Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையின் வடக்கில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

Posted: 13 Jul 2013 09:43 PM PDT

இலங்கையின் வடக்கே தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்குவதற்கென துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார். இதற்கென வடமாகாண மாவட்டங்களில் நடமாடும் சேவைகள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிகளை பரவலாக்கும் வகையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் இலங்கையிலேயே முதலாவதாக வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், இதேபோன்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கின்ற கிழக்கு மாகாணத்திலும் பிராந்திய அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் [...]

மனித உடலைத் தாங்கும் செயற்கை வன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை (வீடியோ இணைப்பு)

Posted: 13 Jul 2013 09:29 PM PDT

மனித உடலுக்கு வடிவத்தைக் கொடுப்பதுடன் உடற்பாகங்களை தாங்குவதில் என்புகளால் ஆக்கப்பட்டுள்ள வன்கூடுகளின் பங்களிப்பு அளப்பரியதாகும். எனினும் சில சமயங்களில் இவ்வாறான என்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களால் உடலைத் தாங்கிக்கொண்டு அசைவதற்கு இயலாமல் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுக்கக்கூடிய செயற்கையான புறவன்கூட்டை உருவாக்கி ஜப்பான் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். MK3 Exoskeleton Suit என அழைக்கப்படும் இந்த செயற்கை வன்கூடானது 7 அடி உயரமானதாகவும், 55 பவுண்ட் எடை உடையதாகவும் காணப்படுகின்றது. எனினும் இதன் விலைதான் சற்று அதிகமாகும். [...]

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை

Posted: 13 Jul 2013 09:17 PM PDT

வடமாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு நாளை (15) விடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (13) நடைபெறவிருந்த அக் கட்சியின் விசேட கூட்டம் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாளர் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரது பெயர்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் [...]

ரூ.25 லட்சம் முதல் ரூ.4.5 கோடி வரை விலை பிரசாரத்துக்கு கேரவன்கள் வாங்க அரசியல்வாதிகள் ஆர்வம்

Posted: 13 Jul 2013 09:09 PM PDT

 நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரசியல்வாதிகள் விரும்பும் இடங்களுக்கு சொகுசாக சென்று பிரசாரம் மேற்கொள்ள தங்கள் தேவைகளுக்கு ஏற்ப நவீன பிரசார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். Ôநகரும் வீடுகள்Õ என்று கூறத்தக்க வகையில் கிட்டத்தட்ட ஒருவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட வாகனங்களை வடிவமைத்து தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.வாகனத்தில் இருந்தபடியே வெளியே இருப்பவர்களுக்கு அறிவிப்புகளை வழங்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி, வாகனத்தின் [...]

மும்பையில் மரணம் அடைந்த பழம்பெரும் இந்தி நடிகர் பிரான் உடல் தகனம்

Posted: 13 Jul 2013 09:04 PM PDT

 பழம்பெரும் இந்தி நடிகர் பிரான்  நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் தாதர் சிவாஜி பார்க்  மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு மகன்கள் தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 93 வயதான பிரான், கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந¢தார். நேற்று முன்தினம் இரவு அவர் பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். நேற்று அவருடைய உடல் கடும் மழைக்கு [...]

தாயுடன், குழந்தை பலி டாக்டரிடம் போனில் ஆலோசனை கேட்டு பிரசவம்

Posted: 13 Jul 2013 08:48 PM PDT

மதுரை தனியார் மருத்துவமனையில் டாக்டரிடம் போனில் ஆலோசனை கேட்டபடி மருத்துவ உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால், தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட மருத்துவப்பணியாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை, கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி முத்துமாரி (29). கர்ப்பிணியான இவருக்கு, கடந்த 11ம் தேதி காலை, பிரசவ வலி ஏற்பட்டது. குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவரை அனுமதித்தனர். அங்கு டாக்டர் இல்லாததால், பணியில் இருந்த பெண் [...]

புத்தகயா குண்டு வெடிப்பு – புத்த துறவிகளுக்கு தொடர்பா?

Posted: 13 Jul 2013 08:36 PM PDT

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் கடந்த வாரம் அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. மகாபோதி கோயில் மைதானத்தில் 4 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. யுனேஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியன் முஜாகுதீன் பொருப்பேற்றிருந்தாலும், அதற்கான ஆதரங்கள் சிக்கவில்லை மேலும் முரணான சில யூகங்கள் கிளம்பியுள்ளது. புத்தர் கோவிலில் வெடிக்காமல் கிடந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறிய ரக சிலிண்டரில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர் மற்றும் [...]

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 13 Jul 2013 08:31 PM PDT

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அமைந்துள்ளது. இதற்கு எப்போதும் பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த நிலையில் இலங்கைத் துணை தூதரகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஒரு தபால் அட்டையில், பிகார் மாநில புத்த கயாவில் நடந்தது போல இலங்கை துணைத் தூதரகத்திலும் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தூதரகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மிரட்டல் தபால் [...]

லண்டன் மசூதியில் குண்டு வெடித்தது

Posted: 13 Jul 2013 08:16 PM PDT

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் உள்ள டிப்டோன் என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. நோன்பு தொடங்கியபின் நேற்று முன்தினம் முதல் மதிய வேளைத் தொழுகைக்கு அங்கு முஸ்லிம் மக்கள் வரத்தொடங்கினர். பொதுவாக மதியம் ஒரு மணிக்குத் தொடங்கும் பிரார்த்தனை நேரம் இரண்டு மணிக்கு என்று மாற்றப்பட்டிருந்தது. அங்கு வெடிகுண்டு தாக்குதல் இருக்கக்கூடும் என்ற ஒரு அச்ச உணர்வு காவல் துறையினரிடையே நிலவியது. சிறிது நேரத்தில் 1.06 மணிக்கு ஒரு பெரிய சப்தம் கேட்டபோது, வெடிகுண்டு வெடித்ததாகக் காவல்துறையினர் [...]

சன்னி மசூதி மீது வெடிகுண்டு தாக்குதல் – 18 பேர் பலி

Posted: 13 Jul 2013 08:11 PM PDT

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சன்னி மசூதி மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர். ஈராக்கில் வசிக்கும் சன்னி – ஷியா பிரிவினருக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் விளைவாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். பழிக்குப் பழியாக ஒரு பிரிவினரின் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தி வருவதால் குறிவைக்கப்பட்ட நபர்கள் மட்டுமின்றி முதியோர், பெண்கள், குழந்தைகள் என அப்பாவி பொதுமக்களும் [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™