Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மோடிக்கு விசா கொடுக்க 65 அமெரிக்க அரசு எம்.பி.க்கள் எதிர்ப்பு

Posted: 23 Jul 2013 10:22 PM PDT

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் நடந்த கோத்ரா கலவரத்துக்கு பின்னர், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை காரணம் காட்டி, அவருக்கு விசா அளிக்க அமெரிக்க அரசு மறுத்தது. இது வரை அவருக்கு விசா அளிக்கப்படவில்லை. தற்போது, அமெரிக்காவுக்கு 5 நாள் பயணமாக பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் வந்துள்ளார். அவர் மோடிக்கு விசா தருமாறு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், மோடிக்கு விசா தரக் கூடாது என்று [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சுதேசி ராக்கெட் ஜிஎஸ்எல்வி-டி5 ஆகஸ்ட் 19ல் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் பேட்டி

Posted: 23 Jul 2013 10:15 PM PDT

இந்திய தொழில் நுட்பத்தில்  தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி டி – 5 ராக்கெட் புதிய ஜி&சாட் 14 என்ற செயற்கை கோளை ஆகஸ்ட் 19ந்தேதி சுமந்து செல்வதற்கு தயார் நிலை யில் இருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) சார்பில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரி த்து சாதனை படைத்துள்ளது. பெங்களூரிலுள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் இறுதிகட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது. பிரபல விஞ்ஞானி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

4 வயது சிறுவனை பாலியல் சித்திரவதை செய்து கொலை செய்த பயங்கரம்

Posted: 23 Jul 2013 10:05 PM PDT

மதுரை அருகே பாலியல் சித்ரவதை செய்து 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டான். சடலத்தை கண்மாயில் புதைத்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியை அடுத்த ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் கொத்தனார் கண்ணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துக்கிருஷ்ணன்(4), நந்தினி(2) என இரு குழந்தைகள். கண்ணனின் உறவினரான இதே ஊரை சேர்ந்த செல்வம்(30) கொத்தனாராக உள்ளார். கண்ணனின் வீட்டுக்கு செல்வம் அடிக்கடி வருவது வழக்கம். அப்போது கண்ணனின் குழந்தைகளை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அத்வானியின் ஆதரவுடன் மோடி பிரதமர் வேட்பாளராக வேண்டும்: சத்ருகன் சின்கா

Posted: 23 Jul 2013 09:57 PM PDT

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக மோடியை நியமனம் செய்ததன்மூலம், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயாராகி வருகிறது. மோடியின் வருகையால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் இருந்தனர். பின்னர் அவர்களை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமாதானம் செய்து, ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கினார். இதையடுத்து தேர்தல் பணிக்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பா.ஜனதாவில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் அத்வானி இருக்கிறாரா? என்பது பற்றி சத்ருகன் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் போதைப்பொருள் என நினைத்து அஸ்தியை திருடியவர் கைது

Posted: 23 Jul 2013 09:49 PM PDT

hero

heroஅமெரிக்காவில் உள்ள டென்னிசி நகரில் வில்லியம் (28) என்ற வாலிபர் பக்கத்து வீட்டு கதவை உடைத்து ஒரு மர்ம பெட்டியை திருடினார். அந்த பெட்டியுடன் தனது பாட்டி வீட்டிற்கு தப்பி ஓடினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த பொருள் இல்லாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

பிறகு வில்லியம்சை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் கூறிய பதில் போலீசாரை வியப்படைய வைத்தது. 'அந்த பெட்டியில் போதைப்பொருளை வைத்திருப்பதாக நினைத்து திருடினேன். ஆனால் அதில் அஸ்தி இருந்தது' என்று கூறினார். பெட்டியின் உரிமையாளர் ஸ்டீவன் மிட்லே கூறுகையில் அது தனது தாயின் அஸ்தி என்று தெரிவித்தார். அதை அவர் ஏன் பாதுகாத்து வருகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் வீடு புகுந்து திருடியதற்காக வில்லியம்சை போலீசார் கைது செய்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூயோர்க்கில் விமானம் தரை இறங்கும்போது கோளாறு – 10 பயணிகள் காயம்

Posted: 23 Jul 2013 09:42 PM PDT

crash

crashஅமெரிக்காவின் டென்னஸி பகுதியின் நாஷ்வில்லி விமான நிலையத்திலிருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று,  நியூயார்க்கில் உள்ள லா கார்டியா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓடுதளத்தில் நிற்காமல் விமானத்தில் டயர் சறுக்கிக்கொண்டு சென்றது.

பின்னர் விமானம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.  இந்த விபத்து காரணமாக பத்து பயணிகள் காயமடைந்தனர். அதில் ஆறு பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவலை நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி விமான நிலையங்களின் நிர்வாக இயக்குனர் தாமஸ் போஸ்கோ தெரிவித்தார். விமான ஊழியர்கள் ஆறு பேரும் மற்றொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. சிறிது நேரம் கழித்து இரண்டு ஒடுதளங்களில் ஒன்று மட்டும் இயக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் விசாரணை செய்துவருகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெயலலிதாவிற்கு புகழாரம், கலைஞருக்கு கண்டனம் தெரிவித்த சரத்குமர்

Posted: 23 Jul 2013 09:35 PM PDT

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசின் கெஜெட்டில் வெளியிட்டு காவிரி பாசன விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தது. இலங்கை பிரச்சினையில் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களைத் துடைத்திடும் வகையில் ராஜபக்சே மீதும், இலங்கை அரசு மீதும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. கூடங்குளம் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிறுவணிகத்தில் அன்னிய [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தான் பிரதமரை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

Posted: 23 Jul 2013 09:23 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொல்ல பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் யூசுப் ரஸô கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி தொடர்பான விவகாரத்தை விசாரித்து வரும் கூட்டு புலனாய்வுக் குழு இந்த சதித் திட்டத்தை கண்டுபிடித்தது. லாகூரின் புற நகரான ராய்வின்ட் என்ற இடத்தில் உள்ள நவாஸ் ஷெரீஃபின் வீட்டில் இந்த தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருந்தனர். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – கெலம் மக்ரே

Posted: 23 Jul 2013 09:17 PM PDT

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும். இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்ட பூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பிரோஜ்-உன்-திர்-மீர்

Posted: 23 Jul 2013 08:59 PM PDT

காஷ்மீரில் வசிக்கும், பிரோஜ்-உன்-திர்-மீர், உலகிலேயே மிகவும் வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், விரைவில் இடம் பெறவுள்ளார். கடந்த, 1872 மார்ச், 10ம் தேதி பிறந்த, இவரின் தற்போதைய வயது, 141. மிகவும் குறைந்த பார்வைத் திறன் கொண்ட மீர், தன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், தன் வேலைகளை செய்கிறார். தன்னுடைய வாழ்க்கை குறித்து, காஷ்மீர் லைப் பத்திரிகையில், அவர் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடையும் முன், கராச்சியில், என் தந்தையுடன் இணைந்து, பழங்கள் மற்றும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™