Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. தம்பி சுட்டுக்கொலை: தேர்தல் தகராறில் அண்ணனே கொன்றதாக புகார்

Posted: 17 Jul 2013 10:58 PM PDT

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் ஜெட்சரளா தொகுதி எம்.எல்.ஏ. சேகர். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவரது தம்பி ஜெகன்மோகன் (41). நேற்று இவர் தேவரகத்ரா பகுதி பழைய பஸ் நிலையத்தில் உள்ள சாய்பிரசாத் ஓட்டல் வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஓட்டல் முன்பு இன்னோவா கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய ஒருவர் ஜெகன்மோகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கன்னத்தில் 'பளார்' என அறைந்தார். அதோடு பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ஜெகன்மோகனை நோக்கி சுட்டார்.

பீகார்: குழந்தைகளின் பலி 27 ஆக உயர்வு- உடல்களை பள்ளி முன்பே புதைத்த பெற்றோர்

Posted: 17 Jul 2013 10:48 PM PDT

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 80 குழந்தைகள் மயங்கி விழுந்தனர். அவர்களை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் 10 குழந்தைகள் பலியானார்கள். அதன் பிறகு கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் 10 குழந்தைகள் பலியானார்கள். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் இறந்தன. இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. 25 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘நான் இந்து தேசியவாதி‘ மும்பை முழுவதும் நரேந்திர மோடி போஸ்டர்கள்: பா.ஜ.க அதிரடி

Posted: 17 Jul 2013 10:47 PM PDT

குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவருமான நரேந்திர மோடி சமீபத்தில் தனது இந்துத்துவா கொள்கை குறித்து கருத்து கூறியிருந்தார்.

ஆந்திராவில் நாளை உள்ளாட்சி தேர்தல்: 2623 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

Posted: 17 Jul 2013 10:33 PM PDT

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நாளை (19–ந்தேதி) தொடங்கி 27–ந்தேதி வரை பல கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் 21,144 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் 2623 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் காங்கிரஸ் முதல் இடத்தில் உள்ளது. இக்கட்சி சார்பில் 764 பேர் வெற்றி பெற்று உள்ளனர். 2–வது இடத்தை பிடித்த தெலுங்குதேசம் கட்சி சார்பில் 570 பேர் ஒருமனதாக வெற்றி பெற்று உள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 400 இடங்களையும், தெலுங்கானா

துணை ராணுவ படை உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ. 5100 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 17 Jul 2013 09:56 PM PDT

இந்திய எல்லைப் பாதுகாப்பு பணியில் சஷாஸ்ட்ரா சீமா பால், அசாம் ரைபில்ஸ் ஆகிய 2 துணை ராணுவப் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த படைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக ரூ. 5100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொருளாதார

கட்சி மேலிடம் கூறினால் ராஜினாமா செய்ய தயார்: உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 17 Jul 2013 09:41 PM PDT

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக பலரிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக கேரள தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மோசடிக்கு கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி அலுவலக ஊழியர்கள், மற்றும் மந்திரிகள் சிலரும் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த மோசடிக்கு பொறுப்பேற்று உம்மன் சாண்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன

பீகாரில் மாவோயிஸ்டு - பாதுகாப்பு அதிகாரிகள் மோதல்: 5 பேர் பலி

Posted: 17 Jul 2013 08:51 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

என்.எல்.சி. பங்கு விற்பனை ஆகஸ்டு முதல் வாரம் அமலுக்கு வரும்

Posted: 17 Jul 2013 08:08 PM PDT

என்.எல்.சி. பங்கு விற்பனை, அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்று, பங்கு விற்பனைத்துறை முடிவு செய்து, அதற்கு மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் கடந்த மாதத்தில் வழங்கப்பட்டது. நிறுவனம் சார் ஒதுக்கீடு (ஐ.பி.பி.) திட்டத்தின் கீழ், பொது மக்களின் பங்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் இருக்க வேண்டும் என்ற விதிமுறையினால்,

விவாகரத்தின்போது கணவரின் பரம்பரை சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 17 Jul 2013 03:30 PM PDT

திருமண சட்ட திருத்த மசோதாவை பெண்களுக்கு சாதகமானதாக மாற்றி அமைப்பது பற்றி பரிசீலிக்க ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. விவாகரத்தின்போது, கணவரின் சுயசம்பாத்தியத்தில் பெண்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை, மசோதாவில் உள்ளது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவையே விற்றுவிட துடிக்கிறது: மம்தா பானர்ஜி ஆவேசம்

Posted: 17 Jul 2013 03:15 PM PDT

தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்

மகள்கள் மற்றும் பேத்தியை தொடர்ந்து கற்பழித்து வந்த 'குடும்பத் தலைவன்' கைது

Posted: 17 Jul 2013 01:02 PM PDT

பல ஆண்டுகளாக தனது 2 மகள்கள் மற்றும் பேத்தியை மிரட்டி கற்பழித்து வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம், பயனா நகரை சேர்ந்தவர் பாபுலால் தாக்கர்(64). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், பல ஆண்டுகளாக சொந்த மகள்கள்

மத்திய அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த ரூ.630 கோடி ஒதுக்கீடு

Posted: 17 Jul 2013 12:30 PM PDT

12வது ஐந்தாண்டு திட்டத்தின்படி மத்திய அரசின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளம்பரப்படுத்த தகவல் ஒலி(ளி)பரப்பு துறைக்கு ரூ.630 கோடியை ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

எகிப்தில் நடைபெற்றதைப் போன்ற மக்கள் புரட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடும்: அன்னா ஹசாரே எச்சரிக்கை

Posted: 17 Jul 2013 12:06 PM PDT

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று போராடிவரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது

சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு பணியில் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள்

Posted: 17 Jul 2013 11:49 AM PDT

இந்திய எல்லையில் தொடர்ந்து வாலாட்டி வரும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய - சீன எல்லையில் கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மரணம்: ஆழமான விசாரணை நடத்த மீரா குமார் வலியுறுத்தல்

Posted: 17 Jul 2013 08:53 AM PDT

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க மேலும் அவகாசம் கேட்கிறார் முண்டே

Posted: 17 Jul 2013 08:30 AM PDT

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலம் பீட் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கோபிநாத் முண்டே, 2009 தேர்தலின்போது 8 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை விவரங்களை அரசிடம் பகிர்ந்துகொள்ள கூடாது: சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

Posted: 17 Jul 2013 07:33 AM PDT

பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறை மந்திரி பொறுப்பையும் வகித்தபோது, நாட்டில் உள்ள 164 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.85 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பீகார் பள்ளி சம்பவம் அரசை பலவீனப்படுத்தும் சதிச்செயலாக இருக்கலாம்: கல்வி மந்திரி பேட்டி

Posted: 17 Jul 2013 05:55 AM PDT

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் இறந்துள்ளனர். பல குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால்

பீகாரில் மீண்டும் மதிய உணவில் விஷம்: மதுபானியில் 15 குழந்தைகள் பாதிப்பு

Posted: 17 Jul 2013 04:53 AM PDT

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: விசாரணைக்கைதி கொலை-4 போலீசார் படுகாயம்

Posted: 17 Jul 2013 03:57 AM PDT

காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பந்தாசவுக் போலீஸ் நிலையத்திலிருந்து பாரமுல்லா ஜெயிலில் அடைப்பதற்காக விசாரணைக்கைதியான ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதியான ஷகில் அகமது கசானாவை வேனில் அழைத்து சென்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™