Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"திருக்குறள் வாழ்க்கை வழிகாட்டி'

Posted: 07 Jul 2013 01:21 PM PDT

மாணவர்கள் திருக்குறளை வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்றார் துறைமுகம் சட்டப்பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா.

என்கவுன்ட்டரில் 6 நக்சலைட்டுகள் சாவு

Posted: 07 Jul 2013 01:21 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் போலீஸாருடன் நிகழ்ந்த மோதலில் 6 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

குப்பைக் கிடங்காகி வரும் மயானம்

Posted: 07 Jul 2013 01:21 PM PDT

ஆலங்குடியில் உள்ள மயானத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். 

பழுதடைந்த அரசு பேருந்துகளை மாற்ற வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:21 PM PDT

புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை இடையே போக்குவரத்துக்கு லாயக்கற்ற அரசுப் பேருந்துகளை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல் மறியல் போராட்டம் ந

கல்லூரியில் ரத்ததான முகாம்

Posted: 07 Jul 2013 01:20 PM PDT

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

Posted: 07 Jul 2013 01:20 PM PDT

இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சி எனும் தலைப்பில் கருத்தரங்கம் அன்மையில் நடைபெற்றது.

எல்லைப் பாதுகாப்புப் படையில் பெண் அதிகாரிகள்

Posted: 07 Jul 2013 01:20 PM PDT

எல்லைப் பாதுகாப்புப் படையில் முதல் முறையாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

மனைவி திட்டியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 07 Jul 2013 01:19 PM PDT

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அருகே மனைவி திட்டியதால், கணவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் ஆந்திர துணை முதல்வர் ஆலோசனை

Posted: 07 Jul 2013 01:19 PM PDT

தனி தெலங்கானா பிரச்னையில் இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆந்திர மாநில துணை முதல்வர் சி. தாமோதர் ராஜநரசிம்மா ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பேருந்தில் வியாபாரியிடம் ரூ.3.90 லட்சம் திருட்டு: சேலம் பெண்கள் இருவர் கைது

Posted: 07 Jul 2013 01:19 PM PDT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பேருந்தில் வியாபாரியிடம் ரூ. 3.90 லட்சம் திருடிய சேலத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து 33 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

Posted: 07 Jul 2013 01:19 PM PDT

விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பிற்கான பணத்தை தராததை கண்டித்து, கும்பகோணம், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை

கொலை முயற்சி: மூவர் கைது

Posted: 07 Jul 2013 01:19 PM PDT

பட்டுக்கோட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் மூவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: 5 பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா?

Posted: 07 Jul 2013 01:18 PM PDT

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த 5 பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.

கிடப்பில் திருவாரூர் புறவழிச் சாலைத் திட்டம்

Posted: 07 Jul 2013 01:18 PM PDT

கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருவாரூர் புறவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பாலியல் முறைகேடு புகார்: மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்

Posted: 07 Jul 2013 01:18 PM PDT

பாலியல் புகாருக்கு ஆளான மத்தியப் பிரதேச முன்னாள் நிதி அமைச்சர் ராகவ்ஜி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

திருமலைராயன்பட்டினத்தில் பயன்பாடு இல்லாத காந்தி பூங்கா

Posted: 07 Jul 2013 01:18 PM PDT

காரைக்கால் மாவட்டம்,  திருமலைராயன்பட்டினத்தில் மக்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது காந்தி பூங்கா. துறைமுகம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் உதவியால் இதனை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

செளந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

Posted: 07 Jul 2013 01:17 PM PDT

நாகை செüந்தரராஜப் பெருமாள் கோவில் செüந்தர்யவள்ளித் தாயார் ஆனிப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேது திட்டம்: நாகை ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பங்கேற்பு

Posted: 07 Jul 2013 01:17 PM PDT

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, திமுக சார்பில் நாகை அவுரித் திடலில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

விருது பெற்ற ஆய்வாளருக்கு பாராட்டு

Posted: 07 Jul 2013 01:17 PM PDT

குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வான காவல் ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

காரைக்காலுக்கு மணல் வழங்க தமிழக அரசு விதித்த தடையை நீக்க வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:16 PM PDT

காரைக்காலை வேறு மாநிலமாகக் கருதி மணல் வழங்க விதித்த  தடையை தமிழக அரசு நீக்கிவிட்டு, தடையின்றி மணல் விற்பனைக்கு வழிவகுத்துத்  தரவேண்டுமென பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் அரசு பதிவு பெற்ற பொறியாளர் மற்றும் பட்டயதாரிகள் சங்கத் (ஏரியல்) தலைவர்

உணவுப் பாதுகாப்பு அவசர சட்டம் தேர்தலுக்கான ஏமாற்று வேலை - மாயாவதி

Posted: 07 Jul 2013 01:16 PM PDT

உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம், தேர்தலுக்கான ஏமாற்று வேலை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

"சாலைகளில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்'

Posted: 07 Jul 2013 01:16 PM PDT

காரைக்கால் சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலமானார்

Posted: 07 Jul 2013 01:15 PM PDT

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலர் எஸ்.ஏ.டி. அண்ணாமலை (48), மாரடைப்பால் ஜூலை 6 -ம் தேதி காலமானார்.

அமராவதி, காவிரி ஆறுகளில் தடுப்பணை கட்ட ஆய்வு

Posted: 07 Jul 2013 01:15 PM PDT

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் தடுப்பணை கட்டுவது குறித்து தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

கரூரில்  6 அடி நீள கருநாகம் பிடிபட்டது

Posted: 07 Jul 2013 01:14 PM PDT

கரூரில் வீட்டுக்குள் புகுந்த கரு நாகப்பாம்பு பிடிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அரசு முதன்மைச் செயலர் ஆய்வு

Posted: 07 Jul 2013 01:14 PM PDT

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து உயர் கல்வித் துறை அரசு முதன்மை செயலரும், கரூர் மாவட்ட  கண்காணிப்பு அலுவலருமான அபூர்வா வர்மா

கரூர் மாவட்டத்தில் 50 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி

Posted: 07 Jul 2013 01:14 PM PDT

கரூர் மாவட்டத்தில் 50 பள்ளிகளில் முதல் மற்றும் 6 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 731 மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆர்வத்துடன் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகின்றனர்.

வருங்கால வைப்பு நிதி கணக்கு மாற்றல் கோரிக்கை ஆன்-லைனில் தீர்வு காணும் வசதி ஆகஸ்டில் அமல்

Posted: 07 Jul 2013 01:14 PM PDT

ஊழியர்கள் வேறு வேலைக்கு மாறும்போது, தங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை வேறு நிறுவனத்துக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது ஆன்-லைனில் (இணையதளம்) தீர்வு காணும் வசதி ஆகஸ்ட் மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமம் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி விதியை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:13 PM PDT

  ஆட்டோ, வேன் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை தமிழக அரசு ரத்த செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 07 Jul 2013 01:13 PM PDT

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் வலுவூட்டல் குறித்த பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அண்மையில்

ஜூலை 9மின் தடை

Posted: 07 Jul 2013 01:13 PM PDT

கரூர் மாவட்டம், மாயனூர் மற்றும் பஞ்சப்பட்டி ஆகிய இரு துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக  செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)  மின்விநியோகம் இருக்காது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 07 Jul 2013 01:13 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்மனிதவள மேலாண்மை முதுநிலை படிப்பு

Posted: 07 Jul 2013 01:12 PM PDT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் வரை கற்றல் துறை சார்பில் மனிதவள மேலாண்மையில் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பை 2013-14 ஆம் கல்வியாண்டில் நடத்துகிறது. ஏதாவது ஓர் இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன்குடியிலிருந்து குடிநீர் விநியோகம் தொடக்கம்

Posted: 07 Jul 2013 01:12 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்திலிருந்து எறையூர் மற்றும் வடக்குமாதவி ஊராட்சிகளுக்கான குடிநீர் விநியோகத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நாளை மின்  நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 07 Jul 2013 01:11 PM PDT

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜூலை 8 மின் தடை

Posted: 07 Jul 2013 01:11 PM PDT

: அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர், கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்பெரம்பலூர்

Posted: 07 Jul 2013 01:10 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மோட்டார்சைக்கிளில் சென்றவர் லாரியில் அடிபட்டு சாவு

Posted: 07 Jul 2013 01:10 PM PDT

பெரம்பலூர் அருகே சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் அடையாளம் தெரியாத லாரியில் அடிபட்டு உயிரிழந்தார்.

அரிமா சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Posted: 07 Jul 2013 01:10 PM PDT

அரியலூர் சிமென்ட் சிட்டி அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அரியலூரில் சனிக்கிழமை  நடைபெற்றது.

குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

Posted: 07 Jul 2013 01:09 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.ஸி. தொகுதி 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்

Posted: 07 Jul 2013 01:09 PM PDT

அரியலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் சங்க தலைவர் நல்லமுத்து தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருத்தி அமைக்கப்பட்ட நல வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:07 PM PDT

புதிய திருத்தி அமைக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நல வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஹோமியோபதி, சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜாதிக் கலவரங்களை தூண்டுகிறார் ராமதாஸ்

Posted: 07 Jul 2013 01:07 PM PDT

தமிழகத்தில் ஜாதிக் கலவரங்களை பாமக தலைவர்  மருத்துவர் ராமதாஸ் தூண்டி வருவதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 07 Jul 2013 01:06 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"வேளாண் துறையை மத்திய அரசு புறக்கணிக்கிறது

Posted: 07 Jul 2013 01:06 PM PDT

வேளாண் துறையை மத்திய அரசு புறக்கணித்து வருவதால் நாடு கடும் நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்க மத்திய செயற்குழு உறுப்ப

உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: 7 பேர் சாவு

Posted: 07 Jul 2013 01:06 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர்.

சிறப்பிடம் பெற்ற அகதி முகாம் மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 07 Jul 2013 01:06 PM PDT

பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற ஆலங்குடி தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

"பயனுள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை

Posted: 07 Jul 2013 01:06 PM PDT

அரசின் நிதியை பயனுள்ள திட்டங்களுக்கு ஒதுக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார்.

பணி நிறைவு பாராட்டு விழா

Posted: 07 Jul 2013 01:05 PM PDT

நில அளவைத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

போலீஸ் கூட்டுச் சோதனை

Posted: 07 Jul 2013 01:05 PM PDT

  புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் சனிக்கிழமை இரவில் மேற்கொண்ட கூட்டுச் சோதனைகளில் 120 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமை ஆசிரியர்கள் சங்க விழா

Posted: 07 Jul 2013 01:04 PM PDT

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 07 Jul 2013 01:04 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

பலத்த மழை: உத்தரகண்டில் நிவாரணப் பணிகளில் மீண்டும் பாதிப்பு

Posted: 07 Jul 2013 01:04 PM PDT

உத்தரகண்டில் பலத்த மழை பெய்து வருவதால், நிவாரணப் பணிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்களை மட்டுமே மாநில அரசு நம்பியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

Posted: 07 Jul 2013 01:04 PM PDT

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசக் கருவிகள் வழங்கும் விழா பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 07 Jul 2013 01:04 PM PDT

  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அண்மையில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு

Posted: 07 Jul 2013 01:03 PM PDT

உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் நசீமுதீன் சித்திக்கி மீது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெருவுடையார் கோவிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம்

Posted: 07 Jul 2013 01:03 PM PDT

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் கோவிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பேரிடர் பாதிப்பிலிருந்து பாரம்பரிய பகுதிகளைக் காக்க நெறிமுறைகள்

Posted: 07 Jul 2013 01:03 PM PDT

நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் பாதிப்பில் இருந்து பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காப்பதற்கான நெறிமுறைகளை தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் (என்டிஎம்ஏ) வகுத்து வருகிறது.

நாளை வீரசைவ பெரிய மடத்தில்  சொற்பொழிவு

Posted: 07 Jul 2013 01:03 PM PDT

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் ஆனி மாத பூச சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெற உள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட நல வாரியத்தை ஏற்படுத்த வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:03 PM PDT

புதிய திருத்தி அமைக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் நல வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஹோமியோபதி, சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துரதிருஷ்டவசமானது: தலாய் லாமா

Posted: 07 Jul 2013 01:02 PM PDT

பிகார் மாநிலம், புத்த கயையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வேதனை தெரிவித்துள்ளார்.

ஜூலை 16-ல் விவசாய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 07 Jul 2013 01:02 PM PDT

அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் ஜூலை 16-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.

தொழில்முனைவோர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 07 Jul 2013 01:02 PM PDT

தஞ்சாவூர், திருச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் சார்பில், தொழில்முனைவோருக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

தில்லி போலீஸ் எச்சரித்தும் பயனில்லை

Posted: 07 Jul 2013 01:02 PM PDT

புத்த கயை கோவிலை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பது குறித்து பிகார் போலீஸாரை தில்லி போலீஸார் ஏற்கெனவே எச்சரித்தும், இந்த குண்டு வெடிப்பைத் தடுக்க இயலவில்லை.

அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 07 Jul 2013 01:01 PM PDT

அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தனியார் சர்க்கரை ஆலையைக் கண்டித்து 33 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

Posted: 07 Jul 2013 01:01 PM PDT

விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பிற்கான பணத்தை தராததை கண்டித்து, கும்பகோணம், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த 33 கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

நகைக் கடை ஊழியர் தீக்குளித்து சாவு

Posted: 07 Jul 2013 01:01 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகைக் கடை ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உழவாரப் பணி

Posted: 07 Jul 2013 01:01 PM PDT

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி மேற்கொண்டனர். மதுரை ஓம் நமச்சிவாய உழவாரப் பணி இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் உழவாரப் பணியை மேற்கொண்டு, பிரகாரங்களில் உள்ள செடிகளை அகற்றினர் விள

முப்பெரும் விழா

Posted: 07 Jul 2013 01:00 PM PDT

தஞ்சாவூரில் தஞ்சை மாநகர சோழிய வேளாளர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற

நாகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 07 Jul 2013 12:59 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்

முத்துப்பேட்டையில் ரயில்வே முன்பதிவு மையம் திறப்பு

Posted: 07 Jul 2013 12:59 PM PDT

ிருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே சார்பில், முத்துப்பேட்டையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ராஜபட்ச கண்டனம்

Posted: 07 Jul 2013 12:59 PM PDT

புத்த கயையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச.

தமிழகத்தில் ஜாதிக் கலவரங்களை தூண்டி வருகிறார் ராமதாஸ்

Posted: 07 Jul 2013 12:59 PM PDT

தமிழகத்தில் ஜாதிக் கலவரங்களை பாமக தலைவர்  மருத்துவர் ராமதாஸ் தூண்டி வருவதாக அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கீழையூர் ஊராட்சியில் 55 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

Posted: 07 Jul 2013 12:58 PM PDT

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழையூர் ஊராட்சியில் 55 பேருக்கு வீட்டுமனைப் பட்டா ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பல்வேறு துறையினருக்கு பட்டமளிப்பு

Posted: 07 Jul 2013 12:57 PM PDT

காரைக்கால் இந்து சமய இலக்கியப் பேரவை 28-ம் ஆண்டு விழாவும், பேரவை சார்பில் பல்வேறு துறையினருக்கு பட்டமளித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சியும் இலக்கியப் பேரவைத் தலைவர் ரா. கலியமூர்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 12-ல்  குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம்

Posted: 07 Jul 2013 12:57 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஜூலை 12-ம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்தார்.

மத்தியப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும்: நிதீஷ் குமார்

Posted: 07 Jul 2013 12:57 PM PDT

பிகார் மாநிலம் புத்த கயையில் உள்ள மகாபோதி ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மாநில முதல்வர் நிதீஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி

Posted: 07 Jul 2013 12:56 PM PDT

புத்த கயையில் குண்டு வெடிப்பு: உளவுத் துறை எச்சரிக்கை: மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை

Posted: 07 Jul 2013 12:55 PM PDT

பிகார் மாநிலம் புத்த கயையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

தோனிக்கு வயது 32!

Posted: 07 Jul 2013 12:47 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, ஞாயிற்றுக்கிழமை 32-வது பிறந்த நாளாகும்.

ஜெர்மன் கிராண்ட்ப்ரீ: வெட்டல் வெற்றி

Posted: 07 Jul 2013 12:45 PM PDT

ஜெர்மன் கிராண்ட்ப்ரீ கார் பந்தயத்தில் ரெட் புல் டிரைவரான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி கண்டார்.

பிரையன் சகோதரர்கள் சாம்பியன்

Posted: 07 Jul 2013 12:44 PM PDT

ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

31 குழந்தைகள் உள்பட 213 தில்லிவாசிகளை காணவில்லை

Posted: 07 Jul 2013 12:37 PM PDT

உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய தில்லியைச் சேர்ந்த 213 பேரைக் காணவில்லை என்று தெரிய வந்துள்ளது.

வரலாறு படைத்தார் முர்ரே!

Posted: 07 Jul 2013 12:37 PM PDT

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.

தௌலகுவானில் மெட்ரோ ரயில் நிலையம்

Posted: 07 Jul 2013 12:36 PM PDT

தில்லி பல்கலைக்கழக தெற்கு வளாகப் பகுதி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆத்மா ராம் சனாதன் தர்மா கல்லூரியை ஒட்டியுள்ள தௌலகுவானில் மேம்பால ரயில் நிலையம் அமைக்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) திட்டமிட்டு வருகிறது.

போதைப்பொருள் கடத்த முயற்சி: தில்லி விமான நிலையத்தில் ஜாம்பியா பயணி கைது

Posted: 07 Jul 2013 12:36 PM PDT

: ரூ. 17 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த பயணியை தில்லி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா?

Posted: 07 Jul 2013 12:36 PM PDT

கிழக்கு தில்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்து 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது. 

பெற்றோரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகமாடிய மகன்

Posted: 07 Jul 2013 12:35 PM PDT

நொய்டாவில், தொழில் தொடங்க பணம் தர மறுத்த பெற்றோரிடம் மகன் கடத்தல் நாடகமாடியது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 15-க்கு பின் மழைக்கால கூட்டத்தொடர்

Posted: 07 Jul 2013 12:35 PM PDT

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்

Posted: 07 Jul 2013 12:35 PM PDT

"நெய்வேலி அனல் மின் நிலையத்தின் (என்எல்சி) ஐந்து சதவீதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பது குறித்து  இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) பேச்சுவார்த்தை நடத்த மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்'' என்று தமிழக அரசை மத்தி

காய்கறி பதப்படுத்துதல்:இக்னோவில் பட்டயப் படிப்பு

Posted: 07 Jul 2013 12:34 PM PDT

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் உணவு, காய்கறிகள், பழங்கள் பதப்படுத்துதல் தொடர்பாக ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 8) கடைசி நாளாகும். அபராதத்துடன் ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஐ.ஏ.ஏ.எஃப். டைமன்ட் லீக்: கெளடாவுக்கு 4-வது இடம்

Posted: 07 Jul 2013 12:32 PM PDT

ஐ.ஏ.ஏ.எஃப். டைமன்ட் லீக் தடகள தொடரின் 9-வது சுற்றில் ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கௌடா 4-வது இடத்தைப் பிடித்தார்.

மும்முரமாக நடைபெறும் பத்ரிநாத் சாலை சீரமைப்புப் பணி வே.சுந்தரேஸ்வரன்

Posted: 07 Jul 2013 12:32 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளான சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

போலீஸ் உதவியுடன் காலனிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நமது நிருபர்

Posted: 07 Jul 2013 12:31 PM PDT

தில்லி அரசு வழங்கும் மேம்பாட்டு நிதியில், போலீஸ் ஆலோசனையுடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் என்று குடியிருப்போர் நலச் சங்கங்களை முதல்வர் ஷீலா தீட்சித் அறிவுறுத்தினார்.

371 காலனிகளில் ரூ. 1,334 கோடியில் அடிப்படை வசதிகள்

Posted: 07 Jul 2013 12:30 PM PDT

தில்லியில் உள்ள 371 அனுமதியில்லாத காலனிகளில் ரூ. 1,334 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தில்லி தொழில் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (டிஎஸ்ஐஐடிசி) தெரிவித்துள்ளது.

வகுப்புவாத அரசியல் நடத்தும் பாஜக'

Posted: 07 Jul 2013 12:30 PM PDT

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியலில் வகுப்புவாதத்தை புகுத்த பாரதிய ஜனதா கட்சி முயன்று வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார்.

சரிதா விஹாரில் பெண் பலாத்காரம்

Posted: 07 Jul 2013 12:30 PM PDT

தில்லி சரிதா விஹாரில், 20 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு காயத்துடன் வீட்டில் மயங்கிக் கிடந்தது தொடர்பாக, மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இது குறித்து, தில்லி போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது:  

பூங்காவில் மாநகராட்சி ஊழியர் சடலம்

Posted: 07 Jul 2013 12:29 PM PDT

மத்திய தில்லியில் பூங்கா ஒன்றில் சந்தர் பன் (42) என்ற மாநகராட்சி ஊழியர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விவசாய நிலங்களில் கட்டுமானப் பணி: தேர்தலை முன்வைத்தே அறிவிப்புநமது நிருபர்

Posted: 07 Jul 2013 12:29 PM PDT

நடைபெற உள்ள தில்லி சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டே தில்லி அருகே உள்ள விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார்.

கல்லூரி மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்

Posted: 07 Jul 2013 12:28 PM PDT

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™