Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மொழிக் கொள்கையில் ஏற்பட்ட குழப்பங்கள்

Posted: 19 Jul 2013 01:10 PM PDT

உலகமெங்கும் கல்விமொழிக் கொள்கையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே கல்விமொழிக் கொள்கை அனைத்தும் அரசியலாக்கப்பட்டன.

தகுதியும் தரமும்

Posted: 19 Jul 2013 01:06 PM PDT

மருத்துவக் கல்விக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதைத் தவிர, நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் விரைவில் மாற்றம்

Posted: 19 Jul 2013 01:03 PM PDT

தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மாற்றுவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

உடன்குடி மின் திட்டம்: 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிப்பு

Posted: 19 Jul 2013 01:02 PM PDT

உடன்குடி மின் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என அறிவித்த 6 மாதங்களில் பெரிய முன்னேற்றமாக பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) உள்பட 4 சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தன.

மாநிலங்களவைத் தேர்தல்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு எப்போது?

Posted: 19 Jul 2013 01:02 PM PDT

தமிழகத்தில் ஆறு எம்.பி.க்களின் பதவிக் காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர்களுக்குப் பதிலாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள், வரும் 26 ஆம் தேதி தில்லியில் பதவியேற்க உள்ளனர்.

264 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Posted: 19 Jul 2013 01:01 PM PDT

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதித்துள்ள 264 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ரத்து: மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

Posted: 19 Jul 2013 01:01 PM PDT

மருத்துவப் படிப்புக்காக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கச்சத்தீவு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது துரோகமா?

Posted: 19 Jul 2013 01:00 PM PDT

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.

ஒலியைவிட 3 மடங்கு வேகமாகச் செல்லும் ஏவுகணைக்கான சோதனை

Posted: 19 Jul 2013 12:58 PM PDT

ஒலியைவிட 3 மடங்கு வேகமாகச் செல்லக் கூடிய ஏவுகணைக்கான சோதனை நடந்து வருவதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை அதிகாரி பத்மபூஷன் டாக்டர் ஏ.சிவதாணுப் பிள்ளை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மோடியை ஆதரிக்க மாட்டோம்

Posted: 19 Jul 2013 12:48 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நரேந்திர மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சண்டையில் ஜிஎன்எல்ஏ கமாண்டர் சுட்டுக் கொலை

Posted: 19 Jul 2013 12:47 PM PDT

மேகாலயத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், காரோ தேசிய விடுதலை ராணுவ (ஜிஎன்எல்ஏ) அமைப்பின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த சண்டை சுமார் 3 மணி நேரம் நடந்தது.

மோடி மதச்சார்பற்றவர் என எப்போதும் கூறியதில்லை

Posted: 19 Jul 2013 12:47 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என எப்போதும் தான் கூறியதில்லை என சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மதவாத கட்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை

Posted: 19 Jul 2013 12:46 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் 3ஆவது கட்டமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கொல்லப்ட்டனர். இறந்த நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூரில் தொடங்கியது கபிலர் விழா

Posted: 19 Jul 2013 12:34 PM PDT

திருக்கோவிலூரில், பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.  திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம், கடந்த 37 ஆண்டுகளாக சிறப்பான முறையில் கபிலர் பெருமானுக்கு விழா எடுத்து கெüரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் கபிலர் விழாவை சிறப்பாகக்

பழங்குடி மக்கள் முன்னணி மாநாடு

Posted: 19 Jul 2013 12:33 PM PDT

பழங்குடி மக்கள் முன்னணியின் மேல்மலையனூர் ஒன்றிய மாநாடு பின்னனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.5.31 லட்சம் நல உதவி

Posted: 19 Jul 2013 12:33 PM PDT

உளுந்தூர்பேட்டை வட்டம் நொனையவாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏரிகளை ஆழப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 19 Jul 2013 12:33 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக் காலம் தொடங்குவதற்குள் மழைநீரை சேமிக்கும் வகையில், ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் வலியுறுத்தினர்.

பள்ளிகளை தரம் உயர்த்த ஆசிரியர்கள் கோரிக்கை

Posted: 19 Jul 2013 12:33 PM PDT

பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய தொழிலாளி மீது தாக்குதல்

Posted: 19 Jul 2013 12:32 PM PDT

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய மனிதவளத் துறை அதிகாரியின் தூண்டுதலின்பேரில் வியாழக்கிழமை தொழிலாளியை சி.ஐ.எஸ்.எப். வீரர் தாக்கியதால் அனல்மின் நிலைய நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு

Posted: 19 Jul 2013 12:32 PM PDT

பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரஜேந்திர நவநீத் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 19 Jul 2013 12:31 PM PDT

கட்டுமானம், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டு சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஆகஸ்ட் 6-ல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2013 12:31 PM PDT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 6-ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

தொழிலதிபர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.1.2 லட்சம் வழிப்பறி

Posted: 19 Jul 2013 12:31 PM PDT

தொழிலதிபர் மீது மிளகாய்ப்பொடி தூவி, ரூ.1.20 லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

இலங்கை-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்

Posted: 19 Jul 2013 12:30 PM PDT

இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் சனிக்கிழமை தொடங்குகிறது.

வீடுகளில் பூட்டை உடைத்து  நகை திருட்டு

Posted: 19 Jul 2013 12:30 PM PDT

கடலூரில் ஒரே பகுதியில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சுகாதாரச் சீர்கேடு: சிறுதொண்டமாதேவியில் நோய் பரவும் அபாயம்

Posted: 19 Jul 2013 12:30 PM PDT

பண்ருட்டி, சிறுதொண்டமாதேவி கிராமத்தில் கழிவு மற்றும் மழைநீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: 100 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 19 Jul 2013 12:30 PM PDT

கடலூரில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். அன்னை ரோலர் ஸ்கேட்டிங் அமைப்பு சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்

பாரத ரத்னா விருது: தயான் சந்த் பெயர் பரிந்துரை

Posted: 19 Jul 2013 12:29 PM PDT

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பெயரை, பாரத ரத்னா விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பக்தர்களுக்கு குடிநீர், நடமாடும் கழிவறை அமைக்க ஆட்சியர் உத்தரவு

Posted: 19 Jul 2013 12:29 PM PDT

ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், நடமாடும் கழிவறைகளை போதிய அளவு அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வாகனம் மோதி ரயில்வே கேட் பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted: 19 Jul 2013 12:29 PM PDT

திருவள்ளூர் அருகே ரயில்வே கேட்டில் வாகனம் மோதி சேதமடைந்ததால் அவ்வழியாகச் செல்லும் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் செல்லமுடியாமல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்

காவல் நிலையம் எதிரேபெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 19 Jul 2013 12:29 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் எதிரே  பெண்ணிடம் நகை பறித்த பைக் ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பூட்டிய வீட்டில் 6 பவுன், ரூ.10 ஆயிரம் திருட்டு

Posted: 19 Jul 2013 12:28 PM PDT

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா, புஜாராவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

Posted: 19 Jul 2013 12:28 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, சேதேஷ்வர் புஜாரா ஆகியோரை ஊடகங்களிடம் பேசக்கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீ ஆடி அமர்ந்தாள் ஆரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

Posted: 19 Jul 2013 12:28 PM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஆடி அமர்ந்தால் ஆரியம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஆடிப்பட்டத்துக்கு விதைகளை வழங்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 19 Jul 2013 12:28 PM PDT

தற்போது தொடங்கியுள்ள ஆடிப்பட்டத்துக்கு தேவையான வேளாண் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடப்பு பருவ நெல் சாகுபடிக்கு போதிய உரங்கள் இருப்பு : ஆட்சியர்

Posted: 19 Jul 2013 12:27 PM PDT

நடப்பு பருவத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பு உள்ளன என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

128 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

Posted: 19 Jul 2013 12:27 PM PDT

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு சுருண்டது.

கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க வேண்டும்

Posted: 19 Jul 2013 12:27 PM PDT

: தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் கேபிள் டிவியை அரசுடமையாக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்எல்ஏ அன்பழகன் பேரவையில் வலியுறுத்தினார்.

குடிநீர் திட்டப் பணிக்கு பூமிபூஜை

Posted: 19 Jul 2013 12:27 PM PDT

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2013 12:26 PM PDT

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது.

அரசின் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தல்

Posted: 19 Jul 2013 12:26 PM PDT

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வலியுறுத்தினார்.

முப்பெரும் விழா

Posted: 19 Jul 2013 12:26 PM PDT

புதுச்சேரியை அடுத்த புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பொதுநல சமூகப்பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏஐசிசிடியு ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2013 12:25 PM PDT

மாருதி சுசுகி மற்றும் சுசுகி மோட்டார் சைக்கிள் கம்பெனிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வலியுறுத்தி புதுச்சேரி 100 அடி சாலை மாருதி சுசுகி ஷோரூம் எதிரில் ஏஐசிசிடியு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலதிபர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.1.2 லட்சம் வழிப்பறி

Posted: 19 Jul 2013 12:25 PM PDT

தொழிலதிபர் மீது மிளகாய்ப்பொடி தூவி, ரூ.1.20 லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

வீடுகளில் பூட்டை உடைத்து  நகை திருட்டு

Posted: 19 Jul 2013 12:25 PM PDT

கடலூரில் ஒரே பகுதியில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளைத் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர், ரமணராஜ் (36). வெளிநாட்டில் வேலை

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய தொழிலாளி மீது தாக்குதல்

Posted: 19 Jul 2013 12:24 PM PDT

என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய மனிதவளத் துறை அதிகாரியின் தூண்டுதலின்பேரில் வியாழக்கிழமை தொழிலாளியை சி.ஐ.எஸ்.எப். வீரர் தாக்கியதால் அனல்மின் நிலைய நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆவின் மூலம் கால்நடைகளுக்கு இலவச மருத்துவம்: அமைச்சர்

Posted: 19 Jul 2013 12:23 PM PDT

ஆவின் நிறுவனத்தின் மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று பால்வளத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அன்னதான திட்டம் தேவை

Posted: 19 Jul 2013 12:23 PM PDT

தமிழகத்தில், கோயில்களில் செயல்படுத்துவதுபோல் மசூதி, சர்ச்சுகளிலும் அன்னதானத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க ஐம்பெரும் விழா

Posted: 19 Jul 2013 12:23 PM PDT

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  காமராஜர், மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர், இரட்டைமலை சீனிவாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் பிறந்த தினங்கள் ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டன.

335 லிட்டர் சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 19 Jul 2013 12:22 PM PDT

திண்டிவனம் பகுதியில் போலீஸார் நடத்திய சாராய வேட்டையில், மூன்று இடங்களில், கேன்களுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 335 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேர் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஐ.என்.டி.யூ.சி.தலைவர் நியமனம்

Posted: 19 Jul 2013 12:22 PM PDT

விழுப்புரம் மாவட்ட ஐ.என்.டி.யூ.சி கிளைத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ ஜி.ஜானகிராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பம் வரவேற்பு

Posted: 19 Jul 2013 12:22 PM PDT

: விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கான கடனுதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட அறிக்கை:

பொறியியல் மாணவர் தற்கொலை

Posted: 19 Jul 2013 12:21 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே தந்தை கண்டித்ததால் பொறியியல் மாணவர் விஷம் குடித்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.

முதியவர் காணவில்லை

Posted: 19 Jul 2013 12:21 PM PDT

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தந்தை வீடு திரும்பவில்லை என அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

காரில் ஆயுதம்: இருவர் கைது

Posted: 19 Jul 2013 12:21 PM PDT

கள்ளக்குறிச்சியில், ஆயுதங்களுடன் காரில் வலம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமைப்புசாரா தொழிலாளர் 232 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 19 Jul 2013 12:20 PM PDT

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 21.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார்.

அரசின் அச்சுத் துறையில் இளநிலைக் கட்டுநர் பதவிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 19 Jul 2013 12:20 PM PDT

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் இளநிலைக் கட்டுநர் பணிக்காலியிடங்களுக்கு பதிவுமூப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

"இலவச முதலுதவிப் பயிற்சி: 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Jul 2013 12:19 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான இலவச முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க மாணவர்கள் ஜூலை 31 ஆம்

உத்தரகண்ட்டுக்கு நிவாரணப் பொருள்கள்

Posted: 19 Jul 2013 12:19 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கன்னியாகுமரி மாவட்ட துணி வங்கி அமைப்பு சார்பில் நிவாரணப் பொருள்கள் அஞ்சல்  மூலம் அனுப்பப்பட்டன.

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் தொழிற் கல்வி பயிற்சி

Posted: 19 Jul 2013 12:19 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த ஏ.வி.கே நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் எம்படட் சிஸ்டம் பற்றிய தொ

பாஜகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

Posted: 19 Jul 2013 12:18 PM PDT

நாகர் கோவிலில் பாஜகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

திராவிடர் கழக பொதுக் கூட்டம்

Posted: 19 Jul 2013 12:18 PM PDT

நாகர்கோவிலில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  திராவிடர் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பே

வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 19 Jul 2013 12:18 PM PDT

தக்கலை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

குமரியைச் சேர்ந்தவர்:மாநில மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் தேர்வு

Posted: 19 Jul 2013 12:17 PM PDT

மாநில மீனவர் கூட்டுறவு இணையத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சேவியர் மனோகரன் பொறுப்பேற்றார்.

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 19 Jul 2013 12:17 PM PDT

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்நாகர்கோவில், ஜூலை 19:

குமரியில் ரூ. 50 லட்சத்தில் வனத்துறை ஆய்வு மாளிகை

Posted: 19 Jul 2013 12:17 PM PDT

கன்னியாகுமரி சன்செட் பூங்காவையொட்டிய கடற்கரை பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில் வனத்துறை ஆய்வு மாளிகை அமையவிருக்கும் இடத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகர்கோவிலில் கம்பன் கழகக் கூட்டம்

Posted: 19 Jul 2013 12:16 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட கம்பன் கழகக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

இளம்பெண் தூக்கிட்டுச் சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை

Posted: 19 Jul 2013 12:16 PM PDT

நித்திரவிளை அருகே வியாழக்கிழமை இரவு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் குறித்து பத்மநாபபுரம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டா

உயர் மருத்துவ சிகிச்சை மறுப்பு தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Posted: 19 Jul 2013 12:16 PM PDT

தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதால் குலசேகரம் அருகேயுள்ள தனியார் ரப்பர் தோட்ட சிஐடியூ ஆதரவு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

தாயைக் கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் சிறை

Posted: 19 Jul 2013 12:15 PM PDT

கருங்கல் அருகே தாயை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு நாகர்கோவில்  நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Posted: 19 Jul 2013 12:15 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும், அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே. ராஜாராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

தீக்குளித்த கல்லூரி மாணவர் சாவு

Posted: 19 Jul 2013 12:14 PM PDT

பக்கத்து வீட்டில் பணம் திருடியதாக பலரும் கூறியதால் விரக்தியடைந்து தீக்குளித்த கல்லூரி மாணவர் வியாழக்கிழமை இறந்தார்.

திருச்செந்தூரில் வழிப்பறி: 2 பேர் கைது

Posted: 19 Jul 2013 12:14 PM PDT

:திருச்செந்தூரில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிறிஸ்தவ ஆலய கோபுரத்தில் ஏறி மணி அடித்த தொழிலாளி கைது

Posted: 19 Jul 2013 12:14 PM PDT

பேய்க்குளம் அருகே கிறிஸ்தவ ஆலய கோபுரத்தில் ஏறி மணி அடித்த தொழிலாளியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

"ரூ. 35 கோடி கடன் வழங்க தொழில் முதலீட்டுக் கழகம் இலக்கு

Posted: 19 Jul 2013 12:13 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் நிகழாண்டில் ரூ. 35 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி மண்டல மேலாளர் பா. கணேசராஜாராம் தெரிவித்தார்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றம்

Posted: 19 Jul 2013 12:13 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 11 நாள்கள் நடைபெறும் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மார்க்சிஸ்ட் தர்னா

Posted: 19 Jul 2013 12:12 PM PDT

திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்னாவில் ஈடுபட்டனர்.

போலி முத்திரை தயாரித்து மோசடி: 3 பேர் கைது

Posted: 19 Jul 2013 12:12 PM PDT

தூத்துக்குடி நோட்டரி பப்ளிக் வழக்குரைஞர் பெயரில் போலி முத்திரை தயாரித்து மோசடி செய்ததாக 3 பேர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

விளாத்திகுளம்: பெண் மர்மச் சாவு

Posted: 19 Jul 2013 12:12 PM PDT

விளாத்திகுளம் அருகே வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்தார். ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரிதளவாய்புரத்தைச் சேர்ந்த பிச்சைக்கனிக்கும், தத்தனேரியைச்

தூத்துக்குடி கல்லூரியில் பரிசளிப்பு விழா

Posted: 19 Jul 2013 12:11 PM PDT

காமராஜர் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 19 Jul 2013 12:11 PM PDT

:தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு போதுமான தண்ணீரை பெற்றுத் தர அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 19 Jul 2013 12:11 PM PDT

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்காவை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்

ஓட்டப்பிடாரம் பள்ளிக்கு மின்விசிறிகள்

Posted: 19 Jul 2013 12:11 PM PDT

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மின்விசிறிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

Posted: 19 Jul 2013 12:10 PM PDT

தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களை எஸ்.பி. மா. துரை பாராட்டி பரிசு வழங்கினார்.

சாத்தான்குளம் கோவிலில் வருஷாபிஷேகம்

Posted: 19 Jul 2013 12:10 PM PDT

சாத்தான்குளம் தேவிஸ்ரீ அழகம்மன் கோவிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்பில் முக்கிய சக்தியாக திகழும் இந்தியா

Posted: 19 Jul 2013 12:10 PM PDT

தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் விஷயத்தில் இந்தியா முக்கிய சக்தியாக திகழ்வதை வரவேற்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் கூறினார்.

ஆறுமுகனேரியில் ராமாயண பாராயணம்

Posted: 19 Jul 2013 12:10 PM PDT

ஆறுமுகனேரியில் மூன்று இடங்களில் ராமாயணப் பாராயணம் நடைபெற்று வருகிறது.

வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 19 Jul 2013 12:10 PM PDT

கோவில்பட்டி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்  நடைபெற்றது.  2013 - 2014-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல்

இராக்கில் குண்டு வெடிப்பு: 20 பேர் சாவு

Posted: 19 Jul 2013 12:09 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் சன்னி பிரிவினரது மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 20 மின்தடை

Posted: 19 Jul 2013 12:09 PM PDT

19 மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக தமிழ்நாடு மின்வாரிய அலுவலக கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 20) மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அழகரசன் கூறியுள்ளார்.

"இஷ்ரத் ஜஹான் விவகாரம்: போலீஸ் அதிகாரி கூறியதாக வெளியான கருத்துக்கு இந்தியா மறுப்பு'

Posted: 19 Jul 2013 12:09 PM PDT

இந்தியாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு சதித் திட்டம் தீட்டியதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்படுவதை இந்தியா மறுத்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

வறட்சி நிவாரணத் திட்ட கணக்கெடுப்பு

Posted: 19 Jul 2013 12:08 PM PDT

  தேனி மாவட்டத்தில், வறட்சி நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் அரசு நிவாரண உதவி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பெரியகுளம்

டெங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 19 Jul 2013 12:08 PM PDT

  கம்பம் நகராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

போடி பள்ளியில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில், மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.   போடி மூவேந்தர் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, அப்பள்ளித்

இந்தியாவுடன் மீண்டும் பேச்சு நடத்த பாகிஸ்தான் விருப்பம்

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

இருநாடுகளுக்கும் இடையேயான நம்பகத்தன்மை குறைந்து வரும் நிலையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

வடபுதுப்பட்டியில் மரக்கன்று நடும் இயக்கம்

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

தேனி அருகே வடபுதுப்பட்டியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், மரக்கன்று நடும் இயக்கத்தை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தேனி மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

தேனி மருத்துவக் கல்லூரியில், மருந்தாளுநர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

படகில் வருபவர்களை அகதிகளாக இனி ஆஸ்திரேலியா ஏற்காது

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து படகுகள் மூலம் வருபவர்களை இனி அகதிகளாகக் கருதி அடைக்கலம் வழங்க முடியாது என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

தாட்கோ திட்ட உதவிகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Jul 2013 12:07 PM PDT

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்ட உதவிகளை பெற ஆன்-லைன் மூலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர்  கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

டிராக்டர் மீது பைக் மோதிஒருவர் சாவு

Posted: 19 Jul 2013 12:06 PM PDT

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர்  மீது இரு சக்கர வாகனம் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™