Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் 3,500 பேர் கைது : சேலம் ஆடிட்டர் கொலை வழக்கில் மர்மம் நீடிப்பு
- "டெசோ' ஆர்ப்பாட்டம் பட்டியலில் அழகிரி "மிஸ்சிங்'; குஷ்பு பங்கேற்பு
- கருணாநிதி அறிக்கை ஆதங்கத்தின் உச்சகட்டம் : முதல்வர் ஜெயலலிதா காட்டம்
- அம்பலமானது மார்க்சிஸ்ட் கம்யூ., "நிதி சேகரிப்பு': தனியார் நிறுவனங்களிடம் ரூ.35 லட்சம் வசூல்
- மத்திய அரசுக்கு ஆதரவு: தி.மு.க., திடீர் அறிவிப்பு
- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு துணை தலைவர் ராகுல் வாய்ப்பூட்டு
- "ஊத்தி மூடப்படும்' முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு
- மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உயிர்ப்பிக்க அறிவுறுத்தல்
- "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு திண்டாட்டம்
- சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாடு முழுவதும் ஒரே விலை: அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு
- பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது
| Posted: சென்னை :தமிழக பா.ஜ., பொதுச் செயலர், சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும், மறியலில் ஈடுபட்ட அக்கட்சித் தலைவர்கள் உட்பட, 3,500க்கும் மேற்பட்டோர், நேற்று கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்க, அரசு அமைத்துள்ள, சிறப்பு புலனாய்வு குழு, தனது விசாரணையை துவங்கியுள்ளது. எனினும், முக்கிய துப்பு ஏதும் கிடைக்காததால், மர்மம் நீடிக்கிறது.தமிழக பா.ஜ., பொதுச் செயலர், சேலம் ஆடிட்டர் ரமேஷ், கொலைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் தழுவிய, "பந்த்'துக்கு, பா.ஜ., அழைப்பு ... |
| "டெசோ' ஆர்ப்பாட்டம் பட்டியலில் அழகிரி "மிஸ்சிங்'; குஷ்பு பங்கேற்பு Posted: இலங்கை அரசமைப்புச் சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஆக., 8ம் தேதி, "டெசோ' சார்பில் மாவட்ட வாரியாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில், தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரி இடம் பெறவில்லை. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நடிகை குஷ்புக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.இலங்கை அரசமைப்புச் சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது; தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்; ... |
| கருணாநிதி அறிக்கை ஆதங்கத்தின் உச்சகட்டம் : முதல்வர் ஜெயலலிதா காட்டம் Posted: சென்னை:""என்.எல்.சி., பங்குகளை, தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் வாங்குவது தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை, ஆற்றாமையின் வடிகாலாக அமைந்துள்ளது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:என்.எல்.சி., பங்குகளை, தனியாருக்கு விற்காமல், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கே, விற்க வேண்டும் என்ற, என் கோரிக்கையை, மத்திய அரசும், "செபி' அமைப்பும் ஏற்றுக் கொண்டன. இப்பிரச்னையில், எனக்கு நல்ல பெயர் கிடைத்து விட்டதே, என்ற பொறாமையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்' என்ற தலைப்பில், கருணாநிதி ... |
| அம்பலமானது மார்க்சிஸ்ட் கம்யூ., "நிதி சேகரிப்பு': தனியார் நிறுவனங்களிடம் ரூ.35 லட்சம் வசூல் Posted: தனியார் நிறுவனங்களிடமிருந்து, கட்சி நிதியாக, 35 லட்சம் ரூபாயை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசூலித்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.தனியார் மயம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்து, எப்போதும் குரல் கொடுத்து வருபவை, மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., போன்ற இடதுசாரி கட்சிகள். இந்த கட்சிகள், நிதி வசூலிக்கும் போது, தனியார் நிறுவனங்களை பெரும்பாலும் தவிர்த்து விடுவதுண்டு. |
| மத்திய அரசுக்கு ஆதரவு: தி.மு.க., திடீர் அறிவிப்பு Posted: புதுடில்லி : ""உணவுப் பாதுகாப்பு மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யும் போது, தி.மு.க., ஆதரிக்கும்,'' என, அக்கட்சியின், எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த, தி.மு.க., இலங்கைத் தமிழர் பிரச்னையை முன்னிறுத்தி, கடந்த மார்ச் மாதம் வெளியேறியது. தமிழகத்தில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள், கனிமொழி, வெற்றி பெற்றார்.இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, காங்கிரஸ் அரசின் கனவுத் திட்டமாக விளங்கும், ... |
| காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு துணை தலைவர் ராகுல் வாய்ப்பூட்டு Posted: புதுடில்லி ""கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்படும், கட்சித் தலைவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் "டிவி' விவாத நிகழ்ச்சிகளில் தோன்றும் தலைவர்கள் பங்கேற்ற, இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. அதில், காங்கிரஸ் மாணவர் அமைப்பின் முன்னணி தலைவர்களும் பங்கேற்றனர்.மாநாட்டை துவக்கி வைத்து, ராகுல் பேசியதாக, உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர், ரீட்டா பகுகுணா ஜோஷி, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:சமூக வலைதளங்கள், தகவல் தொடர்பு ... |
| "ஊத்தி மூடப்படும்' முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு Posted: புதுடில்லி:சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை, "போதிய ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி, வாபஸ் பெற, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும், தற்போதைய உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி, விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில், 2007ல், மனு தாக்கல் செய்தார். |
| மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உயிர்ப்பிக்க அறிவுறுத்தல் Posted: அனைத்து உள்ளாட்சிகளும், அதளபாதாளத்திற்கு சென்றுள்ள, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், மழைநீர் திட்ட கட்டமைப்புகளை புனரமைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2001ல், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து கட்டமைப்புகளிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என, சட்டம் இயற்றப்பட்டன. அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. |
| "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு திண்டாட்டம் Posted: மேட்டுப்பாளையம்:காரமடை தோலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, "குடி'மகன்களின் "பார்' ஆக மாறியுள்ளது. பள்ளியின் பீரோவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள், சேதப்படுத்தப்பட்டுள்ளன.காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், ஒரே வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. துவக்கப்பள்ளியில் 85 குழந்தைகளும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 160 மாணவர்களும் படிக்கின்றனர். பள்ளிக்கு பெயரளவில் சுற்றுச்சுவர் உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்றால், குடிமகன்களுக்கு கொண்டாட்டம்; ஆனால், ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம். நேற்று முன் தினம் இரவு, ... |
| Posted: சென்னை:""சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது,'' என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்து உள்ளார்.மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று, புதுச்சேரி செல்வதற்காக, பெங்களூரில் இருந்து, சென்னை விமானம் நிலையம் வந்தார்.அப்போது அவர் கூறியதாவது:பெட்ரோல் விலையை குறைக்க, மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போவதால், ரூபாய் மதிப்புக்கு தகுந்தவாறு, பெட்ரோல் விலை மாறுபடுகிறது.ஏற்கனவே, ரூபாய் மதிப்பு நிலையாக இருந்தபோது, ... |
| பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ்- மிடில்டன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது Posted: லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி, கேட் மிடில்டனுக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டன், பிரசவத்திற்காக, லண்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று காலை முதலே அவருக்கு பிரசவ வலி இருந்து வந்தது.இந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) மாலை 4.24 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாக கென்சிங்டன் மாளிகை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.முன்றே முக்கால் எடை:பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மனைவி கேத் மிடில்டனுக்கு இன்று பிறந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 23,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |