Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலவசங்கள் அறிவிப்பு ரத்தாகுமா : கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Posted:

புதுடில்லி :தேர்தல் அறிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, இது தொடர்பாக, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், வாக்காளர்களை கவர்வதற்காக, இலவசமாக, "டிவி,' கிரைண்டர், மிக்சி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி, இதற்கு தடை விதிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "தற்போதுள்ள சட்டத்தின்படி, தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களை அறிவிப்பது, லஞ்சம் கொடுப்பதற்கு சமமாகாது' ...

புத்த கயா குண்டுவெடிப்பு: முக்கிய நபர் கைது; கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

Posted:

கயா (பீகார்) : புத்த கயாவில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, முக்கிய நபர் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாபோதி கோவிலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதில், முக்கிய தடயங்கள் இருப்பதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.,) தெரிவித்துள்ளது.

போதி மரம்:
பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, புத்த கயா நகரம், வரலாற்று சிறப்பு மிக்கது. இங்குள்ள போதிமரத்தடியில் தான், கவுதம புத்தர், ஞானம் பெற்றதாக ...

லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார் : காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி சவால்

Posted:

லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்த, காங்கிரஸ் தயாராவது போல தெரிகிறது. அவ்வாறு, முன்னதாகவே தேர்தல் நடந்தால், அதைச் சந்திக்க முழுவீச்சில் தயாராக உள்ளோம்' என, பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், கொள்கை முடிவு எடுக்கும் உயர்மட்ட அமைப்பான, பார்லிமென்ட் போர்டு ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தல் தொடர்பாக, முக்கிய முடிவு எடுப்பதற்காக, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

சந்தேகம் :
டில்லி, அசோகா சாலையில் உள்ள, ...

தயாளு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Posted:

புதுடில்லி : "2ஜி' வழக்கு விசாரணைக்காக, சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, இன்று நடக்கிறது. இதன் காரணமாக, சிறப்பு கோர்ட்டும், இன்றைக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

முக்கிய சாட்சி தயாளு:
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில், முக்கிய சாட்சியாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு சேர்க்கப்பட்டு உள்ளார். இவரை நேரில் ஆஜராகும்படி, ...

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்:நாகையில் கருணாநிதி "ஆவேசம்'

Posted:

நாகப்பட்டினம் : "சேது சமுத்திர திட்டம் என் கனவு திட்டம்; என் வாழ்நாளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன்' என, நாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி பேசினார்.சேது சமுத்திர திட்டத்தை, விரைந்து நிறைவேற்ற கோரி, நாகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், கருணாநிதி பேசியதாவது:சேது சமுத்திர திட்டத்திற்காக, தமிழகம் ஒன்று திரண்டுள்ளது. அண்ணாதுரையின் ஆணையை நிறைவேற்ற, ஒன்று திரண்டு குரல் கொடுக்கிறோம். இந்நாள், மகிழ்ச்சியான நாள். சேது சமுத்திர திட்டத்தால், எனக்கு தனிப்பட்ட முறையில் லாபம் இல்லை. இது, ...

உத்தரகண்டில் மாயமான 12 தமிழர் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பு

Posted:

சென்னை : உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளத்தில் சிக்கி மாயமான, தமிழக பக்தர், 12 பேரை, கண்டுபிடிக்க முடியாமல், அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு, யாத்திரை சென்ற, தமிழக பக்தர்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவை அடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் டில்லி மற்றும் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து, 503 பேரை மீட்டனர். அவர்களில், 413 பேர், விமானம் மூலமாகவும், 90 பேர் ரயில் மூலமாகவும், தமிழகம் வந்தனர்.சென்னை, அண்ணா நகரை ...

கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்

Posted:

விவசாயிகளின் பல்லாண்டு கோரிக்கையான, நதிகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள சூழ்நிலையில், அத்திட்டத்துக்கு முன்னோடியாக, மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை, தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் மழைநீர் சேகரிக்கப்படும். தமிழகத்தின் நிலத்தடி நீர் மட்டமும், உயர்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் உள்ள, ஆறுகளை இணைத்து, விவசாயம் மற்றும் இதர காரியங்களுக்கு நீரை பயன்படுத்த, மாநில ஆறுகள் இணைப்புத் திட்டத்தை, தமிழக அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. தேசிய பொதுப்பணித் ...

தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திடீரென குறைப்பு : சிக்கலுக்கு என்ன காரணம்?

Posted:

சென்னை :கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்திற்கு திறந்து விடப்படும், கிருஷ்ணா நதி நீரின் அளவு, வினாடிக்கு, 250 கன அடியாக குறைந்துள்ளது. கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு தான் இதற்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆந்திர மாநில அரசு, கண்டலேறு அணையிலிருந்து, ஜூலை, 1ம் தேதி, கிருஷ்ணா நதி நீரைத் திறந்து விட்டது.ஆரம்பத்தில், வினாடிக்கு, 200 கன அடியும், பின் படிப்படியாக, 500 கன அடி ...

நெய்வேலியில் இன்று மாபெரும் போராட்டம்...: தீவிரமாகிறது 7வது நாளாக வேலை நிறுத்தம்

Posted:

நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று, நெய்வேலியில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்த, தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.என்.எல்.சி.,யின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தி வரும், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று, ஏழாவது நாளாக நீடித்தது.போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, என்.எல்.சி.,யின், 5 சதவீத பங்குகளை, தமிழக அரசுக்கு விற்க, மத்திய அரசு ...

தீவிரவாத செயல்கள் அதிகரிப்பதற்கு மத்திய அரசே காரணம்: மம்தா சாடல்

Posted:

லால்கர்க் : ""மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு, மத்திய அரசு வலுவிழந்து இருப்பதே காரணம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.மேற்கு வங்கத்தில், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், லால்கர்க் என்ற இடத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று, மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:என்னையும், திரிணமுல் காங்., தலைவர்களையும் தீர்த்து கட்டும் நோக்கில், மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த மிரட்டலை கண்டு நான் பயப்படவில்லை. மகாபோதி கோவிலில், பயங்கரவாதிகள் நடத்திய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™