Tamil News | Online Tamil News |
- "அமைச்சரவை உருவாக்கம் குறித்து ராஜா, கனிமொழியிடம் பேசினேன்': நீரா ராடியா
- மருத்துவ கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு இல்லை: மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
- இலங்கையுடன் நல்லுறவு தொடரும்: நம்புகிறார் சல்மான் குர்ஷித்
- தே.மு.தி.க., தொண்டர்கள் மனநிலை எப்படி? "பல்ஸ்' பார்த்த கட்சித் தலைமை
- "ரொம்ப பேர் பாராட்டவில்லை!': தனக்கு தானே கருணாநிதி சமாதானம்
- கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம்: முதல்வர் ஜெயலலிதா பட்டியல்
- திரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலி மரணம்: இன்று இறுதி சடங்கு
- வாலிபருடன் தனியறையில் மகளை பூட்டிய தாய் கைது
- காவிரி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு வாரி வழங்கிய கர்நாடகா
- தேர்தல் பிரசார ஏற்பாடுகளை கவனிக்க 11 கமிட்டிகள்: இன்று அறிவிக்கிறது பா.ஜ.,
| "அமைச்சரவை உருவாக்கம் குறித்து ராஜா, கனிமொழியிடம் பேசினேன்': நீரா ராடியா Posted: புதுடில்லி: ""மத்திய அமைச்சரவை உருவாக்கம் குறித்து, முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா, தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் பேசினேன்,'' என, அரசியல் தரகர் நீரா ராடியா, சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று அரசு தரப்பு சாட்சியாக, அரசியல் தரகர் நீரா ராடியாக நேரில் ஆஜராகி சாட்சியல் அளித்தார். பல்வேறு தரப்பினருடன், நீரா ராடியா நடத்திய தொலைபேசி உரையாடல்களின் எழுத்து வடிவ ஆவணங்களை , சி.பி.ஐ., வக்கீல் நீரா ராடியாவிடம் காண்பித்தார். அதை, அவர் ... |
| Posted: புதுடில்லி: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ முதுகலை படிப்பிற்கான, தேசிய அளவிலான, பொது நுழைவுத் தேர்வுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று, அதிரடி தடை விதித்து உள்ளது. "இத்தகைய தேர்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்ய, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவக் கல்வி படிக்க, "நீட்' என்ற பெயரில், பொது நுழைவுத் தேர்வை, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) நடத்துகிறது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பில் அனுமதிக்கப்படுகின்றனர். |
| இலங்கையுடன் நல்லுறவு தொடரும்: நம்புகிறார் சல்மான் குர்ஷித் Posted: புதுடில்லி: ""இலங்கை அரசுடன், இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது; அந்த உறவு தொடரும்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். டில்லியில் நேற்று, அமைச்சர் சல்மான் குர்ஷித், நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய - சீன எல்லையை ஒட்டி, இந்திய பகுதியில் உள்ள இளைஞர்களை சேர்த்து, தனிப்படைப் பிரிவு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை. போர் காலங்களிலும், அமைதியான முறையில் தீர்வு காண விரும்புபவர்கள் நாம். எனவே, தேசிய நலனை கருத்தில் கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, அணுசக்தி தொடர்பான உடன்பாடு குறித்து, எதுவும் ... |
| தே.மு.தி.க., தொண்டர்கள் மனநிலை எப்படி? "பல்ஸ்' பார்த்த கட்சித் தலைமை Posted: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான கொலை முயற்சி வழக்கை கண்டித்து, அக்கட்சியினர், போலீஸ் அனுமதியின்றி, நேற்று மாநிலத்தின் பல இடங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர். சமீப காலமாக, கட்சியினர் செயல்பாடு குறைந்து வருவதாக கருதிய தே.மு.தி.க., தலைமை, இதன் மூலம், அவர்கள் மன நிலையை அறிந்து உள்ளது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த மோதல் தொடர்பாக, விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பதை கண்டித்து, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த, தே.மு.தி.க., தலைமை உத்தரவிட்டது. எனினும், ஆர்ப்பாட்டம் நடத்த பல இடங்களில், போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. எனினும், ... |
| "ரொம்ப பேர் பாராட்டவில்லை!': தனக்கு தானே கருணாநிதி சமாதானம் Posted:
சென்னை: "என்.எல்.சி., பங்குகளை வாங்குவதற்கான, முதல்வரின் முடிவுக்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டாம். எந்தெந்த அரசியல் கட்சிகள் என்று பார்த்தால், அ.தி.மு.க.,விடம் கூட்டணிக் கட்சிகளாக இருக்கிற எல்லாக் கட்சிகளும், இதற்குப் பாராட்டு தெரிவிக்கவில்லை. ஓரிரு கட்சிகள் தான் பாராட்டு தெரிவித்திருக்கின்றன' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னைத் தானே சமாதானப்படுத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இம்மாதம் 12ம் தேதி, பிரதமருக்கு, நான் எழுதிய கடிதத்தில், தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவு படுத்தி, 5 ... |
| கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம்: முதல்வர் ஜெயலலிதா பட்டியல் Posted: சென்னை: "கச்சத்தீவை மீட்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது, தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக உள்ளது. அவரது செயல் நகைப்புக்குரியது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு, கருணாநிதி முதல்வராக இருந்த போது, 1974ல், இந்தியா - இலங்கை உடன்பாட்டின்படி, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதைத் தடுக்க, கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள, பெருபாரி பகுதியை, 1960க்கு முன், கிழக்கு ... |
| திரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலி மரணம்: இன்று இறுதி சடங்கு Posted: சென்னை: பழம்பெரும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர், வாலி, 82, மாரடைப்பால் நேற்று இறந்தார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை, மூச்சுத் திணறல் அதிகமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் ... |
| வாலிபருடன் தனியறையில் மகளை பூட்டிய தாய் கைது Posted: தஞ்சாவூர்: தஞ்சையில், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று, வாலிபருடன், தனியறையில், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய் மற்றும் வாலிபரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சை அருகே, அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி கோமதி, 37; இவர்களுக்கு, 13 வயதில் மகள் உள்ளார். இவர், அதே பகுதியில், அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தாய் சம்மதம்: தூத்துக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், 27, என்பவர், கோமதியிடம், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவரது மகளை, திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ... |
| காவிரி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு வாரி வழங்கிய கர்நாடகா Posted: பெங்களூரு: ""காவிரி நதி நீர் வழக்கில், கர்நாடகா சார்பில் ஆஜரான, சட்ட நிபுணர்களுக்கு, 33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,'' என, மாநில நீர்வளத் துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.கர்நாடகா சட்டசபையில், சுயேச்சை எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு, பதில் அளித்து அவர் கூறியதாவது: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா அரசு நடத்தி வரும் வழக்குகளுக்காக, தொழில் ரீதியாக அட்வகேட் ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அளித்த ஊதியம், பயணச் செலவு, தங்கும் செலவு உட்பட, 2013 ஜூன் வரை, அரசு, 32.91 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இந்த வழக்கில், அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா, 8.88 லட்சம் ... |
| தேர்தல் பிரசார ஏற்பாடுகளை கவனிக்க 11 கமிட்டிகள்: இன்று அறிவிக்கிறது பா.ஜ., Posted: புதுடில்லி: லோக்சபா மற்றும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கான, பிரசார ஏற்பாடுகளை கவனிப்பதற்காக, 11 கமிட்டிகளை அமைக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த கமிட்டியில், யார் யார் இடம் பெறுவர் என்ற விவரம், இன்று அறிவிக்கப்படவுள்ளது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், விரைவில் நடக்கவுள்ளன. இதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தல்களுக்கு, தேசிய கட்சிகள், இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ.,வின், தேர்தல் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 19,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |