Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


பெரம்பலூரில் யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் விநியோகம்

Posted: 14 Jul 2013 11:09 PM PDT


பெரம்பலூரில் பொதுமக்களுக்கு யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது தலைமையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாத்திரை உட்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கர்ப்பிணிகள், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் தவிர்த்து மற்ற அனைவரும் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளில் புகுந்து நகை கொள்ளை

Posted: 14 Jul 2013 11:04 PM PDT


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 3 வீடுகளில் புகுந்து 37 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஆலூத்துபாளையத்தைச் சேர்ந்த மேரி என்பவர் வீட்டில் 17 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல பொங்கலூர் ராமம்பாளைத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் வீட்டில் 15 சவரன் நகைகள், 80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted: 14 Jul 2013 10:48 PM PDT


பவானிசாகர் அருகே யானை தாக்கியதில் ஒருவர் மரணம் அடைந்தார். பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள விண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அறுமுகமும், அவரது மனைவி பெரியகாளியம்மாளும் குரும்புபாளையம் வனப்பகுதியில் செடி கொடிகளை சேரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டுயானை தாக்கியதில் அறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகாளியம்மாள் படுகாயமடைந்தார்.

திருச்சி அருகே தீ விபத்து : 9 குடிசைகள் சேதம்

Posted: 14 Jul 2013 10:41 PM PDT


திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 9 குடிசைகள்  எரிந்து சேதமடைந்தன. எம்.களத்தூர் ஊராட்சியில் பெரியார் நகர் பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. வீடுகளில் இருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சென்னையில் நாளைய மின் தடை பகுதிகள்

Posted: 14 Jul 2013 09:50 PM PDT


சென்னையில் மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் ஜூலை 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பகுதி: கிழக்கு தாம்பரம், பூண்டி பஜார் மற்றும் இரும்புலியூர் ஒரு பகுதி, எம்.ஈ.எஸ். சாலை, வேளச்சேரி பிரதான சாலை (கிழக்கு தாம்பரம்), கேம்ப் சாலை சந்திப்பு, தாம்பரம் சானடோரியம் கிழக்கு, சிட்லபாக்கம் ஒரு பகுதி, இந்திய விமானப்படை. ராதா நகர் பகுதி: ராதா நகர், கணபதிபுரம், நெமிலிச்சேரி, சாந்தி நகர், கண்ணன் நகர், ஜமீன் ராயப்பேட்டை, சுபாஷ் நகர். கடப்பேரி பகுதி: மெப்ஸ், சானடோரியம், கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலை, கடப்பேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம் ஒரு பகுதி, சிட்லபாக்கம், நேரு நகர், (தாம்பரம், திருநீர்மலை ஊரகப் பகுதிகள்), துர்கா நகர், பச்சைமலை, முடிச்சூர், ராதா நகர், ரயில் நகர், மெüலானா நகர், அமர் நகர், எம்.ஈ.எஸ். சாலை. சேப்பாக்கம் பகுதி: தொலைக்காட்சி நிலையம், ராயப்பேட்டை பகுதி, திருவல்லிக்கேணி, பொதுப்பணித் துறை வளாகம், மாநிலக் கல்லூரி, பெரிய தெரு, சைடோஜி தெரு மற்றும் சந்து, டி.எச். சாலை, அய்யாபிள்ளை தெரு, அக்பர் சாகிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் முகமது தெரு சந்து மற்றும் குறுக்கு தெரு, கெனால் சாலை, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், டி.வி.நாயுடு தெரு, கானாபாக் தெரு மற்றும் சந்து, புச்சிபாபு தெரு, லால் பேகம் தெரு, பெல்ஸ் சாலை, சி.என்.கே. சாலை மற்றும் சந்து, முகமது அப்துல்லா தெரு மற்றும் சந்து, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, எழிலகம் வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம், வாலாஜா சாலை, மியான் சாகிப் தெரு, முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு மற்றும் சந்து, அருணாசல ஆச்சாரி தெரு, தைபூன் அலிகான் தெரு, யூசுப் லப்பை தெரு மற்றும் சந்து, அப்துல் கரீம் தெரு மற்றும் சந்து மற்றும் குறுக்குத் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாகிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, குப்பமுத்து தெரு, வல்லப அக்ரஹாரம், மேயர் சிட்டிபாபு தெரு, சின்னதம்பி தெரு, நாகப்பையர் தெரு. செம்பியம் பகுதி: முத்தமிழ் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மூலக்கடை ஒரு பகுதி, ஆசிரியர் காலனி, மாதாவரம் நெடுஞ்சாலை, ரமணா நகர் முழுவதும், மேல்பட்டிபொன்னப்பன் தெரு ஒரு பகுதி, ஸ்டேட் பேங்க் காலனி, சாந்தி காலனி, ஆர்.வி. நகர், காமராஜர் சாலை, ஜி.என்.டி. சாலை ஒரு பகுதி, வெங்கடேஸ்வரா நகர் ஒரு பகுதி, கோபாலபுரம், கொளத்தூர், செயின்ட் மேரி சாலை, பல்லவன் தெரு, பொன்னுசாமி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர் முழுவதும், கௌதமபுரம், எத்திராஜ் சாலை,எஸ்.ஏ. காலனி ஒரு பகுதி, மில்லிசி காலனி, பேன்சின் காலனி, மாதவரம், அலெக்ஸ் நகர் காலனி, லெதர் எஸ்டேட் ஒரு பகுதி,கே.கே.ஆர். கார்டன், கக்கன் ஜி காலனி செம்பியம், பி.பி.சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, சத்தியவாணி முத்து நகர். மேனாம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஒரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், கருக்கு, விஜய லக்ஷ்மிபுரம், பானு நகர், புதூர், செங்குன்றம் சாலை ஒரு பகுதி, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பிரிதிவி பாக்கம். மயிலாப்பூர் மேற்குப் பகுதி: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை ஹை சாலை, வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை 1, 2-வது சந்து, டி.டி.கே.சாலை, ஸ்ரீபுரம் 1, 2-வது தெரு, ஸ்ரீகிருஷ்ணாபுரம், சந்திர பாக் அவென்யு, பி.வி. கோயில், கதீட்ரல் சாலை, டாக்டர் நடேசன் சாலை, சிவசாமி சாலை, தெய்வ சிகாமணி தெரு, லட்சுமிபுரம், அப்பாகண்ணு தெரு, சி.ஐ.டி.காலனி, ஜட்ஜ் ஜம்புலிங்கம் சாலை, கோபாலபுரம், புதுப்பேட்டை கார்டன். பல்லாவரம் பகுதி: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகனந்தபுரம், சுபம் நகர், பெருமாள் நகர், பி.வி.வி.சாலை, தர்கா சாலை, பாரதி நகர், கன்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம், பம்மல் ஒரு பகுதி. பம்மல் பகுதி: பம்மல் மற்றும் அண்ணா சாலை, அனகாபுத்தூர், நாகல்கேணி, பொழிச்சலூர், சங்கர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், கவுல் பஜார்.  

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் முகாம் அழிப்பு

Posted: 14 Jul 2013 09:19 PM PDT


ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்டுகளின் முகாம் ஒன்றை பாதுகாப்பு படையினர் தாக்கி அழித்தனர். லால்ஹர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இந்த முகாம் குறித்து தகவல் கிடைத்த உடன் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசிடம் சிக்காமல் தப்பிவிட்டனர். கடந்த 10 நட்களாக இந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக லால்ஹர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மைக்கேல் ராஜ் தெரிவித்துள்ளார். அழிக்கப்பட்ட முகாமில் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலந்து அபார வெற்றி

Posted: 14 Jul 2013 09:16 PM PDT


இங்கிலந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலந்து அணி, 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து விளையாடிய அகர் 14 ரன்களுடன் வெளியேற அடுத்து வந்த ஸ்டார்க், சிடில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆண்டர்சனின் பந்தில் விக்கெட் கீப்பர் பிரையரிடம் கேட்ச் கொடுத்து, 71வது ரன்களில் ஹாடின் ஆட்டமிழக்க, 296 ரன்களில் ஆஸ்திரேலியாவின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கர்ப்பிணிகள் ஹஜ் பயணத்தை தவிர்க்க சவுதி அரேபிய அரசு வேண்டுகோள்

Posted: 14 Jul 2013 09:11 PM PDT


விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாகும் முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஹஜ் பயணத்தை தவிர்க்குமாறு சவுதி அரேபிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹஜ் புனித யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் மெக்கா பயணமாக உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் பரவ தொடங்கிய சுவாச தொற்று அதிகரித்து இருப்பதாகவும், இப்பிரச்னை காரணமாக அரேபியாவில் இதுவரை 38 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியா அரசு இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.

160 ஆண்டு கால தந்தி சேவை நேற்றுடன் நிறுத்தம்

Posted: 14 Jul 2013 08:02 PM PDT


160 ஆண்டு கால தந்தி சேவை நேற்று இரவு 9 மணியுடன் முடிவுக்கு வந்தது. டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணி வரையிலும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தந்தி அனுப்பினர். பாரம்பரியமிக்க இந்த தந்தி சேவையை மத்திய அரசு தொடர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் தந்திகள் அனுப்பப்பட்டன. 160 ஆண்டுகள் பழமையான தந்தி சேவையைத் தொடர்ந்து நடத்துவதால், நஷ்டம் ஏற்படுவதாக கூறி அந்த சேவையை மத்திய அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது.  

மத்திய அரசை குறி வைக்கும் மோடி: பதிலடி கொடுக்கும் காங்கிரஸ்

Posted: 14 Jul 2013 07:06 PM PDT


பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட கூடியவர் என கருதப்படும் நரேந்திரமோடி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர்களும் சரியான அவ்வப்போது பதிலடியை கொடுத்து வருகின்றனர். கல்வி என்பது பணம் பறிக்கும் எந்திரமாகிவிட்டது என மத்திய அரசு மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோதி குற்றச்சாட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஷீத் ஆல்வி, 1947-க்கு பின்னர் நாட்டின் நடப்பு குறித்து மோடிக்கு எதுவும் தெரியவில்லை என்றார். மேலும் கல்வியறிவு பெற்ற இந்திய குழந்தைகள் இன்று உலகம் முழுவதும் வியாபித்து பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்குவதால் மோடி கல்வியை அரசியலாக்கி வருகிறார் என குற்றம்சாட்டினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஷபிர் அலி, இது போன்று அரசியல் செய்வது பாஜகவுக்கு கைவந்த கலையாகும் என்றார். மேலும் அவர், மோடியை தூண்டி விட்டுள்ளனர். அனைத்தும் திட்டமிட்ட செயலாகும். குஜராத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் குறைந்துள்ளது. மோடி வார்த்தை ஜாலங்களை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக செயல்படவேண்டும் என்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™