Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


3 மாநிலங்களாக ஆந்திராவை பிரிக்க திட்டம்: இன்று முக்கிய முடிவு எடுக்கிறது காங்கிரஸ்

Posted:

புதுடில்லி: "தெலுங்கானா' என்ற பெயரில், புதிய மாநிலம் உருவாக்கப்படுவதற்காக, ஆந்திராவை, மூன்று மாநிலங்களாகப் பிரிக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான முடிவு, இன்று நடைபெற உள்ள, அக்கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன், ராயலசீமாவும் தனி மாநிலமாக உருவாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, கடந்த, 1956ம் ஆண்டு, சென்னை மாகாணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த ஆந்திராவின் பல பகுதிகள், ஒருங்கிணைக்கப்பட்டு, ஆந்திர பிரதேசமாக உருவானது.

நீண்ட கால ...

சோனியா தொகுதியில் இரு பல்கலைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted:

காங்கிரஸ் தலைவர், சோனியாவின் சொந்த தொகுதியான, ரேபரேலியில், 220 கோடி ரூபாய் செலவில், ராஜிவ் பெயரில், தேசிய விமான படிப்பு பல்கலை கழகமும், இந்திரா பெயரில், 500 கோடி ரூபாய் செலவில், பெண்கள் பல்கலை கழகமும் அமைக்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அத்துடன், ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யும் பரிந்துரைக்கும், ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர், மணீஷ் திவாரி ...

மோடியால் காங்கிரசுக்கு பித்து பிடித்துவிட்டது: பா.ஜ., விமர்சனம்

Posted:

டேராடூன்: ""குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால், காங்கிரஸ் கட்சிக்கு, பித்து பிடித்து விட்டது. அதனால் தான், உத்தரகண்ட் வெள்ள சேதத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மோடி செய்த உதவியை, அம்மாநில அரசு வெளிப்படுத்தவில்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர் திரிவேந்திர சிங் கூறினார்.
பரந்த மனப்பான்மை:
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: உத்தரகண்டில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பரந்த மனப்பான்மையோடு, கணிசமான தொகையை உதவியாக அளித்தார். 12 கோடி ரூபாய் ...

சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது: சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒரு அதிரடி

Posted:

புதுடில்லி: "சிறையில் அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
"குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றப் பின்னணி உடையவர்கள், பார்லிமென்ட் மற் றும் சட்டசபைகளில் நுழைவதைத் தடுக்கும் வகையில், நேற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. "போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' ...

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

Posted:

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு, 2009ல், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க, சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத மற்ற அனைத்து வகை தனியார் பள்ளிகளும், சேர்க்கை நிலை ...

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புகார்: விஜயகாந்த் மீது கிரிமினல் சட்டம் பாயும் அபாயம்

Posted:

சென்னை: "ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஓட்டளிக்கும்படி, தங்களை வற்புறுத்திய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். புகார் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசித்து வருகிறார். புகாரை சட்டப்படி சந்திக்க, தே.மு.தி.க., ஏற்பாடு செய்து வருகிறது.
சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் இளங்கோவன் போட்டியிட்டார். அவருக்கு ஓட்டளிக்கும்படி, அக்கட்சி தலைவர் மற்றும் பொதுச் செயலரான விஜயகாந்த், கட்சி கொறடா ...

3ம் கட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு விலை என்ன? ஆலோசனையை விரைவில் துவக்குகிறது "டிராய்'

Posted:

புதுடில்லி: மூன்றாம் கட்டமாக ஏலம் விடப்பட இருக்கும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு, விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மத்திய தொலை தொடர்பு ஆணையம், விரைவில் ஆலோசனையை துவக்க உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய, இரண்டு கட்டமாக நடந்த ஏலத்தில், சில மண்டலங்களில், ஏலம் போகவில்லை. அடிப்படை விலை அதிகமாக இருந்ததால், யாரும் பங்கேற்கவில்லை. இதனால், ஏலம் போகாமல் இருக்கும், 900 மெகாஹெர்ட்ஸ், 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை உடன், 13 மண்டலங்களில், சி.டி.எம்.ஏ., சேவைகள் விற்கப்படாமல் உள்ளன. முதல் கட்ட ஏலத்தில், 1,800 மெகாஹெர்ட்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு, இத்தொழிலில் ...

உ.பி.,யில் ஜாதி மாநாடுகள், ஊர்வலங்களுக்கு தடை

Posted:

லக்னோ: உத்தர பிரதேசத்தில், ஜாதியின் பெயரில் நடத்தப்படும், ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம், அதிரடி தடை விதித்துள்ளது.
லோக்சபா தேர்தல்:
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேசத்தில், லோக்சபா தேர்தலுக்கான, அரசியல் கட்சிகளின் பிரசாரம், கடந்த ஆண்டே துவங்கி விட்டது. லோக்சபா தேர்தல் தேதி, இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அதிர்ச்சி அளித்துள்ளன. இந்நிலையில், அந்த மாநிலத்தின் பெரும்பான்மை ...

கூடங்குளத்தில் மின் உற்பத்தி பணி: நள்ளிரவில் துவக்கம்

Posted:

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில், மின்உற்பத்திக்கான பணிகள், நேற்று நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது உலையில், உற்பத்தியை துவக்கிய போது, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடந்த 2012 செப்டம்பரில், முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, உற்பத்தி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ...

ஓட்டு பதிவு இயந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை அறிய புதிய ஏற்பாடு

Posted:

ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், எந்த பட்டனை அமுக்கினாலும், குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும், ஓட்டு பதிவாகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஓட்டு போடும்போதே, எந்தக் கட்சிக்கு, ஓட்டு பதிவாகிறது என்பதை, ஓட்டு போடுபவர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன், புதிய ஏற்பாடு செய்து வருகிறது.நாடு முழுவதும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் மட்டும், ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுப் பதிவு இயந்திரம், அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஓட்டு எண்ணிக்கை எளிதானது. கள்ள ஓட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™