Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கேரள அரசு மக்கள் தொடர்பு துறை முன்னாள் இயக்குனர் கைது

Posted: 01 Jul 2013 11:08 PM PDT

சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக பலரிடம் லட்சக் கணக்கில் பணம் வசூலித்து விட்டு மோசடி செய்ததாக கேரளாவை சேர்ந்த சரிதாநாயர். அவரது 2-வது கணவர் தொழில் அதிபர் பிஜுராதா கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு

உத்தரகாண்ட் முதல்-மந்திரி விஜய் பகுகுணா மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

Posted: 01 Jul 2013 11:07 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளை செய்து வருகிறார்கள். மீட்புப் பணிகளை ஓரளவு செய்து முடிப்பதற்கே சுமார் 16 நாட்கள் ஆகி விட்டது. மீட்புப் பணிகளில் உத்தரகாண்ட் மாநில அரசு மிகவும் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம் என்று புகார்கள் கூறப்பட்டன. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக விஜய் பகுகுணா உள்ளார். பேரழிவு ஏற்பட்டதும் அவர் விரைந்து செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசும் அவரை கண்டு கொள்ளவில்லை. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்த பிறகே 4 நாட்கள் கழித்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து குழுக்களை ஏற்படுத்தின.

டீசல் விலை உயர்ந்தாலும் ரெயில் கட்டணம் உயராது: மந்திரி மல்லிகார்ஜூன கார்க்கே அறிவிப்பு

Posted: 01 Jul 2013 10:53 PM PDT

மத்திய அரசில் சமீபத்தில் ரெயில் மந்திரியாக கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்க்கே நியமிக்கப்பட்டார். பெங்களூர் வந்த அவர் கர்நாடக மாநிலத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் ரெயில்வே திட்டங்கள் குறித்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும், திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:- மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால் ரெயில் திட்டங்களை விரைவாக செயல்படுத்த அதிகாரிகளை

மும்பை: 4 லாரிகளில் வந்த ரூ. 2500 கோடி பணம் பறிமுதல்

Posted: 01 Jul 2013 10:37 PM PDT

மும்பை வழியாக பணம் மற்றும் தங்கம் கடத்தப்பட இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மும்பை சென்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாலைகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வருமான

உத்தரகாண்டில் 4-ந்தேதி முதல் மீண்டும் பலத்த மழை பெய்யும்: வானிலை இலாகா எச்சரிக்கை

Posted: 01 Jul 2013 10:23 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 14, 15-ந்தேதிகளில் பெய்த மழை மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. பலத்த மழையால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு, அம்மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாகை, உத்தரகாசி, சமோலி, தெக்ரி மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கு சென்ற வெளிமாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த பேரழிவில் சிக்கினார்கள். கடந்த 2 வாரமாக அவர்கள் மீட்கப்பட்டனர். இதுவரை சுமார் 1 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குஜராத்: ராஜினாமாவுக்கு பிறகு அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங் ஒரே மேடையில் தோன்றிய அபூர்வ காட்சி

Posted: 01 Jul 2013 01:48 PM PDT

குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், வாஜபாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இணை மந்திரியாக பதவி வகித்தவருமான பாவ்னா சிக்காலியா கடந்த (ஜூன்) மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் அஞ்சலி கூட்டம்

மனைவியுடன் தனியாக இருந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து விற்பனை செய்த தொழிலதிபர் கைது

Posted: 01 Jul 2013 12:18 PM PDT

மத்தியபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் தனியாக இருந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவில் படம் பிடித்து விற்பனை செய்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்தவர் தர்மேந்திரா ஜெயின். இவர் மீது இவரது மனைவி

இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது

Posted: 01 Jul 2013 11:31 AM PDT

இந்தியாவின் முதல் வழிகாட்டி (நேவிகேஷனல்) செயற்கைக்கோளை விண்வெளியில் நிறுவ இருக்கும் பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட், இன்றிரவு வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ''ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ

தேர்தல் ஆணைய நோட்டீசுக்கு 6-ம் தேதி விளக்கம் அளிப்பேன்: முண்டே

Posted: 01 Jul 2013 09:10 AM PDT

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநிலம் பீட் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கோபிநாத் முண்டே, 2009 தேர்தலின்போது 8 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக தேர்தல் விதியை மீறி செலவு செய்ததால், முண்டேயை தகுதி

பேரழிவு எதிரொலி: உத்தரகாண்ட் மாநில ஆற்றங்கரைகளில் கட்டிடங்கள் கட்ட தடை

Posted: 01 Jul 2013 08:29 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். புனித ஸ்தலங்களை தரிசனம் செய்ய சென்ற ஏராளமான யாத்ரீகர்களைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக முதல்வர் விஜய் பகுகுணா இன்று டேராடூனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சத்தீஸ்கரில் கார்-லாரி மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 8 பேர் பலி

Posted: 01 Jul 2013 07:59 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் பரத்வார் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் லைலுங்கா கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. பின்னர் பெண் வீட்டு அழைப்பிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து புதுமண ஜோடியுடன் 14 பேர் சொகுசு கார் ஒன்றில் இரவு மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டனர்.

நான் 15 ஆயிரம் பேரை காப்பாற்றும் ராம்போ அல்ல: மோடி மீது நிதிஷ் சாடல்

Posted: 01 Jul 2013 07:04 AM PDT

கடந்த மாதம் உத்தரகாண்டில் நடந்த மழை வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே நரேந்திர மோடி அங்கு சென்று பார்வையிட்டு வந்தார். அவர் 15 ஆயிரம் குஜராத்தியர்களை காப்பாற்றினார் என்று பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன.

டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்

Posted: 01 Jul 2013 06:26 AM PDT

டீசல் விற்பனையால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில் மாதந்தோறும் 45 காசுகள் முதல் 50 காசுகள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வாட் வரியைப் பொறுத்து ஒவ்வொரு நகருக்கும் விலை உயர்வு மாறுபடும். டெல்லியில் தற்போது ஒரு லிட்டர் டீசல் ரூ.50.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 58 காசுகள் உயர்ந்து ரூ.50.84-க்கு விற்பனை செய்யப்படும்.

போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

Posted: 01 Jul 2013 05:28 AM PDT

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அருகே கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத் ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.

இந்திய எல்லையில் ஊடுருவிய தற்கொலைப்படை தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 01 Jul 2013 04:52 AM PDT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சாஜியானில் உள்ள இந்திய ராணுவ முகாம் அருகே இன்று வெடிகுண்டுகளுடன் வந்த நபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். அந்த ஆசாமி பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஊடுருவ முயன்ற தற்கொலைப்படை தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காஷ்மீர் போராட்டத்தில் வன்முறை: ராணுவ பள்ளிக்கு தீ வைப்பு

Posted: 01 Jul 2013 04:31 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சுட்டதில் இரண்டு இளைஞர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தின் அத்துமீறலைக் கண்டித்து பிரிவினைவாதிகள் சார்பில் இன்று பந்த் நடத்தப்பட்டது. இதையொட்டி பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதில் மிக குறைந்த பயணிகளே இருந்தனர். ஆனால் அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள் வழக்கம்

பேஸ்புக் இணையதளத்தில் கேரள முதல்வர் பற்றி கிண்டல்: தலைமை செயலக ஊழியர் சஸ்பெண்டு

Posted: 01 Jul 2013 04:27 AM PDT

கேரள தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகியோர் சூரிய ஒளி மின்சார கருவி பொருத்தி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உதவியாளர், பாதுகாவலர் உள்பட 4 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்ற உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் உம்மன் சாண்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு விற்பது குறித்து பரிசீலனை: சிதம்பரம்

Posted: 01 Jul 2013 04:20 AM PDT

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

10-ம் வகுப்பு மாணவி ஆபாசபடம் இணைய தளத்தில் வெளியீடு: 4 வாலிபர்கள் கைது

Posted: 01 Jul 2013 04:15 AM PDT

டெல்லி மத்திய பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி வந்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழர் ஒருவருடன் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் இருவரும் ஆபாசமாக நடந்து கொண்டனர்.

சோலார் பேனல் மோசடியில் கைது: ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சரிதா நாயர்

Posted: 01 Jul 2013 03:44 AM PDT

சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக பலரிம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கேரள தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களது மோசடி, ஆடம்பர வாழ்க்கை, உல்லாச செலவுகள் பற்றி தினம் ஒரு தகவல்கள் வெளியாகி பரபரப்பு அடைய வைக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™