Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


முன்னோடியான முடிவு!

Posted: 16 Jul 2013 01:13 PM PDT

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ரூ. 500 கோடிக்கு பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருப்பது நிச்சயமாக ஒரு வெற்றிதான். தமிழக முதல்வரின் விடாப்பிடியான முயற்சியே இதற்குக் காரணம்.

மரபணு மாற்றப்பட்ட பயிர் குறித்த அச்சத்தைப் போக்க வேண்டும்

Posted: 16 Jul 2013 01:06 PM PDT

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஏஆர்) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் சஜ்ஜன் குமார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க முடியாது

Posted: 16 Jul 2013 01:05 PM PDT

தில்லியில் 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு 6 வாரங்களில் ரூ.91 கோடி

Posted: 16 Jul 2013 01:05 PM PDT

நேரடி மானிய உதவி திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுக்கான மானியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்த 6 வாரங்களில் ரூ.91 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

"டான்ஸ் பார்'களுக்கான தடையை விலக்கியது உச்ச நீதிமன்றம்

Posted: 16 Jul 2013 01:04 PM PDT

மகாராஷ்டிரத்தில் "டான்ஸ் பார்'களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விலக்கியது.

காவலர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

Posted: 16 Jul 2013 01:04 PM PDT

தமிழகத்தில் காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கராத்தே பள்ளி வெள்ளி விழா

Posted: 16 Jul 2013 01:04 PM PDT

செய்யாறில் உள்ள ஒகினவா கோஜூ ரியூ கராத்தே பயிற்சிப் பள்ளியின் வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Posted: 16 Jul 2013 01:03 PM PDT

செம்மரம், சாராயக் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி எச்சரித்தார்.

தீ விபத்தில் வீடு சேதம்

Posted: 16 Jul 2013 01:03 PM PDT

வந்தவாசி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் கூரைவீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

பெருமாந்தாங்கல் பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 16 Jul 2013 01:03 PM PDT

: செய்யாறை அடுத்த பெருமாந்தாங்கல் நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்குதல், மாணவர்களுக்கு எழுதுப் பொருள்கள் வழங்குதல், மரக்கன்றுகள் நடும் விழா என முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. தரப்பில் ஆஜராக புதிய வழக்குரைஞர் நியமனம்

Posted: 16 Jul 2013 01:03 PM PDT

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமரேந்திர சரண் சிறப்பு வழக்குரைஞராக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டம்

Posted: 16 Jul 2013 01:03 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் போளூர் கிளையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கள மேலாளர் எ.இளங்கோவன் தலைமை தாங்கி, வங்க

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

Posted: 16 Jul 2013 01:02 PM PDT

செங்கம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்றது

காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 16 Jul 2013 01:02 PM PDT

ஆரணியை அடுத்த கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

காவிரி: வானிலை மையத்தின் மழை அளவு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்

Posted: 16 Jul 2013 01:02 PM PDT

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை அளவு குறித்த விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் பெற்று, அது தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்கு முன்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என்று காவிரி மேற்பார்வைக் குழு தலைவர் அலோக் ராவத் உத்தரவிட்டார்.

தீ விபத்தில் மாணவி சாவு

Posted: 16 Jul 2013 01:02 PM PDT

செய்யாறை அடுத்த நாயந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் தமிழ்ச்செல்வி (15). இவர் ராந்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் திங்கள்கிழமை காலை சமையல் செய்த போது திடீரென தீ பரவியுள்ளது.

குளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 16 Jul 2013 01:02 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த மன்சுராபாத் ஊராட்சியில் உள்ள பெரியகுளத்தை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை போளூர் வருவாய்த் துறையினர் அண்மையில் அகற்றினர்.

கோயில் குளத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு

Posted: 16 Jul 2013 01:01 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் "போலி' நீதிமன்றங்கள்: விசாரணை கோரி வழக்குரைஞர் மனு

Posted: 16 Jul 2013 01:01 PM PDT

தமிழ்நாட்டில் ""நீதிமன்றங்கள் போலச் செயல்படும் சில அமைப்புகள்'' குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்த வழக்குரைஞர் மணிகண்டனிடம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்கோரிக்கையை முன்வைத்து வழக்குத் தொடரும்படி உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

சேவூரில் கால்நடை மருத்துவ முகாம்

Posted: 16 Jul 2013 01:01 PM PDT

ஆரணியை அடுத்த சேவூரில் ஆரணி லூம்சிட்டி அரிமா சங்கம் மற்றும் திருவண்ணாமலை கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரில் கூழ்வார்த்தல் திருவிழா

Posted: 16 Jul 2013 01:01 PM PDT

கீழ்பென்னாத்தூர் அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள்

Posted: 16 Jul 2013 01:00 PM PDT

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மறியல்

Posted: 16 Jul 2013 01:00 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் 82 பேரை போலீஸார் செவ்

சமையல் எரிவாயு பயனாளிகள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நேரடி மானியம்

Posted: 16 Jul 2013 12:59 PM PDT

நேரடி மானிய உதவி திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுக்கான மானியம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இடம் வாங்கித்தருவதாக நகை மோசடி:பெண் வி.ஏ.ஓ. கைது; 112 பவுன் மீட்பு

Posted: 16 Jul 2013 12:59 PM PDT

காஞ்சிபுரம் அருகே, இடம் வாங்கித்தருவதாக பலரிடம், 200 பவுன் நகை, பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ. கைது செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 112 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.

"அனைத்து ரயில்களையும் மின்மயமாக்க நடவடிக்கை'

Posted: 16 Jul 2013 12:58 PM PDT

டீசல் விலை உயர்வால் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்டு வரும் நிதிநெருக்கடியை சமாளிக்க, அனைத்து ரயில்களையும் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய ரயில்வே இணை அமைச்சர் கோட்ல ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.

திருவண்ணாமலை

Posted: 16 Jul 2013 12:58 PM PDT

தமிழக தலைமைச் செயலர் ஜூலை 31-ல் ஆஜராக உத்தரவு

Posted: 16 Jul 2013 12:57 PM PDT

தமிழகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் ஜூலை 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி போலீஸ் சீர்திருத்த நடவடிக்கை தொடர்பாக அந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையை விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வணிக வரித் துறையில் போலி ரசீதுகள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை

Posted: 16 Jul 2013 12:50 PM PDT

வணிக வரித் துறையில் போலி ரசீதுகள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் 28 டி.எஸ்.பி.க்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 16 Jul 2013 12:45 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம் செய்வதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

காமராஜர் பிறந்த தினம்: சிறந்த பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம்

Posted: 16 Jul 2013 12:44 PM PDT

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு கெடு

Posted: 16 Jul 2013 12:43 PM PDT

நாடு முழுவதும் ஆசிட் விற்பனையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வியாழக்கிழமை (ஜூலை 18) தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கெடு விதித்தது.

"வெள்ளமயமான' தில்− சாலைகள்

Posted: 16 Jul 2013 12:42 PM PDT

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால், பல சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பால் தொழில்நுட்பம், தானியம் பதப்படுத்துதல்:இக்னோவில் புதிய படிப்பு

Posted: 16 Jul 2013 12:42 PM PDT

: பால் தொழில் நுட்பம் குறித்த ஓராண்டு தொலைதூரக் கல்வியைத் தில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் இம் மாதம் தொடங்க உள்ளது.

திஹாரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 16 Jul 2013 12:42 PM PDT

திஹார் சிறை வளாகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

தில்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி

Posted: 16 Jul 2013 12:41 PM PDT

தில்லி காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.எஸ். பஸ்ஸி (57)  நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

சாலையோர மரங்களின் அடிப்பகுதியில் கான்கிரீட்டை அகற்றும் பணி தீவிரம்

Posted: 16 Jul 2013 12:41 PM PDT

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், தில்லியில் சாலையோர மரங்களின் அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட் பரப்பை அகற்றும் பணியில் மூன்று மாநகராட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இரு வேறு விபத்துகளில் புது மணப்பெண் உள்பட 6 பேர் சாவு

Posted: 16 Jul 2013 12:40 PM PDT

கிரேட்டர் நொய்டா பகுதியில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் புது மணப்பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.   

போலீஸாரின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் 33% தெருவோரச் சிறார்கள்

Posted: 16 Jul 2013 12:40 PM PDT

: தில்லியில் தெருவோரச் சிறார்களில் 33 சதவீதம் பேர் போலீஸாரின் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதும், 23 சதவீதம் பேர் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்படுவதும் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (அசோசேம்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடைசி நாளில் தில்லியில் அதிக "தந்தி'

Posted: 16 Jul 2013 12:40 PM PDT

தந்தி' சேவையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தில்லியில் இருந்து அதிக தந்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுமி பலாத்காரம்:ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது

Posted: 16 Jul 2013 12:39 PM PDT

நான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக தில்லியைச் சேர்ந்த பாபுலால் (70) என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் அரசுக்கு ஆதரவு அளிக்க பாஜக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியவர் கைது

Posted: 16 Jul 2013 12:38 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு பாஜக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியவர் கைது செய்யப்பட்டார்.

தில்லியில் விரைவில் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்'

Posted: 16 Jul 2013 12:37 PM PDT

தில்லியில் இந்த ஆண்டு மழைக்காலத்தில் 14 லட்சம் மரக் கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

என்எப்டிசி நிதியுதவி நிறுத்தம்: திரைப்படத் துறைக்கு பின்னடைவு

Posted: 16 Jul 2013 12:37 PM PDT

திரைப்படம் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்திக் கொள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எப்டிசி) முடிவு செய்துள்ளதால் திரைப்படத் துறைக்கு பின்னடைவு ஏற்படும் என அத்துறையைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரகண்ட் பேரிடரைக் கையாள்வதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 16 Jul 2013 12:37 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் மத்திய அரசும், உத்தரகண்ட் மாநில அரசும் தோல்வி அடைந்துவிட்டன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.

பெண் மீது திராவகம் வீச்சு

Posted: 16 Jul 2013 12:36 PM PDT

தில்லியில் 47 வயது பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்ற 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். காயமடைந்த அப்பெண், சஞ்சய் காந்தி மருத்துவமனை

சீனாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ. 36 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Posted: 16 Jul 2013 12:36 PM PDT

தில்லியில் இருந்து சீனாவுக்குக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் ரூ. 36 லட்சம் மதிப்புள்ள செந்நிற சந்தனக் கட்டைகளை (செம்மரக் கட்டைகள்) தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

குறுக்கு வழியில் முதல்வராக விரும்பவில்லை

Posted: 16 Jul 2013 12:34 PM PDT

குறுக்கு வழியில் முதல்வராக விரும்பவில்லை என்று கேரள காங்கிரஸ (எம்) தலைவர் கே.எம். மாணி கூறியுள்ளார்.

காமராஜரின் எளிமையை கற்றுக்கொள்ள வேண்டும்

Posted: 16 Jul 2013 12:33 PM PDT

காமராஜர் போல் எளிமையாக இருக்க மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என கடலூர் எம்.பி. அழகிரி பேசினார்.

என்ஐஏ விசாரணை அறிக்கையில் இஷ்ரத் பெயர் இடம்பெறவில்லை

Posted: 16 Jul 2013 12:33 PM PDT

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹெட்லியிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ.வின் அறிக்கையில் இஷ்ரத் ஜஹான் பெயர் இடம்பெறவில்லை என்று முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு

Posted: 16 Jul 2013 12:32 PM PDT

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக அங்கமுத்து  பொறுப்பேற்றார்.

"வளர் இளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்'

Posted: 16 Jul 2013 12:32 PM PDT

வளர் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்க வாராந்திர இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்றுமுதல் பி.டி.எஸ்., பி.பி.டி., பி.பார்ம். படிப்புகளுக்கு 2-ம் கட்ட கவுன்சலிங்

Posted: 16 Jul 2013 12:32 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., பி.பி.டி., பி.பார்ம்., பி.எஸ்சி. நர்சிங் ஆகிய படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17, 18, 19 தேதிகளில் நடைபெறுகிறது.

மேற்கு வங்கம்: மத்திய அமைச்சர் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் குண்டு வீச்சு?

Posted: 16 Jul 2013 12:32 PM PDT

மேற்கு வங்கத்தில் மத்திய இணையமைச்சர் ஏ.எச்.கான் செüத்ரி பங்கேற்ற கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

விவசாயத் தொழிலாளர்கள் மறியல் : 50 பேர் கைது

Posted: 16 Jul 2013 12:31 PM PDT

சமூகநீதி, அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி, காடாம்புலியூர் பஸ் நிறுத்தத்தில் வேலைநிறுத்தம் மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் 50 பேரை காடாம்புலியூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

வீராணம் ஏரி: இன்று அமைச்சர் ஆய்வு

Posted: 16 Jul 2013 12:31 PM PDT

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதி, எம்.ஜி.ஆர். திட்டு மற்றும் வீராணம் ஏரி ஆகிய பகுதிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் புதன்கிழமை ப

திருப்போரூர் அருகே கோயிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

Posted: 16 Jul 2013 12:31 PM PDT

திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்து, திங்கள்கிழமை இரவு 4 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

லஞ்சப் புகாரில் சிக்கிய விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்

Posted: 16 Jul 2013 12:31 PM PDT

பிரான்ஸ் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விங் கமாண்டரை இந்திய விமானப்படை பதவி நீக்கம் செய்துள்ளது.

பெண் எஸ்.ஐ. கொலை: உடலை கண்டுபிடிக்க திணறும் போலீஸார்

Posted: 16 Jul 2013 12:30 PM PDT

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடலை காணாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகளுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடு

Posted: 16 Jul 2013 12:30 PM PDT

வாலாஜாபாத் பாலாற்றுப் பாலத்தில் மணல் லாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

பெண் வி.ஏ.ஓ. கைது; 112 பவுன் மீட்பு

Posted: 16 Jul 2013 12:29 PM PDT

காஞ்சிபுரம் அருகே, இடம் வாங்கித்தருவதாக பலரிடம், 200 பவுன் நகை, பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ.  செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 112 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் சாவு

Posted: 16 Jul 2013 12:29 PM PDT

செங்கல்பட்டு அருகே பணியில் இருந்த மின்சார ஊழியர் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை இறந்தார்.

வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு

Posted: 16 Jul 2013 12:29 PM PDT

செங்கல்பட்டு ஜே.சி.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 7 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

மோடியின் செல்வாக்கு அதிகரிப்பதை காங்கிரஸால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: பாஜக பதிலடி

Posted: 16 Jul 2013 12:29 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

நாளைமுதல் நெய்வேலியில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

Posted: 16 Jul 2013 12:28 PM PDT

சென்னைப் பிரிவு ராணுவ மையத்தின் சார்பில் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்கள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நெய்வேலி பாரதி விளையாட்டரங்கம் மற்றும் வட்டம் 10 கிருஷ்ணன் கோயில் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

சென்னையில் நாளை 80 மணி நேர அகண்ட நாம சங்கீர்த்தனம்

Posted: 16 Jul 2013 12:28 PM PDT

கடையநல்லூர் கிருஷ்ண சேனா பிரசார கேந்திரம் சார்பில், சென்னையில் 80 மணி நேர அகண்ட நாம சங்கீர்த்தனம் வியாழக்கிழமை (ஜூலை 18) நடக்கிறது.

நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மக்களிடம் நிதி வசூல்

Posted: 16 Jul 2013 12:28 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 11ஆம் தேதி பங்கேற்க உள்ள ஹைதராபாத் பொதுக்கூட்டத்துக்கு வர விரும்பும் மக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி குறை கூறியுள்ளது.

புதுச்சேரி - கடலூர் இடையே 100 அடி சாலை திட்டம்

Posted: 16 Jul 2013 12:28 PM PDT

புதுச்சேரி மற்றும் கடலூரை இணைக்க புதிதாக உத்தேசிக்கப்பட்டுள்ள ரயில்பாதைக்கு இணையாக 100 அடி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

முதல்வர் மீது உரிமை மீறல் பிரச்னை: நாராயணசாமி வலியுறுத்தல்

Posted: 16 Jul 2013 12:27 PM PDT

ரகசியக்காப்பு பிரமாணத்தை மீறி செயல்பட்ட புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வர வேண்டும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மறியல்

Posted: 16 Jul 2013 12:27 PM PDT

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்

புரி சங்கராச்சாரியாருடன் நரேந்திர மோடி சந்திப்பு

Posted: 16 Jul 2013 12:27 PM PDT

ஒடிசா மாநிலம் வந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புரி சங்கராச்சாரியாரை சந்தித்துப் பேசினார்.

பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

Posted: 16 Jul 2013 12:26 PM PDT

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கும், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் இப் பிரிவு மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

போலி மதுபாட்டில்கள் தயாரித்த 3 பேர் கைது

Posted: 16 Jul 2013 12:26 PM PDT

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அருகே, கரும்புத் தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரித்த 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி மதுபாட்டில்கள், மினி லாரி வாகனம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜே.சி.பி. மூலம் மணல் அள்ள தடை வேண்டும்

Posted: 16 Jul 2013 12:26 PM PDT

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்தி, அதிக ஆழத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

குடிநீர் கேட்டு சாலை மறியல்

Posted: 16 Jul 2013 12:26 PM PDT

திருக்கோவிலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீரென செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குவிந்தது கோரிக்கை மனுக்கள்; திணறியது ஆட்சியர் அலுவலகம்

Posted: 16 Jul 2013 12:25 PM PDT

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மக்கள் மனுக்களோடு குவிந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

டிப்ளமோ முடித்தவர்கள் கவனத்துக்கு...

Posted: 16 Jul 2013 12:25 PM PDT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தொழில்நுட்ப காலிப் பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இன்றும், நாளையும்அருண்பிரசாத் நினைவு இறகுப்பந்து போட்டி

Posted: 16 Jul 2013 12:24 PM PDT

மாணவர்கள், பெற்றோர்களுக்கான அருண்பிரசாத் நினைவு உள்ளரங்கு இரட்டையர் இறகுப் பந்துப் போட்டி சிதம்பரம் வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப் பள்ளி உள்ளரங்கில் வருகிற ஜூலை 17, 18 தேதிகளில் காலை 8.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Posted: 16 Jul 2013 12:23 PM PDT

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, திங்கள்கிழமை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கண்தானம்

Posted: 16 Jul 2013 12:23 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழி தில்லைமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராயர் (91) திங்கள்கிழமை காலமானார்.

கோயில் குளத்தில் அவசரகால மீட்பு ஒத்திகைப் பயிற்சி

Posted: 16 Jul 2013 12:22 PM PDT

: திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் அவசர கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பீர்

Posted: 16 Jul 2013 12:22 PM PDT

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடித் திருவிழாவில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் உத்தரவிட்டார்.

மும்பையில் தனியார் நிறுவன வங்கி கணக்கில் ரூ.98 லட்சம் மோசடி

Posted: 16 Jul 2013 12:22 PM PDT

மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்து தனது வங்கிக் கணக்கில் ரூ.98 லட்சத்தை மாற்றிய நபரை மும்பை போலீஸார் திருவள்ளூரில் திங்கள்கிழமை நள்ளிரவில் கைது

விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை பெற மீண்டும் வாய்ப்பு

Posted: 16 Jul 2013 12:21 PM PDT

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைப் பெறாதவர்கள் மீண்டும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்

ஓடும் காரிலிருந்து விழுந்து பெண் சாவு

Posted: 16 Jul 2013 12:21 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை, ஓடும் காரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் சிறப்பிடம்: பிகார் மாணவனுக்குப் பாராட்டு

Posted: 16 Jul 2013 12:21 PM PDT

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் 679-ம் பிடித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவனுக்கு பஞ்செட்டி வேலம்மாள் போத்தி பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 265 மனுக்கள்

Posted: 16 Jul 2013 12:20 PM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 265 மனுக்கள் வரப்பெற்றன.

ஆத்மா திட்டம்: விவசாயிகளுக்குப் பயிற்சி

Posted: 16 Jul 2013 12:20 PM PDT

பூண்டி வனவியல் விரிவாக்கக் கோட்டத்தில் மகளிர் சுயவுதவிக் குழுவினர் மற்றும் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது

வெக்காளி அம்மன் கோயிலில் 8-ம் ஆண்டு தீமிதித் திருவிழா

Posted: 16 Jul 2013 12:20 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த குமரன்நாயக்கன்பேட்டையில் உள்ள வெக்காளியம்மன் கோயிலின் 8-ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜூலை 17 மின் தடை

Posted: 16 Jul 2013 12:20 PM PDT

புதுச்சேரி பட்ஜெட்: ஆதரவும் - எதிர்ப்பும்

Posted: 16 Jul 2013 12:19 PM PDT

புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

Posted: 16 Jul 2013 12:19 PM PDT

மேட்டுப்பாளையத்தில் 25 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எஃப்.டி. தொழிற்சாலையைஇயக்க ரூ.500 கோடி சிறப்பு நிதி

Posted: 16 Jul 2013 12:18 PM PDT

: புதுச்சேரி ஏ.எஃப்.டி. தொழிற்சாலையை மீண்டும் இயக்க மத்திய அரசிடம் சிறப்பு நிதியாக ரூ.500 கோடி கோரப்பட்டுள்ளதாக பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 16 Jul 2013 12:18 PM PDT

புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள பெருந்தலைவர் காமராசர் கலைக்கல்லூரியில், காமராஜரின் 110-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Posted: 16 Jul 2013 12:18 PM PDT

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, திங்கள்கிழமை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Posted: 16 Jul 2013 12:17 PM PDT

காமராஜரின் 111-வது பிறந்தநாள் விழா, விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள் கிழமை காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது.

செஞ்சி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 16 Jul 2013 12:16 PM PDT

செஞ்சி சிறுகடம்பூர் ஸ்ரீஅன்னை பவதாரினி நகரில் அமைந்துள்ள ஸ்ரீகருமாரியம்மன் மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரேஸ்வரர் நூதன ஆலய கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வகுப்பறை தண்டனையை ஒழிக்க பிரசாரம்

Posted: 16 Jul 2013 12:16 PM PDT

வகுப்பறை தண்டனைகளை ஒழிக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவது என்று மக்கள் கல்வி கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஜாதிச் சான்று கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 16 Jul 2013 12:16 PM PDT

எஸ்.டி. (இந்து கணிக்கர்) என்று ஜாதிச்சான்று வழங்கக்கோரி ஆலந்தூர் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினர், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .

மாணவர்களுக்கு இலவச சீருடை

Posted: 16 Jul 2013 12:16 PM PDT

கோலியனூர் ஒன்றியம் காவணிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரா.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™