puthiyathalaimurai.tv online |
- திருவள்ளூரில் இருந்து கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
- ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்
- ராமேஸ்வரத்தில் உள்ள காந்திநகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து
- திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்
- வட சென்னை மக்களுக்கு உதவிய புதிய தலைமுறை…
- மண்டேலாவின் 95-வது பிறந்த நாள் விழா: வாழ்த்துகளுடன் காத்திருக்கும் மக்கள்
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம்
- “கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்”: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்
- நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்
- கரூரில் வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சி: கே.எஸ்.வி. பள்ளி, பரணி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு
| திருவள்ளூரில் இருந்து கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது Posted: 17 Jul 2013 10:51 PM PDT திருவள்ளூரில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கே.கே. சத்திரம் வாகன சோதனைச் சாவடியில், நிறுத்தாமல் சென்ற லாரியையும், காரையும் காவல்துறையினர் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. பின்னர் ஓட்டுநர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். |
| ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை: உச்சநீதிமன்றம் Posted: 17 Jul 2013 10:47 PM PDT நாடு முழுவதம் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும் மருத்துப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வை மாநிலங்களே நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், விக்ரம் ஜித்தேன் தேசிய நுழைவுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச்சை சேர்ந்த மற்றொரு நீதிபதியான அனில் தவே மட்டும் பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. மத்திய அரசின் இந்த ,தேசிய நுழைவுத் தேர்வு ( N.E.E.T.,National Eligibility cum Entrance Test ) முறையை எதிராக தமிழக அரசு உள்பட 115 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| ராமேஸ்வரத்தில் உள்ள காந்திநகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து Posted: 17 Jul 2013 10:42 PM PDT ராமேஸ்வரத்தில் உள்ள காந்திநகரில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. சரஸ்வதி என்பவரின் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த தீயானது அருகில் இருந்த குடிசைகளுக்கும் வேகமாக பரவியது. இதில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. |
| திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பியோட்டம் Posted: 17 Jul 2013 10:06 PM PDT திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் என்பவரை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரும்போது தப்பியோடினார். பல்லடத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாக்கடைக்குள் முனீஸ்வரன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து முனீஸ்வரனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். |
| வட சென்னை மக்களுக்கு உதவிய புதிய தலைமுறை… Posted: 17 Jul 2013 09:59 PM PDT சமூக அக்கறையுடன் செயல்படும் புதிய தலைமுறை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியில் களமிறங்கியது. அப்படி களம் கண்ட போது, புதிய தலைமுறையின் பார்வையில் பட்டது சிங்காரச் சென்னை என்று மார்தட்டிக்கொள்ளும் மாநிலத் தலைநகரின் முக்கியப் பகுதியான தண்டையார்பேட்டையில் மக்கள் படும் அல்லல். கலந்த பெட்ரோல் ..கலங்கும் மக்கள்: தண்டையார்பேட்டையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது.அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையில் உள்ளது. இதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் இப்பகுதி நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது என்பதும் இப்பகுதி மக்களின் புகார். அடிக்கடி உடைப்பு: சென்னை தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு துறைமுகத்திலிருந்து குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நிலத்தில் பெட்ரோல் கலந்தது. இதனையடுத்து, அந்த உடைப்பு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிலத்தில் ஊறி இருந்த பெட்ரோல், மழை காரணமாக நிலத்தடி நீரில் கலந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த உடைப்பு ஏற்படும் சம்பவம் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுக்குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். இதுப்பற்றி நகரமன்ற தலைவர் கார்த்திகேயன் தெரிவிக்கும்போது, ஏற்கனவே இதுப்போன்று நிகழ்ந்த போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு, பின்னர் தீர்வு காணப்பட்டது. தற்போது, மீண்டும் இந்த பிரச்னை வந்துள்ளதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். களத்தில் புதிய தலைமுறை…. ஜூலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் புதிய தலைமுறை செய்தியாளர் சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதிக்குச் செல்கிறார். அப்பகுதியில் நிலத்தடி நீரில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கலந்திருப்பதாக பொதுமக்கள் கூறும் புகார் பற்றி கேட்டறியச்சென்ற செய்தியாளர், மக்கள் சொல்லும் புகார் அப்பகுதி நிலத்தடி நீரை பார்த்தாலே கண்கூடாக தெரிந்ததால் அங்கிருந்து ஒரு சிறு விளக்கக் காட்சியுடன் நேரடி ரிப்போர்ட் தருகிறார். "பற்றி எரிந்த பச்சை தண்ணீர்" தண்டையார் பேட்டை பகுதி நிலத்தடி நீரில் நனைத்த துணிகளை செய்தியாளர் பற்றவைக்கும் போது அவை பற்றி எரிந்தது. அப்போது அங்கே சற்றி இருந்த அப்பகுதி மக்கள் நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பதை தவிர்க்கவும், சுத்தமான தண்ணீர் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிவகை செய்ய புதிய தலைமுறை உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த செய்தி தொடர்ந்து புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட்டதன் விளைவாக மறுநாளே (15.07.2013) அன்று பாரத் பெடரோலியம் அதிகாரிகள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக்காட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நீர் மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். அமைச்சர் உறுதி…… இதற்கிடையில் நிலத்தடி நீரில் எரிபொருள் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவது பற்றிய பிரச்னைக்கான நடவடிக்கை என்ன என்ற கேள்வியுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை புதிய தலைமுறை அணுகியது . எல்லா எண்ணெய் நிறுவனங்களையும் கூட்டி கசிவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், கசிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு எண்ணெய் நிறுவனங்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த கசிவு பிரச்னை தொடருமானால், குழாய்களை மூடுவதற்கான உத்தரவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து இதுக்குறித்த தொடர் நிகழ்வுகள், நடவடிக்கைகள் குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. 16ம் தேதியன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர் தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தண்டையார் பேட்டையில் சோதனையில் ஈடுபட்டனர். மாதிரிகளை சேகரித்துச் சென்ற அதிகாரிகள் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினுர். மேலும் உரிய விளக்கங்களுடன் அன்றைய தினமே கிண்டியில் இருக்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்து விளக்கமளிக்குமாறும் தெரிவித்தனர். 16ம் தேதி மாலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வாரியத்தின் தலைவர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,: தண்டையார்பேட்டையில் நிலத்தடி நீரை சுத்தம் செய்யும் முழுப் பொறுப்பையும் பாரத் பெட்ரோலியம் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர் சுத்தம் ஆகும் வரை, அப்பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் பணியையும் பாரத் பெட்ரோலியம் நிறுவனமே செய்ய வேண்டும் என்றும் அறிவித்தார். புதிய தலைமுறை செய்தி எதிரொலி : புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக 17.07.2013 - புதன் கிழமை அன்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தண்டையார்பேட்டை பகுதியில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்கியது. ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பாரத் பெட்ரோலியம் இப்படியான சுத்திகரிப்புப் பணியில் ஒரு முறை ஈடுபட்டது. ஆனால் அப்போது தண்ணீர் சுத்தமாகவில்லை. ஆனால் இம்முறை 4 முதல் 5 முறை ஒவ்வொரு ஆழ்துளை கிணறையும் சுத்தப்படுத்தினால் நிலத்தடி நீர் முற்றிலுமாக சுத்தமாகும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தொடர்ச்சியாக ஆழ்துளை கிணறுகளை சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்விவகாரத்தில் தரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது புதிய தலைமுறையின் சமூக அக்கறைக்கு கிடைத்த வெற்றி. |
| மண்டேலாவின் 95-வது பிறந்த நாள் விழா: வாழ்த்துகளுடன் காத்திருக்கும் மக்கள் Posted: 17 Jul 2013 09:23 PM PDT தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. உடல் நிலை குறைபாட்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மண்டேலா குணமடைய வேண்டி பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர் தென் ஆப்ரிக்க மக்கள். இதற்கென 67 நிமிட நேரத்திற்கு, பல்வேறு பொருட்களை தானம் செய்து, தன்னார்வத்துடன் அவர்களது சேவையை வழங்க உள்ளனர். இந்த 67 நிமிடங்கள் என்பது 67 வருட காலத்திற்கு, தென் ஆப்ரிக்கா-வுக்காக மண்டேலா ஆற்றிய சேவையை குறிப்பதாகும். |
| ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடக்கம் Posted: 17 Jul 2013 09:10 PM PDT ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இறுதி வரை போராடி 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள், லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளனர். |
| “கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்”: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம் Posted: 17 Jul 2013 09:02 PM PDT கச்சத்தீவை மீட்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது கண்துடைப்பு நாடகம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை திமுக தலைவர் கருணாநிதி தடுக்க முயற்சிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கச்சத்தீவை மீட்பதற்காக அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கச்சத்தீவை திரும்ப பெறுவதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கருணாநிதி தாரைவார்க்கப்படும் முனபே இந்தவழக்கை தொடர்ந்து இருந்தால் மத்திய அரசின் செயல்பாடு தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ஆட்சி அதிகாரம் போன பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். காணொளி:<“கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்”: கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்> |
| நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் Posted: 17 Jul 2013 07:32 PM PDT நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் முகாமிட்டுள்ள 26 காட்டு யானைகளை மீண்டும் காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும், யானைகள் விரட்டப்பட்டாலும், கடும் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக, யானைகளை விரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 17 Jul 2013 07:29 PM PDT கரூரில் புதிய தலைமுறை சார்பில் நடைபெற்ற வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் ஜூனியர் பிரிவில் கே.எஸ்.வி. பள்ளி மாணவர்களும், சீனியர் பிரிவில் பரணி மெட்ரிக் பள்ளி மாணவிகளும் முதல் பரிசை தட்டிச் சென்றனர். பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், ஜூனியர் பிரிவில் 160 அரங்குகளும், சீனியர் பிரிவில் 40 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 45 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விளக்கமளித்தனர். இப்போட்டியில், ஜூனியர் பிரிவில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கிஷோர், விஜயகுமார் ஆகியோர் நிலம் மாசுபடுதல் குறித்து செய்திருந்த படைப்புக்காக முதல் பரிசை பெற்றனர். சீனியர் பிரிவில் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பிரதீபா, தாரணி ஆகியோர் குறைந்த விலையில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் முறையை செய்து காட்டி முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் நெல்லை வேந்தன் பரிசுகளை வழங்கினார். முன்னதாக அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ”பாசமுள்ள புதிய தலைமுறைக்கு” என்ற புத்தகத்தை வழங்கினார். புதிய விஞ்ஞானிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியாக தமிழகம் முழுவதும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சியை புதிய தலைமுறை நடத்தி வருகிறது. காணொளி:<வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி:கரூரில் அறிவியல் கண்காட்சி> |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
இதற்கிடையில் நிலத்தடி நீரில் எரிபொருள் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவது பற்றிய பிரச்னைக்கான நடவடிக்கை என்ன என்ற கேள்வியுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை புதிய தலைமுறை அணுகியது .