Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் ரூ. 2,374 கோடி

Posted: 11 Jul 2013 11:08 PM PDT

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், இந்த நிதியாண்டின், ஜூனுடன் முடிந்த முதல் காலாண்டில் ரூ.2,374 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த தகவலை இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் சாதி பேரணிக்கு தடை வருமா?: அரசியல் கட்சிகள் வரவேற்பு

Posted: 11 Jul 2013 10:52 PM PDT

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் மோதிலால் யாதவ் என்பவர் அந்த மாநில ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அதில் சமீபகாலமாக ஜாதிவாரியான பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடக்கிறது. அரசியல் கட்சிகளும் ஜாதி ரீதியாக பிரித்து பேரணிகள், கூட்டங்களை நடத்துகிறது. இது போன்ற கூட்டங்கள் மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்துகிறது. இது அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பீகாரில் படகு விபத்து: 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

Posted: 11 Jul 2013 10:27 PM PDT

வடமாநிலங்களில் பெய்து வரும் கண மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் ஓடுகிறது. பீகார் மாநிலம் கோசி ஆற்றில் நேற்று கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இந்த நிலையில் இந்த ஆற்றில் நேற்று இரவு 10.30 மணியளவில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அலம்நகர் பகுதியில் படகு வந்த போது திடீர் என்று படகு கவிழ்ந்தது.

கேரளாவில் தொடர் மழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted: 11 Jul 2013 10:24 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்ததால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், குட்ட நாடு, கிடங்கரை, தம்பானூர், நெய்யாற்றின்கரை, பத்தனம் திட்டை, கோட்டக்கரை பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை கொட்டியது.

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய கேரள டி.வி.நடிகர் கைது

Posted: 11 Jul 2013 10:19 PM PDT

கேரள மாநிலம் கண்ணூர் பகுதி காப்புக்கடை அக்ஷயா நகரில் வசிப்பவர் ஆதித்யன் (வயது 32). இவர் கேரள டி.வி. நடிகர். இவர் நடித்த பல தொடர்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. இவரது தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதனால் இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் ஏற்பட்டனர். இந்த நிலையில் நடிகர்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் மழைக்கு 6 பேர் பலி

Posted: 11 Jul 2013 10:08 PM PDT

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. ஐதராபாத்தில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் நீடித்தது. மழை காரணமாக ஐதராபாத் நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. 50–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதே போல் நெல்லூரில் பெய்த மழையால் சுரங்க பாதைகள் தண்ணீரில் மூழ்கியது. திருப்பதியிலும் நேற்று காலை முதல் மழை தூறிக்கொண்டே இருந்தது. இரவில் கனமழை கொட்டியது.

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு

Posted: 11 Jul 2013 09:36 PM PDT

ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் தெலுங்கானா அமைக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எந்த நிலையை எடுத்தாலும் அது காங்கிரஸ் அரசுக்கு பாதகமாக நிலவும் என்பதால் தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் முடிவு எடுக்க காங்கிரஸ்

2ஜி வழக்கில் 51 லைசென்சுகளை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 11 Jul 2013 04:47 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 2004-07-ம் ஆண்டு காலத்தில், அப்போதைய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா வழங்கியவற்றில் 51 லைசென்சுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த லைசென்சுகள், முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற முறையில் அளிக்கப்பட்டவை. 2012-ம் ஆண்டு 122 லைசென்சுகளை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டதுபோல்,

இந்திய-பாக். எல்லையில் ரூ.40 கோடி ஹெராயின் சிக்கியது

Posted: 11 Jul 2013 02:50 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாதை சீமா பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து சென்றனர். அப்போது இந்திய எல்லைப்பகுதிக்குள் பேப்பர் மற்றும் துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு பார்சல் கிடந்தது. அதனை கைப்பற்றிய எல்லைப்பாதுகாப்பு படையினர், அதை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 8 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்தது

இயற்கை எரிவாயு விலை உயர்வில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை: வீரப்ப மொய்லி

Posted: 11 Jul 2013 01:10 PM PDT

இயற்கை எரிவாயு விலை உயர்வில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி திட்டவட்டமாக கூறினார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) விலையை 4.2 டாலரில் இருந்து 8.4 டாலராக (மில்லியன் பிரிட்டிஷ்

உத்தரப்பிரதேசத்தின் கலாச்சாரம், அரசியலை மோடி கற்கவேண்டும்: முலாயம் சிங்

Posted: 11 Jul 2013 11:30 AM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த உள்ளனர். அவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்துக்களின் புனிதத்தலமான வாரணாசியிலிருந்து போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் ஜீப்-லாரி மோதல்: 9 பேர் பலி

Posted: 11 Jul 2013 10:53 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் பரன் நகரிலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் மத்தியப்பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மஹித்பூருக்கு ஜீப்பில் பயணம் மேற்கொண்டனர். அப்போது ஷாஜாபூர் அருகிலுள்ள உள்ள சஸ்னெர் நகருக்கு ஜீப் வந்தபோது எதிரே வந்த லாரியில் வேகமாக மோதியது.

ராஜஸ்தான் போலீஸ் பயிற்சி பள்ளியில் துப்பாக்கி மாயம்

Posted: 11 Jul 2013 09:14 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்குள்ள காவலர்கள் நேற்று முன்தினம் வழக்கம்போல் பயிற்சி முடிந்ததும் தங்கள் ஆயுதங்களை ஆயுதக்கிடங்கில் வைத்துவிட்டுச் சென்றனர்.

உ.பி.யில் கனமழைக்கு மேலும் 2 பேர் பலி: சாவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது

Posted: 11 Jul 2013 08:54 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாரதா, காக்ரா மற்றும் சரயு உள்ளிட்ட நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

5 மாநில தேர்தல் அட்டவணை செப்டம்பர்-அக்டோபரில் வெளியாகும்: தலைமை தேர்தல் ஆணையர்

Posted: 11 Jul 2013 07:17 AM PDT

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 4-ம் தேதிக்குள் நிறைவடைகிறது. இதையொட்டி அந்த மாநிலங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் முலாயம் சிங் திடீர் சந்திப்பு

Posted: 11 Jul 2013 05:51 AM PDT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக அவர் பிரதமரை சந்தித்தார்.

ரேபரேலியில் இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் பல்கலைக் கழகம்: அமைச்சரவை இன்று ஒப்புதல்

Posted: 11 Jul 2013 05:10 AM PDT

நாட்டின் முதல் அனைத்து மகளிர் பல்கலைக் கழகத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பெயரில் மகளிர் பல்கலைக் கழகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.500 கோடி செலவில் இந்த பல்கலைக் கழகத்தை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது.

புத்தகயா கோவில் குண்டுவெடிப்பு வழக்கு: விசாரணைக்குப் பிறகு 6 பேரும் விடுதலை

Posted: 11 Jul 2013 04:43 AM PDT

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பினோத் மிஸ்த்ரி என்பவரை பாதுகாப்பு

எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்: இஷ்ரத் ஜகான் குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted: 11 Jul 2013 04:13 AM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இது போலி என்கவுண்டர் என்று எதிர்க்கட்சிகள்

பா.ஜனதாவில் இணைவது பற்றி சரியான நேரத்தில் முடிவு செய்வேன்: எடியூரப்பா

Posted: 11 Jul 2013 03:59 AM PDT

கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வாக்குகளை பிரித்ததால், பா.ஜனதாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. வெறும் 40 தொகுதிகளை மட்டுமே பிடித்த பா.ஜனதா


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™