Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு நம்பிக்கை: மேட்டூருக்கு நீர் வரத்து கிடுகிடு உயர்வு

Posted:

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து, வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி, உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு, நேற்று நள் ளிரவு முதல், நீர் வரத்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவமழை தீவிரம் அடைந்ததால், கபினி அணை, கடந்த மாதம், 24ம் தேதி, நிரம்பியது. அணையில் இருந்து முதல்கட்டமாக. 35 ஆயிரம் கனஅடி நீர், காவிரியில் ...

தெலுங்கானா கோரிக்கையை ஏற்க காங்கிரஸ் தயார்: ராவ், ஜெகன் செல்வாக்கை குறைக்க புதிய தந்திரம்

Posted:

தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஏற்க, காங்கிரஸ் தயாராகி விட்டது. ஆனாலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள, தனி மாநிலம், எல்லோரும் எதிர்பார்ப்பது போல இல்லாமல், காங்கிரஸ் அல்லாத கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் உள்ள, தெலுங்கானா மாநிலமாகவே இருக்கும். அதற்கேற்ற வகையில், காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
"ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என, சந்திரசேகர ராவின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட, பல கட்சிகள், கடந்த பல மாதங்களாக, தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.
ஆலோசனை:
ஆனாலும், இந்த ...

கலப்பு திருமணம் செய்தவர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Posted:

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வன்முறை சம்பவங்கள்:
இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ...

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

Posted:

சென்னை: ""தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அனைத்து தரப்பினரும் பயன்பட்டு வரும் நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அவசரச் சட்டத்தின் மூலம், இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருப்பது ஏழை மக்களை ஏமாற்றும் செயல்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அவசரச் சட்டம் என்பது அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வர வேண்டியது. நான்கு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, கருத்தொற்றுமை எழாத நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம், தேசிய உணவுப் ...

என்.எல்.சி., பங்குகள் விற்பனை: சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்

Posted:

சென்னை: "என்.எல்.சி., பங்குகளை விற்கும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்.எல்.சி., பங்குகள் விற்பனை முடிவை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பதைப் பற்றியும், 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர் அடங்கிய, 22 தொழிற்சங்கங்களும் எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பற்றியும், தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். கடந்த, 2006ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, என்.எல்.சி., ...

என்.எல்.சி., தொழிலாளர் "ஸ்டிரைக்': தமிழகத்திற்கான மின்சாரம் குறையும் அபாயம்

Posted:

என்.எல்.சி., தொழிலாளர்களின், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும், 600 மெகா வாட் மின்சாரம், ஓரிரு நாட்களில், 50 மெகா வாட்டாக குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான, என்.எல்.சி.,யின், 5 சதவீத பங்குகளை, மத்திய அர" தனியாருக்கு விற்க முடிவெடுத்தது. இதனை கண்டித்து, என்.எல்.சி.,யில் பணிபுரியும், 12 ஆயிரத்து, 800 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு:
சென்னை, ...

மிரட்டிய "பிடிவாரன்ட்'டால் கேரளாவில் முகாம்: விஜயகாந்த் இன்று சென்னை திரும்ப முடிவு?

Posted:

அவதூறு வழக்கில், "பிடிவாரன்ட்' ரத்து செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் முகாமிட்டுள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கேப்டன் "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதாக முதல்வர் ஜெயலலிதா சார்பில், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, கடந்த, 1ம்தேதி விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் ஆஜராகவில்லை. தாமதமாக சென்றதால், விஜயகாந்தின் வழக்கறிஞரும் ஆஜராக முடியவில்லை. எனவே விஜயகாந்துக்கு, "பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். ...

என்.எல்.சி., ஸ்டிரைக் பாதிப்பை சமாளிக்க யோசனை: காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் புது உத்தி

Posted:

சென்னை: காற்றாலை மின்சாரத்தை முழுமையாக, பொது பயன்பாட்டுக்குக் கொண்டு வர, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் புதிய யுத்தியை, மின் வாரியத்துக்கு தெரிவித்து உள்ளனர். இதன்மூலம், என்.எல்.சி., ஸ்டிரைக்கால் ஏற்படும் மின் பாதிப்பை சமாளிக்க முடியும் எனவும், மின் வாரியத்துக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின், 5 சதவீத பங்குகள் விற்பனைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட, 17 தொழிற்சங்கங்கள், நேற்று முன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்கள் போராட்டம் நீடித்தால், ...

அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி கூடுதல் இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

Posted:

புதுடில்லி: "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, 197 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 184 இடங்களையும், இதர கட்சிகள், 162 இடங்களையும் பிடிக்கும்' என, ஆங்கில வார இதழ் ஒன்று நடத்திய, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், ஐ.மு., கூட்டணிக்கான ஓட்டு, 37.2 சதவீதமாக இருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், இது, 31.7 சதவீதமாக குறையும். அதேநேரத்தில், தே.ஜ., கூட்டணிக்கான ஓட்டு, 26.7 சதவீதத்திலிருந்து, 23.3 சதவீதமாக குறையும். இதர ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™