Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: உயிரிழப்பு 116 ஆக உயர்வு
- காஷ்மீரில் ஊடுருவலை முறியடிக்க பாதுகாப்புப் படை தயாராக உள்ளது
- எல்லையில் உள்கட்டமைப்பு:இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு
- புத்த கயை குண்டு வெடிப்பு: பெண் உள்பட 4 பேர் விடுவிப்பு
- கொரிய பெண் பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை
- "உறவுக்கும்' வயது 18 வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் மனு
- உத்தரகண்டில் மீண்டும் மழை: 7 பேர் சாவு
- குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற ஜார்க்கண்ட் ஆளுநர் பரிந்துரை
- இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்
- மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்
- அடுத்த இலக்கு மும்பை: இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை
- புத்த கயையில் குண்டு வைத்தது 4 நபர்கள்: சுஷீல்குமார் ஷிண்டே தகவல்
- ஆளில்லா விமானம் மூலம் ஜகந்நாதர் ரத யாத்திரை கண்காணிப்பு
- கல்வித் துறையில் தில்லி அபரிமித வளர்ச்சி!
- பாரீஸ் வருமாறு என்டிஎம்சி குழுவுக்கு அழைப்பு
- உதகை ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக்கூடாது: ஆ.ராசா
- ஏப்ரலில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை
- மின் கட்டண உயர்வில் தலையிட முடியாது
- சமூக, கலாசார அமைப்புகள் ரூ. 10 லட்சம் நிதியுதவ
- 15-ல் "செபி'யுடன் மத்திய அரசு ஆலோசனை
- கூடங்குளம் முதலாவது அணு உலை செயல்பட அனுமதி
- தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீதான வழக்கில் 25-ல் தீர்ப்பு
- பிரதமருடன் முலாயம் சந்திப்பு
- ஓய்வூதியர் பிரச்னைகள் மீது உடனடி தீர்வு காண வலியுறுத்தல்
- அண்ணா பொறியியல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடக்கம்
- அண்ணாமலை பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு வகுப்பு தொடக்கம்
- ஜே.ஆர்.சி. மாணவர்கள் களப்பயணம்
- ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு:ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை
- பாதங்களை "பதம்பார்க்கும்' சாலை!
- நரசிங்கராயன்பேட்டையில் பஸ் நின்று செல்லக் கோரி மனு
- பெண் விவசாயிகளுக்கு நெல் விதை வழங்கும் விழா
- இன்று நடராஜர் கோயிலில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை
- ரயில் மறியல் 99 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது
- கடலூர் மாவட்ட மக்கள் தொகை 26.5 லட்சம்
- இன்றுமுதல் உண்ணாவிரதம்:என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் முடிவு
- வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- கொலை மிரட்டல்:கவுன்சிலர் உள்ளிட்ட மூவர் கைது
- பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்:கட்டடத் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
- வாகனங்களில் போலியாக நிருபர்களுக்கான ஸ்டிக்கர்
- 9 மாதங்களுக்குப் பிறகு முதியவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு
- சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்
- வகுப்பறையில் மழைநீர் தேக்கம்: பெற்றோர் சாலை மறியல்
- வனப்பகுதியில் ஆந்திர இளைஞர் தற்கொலை
- ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு...
- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு
- பூசாரிகளுக்கு நலவாரியம்: இந்து முன்னணி கோரிக்கை
- ரமலான் நோன்பு: ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வாழ்த்து
- ரமலான்: அதிகாலையில் தண்ணீர்விட கோரிக்கை
- மீனவர் மோதல் விவகாரம்: 10 பேர் கைது
- புதுச்சேரி மருந்தியல் கழக இணையதளம் தொடக்கம்
- மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதாரப் பிரச்னைகள் உருவாகும்
- சுய உதவிக் குழு பெண்களிடம் மோசடி
- என்.எல்.சி. வேலைநிறுத்தம்: ரயில் மறியல் செய்ய முயன்ற 99 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது
- ஸ்டேட் வங்கி சார்பில் நலத்திட்ட உதவிகள்
- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: நகராட்சி ஆணையர் ஆய்வு
- கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
- ஊடுருவலை நியாயப்படுத்துகிறது சீனா
- பண்ருட்டி நகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
- சீன நிலச்சரிவில் புதையுண்ட 40 பேர்
- என்.எல்.சி. பங்கு விற்பனை: ப.சிதம்பரம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி
- லாட்டரி சீட்டு விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன்
- ஆடிப் பட்டத்தில் அமோக லாபம்: வேளாண் துறை யோசனை
- "தழைச்சத்து உரங்களை கூடுதலாகப் பயன்படுத்தாதீர்'
- முத்திரையிடாத தராசு, எடைக்கற்கள் பறிமுதல்
- பெரியார் பல்கலை. சிண்டிகேட் உறுப்பினராக பூ.ராஜமன்னன் நியமனம்
- சுவாமி ஊர்வலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
- ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ரூ. 2.32 கோடிக்கு ஏலம்
- கொள்ளை முயற்சி: 3 பேர் கைது
- "அம்மா' திட்ட சிறப்பு முகாம்
- போலி சுங்க அலுவலகம் நடத்தி மோசடி: இளைஞர் கைது
- அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு
- மணல் லாரி மோதி பெண் சாவு
- இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம்
- தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம்
- பேரணி செல்ல முயன்ற சிஐடியூ.வினர் கைது
- "நிலையான மகசூலுக்கு உயிர் உரங்கள் அவசியம்'
- பணி நிறைவுப் பாராட்டு
- சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயுவை பயன்படுத்தியது அம்பலம்
- விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம்
- பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துதல்!
- பாதி விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம்
- மக்கள்தொகை கட்டுப்பாட்டில்தான் நாட்டின் வளர்ச்சி
- பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
- பாரதியார் பல்கலைக் கூடத்தை மேம்படுத்தக் கோரிக்கை
- அனைத்து மத கோயில்களிலும் ஆளுநர் வழிபாடு
- 10 நாள்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர்
- காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்
- மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள்
- நாளை ஜிப்மர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு
- மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணி: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு
- ஆரல்வாய்மொழியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
- கொட்டாரத்தில் நாளை கபடி போட்டி தொடக்கம்
- தாணுலிங்கநாடார் நினைவிடம் சேதம்: பாலபிரஜாபதி அடிகளார் கோரிக்கை
- மணலிக்கரை பள்ளியில் புனித மரியகொரற்றி விழா
- பெண்ணை கத்தியால் குத்தி வியாபாரி தற்கொலை முயற்சி
- மரத்தை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்
- களியக்கல் கோவிலில் ஹோமபூஜை விழா நாளை தொடக்கம்
- ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- புத்தகத் திருவிழாவுக்காக விழிப்புணர்வு ஸ்டிக்கர்!
| உத்தரப் பிரதேசத்தில் பலத்த மழை: உயிரிழப்பு 116 ஆக உயர்வு Posted: 11 Jul 2013 01:03 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரு வாரங்களில் மாநிலத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். |
| காஷ்மீரில் ஊடுருவலை முறியடிக்க பாதுகாப்புப் படை தயாராக உள்ளது Posted: 11 Jul 2013 01:02 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஆனால் அதை முறியடிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் காஷ்மீர் பகுதிக்கான ராணுவ தளபதி கூறியுள்ளார். |
| எல்லையில் உள்கட்டமைப்பு:இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு Posted: 11 Jul 2013 01:02 PM PDT எல்லைப்பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதை இந்தியா நிராகரிக்கும் என்று தெரிகிறது. |
| புத்த கயை குண்டு வெடிப்பு: பெண் உள்பட 4 பேர் விடுவிப்பு Posted: 11 Jul 2013 01:01 PM PDT பிகாரில் புத்த கயை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக காவலில் வைக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரையும், போதிய ஆதாரமில்லாத காரணத்தால் போலீஸார் விடுவித்தனர். |
| கொரிய பெண் பலாத்கார வழக்கு: குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறை Posted: 11 Jul 2013 12:58 PM PDT தென்கொரிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 8 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மத்தியப் பிரதேச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. |
| "உறவுக்கும்' வயது 18 வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 11 Jul 2013 12:57 PM PDT திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 என்று இருப்பதைப் போலவே, சொந்த மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குப் பிறகே உடலுறவு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று "ஐ-தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. |
| உத்தரகண்டில் மீண்டும் மழை: 7 பேர் சாவு Posted: 11 Jul 2013 12:56 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். |
| குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்பப் பெற ஜார்க்கண்ட் ஆளுநர் பரிந்துரை Posted: 11 Jul 2013 12:56 PM PDT ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைச் திரும்பப் பெற வேண்டுமென்று ஆளுநர் சையது அகமது, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார். |
| இந்திய-மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் Posted: 11 Jul 2013 12:53 PM PDT மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லை அருகே உள்ள பாதுகாப்பு நிலைகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். |
| மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் Posted: 11 Jul 2013 12:53 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| அடுத்த இலக்கு மும்பை: இந்தியன் முஜாஹிதீன் எச்சரிக்கை Posted: 11 Jul 2013 12:51 PM PDT தங்களின் அடுத்த இலக்கு மும்பைதான் என்று இந்தியன் முஜாஹிதீன் (ஐ.எம்) பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டுவிட்டரில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. |
| புத்த கயையில் குண்டு வைத்தது 4 நபர்கள்: சுஷீல்குமார் ஷிண்டே தகவல் Posted: 11 Jul 2013 12:50 PM PDT புத்த கயை குண்டு வெடிப்பில் மூன்று முதல் நான்கு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். |
| ஆளில்லா விமானம் மூலம் ஜகந்நாதர் ரத யாத்திரை கண்காணிப்பு Posted: 11 Jul 2013 12:48 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற ஆமதாபாத் ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரையைக் கண்காணிக்கும் பணியில் முதன்முறையாக ஆளில்லா விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. |
| கல்வித் துறையில் தில்லி அபரிமித வளர்ச்சி! Posted: 11 Jul 2013 12:45 PM PDT கல்வித் துறையில் தில்லி அபரிமித வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் குறிப்பிட்டார். |
| பாரீஸ் வருமாறு என்டிஎம்சி குழுவுக்கு அழைப்பு Posted: 11 Jul 2013 12:45 PM PDT : தில்லி கனாட் பிளேஸ் பகுதி மறுமேம்பாட்டுப் பணிகளின்போது மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) குழுவுக்கு பிரான்ஸ் அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. |
| உதகை ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக்கூடாது: ஆ.ராசா Posted: 11 Jul 2013 12:44 PM PDT நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கக்கூடாது என்று மத்திய கனரக தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரஃபுல் படேலை முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா கேட்டுக் கொண்டுள்ளார். |
| ஏப்ரலில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை Posted: 11 Jul 2013 12:44 PM PDT கிழக்கு தில்லியில் 5 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மனோஜ் ஷா (22), பிரதீப் குமார் (20) ஆகியோர் மீது "பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட'த்தின் கீழ் தில்லி கூடுதல் அமர்வு நீதிமன் |
| மின் கட்டண உயர்வில் தலையிட முடியாது Posted: 11 Jul 2013 12:44 PM PDT தலைநகரில் மின் கட்டண உயர்வு வகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது என்று பாஜக தலைவர்களிடம் மத்திய மின் துறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தார். |
| சமூக, கலாசார அமைப்புகள் ரூ. 10 லட்சம் நிதியுதவ Posted: 11 Jul 2013 12:43 PM PDT உத்தரகண்டில் வெள்ள நிவாரணத்துக்காக தில்லியைச் சேர்ந்த சமூக, கலாசார அமைப்புகள் சார்பில் ரூ. 10 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. போக்குவரத்துத் துறை அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி தலைமையில் முதல்வர் ஷீலா தீ |
| 15-ல் "செபி'யுடன் மத்திய அரசு ஆலோசனை Posted: 11 Jul 2013 12:43 PM PDT நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) ஐந்து சதவீதப் பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பது குறித்து இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரிய (செபி) அதிகாரிகளுடன், தில்லியில் உள்ள மத்திய பங்கு விலக்கல் துறை அதிகாரிகள் இம்மாதம் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள |
| கூடங்குளம் முதலாவது அணு உலை செயல்பட அனுமதி Posted: 11 Jul 2013 12:42 PM PDT கூடங்குளத்தில் முதலாவது அணு உலை செயல்பட இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. அதையடுத்து, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீதான வழக்கில் 25-ல் தீர்ப்பு Posted: 11 Jul 2013 12:42 PM PDT தில்லியில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி, ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட 17-வயது சிறுவன் மீதான வழக்கின் தீர்ப்பை இம்மாதம் 25-ஆம் தேதிக்கு சிறார் நீதீமன்றம் ஒத்திவைத்தது. |
| Posted: 11 Jul 2013 12:41 PM PDT உணவுப் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் சந்தித்துப் பேசினார். |
| ஓய்வூதியர் பிரச்னைகள் மீது உடனடி தீர்வு காண வலியுறுத்தல் Posted: 11 Jul 2013 12:41 PM PDT ஓய்வூதியர் பிரச்சினைகள் மீது தனிக்கவனம் செலுத்தி தீர்வு காணவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வலியுறுத்தினார். |
| அண்ணா பொறியியல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடக்கம் Posted: 11 Jul 2013 12:40 PM PDT விழுப்புரத்தில் அண்ணா பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. |
| அண்ணாமலை பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு வகுப்பு தொடக்கம் Posted: 11 Jul 2013 12:40 PM PDT விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாதூர் ஸ்ரீஅண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| ஜே.ஆர்.சி. மாணவர்கள் களப்பயணம் Posted: 11 Jul 2013 12:40 PM PDT வல்லம் ஒன்றியம், கடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் புதுச்சேரி, ஆரோவில் தாவரவியல் பூங்காவிற்கு புதன்கிழமை களப்பயணம் மேற்கொண்டனர். |
| ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு:ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை Posted: 11 Jul 2013 12:39 PM PDT அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அருகே ஷேர் ஆட்டோக்களில் ஆள்களை ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| பாதங்களை "பதம்பார்க்கும்' சாலை! Posted: 11 Jul 2013 12:39 PM PDT திருக்கோவிலூர் அருகே கடுமையாக சேதமடைந்துள்ள சாலை பாதசாரிகளின் பாதங்களை பதம்பார்த்துவிடுகிறது. இச்சாலையை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். |
| நரசிங்கராயன்பேட்டையில் பஸ் நின்று செல்லக் கோரி மனு Posted: 11 Jul 2013 12:39 PM PDT செஞ்சி - விழுப்புரம் சாலையில் உள்ள நரசிங்கராயன்பேட்டையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| பெண் விவசாயிகளுக்கு நெல் விதை வழங்கும் விழா Posted: 11 Jul 2013 12:38 PM PDT : உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தின் சார்பில் விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை முன்னிட்டு பெண் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| இன்று நடராஜர் கோயிலில் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை Posted: 11 Jul 2013 12:38 PM PDT ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் தரிசன உற்சவமான 8-ம் நாள் உற்தவத்தில் வெள்ளிக்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவின் போது, உடன் ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. |
| ரயில் மறியல் 99 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது Posted: 11 Jul 2013 12:38 PM PDT என்.எல்.சி. பங்கு விற்பனையைக் கண்டித்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 99 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். |
| கடலூர் மாவட்ட மக்கள் தொகை 26.5 லட்சம் Posted: 11 Jul 2013 12:37 PM PDT கடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 26.5 லட்சம் என மக்கள் தொகை விழிப்புணர்வு நிதழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. |
| இன்றுமுதல் உண்ணாவிரதம்:என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் முடிவு Posted: 11 Jul 2013 12:37 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக சனிக்கிழமை முதல் க்யூபாலத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளனர் |
| வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 11 Jul 2013 12:37 PM PDT வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகள் நிறைவுபெற்றவர் உதவித் தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை நேரில் தெடர்பு கொள்ளலாம். |
| கொலை மிரட்டல்:கவுன்சிலர் உள்ளிட்ட மூவர் கைது Posted: 11 Jul 2013 12:36 PM PDT சிதம்பரத்தில் நகைகடை அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நகரமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவரை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்:கட்டடத் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை Posted: 11 Jul 2013 12:36 PM PDT பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. |
| வாகனங்களில் போலியாக நிருபர்களுக்கான ஸ்டிக்கர் Posted: 11 Jul 2013 12:35 PM PDT வாகனங்களில் போலியாக நிருபர்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கைக் கோரி தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்புச் சங்கம் காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர். |
| 9 மாதங்களுக்குப் பிறகு முதியவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டியெடுப்பு Posted: 11 Jul 2013 12:35 PM PDT கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் (60) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி இறந்தார். 9 மாதங்கள் கழித்து அவரது சடலம் வியாழக்கிழமை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. |
| சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல் Posted: 11 Jul 2013 12:35 PM PDT திருவள்ளூர் அருகே கொரக்கன் தண்டலம் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர் தலைமையில் இம்மறியல் |
| வகுப்பறையில் மழைநீர் தேக்கம்: பெற்றோர் சாலை மறியல் Posted: 11 Jul 2013 12:35 PM PDT திருத்தணி அருகே ஊராட்சித் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் தேங்கியதால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வனப்பகுதியில் ஆந்திர இளைஞர் தற்கொலை Posted: 11 Jul 2013 12:34 PM PDT திருவள்ளூர் அருகே வனப்பகுதியில் கிடைத்த எலும்பு கூட்டை வைத்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநில இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. |
| ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... Posted: 11 Jul 2013 12:34 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள், வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சார் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் வந்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |
| ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு Posted: 11 Jul 2013 12:33 PM PDT புதுச்சேரியில் ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பூசாரிகளுக்கு நலவாரியம்: இந்து முன்னணி கோரிக்கை Posted: 11 Jul 2013 12:33 PM PDT புதுச்சேரி மாநிலத்தில் பூசாரிகளுக்கு தனி நலவாரியம் அமைத்து கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத் |
| ரமலான் நோன்பு: ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வாழ்த்து Posted: 11 Jul 2013 12:33 PM PDT : ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் இல்லாமிய மக்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வாழ்த்துகளை தெரிவித் |
| ரமலான்: அதிகாலையில் தண்ணீர்விட கோரிக்கை Posted: 11 Jul 2013 12:32 PM PDT புனித ரமலான் காலம் தொடங்கியதையொட்டி, அதிகாலையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆனந்து கோரிக்கை விடுத்துள்ளார். |
| மீனவர் மோதல் விவகாரம்: 10 பேர் கைது Posted: 11 Jul 2013 12:32 PM PDT புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம்- வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| புதுச்சேரி மருந்தியல் கழக இணையதளம் தொடக்கம் Posted: 11 Jul 2013 12:32 PM PDT புதுச்சேரி மருந்தியல் கழகத்தின் இணையதள தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற இவ்விழாவை நலவழித்துறை இயக்குநர் கே.வி.ராமன் தொடங்கி வைத்தார். |
| மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதாரப் பிரச்னைகள் உருவாகும் Posted: 11 Jul 2013 12:31 PM PDT மக்கள் தொகை பெருக்கத்தால் எதிர்காலத்தில் நாட்டில் பொருளாதாரப் பிரச்னைகள் உருவாகும் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார். |
| சுய உதவிக் குழு பெண்களிடம் மோசடி Posted: 11 Jul 2013 12:31 PM PDT தங்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஊக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுய உதவிக் குழு பெண்கள் புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர் . |
| என்.எல்.சி. வேலைநிறுத்தம்: ரயில் மறியல் செய்ய முயன்ற 99 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது Posted: 11 Jul 2013 12:31 PM PDT என்.எல்.சி. பங்கு விற்பனையைக் கண்டித்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வியாழக்கிழமை நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 99 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிக்கும் மத்திய அரசைக் |
| ஸ்டேட் வங்கி சார்பில் நலத்திட்ட உதவிகள் Posted: 11 Jul 2013 12:30 PM PDT பாரத ஸ்டேட் வங்கியின் 58-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உளுந்தூர்பேட்டை கிளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: நகராட்சி ஆணையர் ஆய்வு Posted: 11 Jul 2013 12:30 PM PDT விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். |
| கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 11 Jul 2013 12:30 PM PDT மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். |
| ஊடுருவலை நியாயப்படுத்துகிறது சீனா Posted: 11 Jul 2013 12:29 PM PDT சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதை சீன அரசு நியாயப்படுத்தி உள்ளது. |
| பண்ருட்டி நகரப் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு Posted: 11 Jul 2013 12:29 PM PDT பண்ருட்டி நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. நாய் கடியாலும், நாய்கள் துரத்துவதாலும் விழுந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. |
| சீன நிலச்சரிவில் புதையுண்ட 40 பேர் Posted: 11 Jul 2013 12:29 PM PDT சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் புதைந்துள்ளனர். |
| என்.எல்.சி. பங்கு விற்பனை: ப.சிதம்பரம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி Posted: 11 Jul 2013 12:29 PM PDT என்.எல்.சி. 5 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் ப.சிதம்பரத்தின் முயற்சிக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார். |
| லாட்டரி சீட்டு விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் Posted: 11 Jul 2013 12:28 PM PDT அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் கிடைக்க இருக்கிறது. |
| ஆடிப் பட்டத்தில் அமோக லாபம்: வேளாண் துறை யோசனை Posted: 11 Jul 2013 12:28 PM PDT : அதிக விலை கிடைக்கக் கூடிய வேளாண் பொருள்களை ஆடிப் பட்டத்தில் விதைப்பு செய்து லாபம் ஈட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| "தழைச்சத்து உரங்களை கூடுதலாகப் பயன்படுத்தாதீர்' Posted: 11 Jul 2013 12:28 PM PDT தழைச்சத்து உரங்களை கூடுதலாகப் பயன்படுத்தினால் பயிர்களை பூச்சிநோய் தாக்க வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. |
| முத்திரையிடாத தராசு, எடைக்கற்கள் பறிமுதல் Posted: 11 Jul 2013 12:28 PM PDT தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில் மறுமுத்திரையிடப்படாத தராசுகள், எடைகற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| பெரியார் பல்கலை. சிண்டிகேட் உறுப்பினராக பூ.ராஜமன்னன் நியமனம் Posted: 11 Jul 2013 12:27 PM PDT சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக (சிண்டிகேட்) சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் பூ.ராஜமன்னனை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நியமனம் செய்துள்ளார். |
| சுவாமி ஊர்வலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை Posted: 11 Jul 2013 12:27 PM PDT சாமி ஊர்வல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ரூ. 2.32 கோடிக்கு ஏலம் Posted: 11 Jul 2013 12:27 PM PDT ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 Jul 2013 12:27 PM PDT ிதம்பரம் பகுதியில் கூட்டாக கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட மூன்று பேரை அண்ணாமலைநகர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 வீச்சரிவாள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| Posted: 11 Jul 2013 12:26 PM PDT காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பரிவாளகம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| போலி சுங்க அலுவலகம் நடத்தி மோசடி: இளைஞர் கைது Posted: 11 Jul 2013 12:26 PM PDT சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்திய காஞ்சிபுரம் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இவரது கூட்டாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார். |
| Posted: 11 Jul 2013 12:26 PM PDT சுங்குவார்சத்திரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சந்தவேலூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. |
| Posted: 11 Jul 2013 12:26 PM PDT வாலாஜாபாத்தில் மணல் லாரி மோதி, பெண் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். வாலாஜாபாத் வெள்ளேரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் மனைவி அஞ்சம் |
| இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்த அதிசயம் Posted: 11 Jul 2013 12:25 PM PDT அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண், உயிருடன் எழுந்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது தற்போது தெரிய வந்துள்ளது. |
| Posted: 11 Jul 2013 12:25 PM PDT காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் குமரக்கோட்டம் கோயில் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை |
| பேரணி செல்ல முயன்ற சிஐடியூ.வினர் கைது Posted: 11 Jul 2013 12:25 PM PDT ஒரகடம் பகுதியில் தனியார் தொழிற்சாலையை நோக்கி பேரணி செல்ல முயன்ற சவுந்திரராஜன் எம்எல்ஏ உள்ளிட்ட சிஐடியுவினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "நிலையான மகசூலுக்கு உயிர் உரங்கள் அவசியம்' Posted: 11 Jul 2013 12:25 PM PDT விவசாயிகள் நிலையான மகசூல் பெற வேண்டுமானால் உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குநர் செüந்தரராஜன் தெரிவித்தார். |
| Posted: 11 Jul 2013 12:24 PM PDT உத்தரமேரூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து திங்கள்கிழமை பணி ஓய்வுபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உத்தரமேரூர் தாலுக்கா தலைவர் அரிமா இரா.கோபிக்கு, பணி நிறைவு பாராட்டு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. |
| சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் விஷ வாயுவை பயன்படுத்தியது அம்பலம் Posted: 11 Jul 2013 12:24 PM PDT சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் சரீன் விஷ வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை ரஷியா அளித்துள்ளது. |
| விதைப் பரிசோதனையின் முக்கியத்துவம் Posted: 11 Jul 2013 12:22 PM PDT விதை பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலர் மூ.மு. முகம்மது காசீம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துதல்! Posted: 11 Jul 2013 12:22 PM PDT பருத்தியில் தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பாதி விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம் Posted: 11 Jul 2013 12:21 PM PDT தோட்டக்கலைத் துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் பழமரக் கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மக்கள்தொகை கட்டுப்பாட்டில்தான் நாட்டின் வளர்ச்சி Posted: 11 Jul 2013 12:17 PM PDT நாட்டின் வளர்ச்சி மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்தான் உள்ளது என்றார் புதுச்சேரி முதல்வர் என். ரங்சசாமி. |
| Posted: 11 Jul 2013 12:17 PM PDT : தங்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கக் கோரி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 5 ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். |
| பாரதியார் பல்கலைக் கூடத்தை மேம்படுத்தக் கோரிக்கை Posted: 11 Jul 2013 12:17 PM PDT புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென ம |
| அனைத்து மத கோயில்களிலும் ஆளுநர் வழிபாடு Posted: 11 Jul 2013 12:17 PM PDT புதுச்சேரியில் உள்ள அனைத்து மதங்களைச் சார்ந்த கோயில்களிலும் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வியாழக்கிழமை வழிபாடு செய்தார். |
| 10 நாள்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர் Posted: 11 Jul 2013 12:16 PM PDT புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது. |
| Posted: 11 Jul 2013 12:16 PM PDT புதுச்சேரி ராஜ்பவன் சட்டமன்றத் தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
| மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் Posted: 11 Jul 2013 12:16 PM PDT : புதுச்சேரியில் மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகளில் அரியாங்குப்பம் பாரதி அணி முதல் பரிசு பெற்றது. |
| நாளை ஜிப்மர் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Jul 2013 12:15 PM PDT ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரியும், தாற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் வரும் சனிக்கிழமை (ஜூலை 13) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 11 Jul 2013 12:14 PM PDT பத்மநாபபுரம் நகராட்சியில் டிப்பர் லாரி பாடி கட்டுவதற்கு தரம் குறைந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறி அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பணி: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு Posted: 11 Jul 2013 12:14 PM PDT மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| ஆரல்வாய்மொழியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி Posted: 11 Jul 2013 12:14 PM PDT ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| கொட்டாரத்தில் நாளை கபடி போட்டி தொடக்கம் Posted: 11 Jul 2013 12:13 PM PDT காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கபடிப் போட்டி கொட்டாரத்தில் சனிக்கிழமை (ஜூலை 13) தொடங்குகிறது. |
| தாணுலிங்கநாடார் நினைவிடம் சேதம்: பாலபிரஜாபதி அடிகளார் கோரிக்கை Posted: 11 Jul 2013 12:13 PM PDT இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்கநாடார் நினைவிடத்தை சேதப்படுத்தி அதன் மேலிருந்த சிவலிங்கத்தை எடுத்துச் சென்றவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் வலியுறுத்தியுள்ளார். |
| மணலிக்கரை பள்ளியில் புனித மரியகொரற்றி விழா Posted: 11 Jul 2013 12:12 PM PDT :மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் பாதுகாவலி மரிய கொரற்றியின் நினைவு நாள், பள்ளியின் அறுபதாம் ஆண்டு கொண்டாட்டத்தின் தொடக்க விழா ஆகியவை தமிழக கார்மெல் சபையின் ஆலோசகர் அருள்பணி அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. |
| பெண்ணை கத்தியால் குத்தி வியாபாரி தற்கொலை முயற்சி Posted: 11 Jul 2013 12:12 PM PDT நாகர்கோவிலில் தையல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணைக் குத்திய வியாபாரி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| மரத்தை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் Posted: 11 Jul 2013 12:12 PM PDT திருவட்டாறு அருகே சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை முழுமையாக அகற்றாததைக் கண்டித்து புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ. தலைமையில் வியாழக்கிழமை பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| களியக்கல் கோவிலில் ஹோமபூஜை விழா நாளை தொடக்கம் Posted: 11 Jul 2013 12:11 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் இசக்கியம்மன் கோவில் பரிகார ஹோமபூஜை மற்றும் திருமுற்றத்தில் பொங்கல் வழிபாடு விழா சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. விழாவில் கேரள மாநிலம் புனகோட்டில்லம் பிரம்மஸ்ரீ கோவில்லூர் கிருஷ்ண சர்மா தலைமையி |
| ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை Posted: 11 Jul 2013 12:11 PM PDT சுசீந்திரம் அருகே ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 பேருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| புத்தகத் திருவிழாவுக்காக விழிப்புணர்வு ஸ்டிக்கர்! Posted: 11 Jul 2013 12:11 PM PDT :கன்னியாகுமரி மாவட்ட புத்தகத் திருவிழாவையொட்டி, நாகர்கோவில் ஐ.ஓ.பி. சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |