மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்
- தனிமனிதராக நின்று உலகத்தையே மாற்றியவர் மகாத்மா காந்தி: அமெரிக்க துணை ஜனாதிபதி புகழாரம்
- நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது: அமர்தியா சென்
- ஐதராபாத்: குடிசை மீது சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
- காஷ்மீர்: தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை
- மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
- தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு
- ஆட்டோ கட்டணத்தை 4 வாரத்தில் நிர்ணயிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு: ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் மாநிலங்கள்
- வரம்பு மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை
- ஒடிசாவில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 20 பேர் படுகாயம்
- இஷ்ரத் போலி என்கவுன்டர் வழக்கு: சி.பி.ஐ.க்கு குஜராத் ஐகோர்ட் நோட்டீஸ்
- உத்தர பிரதேசத்தில் ஓடும் காருக்குள் பிளஸ் 2 மாணவி பலாத்காரம்
- 2ஜி ஊழல் வழக்கில் சாட்சியம் அளிக்க அனில் அம்பானிக்கு சம்மன்
- கர்நாடகாவில் ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி
- உணவு பாதுகாப்பு மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா? - டெல்லியில் டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
- சுஷ்மா சென்ற விமானத்தில் கோளாறு: ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம்
- மதிய உணவால் மாணவர்கள் மரணம்: பீகார் பள்ளி முதல்வருக்கு பிடிவாரண்ட்
- அனில் அம்பானி அரசு சாட்சி: சி.பி.ஐ. நீதிமன்ற அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
- மே.வங்கத்தில் இன்று 4ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்: வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
| பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Posted: 22 Jul 2013 11:14 PM PDT பிரதமர் மன்மோகன்சிங் எதற்கும் பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. எதிர்கட்சிகள் அவரது மவுனத்தை கேலியும், கிண்டலும் செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் இந்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் இப்போதுதான் மறுப்பு தெரிவித்து விளக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த 2004–ம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 1,300 தடவை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியும், விளக்கம் அளித்தும் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. |
| தனிமனிதராக நின்று உலகத்தையே மாற்றியவர் மகாத்மா காந்தி: அமெரிக்க துணை ஜனாதிபதி புகழாரம் Posted: 22 Jul 2013 10:56 PM PDT அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடன் 4 நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்து சேர்ந்தார். டெல்லியில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான பாலம் விமான தளத்தில் வந்திறங்கிய ஜோ பிடனை வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் வரவேற்றார். |
| நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது: அமர்தியா சென் Posted: 22 Jul 2013 10:40 PM PDT நரேந்திரமோடி பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் என அந்த கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் பேசி வருகிறார்கள். இது குறித்து நோபல் பரிசு பெற்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பொருளாதார மேதை அமர்தியாசென்னிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது |
| ஐதராபாத்: குடிசை மீது சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி Posted: 22 Jul 2013 09:34 PM PDT ஆந்திர மாநிலம் முழுவதும் கடந்த இருநாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கிழக்கு கோதாவரி, கம்மம், நெல்லூர் மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன |
| காஷ்மீர்: தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை Posted: 22 Jul 2013 09:18 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஜயிஷ்-இ-முகம்மது இயக்கத்தின் மூத்த தளபதி காரி யாசிர் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டான். குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் |
| மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல் Posted: 22 Jul 2013 08:43 PM PDT ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் |
| தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு Posted: 22 Jul 2013 08:08 PM PDT தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயரும் என வியாபாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் குறைந்த அளவே தங்கம் கிடைப்பதால், தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காகவும், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்காகவும் அதிக அளவில் அன்னிய செலாவணி |
| ஆட்டோ கட்டணத்தை 4 வாரத்தில் நிர்ணயிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 22 Jul 2013 07:54 PM PDT ஆட்டோ கட்டணத்தை இன்னும் 4 வாரங்களில் முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, அதற்காக தொடர்ந்து கால அவகாசத்தை நீட்டிக்க கோரியதை கண்டித்து அபராதமும் விதித்தது. சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆட்டோ ரிக்ஷா கட்டணங்களை முறைப்படுத்தி நிர்ணயிக்காததால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறி, ராமமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்ததை |
| பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு: ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் மாநிலங்கள் Posted: 22 Jul 2013 05:32 PM PDT 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. கருத்துக்கணிப்பில், மத்தியில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் மாநிலங்களாக மேற்கு வங்காளம் மற்றும் பீகார் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 22 Jul 2013 04:27 PM PDT காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக வரம்பு மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்துக்கு அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா நரேந்திரமோடி தலைமையில் பிரசார |
| ஒடிசாவில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 20 பேர் படுகாயம் Posted: 22 Jul 2013 08:48 AM PDT ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து ஒரு பயணிகள் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. டாக்கி பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து கல்வி நிறுவனப் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. பின்னர் திசை மாறிய அந்த பேருந்து மற்றொரு பயணிகள் பேருந்தை இடித்து தள்ளியது. கண்ணிமைக்கும் |
| இஷ்ரத் போலி என்கவுன்டர் வழக்கு: சி.பி.ஐ.க்கு குஜராத் ஐகோர்ட் நோட்டீஸ் Posted: 22 Jul 2013 08:15 AM PDT குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2004ல் மும்பை மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். முதல்வர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதால் அவர்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ. கடந்த 3-ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி அமிம் உள்ளட்ட 7 பேர் குற்றவாளிகளாக |
| உத்தர பிரதேசத்தில் ஓடும் காருக்குள் பிளஸ் 2 மாணவி பலாத்காரம் Posted: 22 Jul 2013 06:53 AM PDT உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிளஸ் 2 மாணவியை கடத்திய ஒரு கும்பல், ஓடும் காருக்குள் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மீரட்டைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் பழக்கமாகியிருக்கின்றனர். அவர்களில் ஒரு நண்பர் உள்ளிட்ட 4 பேர், சனிக்கிழமை அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். |
| 2ஜி ஊழல் வழக்கில் சாட்சியம் அளிக்க அனில் அம்பானிக்கு சம்மன் Posted: 22 Jul 2013 06:12 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் |
| கர்நாடகாவில் ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி Posted: 22 Jul 2013 05:17 AM PDT கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் 16 பேர் பலியாகினர். குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் |
| உணவு பாதுகாப்பு மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா? - டெல்லியில் டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி Posted: 22 Jul 2013 05:00 AM PDT உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கும் விவகாரங்கள் பட்டியலில் |
| சுஷ்மா சென்ற விமானத்தில் கோளாறு: ஜெய்ப்பூரில் அவசர தரையிறக்கம் Posted: 22 Jul 2013 04:25 AM PDT பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் இன்று புதுடெல்லியில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகருக்கு விமானத்தில் சென்றார். அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் வலது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது |
| மதிய உணவால் மாணவர்கள் மரணம்: பீகார் பள்ளி முதல்வருக்கு பிடிவாரண்ட் Posted: 22 Jul 2013 04:04 AM PDT பீகார் மாநிலம் சரன் மாவட்டம், தரம்சதி கந்தமான் தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பள்ளி முதல்வர் தலைமறைவானார். பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். |
| அனில் அம்பானி அரசு சாட்சி: சி.பி.ஐ. நீதிமன்ற அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு Posted: 22 Jul 2013 03:38 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் அலைக்கற்றை லைசென்ஸ் பெறுவதற்காக, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி மற்றும் 11 பேரை அரசு தரப்பு சாட்சிகளாக விசாரிக்க |
| மே.வங்கத்தில் இன்று 4ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல்: வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு Posted: 22 Jul 2013 02:09 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் 5 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜூலை 11, 15, 19 என 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. சம்பல்பூர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை கைப்பற்ற சிலர் முயற்சித்ததால் காவலுக்கு நின்ற ஆயுதப்படை போலீசார் வன்முறை கும்பலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |