Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


500 மெகா வாட் மின்சாரம் வாங்க வாரியம் திட்டம்: மின்வெட்டில் இருந்து தமிழகம் தப்ப வாய்ப்பு

Posted:

சென்னை: "தமிழகத்திற்கு, ஜூன் மாதம் முதல், பிற மாநிலங்களிலிருந்து, கூடுதலாக, 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது நிரந்தரமாக தொடரும்' என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது. அனைத்து மின் உற்பத்தி ஆதாரங்களும், தற்போது மின் உற்பத்தியில் ஈடுபடுவதால், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, கடந்த ஒரு மாதமாக, 11 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. எனவே, மின்வெட்டு பிரச்னையில் இருந்து, தமிழகம் தப்பிக்க வாய்ப்புள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான, "டான்ஜெட்கோ'விற்கு, மரபு மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் மொத்த மின் உற்பத்தி திறன், 18,514 மெகா வாட். ...

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சதாசிவம் பொறுப்பேற்பு

Posted:

சுப்ரீம் கோர்ட்டின், 40வது தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், 64, நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தை சேர்ந்தவர்:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த, அல்டமாஸ் கபீரின் பதவிக் காலம், நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்து, மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின், முதன் முறையாக, தமிழகத்தில் இருந்து, சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியாக பதவியேற்கும் ...

மருத்துவ நுழைவு தேர்வு ரத்து: மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு

Posted:

புதுடில்லி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிரடி உத்தரவு:
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அத்தகைய தேர்வை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை; அவ்வாறு நடத்துவது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனவும், இடைக்கால தீர்ப்பு ...

நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது: பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்

Posted:

புதுடில்லி: ""நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
சீர்திருத்த நடவடிக்கை:
டில்லியில், நேற்று, "அசோசெம்' அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ...

பொருளாதார மேதை பிரதமர் தேவையில்லை: ராஜ்நாத் சிங்

Posted:

புதுடில்லி: ""இந்தியாவுக்கு, பொருளாதார மேதை பிரதமர் தேவையில்லை; உண்மை நிலவரத்தை அறிந்து, அதன்படி செயல்படும் பிரதமர் தான் தேவை,'' என, பாரதிய ஜனதா தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.
டில்லியில் நேற்று, "அசோசேம்' எனப்படும், வர்த்தக சபை கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் தற்போதைய நிலையில், ஊழலற்ற, நம்பகத் தன்மை மிகுந்த அரசு தான் தேவை. தொலைநோக்குப் பார்வையுடன், உலக அரங்கில் இந்தியாவை ஒளிரச் செய்வேன் என்ற, திடமான மன உறுதி கொண்ட தலைமை தான் அவசியம். இந்த சபையில் இன்று, பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையில், எவ்வித திடமான அறிவிப்பும் இடம்பெறவில்லை. ...

கச்சத்தீவு விவகாரத்தில் வேறுபாட்டை மக்கள் அறிவர்: கருணாநிதி

Posted:

சென்னை: "கச்சத்தீவு விவகாரத்தில் வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
"தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி கச்சத் தீவை மீட்க, ஏன் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை' என, ஜெயலலிதா திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் ஏன், இப்போது 2011ம் ஆண்டிலும், ஜெயலலிதா தானே ஆட்சியில் இருக்கிறார். இவர் ஏன் கச்சத்தீவை மீட்கவில்லை என, நான் கேட்டிருந்தேன். அதற்கு தன் நீண்ட அறிக்கையில் ஜெயலலிதா ஏன் பதில் ...

மதுரை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி

Posted:

மதுரை: பாஸ்போர்ட்டை தொலைத்து சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்க வேண்டும் என்பது உட்பட இரு வழக்குகளில், மனுதாரர்களின் வக்கீல் தமிழில் வாதாடியதால், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.மணிக்குமார் தள்ளுபடி செய்தார். நேற்று வக்கீல்கள், "தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்,' என வலியுறுத்தியதால், நீதிபதி,""தமிழில் வாதாடலாம்,'' என கருத்தை வெளியிட்டார்.
கோவில்பட்டி ஆயிஷாபானு,"எனது கணவர் பக்கீர் மைதீன். சவுதி அரேபியாவில், கூலித்தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு தவிக்கிறார். அவரை மீட்டு ஒப்படைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட ...

"2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு: அனில் அம்பானி, டினா ஆஜராக உத்தரவு

Posted:

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில், அனில் திருபாய் அம்பானி குரூப் நிறுவனங்களின் தலைவர், அனில் அம்பானியும், அவரின் மனைவி டினா அம்பானியும், அரசு தரப்பு சாட்சியாக ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும்' என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள, சுவான் டெலிகாம் நிறுவனத்தில், அனில் அம்பானியின் நிறுவனம், 990 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக தெரிய வந்துள்ளது. அதனால், "அனில் அம்பானியும், அவரின் மனைவி டினா அம்பானியும் ...

2015 ல், ஏவுகணை தாக்குதலில் உலகின் "நம்பர் 1' இந்தியா தான்: சிவதாணுபிள்ளை

Posted:

ராமேஸ்வரம்: ""போர் விமானத்தில் இருந்து, எதிரி இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி முடிந்தவுடன், 2015 ல் ஏவுகணை தாக்குதலில், உலகின் நம்பர் 1 இந்தியா தான்,'' என, இந்த ஏவுகணை திட்ட இயக்குனர் ஏ.சிவதாணுபிள்ளை கூறினார்.
ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது: மூன்று டன் எடையுள்ள பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியை விட இரு மடங்கு வேகமாக சென்று, 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை, கடல், தரை வழியாக சென்று, தாக்கக்கூடியது. இது தற்போது, ராணுவம், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, போர் விமானத்தில் இருந்து, இந்த ஏவுகணையை செலுத்தி, எதிரி இலக்கை தாக்கும் வகையில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™