Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஆஸ்திரேலியா–நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதல்

Posted: 30 Jul 2013 12:01 PM PDT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

கிரிக்கெட் திருவிழா

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2 பேர் விசாரணை கமிட்டி சட்டவிரோதமானது மும்பை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted: 30 Jul 2013 11:51 AM PDT

மும்பை,

ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட 2 பேர் விசாரணை கமிட்டி சட்டவிரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடியாக கூறியுள்ளது.

சூதாட்ட பிரச்சினை

6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் 'பெட்டிங்' என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிக்கினர். குருநாத் மெய்யப்பனை மும்பை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ராஜ் குந்த்ராவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

தெற்காசிய ஜூனியர் கால்பந்து: நோபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

Posted: 30 Jul 2013 11:48 AM PDT

காட்மாண்டு,

பெரம்பூரில் தி.மு.க. செயலாளர் கொலை வழக்கில் 8 பேர் கைது இழிவுபடுத்தி பேசியதால் கொன்றதாக வாக்குமூலம்

Posted: 30 Jul 2013 11:47 AM PDT

ராயபுரம்

பெரம்பூரில் தி.மு.க. செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இழிவுபடுத்தி பேசியதால் அவரை கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தி.மு.க. செயலாளர் கொலை

வியாசர்பாடி பி.வி காலனி 6–வது தெருவைச் சேர்ந்தவர் இடிமுரசு இளங்கோவன் (வயது 40). 45–வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் செம்பியம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு பேப்பர் மில்ஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

சமூக சேவகர் சசிபெருமாள்

Posted: 30 Jul 2013 11:19 AM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி உள்ளிட்ட மாணவர்கள் மேற்கொண்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் சமூக சேவகர் சசிபெருமாள் நேற்று கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தார்.

முதுமலை யானைகள் முகாமை ஜெயலலிதா பார்வையிட்டார் யானைகளுக்கு பழங்கள் வழங்கி உற்சாகப்படுத்தினார்

Posted: 30 Jul 2013 11:18 AM PDT

மசினகுடி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்டு, யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவு வழங்கினார். புலிகள் காப்பகத்தையும் பார்வையிட்ட முதல்–அமைச்சர் இந்த காப்பகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வருகை

பிரதமர் மன்மோகன்சிங்

Posted: 30 Jul 2013 11:15 AM PDT

திருமயத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் வருவதையட்டி விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று 2'  'வதுநாளாக பார்வையிட்ட போது எடுத்த படம்.

காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக தீர்மானம்: ஆந்திர மாநிலம் 2 ஆக பிரிக்கப்படும் தனி தெலுங்கானா உதயம் 2 மாநில பொது தலைநகராக ஐதராபாத் அறிவிப்பு

Posted: 30 Jul 2013 11:11 AM PDT

புதுடெல்லி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆலோசனை

Posted: 30 Jul 2013 11:05 AM PDT

தெலுங்கானா தனிமாநில கோரிக்கை குறித்து விவாதிக்க, டெல்லியில், பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்ற காட்சி.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Posted: 30 Jul 2013 11:00 AM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 105 அடியாக உயர்ந்தது. இதனால் அணை கடல்போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™