மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தேர்தல்: பீகார் பா.ஜனதா ஊழியர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை
- கேதர்நாத்: தினசரி பூஜை 10 நாட்களில் தொடங்குகிறது
- டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி
- சட்டவிரோதமாக செயல்படும் வனவிலங்கு வியாபாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு: ஜெயந்தி நடராஜன்
- டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி
- பன்வெல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது
- பீகார் பா.ஜனதா நிர்வாகிகளிடையே நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்
- பூட்டானில் 13-ம் தேதி பொதுத்தேர்தல்: அசாம் எல்லைக்கு 24 மணி நேரம் ‘சீல்’
- மேற்கு வங்கத்தில் தரையிறங்கிய விமானம் ரன்வேயில் சறுக்கியதால் பரபரப்பு
- தேர்தல் பணிகள்: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் அத்வானி ஆலோசனை
- டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் முதல் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகிறது
- ஜார்க்கண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கூட்டணி: சிபுசோரன் கட்சியுடன் காங்கிரஸ் ஒப்பந்தம்
- கொச்சி அருகே பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில்
- சோலார் பேனல் மோசடி: டி.வி. நடிகையிடம் போலீஸ் விசாரணை
- இஷ்ரத் ஜகான் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற ஹெட்லி வாக்குமூலத்தை மறைத்தது ஏன்?: பா.ஜ.க. கேள்வி
- உணவு பாதுகாப்பு சட்டம் விவசாயிகள் நலனுக்கு எதிரானது: முலாயம் சிங்
- கர்நாடகத்தில் ரூ.1 வீதம் மாதம் 30 கிலோ அரிசி வழங்கும் திட்டம்: 10-ந்தேதி தொடக்கம்
- சோலார் பேனல் மோசடி விவகாரம்: மத்திய மந்திரி உள்பட கேரள மந்திரிகள் 4 பேருக்கு தொடர்பு
- பெனி பிரசாத் வர்மா மரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்: முலாயம் சிங் அறிவுரை
- பெண்கள், குழந்தைகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: நீதிபதி பி.சதாசிவம்
| பாராளுமன்ற தேர்தல்: பீகார் பா.ஜனதா ஊழியர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை Posted: 05 Jul 2013 10:43 PM PDT பாராளுமன்ற தேர்தல் பிரசார வியூகம் குறித்து பீகார் பாரதீய ஜனதா ஊழியர்களுக்கு நரேந்திர மோடி அறிவுரை வழங்குகிறார். பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதீய ஜனதா பிரசார குழு தலைவராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாநில நிர்வாகிகளுடனும் தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளார். இன்று அவர் பீகார் மாநில நிர்வாகிகளுடன் |
| கேதர்நாத்: தினசரி பூஜை 10 நாட்களில் தொடங்குகிறது Posted: 05 Jul 2013 09:13 PM PDT கடந்த மாதம் 17,18 தேதிகளில் உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட கடும் மழையினாலும், பெரும் வெள்ளத்தினாலும் கேதர்நாத், பத்ரிநாத் கோவில்கள் பெருமளவில் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் நிலச் சரிவுகளிலும், மழையிலும், வெள்ளத்திலும் சிக்கி இன்னல்களுக்கு ஆளாயினர். ஏராளமானோர் இந்த இயற்கை சீற்றத்திற்குப் பலியாகினர். காணாமற் போனவர்களைத் தேடும் பணி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. |
| டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி Posted: 05 Jul 2013 08:58 PM PDT டெல்லியில் ஜப்ராபாத் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் பலியானார். புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி மாநகராட்சி இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என்று அறிவித்தது. |
| சட்டவிரோதமாக செயல்படும் வனவிலங்கு வியாபாரிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு: ஜெயந்தி நடராஜன் Posted: 05 Jul 2013 08:10 PM PDT தெற்காசியாவில் புலிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 5 நாள் அறிவுத்திறன் வளர்க்கும் நிகழ்ச்சி டெல்லியில், சர்வ தேச போலீஸ் (இன்டர்போல்) மற்றும் சி.பி.ஐ. சார்பில் நடந்து வந்தது. நேற்று இதன் நிறைவு நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் இப்போது பெரிய வர்த்தகமாக உருவெடுத்துள்ளது. இதை நாம் மறந்துவிடக்கூடாது. சட்டவிரோத போதைப்பொருட்கள், ஆயுதங்கள் கடத்தல் போல வனவிலங்கு கடத்தலும் அதிகளவில் உள்ளது. எனவே இந்த வனவிலங்கு வர்த்தகத்தின் சரியான |
| டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி Posted: 05 Jul 2013 02:13 PM PDT மும்பை, தானே உள்பட மராட்டிய மாநிலம் முழுவதும் பருவமழை பெய்து வருகிறது. தற்போது கனமழை இன்றி அவ்வப்போது வெயிலும், இடை, இடையே சாரல் மழையுடன் சேர்ந்து குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தட்பவெப்ப நிலை மாறி உள்ளது. |
| பன்வெல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது Posted: 05 Jul 2013 01:44 PM PDT பன்வெல் பகுதியில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகம்-உரண் சாலையில் கடந்த புதன்கிழமையன்று ஜய்நாராயண் ஹரிசங்கர் சிங் (வயது 24) என்பவர் டேங்கர் லாரியில் நவிமும்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இரவு பின்னாலிருந்து காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் |
| பீகார் பா.ஜனதா நிர்வாகிகளிடையே நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார் Posted: 05 Jul 2013 09:17 AM PDT பா.ஜனதா கட்சியுடனான நீண்ட கால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்ட பிறகு, பீகாரில் உள்ள பா.ஜனதா தலைவர்களிடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாளை உரையாற்ற உள்ளார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தவாறே, டெலிகான்பரன்சிங் வசதி மூலம் பீகாரில் உள்ள 1500 நிர்வாகிகளுடன் மோடி பேச உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உரை மிகவும் |
| பூட்டானில் 13-ம் தேதி பொதுத்தேர்தல்: அசாம் எல்லைக்கு 24 மணி நேரம் ‘சீல்’ Posted: 05 Jul 2013 08:39 AM PDT பூட்டானில் வரும் 13-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இந்தியாவின் அசாம் மாநிலத்துடன் உள்ள சர்வதேச எல்லையை 24 மணி நேரம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. "தேர்தலை முன்னிட்டு கோக்ராஜர், போங்கைகான் மற்றும் சிரங் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை வாயில்கள் ஜூலை 12-ம் தேதி மாலை 6 மணி முதல் 13-ம் தேதி மாலை 6 மணி வரையில் மூடப்படும். |
| மேற்கு வங்கத்தில் தரையிறங்கிய விமானம் ரன்வேயில் சறுக்கியதால் பரபரப்பு Posted: 05 Jul 2013 08:01 AM PDT டெல்லியில் இருந்து 140 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. பிற்பகல் 2.15 மணியளவில் பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்க சிக்னல் கிடைத்ததும் ரன்வேயில் வேகமாக இறங்கியது. அப்போது, பின்சக்கரம் திடீரென திரும்பியதால் சறுக்கிக்கொண்டு ஓடிய |
| தேர்தல் பணிகள்: ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் அத்வானி ஆலோசனை Posted: 05 Jul 2013 07:50 AM PDT பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டதையடுத்து அத்வானி தனது ராஜினாமாவை திரும்ப பெற்றார். |
| டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் முதல் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகிறது Posted: 05 Jul 2013 06:42 AM PDT டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு டெல்லியில் |
| ஜார்க்கண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கூட்டணி: சிபுசோரன் கட்சியுடன் காங்கிரஸ் ஒப்பந்தம் Posted: 05 Jul 2013 06:23 AM PDT பாராளுமன்றத் தேர்தலில் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளது. முதல்கட்டமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் 17-ம் தேதியுடன் |
| கொச்சி அருகே பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில் Posted: 05 Jul 2013 06:17 AM PDT கொச்சி அருகே பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர். கூலித்தொழிலாளி. இவருக்கு கூலித்தொழில் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் புரோக்கர் லில்லி என்பவர் சுதீரை அணுகி ஆசை வார்த்தைகளை கூறினார். அவரது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினால் நிறைய பணம் கிடைக்கும். அதற்கு தான் |
| சோலார் பேனல் மோசடி: டி.வி. நடிகையிடம் போலீஸ் விசாரணை Posted: 05 Jul 2013 05:55 AM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், |
| இஷ்ரத் ஜகான் தற்கொலைப்படை தீவிரவாதி என்ற ஹெட்லி வாக்குமூலத்தை மறைத்தது ஏன்?: பா.ஜ.க. கேள்வி Posted: 05 Jul 2013 05:11 AM PDT என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் தற்கொலைப் படை தீவிரவாதி என டேவிட் ஹெட்லி அளித்த வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையில் இருந்து நீக்கியது ஏன்? என மத்திய அரசுக்கு பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் பற்பல புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. |
| உணவு பாதுகாப்பு சட்டம் விவசாயிகள் நலனுக்கு எதிரானது: முலாயம் சிங் Posted: 05 Jul 2013 04:03 AM PDT மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:- |
| கர்நாடகத்தில் ரூ.1 வீதம் மாதம் 30 கிலோ அரிசி வழங்கும் திட்டம்: 10-ந்தேதி தொடக்கம் Posted: 05 Jul 2013 04:03 AM PDT தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கிலோ ஒரு ரூபாய் விலையில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழைகளுக்கு மாதந்தோறும் 30 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு வரும் 10 தேதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பாக பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த |
| சோலார் பேனல் மோசடி விவகாரம்: மத்திய மந்திரி உள்பட கேரள மந்திரிகள் 4 பேருக்கு தொடர்பு Posted: 05 Jul 2013 03:34 AM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சரிதா நாயர் கைதானபோது கேரள அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என போலீசாரை மிரட்டியதாக செய்திகள் வெளியானது. முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோருக்கு சரிதா நாயருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் இருவரும் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கிடையே சரிதா நாயருடன் கேரள போலீஸ் இலாகா மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்பட 4 மந்திரிகள் அடிக்கடி டெலிபோனில் பேசி வந்ததாகவும் சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடியில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்றும் இதுபற்றி |
| பெனி பிரசாத் வர்மா மரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்: முலாயம் சிங் அறிவுரை Posted: 05 Jul 2013 03:18 AM PDT மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முலாயம் சிங்கின் தயவு தேவை என்பதால், பெனி பிரசாத் வர்மாவை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் செய்தனர். இருப்பினும் வர்மா தனது விமர்சனத்தை அவ்வப்போது வெளியிட்டு பிரச்சினை கிளப்பி வருகிறார். சமீபத்தில் பைசாபாத்தில் பேசியபோது, "பிரதமர் பதவிக்கு முலாயம் சிங் |
| பெண்கள், குழந்தைகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: நீதிபதி பி.சதாசிவம் Posted: 05 Jul 2013 03:17 AM PDT உச்ச நீதமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் நீதிபதி அல்டமாஸ் கபீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அவருக்கு அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 19-ம் தேதி தலைமை நீதிபதியாக பதிவியேற்க உள்ளார். இவர் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |