Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கார், மொபெட்டில் வலம் வந்தது யார்?சேலம் படுகொலையில் தீவிர விசாரணை

Posted:

சேலத்தில், பா.ஜ., மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பான விசாரணை, சுறுசுறுப்படைந்துள்ளது. கார் மற்றும் மொபெட்டில் வலம் வந்த மர்ம நபர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிய, உள்ளூர் பிரமுகரைப் பிடிக்க, சேலத்தைச் சேர்ந்த, 100 ரவுடிகளிடம், எஸ்.ஐ.டி., பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில், துப்பு துலக்கவும், தொடர்புடையவர்களை கைது செய்யவும், சேலம், வேலூர், பெங்களூரு, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடியில், சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்.ஐ.டி.,) தீவிர விசாரணை ...

நான்காண்டுகளில் 555 போலி "என்கவுன்டர்'கள்

Posted:

புதுடில்லி:கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, 2013 வரை, நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக, புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யப் போகும் போது, அவர்களுடன் ஏற்படும் சண்டையின் போது, கொல்லப்படும் குற்றவாளிகள் மீது போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை, "என்கவுன்டர்' என அழைக்கப்படுகிறது.ஆனால், உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறான நோக்கத்தில், குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்வதை, போலி என்கவுன்டர் என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.அந்த வகையில், கடந்த ...

பயங்கரவாதி ஷாஜத் அகமதுவுக்கு தூக்கு? இன்று இறுதி தீர்ப்பு

Posted:

புதுடில்லி: டில்லி, பாட்லா ஹவுஸ் "என்கவுன்டர்' வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மா மற்றும் இரண்டு போலீசாரை சுட்டுக் கொன்ற, "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாதி ஷாஜத் அகமதுவுக்கு, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, ராஜேந்தர் குமார் சாஸ்திரி, இன்று, மரண தண்டனை விதிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் வெடிகுண்டு தாக்குதல்:
கடந்த, 2008 செப்டம்பரில், தலைநகர் டில்லியில், பல இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. நாட்டையே உலுக்கிய அந்த குண்டு வெடிப்புகளில், 26 பேர் இறந்தனர்; 133 பேர் படுகாயம் அடைந்தனர்.அந்த பயங்கரவாத தாக்குதல் நடந்து, ...

மோடி குறித்து ஒபாமாவுக்கு எம்.பி.,க்கள் எழுதிய கடிதம் உண்மையே

Posted:

வாஷிங்டன்:"குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா, "விசா' வழங்கக் கூடாது என கேட்டு, எம்.பி.,க்கள் அனுப்பிய கடிதம் உண்மை தான். அந்த கடிதத்தில், "கட் அண்ட் பேஸ்ட்' வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை' என, அமெரிக்க தடய அறிவியல் வல்லுனர் அறிக்கை அளித்துள்ளார்.இதனால், இந்தியாவின் உள் விவகாரத்தை, மூன்றாம் நாடான அமெரிக்காவுக்கு கொண்டு செல்லவில்லை என கூறிய, மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர், சீதாராம் யெச்சூரி, தி.மு.க.,வின் கே.பி.ராமலிங்கம் எம்.பி., கூறியது பொய் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

பாயும் விமர்சனம்:
குஜராத்தில், 2002ம் ஆண்டு நடந்த மதக் ...

இது தான் முன்னோடியா: கருணாநிதி கேள்வி

Posted:

சென்னை:"இந்த ஆண்டு குறுவை சாகுபடி "அம்போ' ஆகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணை, ஆகஸ்ட் மாதம், 12ல் திறக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்த ஆண்டு குறுவை சாகுபடி, "அம்போ' ஆகிவிட்டது என்பது உறுதியாகியுள்ளது.முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வகையில், பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதிலும், வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், விவசாயிகளிடையே விழிப்புணர்வை ...

ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள்: மீட்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted:

சென்னை:இந்திய தூதரகம் வாயிலாக, ஈரான் சிறையில் வாடும், 16 மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதம்:ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து, கடலுக்குச் சென்ற, 16 மீனவர்கள், ஈரானில், சிறையில் உள்ளதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர், 24ம் தேதி, எனக்கு அளித்த மனுவின் மூலம், இந்த தகவல் என் கவனத்திற்கு வந்தது. மீனவர்கள் அனைவரும், சவுதிய அரேபியாவை தலைமையிடமாக கொண்ட, ஒரு தனியார் ...

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பொய்

Posted:

சென்னை:தடையில்லா சான்று கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படுவதால், வெளிநாடு செல்ல விரும்பும் மாநகராட்சி அதிகாரிகள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் சிக்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாநகராட்சி பணியாளர்கள் பணியில் இருக்கும் போது, அரசு பயணமாகவோ, தனிப்பட்ட பயணமாகவோ வெளிநாடு செல்ல நேரிட்டால், அதுகுறித்து உரிய முன் அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். ஊழியர்கள் இந்த சான்று பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்.தடையில்லா சான்று ...

எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி செலவுகளில் முறைகேடு

Posted:

புதுடில்லி: "எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில், ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. அதனால், எம்.பி.,க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்குவது சரியானதா' என, புத்தகம் ஒன்றில், கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது."பொதுப்பணம், தனியார் செயல்திட்டம் எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் பயன்பாடு மற்றும் அதில் நடைபெறும் தவறுகள்' என்ற தலைப்பில், புத்தகம் ஒன்றை, பத்திரிகைகளில் கட்டுரை எழுதும், சூரிய பிரகாஷ் என்பவர் எழுதி உள்ளார்.அந்தப் புத்தகத்தில், எம்.பி.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில், பல முறைகேடுகள் ...

652 மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் "டிஸ்மிஸ்'

Posted:

சென்னை:சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து, தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்களை, தமிழக அரசு பணி நீக்கம் செய்தது. இதனால், ஏழு ஆண்டுகளாக, கணினி ஆசிரியர்கள் பணியில் நிலவி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1999ம் ஆண்டு, 2,324 கணினி ஆசிரியர்கள், 1,500 ரூபாய் சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். பின், 2004ல், 2,000 ரூபாய் தொகுப்பூதியத்திற்கு மாற்றப்பட்டனர்.இதையடுத்து, பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து, 2006ம் ஆண்டு, 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை ...

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு

Posted:

புதுடில்லி : இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே தடைபட்டுள்ள, மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர, இரு நாடுகளின் செயலர்களும் முடிவு செய்துள்ளனர். அது போல், செப்டம்பர் மாதம், இரு நாடுகளின் பிரதமர்களும், நியூயார்க்கில் சந்தித்து பேசுவது எனவும் முடிவாகியுள்ளது.பல விவகாரங்கள்:அண்டை நாடான பாகிஸ்தானுடன், பல விவகாரங்களில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இரு நாடுகளுக்கும் இடையேயான, சர் கிரீக் எல்லை, சியாச்சின் எல்லைப் பிரச்னை, உல்லார் பேரேஜ் / துல்புல் நேவிகேஷன் திட்டம் மற்றும் எல்லை வழியாக, போதை மருந்து கடத்தல் தடுப்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™