Tamil News | Online Tamil News |
- அமைதி போதிக்கும் புத்த கயாவில் தொடர் குண்டு வெடிப்பு: பயங்கரவாதிகள் கைவரிசை: நாடு முழுவதும் வேதனை
- மானிய சுமை அதிகரிப்பை சமாளிக்க டீசல், காஸ் விலையில் மாற்றமா?
- கணவன் - மனைவி உறவு போல ரகசியம் காக்கப்பட வேண்டும்: இந்தியா குறித்து பசில் விளக்கம்
- விஜயகாந்திற்கு பதில் கடிதம் எதற்கு : அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சவால்
- 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது மின் உற்பத்தி: பகல் நேர மின் தடை நீங்கும்
- என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்க "செபி' ஒப்புதல்
- ராமதாஸ் மீது நடவடிக்கை : இளவரசன் தந்தை புகார்
- நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு : சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் விருப்பம்
- மழைநீர் சேகரிப்பு திட்டம் அமலுக்கு வருமா? அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்
- பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் : அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பின் கூடுகிறது
| அமைதி போதிக்கும் புத்த கயாவில் தொடர் குண்டு வெடிப்பு: பயங்கரவாதிகள் கைவரிசை: நாடு முழுவதும் வேதனை Posted: கயா : பீகார் மாநிலம், புத்த கயாவில் உள்ள, பிரசித்தி பெற்ற, மகாபோதி கோவிலில், நேற்று, ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், "இது, திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்' என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள, புத்த வழிபாட்டு தலங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில், புத்த கயா என்ற நகரம் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நகரத்தில் ... |
| மானிய சுமை அதிகரிப்பை சமாளிக்க டீசல், காஸ் விலையில் மாற்றமா? Posted: புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளித்து வரும் மானியம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு, அமெரிக்க டாலர் ... |
| கணவன் - மனைவி உறவு போல ரகசியம் காக்கப்பட வேண்டும்: இந்தியா குறித்து பசில் விளக்கம் Posted: கொழும்பு : ""மாகாணங்களின் அதிகாரத்தைக் குறைக்க வழி செய்யும், சட்டத்தில் மாற்றம் செய்வோம்,'' என, இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர், பசில் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான சண்டை, 2009ல் முடிந்தது. இதையடுத்து, வடக்கு மாகாணத்தில், வரும், செப்டம்பர் மாதம், தேர்தல் நடைபெற உள்ளது."தேர்தல் நடத்துவதற்கு முன், மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வகை செய்யும், அரசியலமைப்பின், 13ஏ சட்டத்தில், மாற்றம் செய்ய வேண்டும்' என, ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் வற்புறுத்துகின்றன.இதை ஏற்ற அதிபர், மகிந்தா ராஜபக்ஷே, ... |
| விஜயகாந்திற்கு பதில் கடிதம் எதற்கு : அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சவால் Posted: ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்ததற்கு விளக்கம் கேட்டு, விஜயகாந்த் எழுதிய கடிதத்திற்கு, பதில் கடிதம் எழுதப்போவதில்லை என, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர். தலைமைக்கு சவால் விடும் வகையில் பரபரப்பான முடிவாக இது கருதப்படுகிறது.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், நடிகர் அருண்பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி, பாண்டியராஜன் ஆகியோர், முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். அதன்பின், கட்சி நடவடிக்கைகள் எதிலும் இவர்கள் பங்கேற்பதில்லை.சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், ... |
| 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது மின் உற்பத்தி: பகல் நேர மின் தடை நீங்கும் Posted: சென்னை :தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, நான்கு நாட்களாக அதிகரித்து உள்ளது. காற்றாலை, அனல் மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் நீர் மின் உற்பத்தியில் முன்னேற்றம் ஆகியவற்றால், 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. |
| என்.எல்.சி., பங்குகளை தமிழக அரசு வாங்க "செபி' ஒப்புதல் Posted: புதுடில்லி:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி.,யின் பங்குகளை, தமிழக அரசு வாங்க, இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், என்.எல்.சி., பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், விரைவில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. |
| ராமதாஸ் மீது நடவடிக்கை : இளவரசன் தந்தை புகார் Posted: தர்மபுரி :இளவரசன் இறப்பு தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது, ஆதிதிராவிடர் ஆணையத்திடம், இளவரசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.காதல் கலப்பு திருமணம் செய்த இளவரசன், இறப்பு குறித்து விசாரணை நடத்த, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் சிவண்ணா, தமிழக மற்றும் புதுச்சேரி இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர், நேற்று தர்மபுரி வந்தனர்.இளவரசன் இறந்த இடத்தை பார்வையிட்ட பின், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர், சிவண்ணா கூறியதாவது:கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் மறு சீரமைப்பு பணிகள், 30 சதவீதம் ... |
| நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு : சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் விருப்பம் Posted: புதுடில்லி :""நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கூறியுள்ளார்.நாட்டின், 40வது தலைமை நீதிபதியாக, இம்மாதம், 19ம் தேதி பொறுப்பேற்க உள்ள சதாசிவம், நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற வேண்டும் என, சட்டம் கூறவில்லை. எனினும், இப்போதுள்ள நிலையை கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் ... |
| மழைநீர் சேகரிப்பு திட்டம் அமலுக்கு வருமா? அதல பாதாளத்தில் நிலத்தடி நீர் Posted: கோவை :கோவையில், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும்போது, பலநூறு அடி ஆழத்தில்கூட நீர் தென்படாத நிலை, உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.கடந்த 2003ம் ஆண்டில், அ.தி.மு.க., அரசு, "நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை' சட்டத்தை கொண்டு வந்தது. வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு வசதிகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மக்களிடம் ஓரளவு ஆதரவு இருந்ததால், அரசு உத்தரவு அமலுக்கு வந்தது. இதற்கு பின், ... |
| பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் : அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பின் கூடுகிறது Posted: புதுடில்லி : பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம், 15ம் தேதிக்குப் பின் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக, பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை மூன்றாவது வாரத்தில் கூடி, ஒரு மாத காலத்திற்கு நடக்கும். ஆனால் இந்த ஆண்டு, இம்மாதத்தில், மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. கூட்டத்தொடர் குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை."உணவு பாதுகாப் பு மசோதா, அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெகு விரைவில், பார்லிமென்ட் கூட்டத்தொடரை கூட்டினால், அது எதிர்க்கட்சிகளுக்கு, அரசை விமர்சிக்க, நல்ல ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 08,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |