| ஹாலிவுட் படத்தை தவிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!! Posted:  தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதே வேகத்தில் ஹாலிவுட் சினிமாவுக்குள்ளும் நுழைந்து ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தார். இதனால் இந்திய திரையுலகமே அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தது. அப்படிப்பட்ட ரஹ்மான், சமீபகாலமாக ஹாலிவுட் முகாமை மாற்றி மீண்டும் சென்னைக்கே வந்து விட்டார். அதற்கு அவர் ... |
| சிவகார்த்திகேயன் படத்துக்கு கவுண்டமணி டயலாக் டைட்டீலாகிறது! Posted:  சமீபகாலமாக கதை பிரச்னையை விட டைட்டீல் பிரச்னைதான் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தின் பூஜை போடும்போதே அதன் டைட்டீலை அறிவித்து விடுவார்கள். ஆனால் இப்போது பல படங்களுக்கு என்ன தலைப்பு என்பதே தெரியவில்லை. குறிப்பாக, தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 53வது படத்துக்கு இப்போது வரை என்ன ... |
| மரணத்தை வென்ற இயக்குனர் ரமணா Posted:  விஜய் நடித்த திருமலை, ஆதி, தனுஷ் நடித்த சுள்ளான் படத்தை இயக்கியவர் ரமணா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது பேசும் சக்தியை இழந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்ததால் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரது வாய்ஸ் பாக்ஸ் அகற்றப்பட்டுவிட்டதால் பூரண குணம் ... |
| அத்தை மகளை மணக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர்!! Posted:  நாளை(ஜூலை 14ம் தேதி) மற்றுமொரு சினிமா பிரமுகர் திருமணமும் நடக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவரும், தற்போது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான எஸ்.ஆர்.பிரபாகரன் தனது அத்தை மகள் திவ்யாவை மணக்கிறார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விகிராண்ட் திருமண மண்டபத்தில் நடக்கும் ... |
| சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவின் மான்கராத்தே தொடங்கியது Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கும் படம் மான்கராத்தே. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார், மைனா, கும்கி படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதையை பற்றி நாம் விசாரித்த வரையில், வேலை இல்லாத இளைஞன் ... |
| ஆகஸ்ட் 3ல் இரண்டாம் உலகம் ஆடியோ ரிலீஸ் Posted:  ஆர்யா நடித்து வரும் இரண்டாம் உலகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மயக்கம் என்ன படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ... |
| தமிழில் மலையாள நடிகர் சலீம் குமார் Posted:  நம்ம ஊர் நாசர் மாதிரி மலையாளத்தில் புகழ்பெற்ற குணசித்திர நடிகர் சலீம் குமார், ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைத்து கேரக்டர்களிலும் புகுந்து விளையாடக்கூடியவர். பல்வேறு விருதுகளை பெற்ற சலீம் குமார். ஆதாமின்ட மகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். 230 மலையாளப் படஙங்களுக்கு மேல் நடித்துள்ள அவரை இப்போது தமிழுக்கு ... |
| ஸ்ரீகாந்த் எம்.ஜி.ஆர்; நம்பியார் சந்தானம் Posted:  எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்த கணேஷா இயக்குனராகி இருக்கும் படம் நம்பியார். இதில் ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம் நடிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து திரைக்கு வரத் தயாராகி விட்டது. "ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளும் நெகட்டிவ் எண்ணங்களும், பாசிட்டிவ் எண்ணங்களும் இருக்கு. நெகட்டிவ் எண்ணத்தை துரத்தி அடிச்சிட்டா எல்லாமே நல்லதா ... |
| நடிகர் நந்தா திருமணம் - உறவுக்காரப்பெண்ணை மணக்கிறார்!! Posted:  மவுனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர் நந்தா. முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் நெருங்கிய உறவினர். ஈரம், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது புதிய திருப்பங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கும் அவரது உறவுப் பெண்ணான எஸ்.வித்யரூபாவிற்கும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாளை (14ந் தேதி) கோவையில் திருமணம் நடக்கிறது. 17ந் ... |
| கேமராமேன்கள் அப்டேட்டுல இருக்கணும்: சிங்கம்-2 ஒளிப்பதிவாளர் ப்ரியன் பேட்டி!! Posted:  இப்போது தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் சிங்கம்&2 கேமரா மேன் ப்ரியன். படத்தில் இடம்பெறும் ஹெலிகாப்டர் ஷாட் பற்றித்தான் எல்லோரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவருடன் ஒரு மினி பேட்டி: * அந்த பரபரப்பான ஹெலிகாப்டர் ஷாட் பற்றி சொல்லுங்க பாஸ்...?இது டெக்னிக்கல் ரகசியம்தான் இருந்தாலும் சொல்றேன். தரையில பயன்படுத்தின ... |
| ஜில்லாவில் வித்யு ராமன்!! Posted:  நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் காமெடி கேரக்டரில் அறிமுகமானவர் வித்யு ராமன். சந்தானத்துக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்தார். கடைசியாக தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்தார். வித்யு ராமன் இப்போது விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் காமெடி நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விஜய் மற்றும் ... |
| தெலுங்கு விவேகானந்தர் தமிழுக்கும் வருகிறார் Posted:  சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை சுவாமி விவேகானந்தர் என்ற பெயரில் தெலுங்கில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்கள். லட்சுமி கணேஷ் பிலிம்ஸ், ஸ்ரீஇந்திரசித்தா பிரைவேட் லிமிடெட் என்ற இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. பிரபாத் விவேகானந்தராகவும், பூஜித் ராமகிருஷ்ண பரமஹம்சராகவும் நடிக்கிறார்கள். வருகிற 18 ந்தேதி இதன் ... |
| ஹீரோ ஆனார் நித்திஷ் Posted:  புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, ஒன்பது ரூபாய் நோட்டு, ஹரிதாஸ், சிந்தனை செய், நந்தி உள்பட பல படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாகவும், வில்லன்களுக்கு அடியாளாகவும் நடித்து வந்த நித்திஷ் ஹீரோவாகி விட்டார். கூத்துப்பட்டறையில் நடிப்பு படித்த நித்திஷ் விடா முயற்சியால் கவாத்து என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரியா என்ற நியூபேஸ் ... |
| ரஜினியை ஹீரோவாக்கிய இயக்குனர் பாஸ்கர் காலமானார்!! Posted:  பழம்பெரும் திரைப்பட இயக்குனர், "ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கர், 75, நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. தமிழ் படங்களில், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த, ரஜினிகாந்தை முதன் முதலில் கதாநாயகனாக, "பைரவி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர், "ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கர். இவர், "தீர்ப்புகள் ... |
| பிரபல இந்தி நடிகர் பிரான் காலமானார்! Posted:  உடல் நலக்குறைவு காரணமாக, மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பிரபல பாலிவுட் நடிகர், "பிரான்(வயது 93) நேற்று காலமானார். 1920ல் டில்லியில் பிறந்த பிரான், 1940ல் வெளியான, "யாம்லா ஜத் என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம், திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். "மிலன், "மதுமதி, "ஜஞ்ஜீர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தவர், பிரான். ... |