தான் வாங்கனும்… மிஸ் பண்ணிடாதீங்க…
- நான் ரெடி நீங்க ரெடியா?…
| சட்ட விரோத நுளைவுகளுக்கு அகதி அந்தஸ்து இல்லை – ஆஸ்திரேலியா Posted: 24 Jul 2013 07:31 PM PDT கடல் வழியாக படகுகள் மூலம் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க மாட்டோம் என்று அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதனை சென்னையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து நேற்று புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது பேசிய குடியுரிமை அதிகாரி ஜோஸ் ஆல்வரஸ், ஈரான், ஈராக், இந்தோனேஷியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உரிய விசா இல்லாமல் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு நுழைவது அதிகரித்துள்ளது. [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Jul 2013 07:14 PM PDT
1983 ஜூலை 23 ம் தேதியில் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்து அடித்தும் துரத்தப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அழிக்கப்பட்டன. இந்த கொடூரமான நடவடிக்கைகள் மற்றும் இதயம் நொறுங்கும் இழப்பு விளைவுகளை இன்னும் இலங்கையில் வாழும் தமிழர்கள் போல் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் உணர்கின்றேன். புதிய ஜனநாயக கட்சி இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் நடவடிக்கை பற்றி கவலை அடைகின்றது. கறுப்பு ஜூலை 23, 1983 நினைவு கொள்ளும் அதேநேரம் எமது பொது சபை தமிழ் கனடியர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவோம். நாங்கள் கனடிய அரசாங்கத்தினை உறுதியான இராஜதந்திர நடவடிக்கை எடுக்குமாறும், இந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், குற்றச்சாட்டுக்கள் சுயாதீன விசாரணை நடத்த மறுப்பது தொடர்பாக கனடிய அரசாங்கம் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். என்று ராதிகா சிற்சபேசன் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Jul 2013 09:01 AM PDT
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போதே அது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உம் அல் குவேவென் துறைமுகப் பகுதியில் கொமரோஸ் தீவுகளுக்கு சொந்தமான கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு இரண்டு கப்பல்களிலும் இருந்த 30 பணியாளர்களும் மீட்கப்பட்டதாக செய்தி சேவை ஒன்று தெரிவிக்கிறது. சம்பவத்தின்போது இலங்கைக் கொடியை தாங்கிய கப்பல் மூழ்கிய அதேநேரம் கொமரொஸ் தீவுகளின் கப்பல் பழுதடைந்தது. இலங்கையின் கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்துக்கான காரணம் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடலில் 170 பேருடன் சென்ற படகு மூழ்கியது!- 60 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் அவுஸ்திரேலிய இந்தோனேசிய கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை அகதிகள் உள்ளிட்ட படகு ஒன்று மூழ்கியுள்ளது. இந்த படகு மூழ்கும் போது அதில் 170 பேர் இருந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இலங்கையர்களும் ஈரானியர்களாகும் என்று அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி இதுவரை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வெளியான தகவலின்படி இரு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 120 பேர்வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். புடகில் ஏற்பட்ட இயந்திரகோளாறே விபத்துக்கான காரணம் என்று அறியப்படுகிறது. இதேவேளை மேலும் 60 பேரைக் கொண்ட படகு ஒன்று நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அஜீத்தின் 53வது பட டைட்டில் ‘ஆரம்பம்’ Posted: 24 Jul 2013 07:48 AM PDT
அஜித்குமாரின் 53வது படத்துக்கு 'ஆரம்பம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. ஒரு சில படங்களுக்கு டைட்டில் வைத்தபிறகுதான் பிரச்சனைகள் முளைக்கும். ஆனால், அஜித்தின் 53வது படத்துக்கு டைட்டிலே வைக்காமல் (மேலும்)This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஞ்சனா 100 கோடி வசூல்.. பாலிவுட்டை தூக்கி சாப்பிட்ட தனுஷ் Posted: 24 Jul 2013 07:45 AM PDT
ஆன்ந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ்- சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான படம் ராஞ்ஜனா ரூ 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த (மேலும்)This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்லுரியில் நானும் ரவுடிதான் தெரியுமுல்ல.. சொல்கிறார் சமந்தா Posted: 24 Jul 2013 07:39 AM PDT
தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. `நான் ஈ' படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான `பிலிம் பேர்' விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா (மேலும்)This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகை மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம்! Posted: 24 Jul 2013 07:36 AM PDT
நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது. நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார். அவருக்கு (மேலும்)This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Jul 2013 06:55 AM PDT இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துள்ள போதும் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்களை வெல்ல இந்த அரசாங்கத்திற்கு முடியாது போயுள்ளது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அந்த மக்களின் துயரங்களுக்கு அரசாங்கம் செவிகொடுக்காததால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மாத்தறை உட்பட சில பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பேசும் போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், கொழும்பில் இருக்கும் சிங்கள அரசு [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடி வாங்குனா இவங்ககிட்ட தான் வாங்கனும்… மிஸ் பண்ணிடாதீங்க… Posted: 24 Jul 2013 06:11 AM PDT அடி வாங்குனா இவங்ககிட்ட தான் வாங்கனும்… மிஸ் பண்ணிடாதீங்க… This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Jul 2013 05:36 AM PDT நான் ரெடி நீங்க ரெடியா?… This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





