Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருவனந்தபுரம்: இளைஞர் காங்கிரஸ்–கம்யூனிஸ்டு தொண்டர்கள் மோதல்

Posted: 08 Jul 2013 10:49 PM PDT

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி தொடர்பாக தொழில் அதிபர் பிஜூ ராதா கிருஷ்ணன், அவரது 2–வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிஜூ ராதாகிருஷ்ணன் நடத்திய நிறுவனத்துடன் காங்கிரஸ் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த மோசடிக்கு

அசாமில் வெள்ளம்: 350 கிராமங்கள் மூழ்கின - 1 லட்சம் பேர் தவிப்பு

Posted: 08 Jul 2013 10:48 PM PDT

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அபாய அளவை தாண்டி பாயும் பிரம்மபுத்ரா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள ஜோர்ஹத், சிப்சாகர், திப்ருகர், சோனிட்புர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 350 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. சுமார் 1 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் 1 கோடி ஏழைகளுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி: நாளை முதல் அமல்

Posted: 08 Jul 2013 10:46 PM PDT

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. பெங்களூரில் நடைபெறும் விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா ஏழைகளுக்கு அரிசி வழங்கி திட்டத்தை தொடங்கி

தனி தெலுங்கானா: ஆந்திர தலைவர்களுடன் 13–ந்தேதி சோனியா – ராகுல் ஆலோசனை

Posted: 08 Jul 2013 10:23 PM PDT

ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆந்திராவில் ஆதரவும், எதிர்ப்பும் நிலவுவதால் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தலுக்கு முன் தெலுங்கானா விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ப

பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் புகுந்த நல்ல பாம்பு: பொதுமக்கள் பீதி

Posted: 08 Jul 2013 10:15 PM PDT

நேற்று பெங்களுரு உயர்நீதிமன்ற வளாகத்தினுள் புகுந்த நல்ல பாம்பால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. சுமார் ஐந்தரை அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று நேற்று மதியம் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தது. அதனைக் கண்ட ஊழியர் ஒருவர், முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பாம்பை வெகுநேரம் தேடி பார்த்தும் எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

பீகார் புத்தர் கோவிலில் 5 மர்ம நபர்கள் குண்டு வைத்தனர்: போலீஸ் விசாரணையில் தகவல்

Posted: 08 Jul 2013 10:08 PM PDT

பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகா போதி புத்தர் கோவிலில் நேற்று முன்தினம் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. மொத்தம் 13 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டன. அதில் 10 குண்டுகள் வெடித்தன. 3 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டன. அம்மோனியம் நைட்ரேட், கந்தகம் ஆகியவற்றை பயன்படுத்தி குண்டுகள் தயாரித்து சிறிய கியாஸ் சிலிண்டர் மூலம் அவற்றை வெடிக்க செய்துள்ளனர். தேசிய புலனாய்வு அதிகாரிகள் இந்த தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மியான்மரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு

ஆந்திராவில் ஓட்டல் இடிந்து 13 பேர் பலி : உரிமையாளர் கைது

Posted: 08 Jul 2013 10:04 PM PDT

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஆர்.பி. சாலையில் 'சிட்டி லைட்' என்ற பெயரில் ஓட்டல் மற்றும் பேக்கரி செயல்பட்டு வந்தது. 2 மாடி கொண்ட இந்த ஓட்டல் சுமார் 100 ஆண்டு பழமையானது. நேற்று காலை இந்த ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். ராட்சத எந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பலியானவர்களில் 10 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 3 பேர் யார் என்று தெரியவில்லை. காயம் அடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

2ஜி வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு: தயாளு அம்மாள் மனு இன்று விசாரணை

Posted: 08 Jul 2013 02:55 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

புத்தர் கோவில் குண்டுவெடிப்பை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரிக்க வேண்டும்: நிதிஷ்குமார்

Posted: 08 Jul 2013 12:52 PM PDT

புத்தகயாவில் உள்ள புத்தர் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறினார். பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் தொடர் குண்டு வெடித்ததில் புத்த துறவிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

மூன்று வாரமாக பெற்றோரை தேடி டேராடூன் பேருந்து நிலையத்தை சுற்றிவரும் புனே இளைஞர்

Posted: 08 Jul 2013 12:51 PM PDT

உத்தரகாண்டில் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் கொட்டி தீர்த்த பலத்த மழையில் சிக்கி பலாயிரம் பேர் உயிரிழந்தனர். 4000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களின் கதி என்னவாயிற்றோ என்று உறவினர்கள் பெரும் கவலையில் உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் இருந்து வீடு திரும்பி வருகின்றனர்.

பா.ஜனதாவில் திடீர் மாற்றம்: தேர்தல் குழுக்களை உருவாக்க மோடி- ராஜ்நாத்துக்கு அதிகாரம்

Posted: 08 Jul 2013 09:31 AM PDT

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமியக்கப்பட்டுள்ளார். இதையடுத்த தேர்தல் பணிகள் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி போன்ற முக்கிய விஷயங்களை உள்ளடக்கி பிரச்சாரம் செய்ய குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்திறகுப் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக குற்ற

மும்பையில் சரக்கு கப்பலில் தீ: கடலோர காவல்படை உதவி

Posted: 08 Jul 2013 07:54 AM PDT

மும்பை கடல் பகுதியில் கைவிடப்பட்ட 'மோல் கம்போர்ட்' என்ற சரக்கு கப்பல் ஓமன் நாட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது திடீரென தீப்பிடித்தது. இதனை கடலோர காவல் படை ஹெலிகாப்டர் கண்டுபிடித்தது. இதையடுத்து கடலோர காவல் படையினர் அங்கு சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தற்போது குளிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும், கப்பலை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் பணியை கப்பல் நிர்வாகம் தொடங்க உள்ளது. இப்பணிகளை கண்காணித்து உதவி செய்வதற்காக கடலோர காவல் படையின் ஒரு கப்பல் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. 316 மீட்டர் நீளம் கொண்ட இந்த 'மோல் கம்போர்ட்' கப்பல் சவூதி அரேபியாவில்

தேர்தல் அறிக்கையை நெறிமுறைப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டம்: தேர்தல் ஆணையம் முடிவு

Posted: 08 Jul 2013 07:15 AM PDT

அரசு வழக்கும் இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்தல் வாக்குறுதிப்படி இலவசமாக பொருட்கள் வழங்குவதை லஞ்சமாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், இலவச திட்டங்கள் குறித்து வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்றும், இலவசம் தொடர்பாக குழு ஒன்றை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் அறிக்கைக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுடன் விவாதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஜூன் மாதம் தங்கம் இறக்குமதி 80 சதவீதம் சரிவு

Posted: 08 Jul 2013 05:52 AM PDT

நாட்டின் நிதி பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கையாக தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. ஜனவரி மாதம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 8 சதவீதமாக உயர்ந்தது. இதேபோல் வங்கிகளுக்கு ரிவர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புத்த கயா கோவிலில் அமைதி திரும்ப 100 துறவிகள் சிறப்பு பிரார்த்தனை

Posted: 08 Jul 2013 05:30 AM PDT

பீகாரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற புத்த கயா கோவிலில் நேற்று அதிகாலை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 2 துறவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கோவில் வளாகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு

குண்டு வெடித்த புத்தகயாவுக்கு ராஜ்நாத் சிங் நாளை செல்கிறார்

Posted: 08 Jul 2013 05:22 AM PDT

பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் நேற்று 10 குண்டுகள் வெடித்தன. 3 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய புலனாய்வு துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ராஜஸ்தான் பயணம்: அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை செய்கிறார்

Posted: 08 Jul 2013 05:19 AM PDT

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் பயணமாக நாளை ராஜஸ்தான் மாநிலத்திற்குச் செல்கிறார். நாளை காலை ஜெய்ப்பூர் செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கிருந்து அஜ்மீர் மாவட்டம் கிஷாங்கர் பண்டாரசிந்திரிக்குச் சென்று ராஜஸ்தான் மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ள இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு

நிலக்கரி சுரங்க ஊழல்: 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது

Posted: 08 Jul 2013 04:27 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., விசாரணையில் கண்டறிந்த விபரங்களை முன்னாள் மத்திய சட்ட மந்திரி அஸ்வினி குமாரிடம் பகிர்ந்துக் கொண்டதற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, சட்ட மந்திரி பதவியில் இருந்து அஸ்வினி குமார் விலக நேர்ந்தது.

ஒடிசா: போலீஸ் உளவாளி என்று நினைத்து 2 பேரை கழுத்தை அறுத்துக்கொன்ற மாவோயிஸ்டுகள்

Posted: 08 Jul 2013 03:49 AM PDT

போலீஸ் உளவாளி என்று சந்தேகப்பட்ட 2 பேரை நேற்றிரவு கடத்திச் சென்ற மாவோயிஸ்ட்கள் அவர்களை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பபன்பள்ளி கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் கபாசி மற்றும் கலிமேலா பகுதியை சேர்ந்த நரேஷ் தலி ஆகியோரை நேற்றிரவு மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்றனர்.

காதலியுடன் ஓடிய வாலிபர் மர்ம சாவு: பிணத்துடன் போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சுடு

Posted: 08 Jul 2013 03:47 AM PDT

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கோடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் காதல் ஏற்பட்டது. ராஜேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருந்த போதிலும் அவள் ராமகிருஷ்ணனை தீவிரமாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் காதல் ஜோடியினர் கடந்த மாதம் 28–ந்தேதி ஊரை விட்டு ஓடியது. இது குறித்து ராஜேஸ்வரி உறவினர்கள் போலீசில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™