மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பீகார் மாநில சாலை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.4,133 கோடி நிதி உதவி
- 39 வயதில் 11 திருமணம்: கல்யாண மன்னன் இளம்பெண்ணுடன் கைது
- ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா ஆர்வம்: நரேந்திரமோடி அயோத்தி செல்கிறார்
- திருவனந்தபுரத்தில் தலையில் பானை சிக்கியதால் 3 மணி நேரம் தவித்த குழந்தை
- தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்: மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் சோனியாகாந்தி உறுதி
- திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது 3 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் வரிசை
- பீகாரில் தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் படுகாயம்
- பத்ராவதியில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையில் 7 பிரிவுகளில் உற்பத்தி திடீர் நிறுத்தம்
- மும்ரா கட்டிட விபத்து: கட்டுமான அதிபர்கள் ஜாமீன் மனுவை திரும்ப பெற விருப்பம்
- அரியானாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
- ஊழலுக்கு காரணமான காங்கிரஸ், நாட்டின் ஒரு தேசியப் பேரழிவு: ராம் தேவ்
- உத்தரகாண்டில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பதுக்கிய 1000 மூட்டை வெள்ள நிவாரணம் பறிமுதல்
- மக்களவை ஏமாற்றிய நிதிஷ் குமாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்: மோடி
- டெல்லியில் உகாண்டா பெண் மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
- தேசிய கீதம் அவமதிப்பு வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு
- உத்தரகாண்டில் மீண்டும் மழை: நிவாரணப் பணிகள் பாதிப்பு
- அமெரிக்காவில் நடைபெறும் மலாலா தின விழாவில் பங்கேற்க ஒடிசா மாணவன் தேர்வு
- பஞ்சாப்: சிறைக்குள் போதைப்பொருள் விற்ற வார்டனுக்கு 3 ஆண்டு ஜெயில்
- மத்திய பிரதேசத்தில் பெண்கள் மட்டுமல்ல, பையன்களும் பாதுகாப்பாக இல்லை: திக்விஜய் சிங்
- உத்தரகாண்டில் வெள்ள நிவாரணப் பொருட்களை திருடிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்
| பீகார் மாநில சாலை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ரூ.4,133 கோடி நிதி உதவி Posted: 06 Jul 2013 11:08 PM PDT பீகார் மாநிலத்தின் கிராமப்புற சாலை வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.4,133 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசின் தொழிற்சங்க கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நேற்று அறிவித்தார். இந்த நிதி உதவி மூலம், அம்மாநிலத்தில் 5,683கி.மீ நீளத்திற்கு கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் செப்பனிடப்படும் என்று தெரிகின்றது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அரசாங்க அலுவலகத்தில் நேற்று 90 நிமிடங்கள் நடந்த சந்திப்பில், இந்த |
| 39 வயதில் 11 திருமணம்: கல்யாண மன்னன் இளம்பெண்ணுடன் கைது Posted: 06 Jul 2013 10:49 PM PDT ஆயிரம் பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த கில்லாடி கல்யாண மன்னன். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர் பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். |
| ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா ஆர்வம்: நரேந்திரமோடி அயோத்தி செல்கிறார் Posted: 06 Jul 2013 10:44 PM PDT அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் செல்லவோ, வழிபாடு நடத்தவோ தடை ஏதும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வகையில் ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. முன்பு அத்வானி ராமர் கோவில் கட்டுவதற்காக ரதயாத்திரை சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கோவிலில் பாரதீய ஜனதா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. |
| திருவனந்தபுரத்தில் தலையில் பானை சிக்கியதால் 3 மணி நேரம் தவித்த குழந்தை Posted: 06 Jul 2013 10:36 PM PDT திருவனந்தபுரம் கபடியார் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பு. இவரது மனைவி மோனிசா. இந்த தம்பதியின் ஒரே மகள் அனன்யா (வயது 2). நேற்று தங்களது குழந்தையை அருகில் உள்ள பாட்டி வீட்டில் விட்டு விட்டு சுப்புவும், மோனிசாவும் வெளியில் சென்று இருந்தனர். சுட்டிக்குழந்தையான அனன்யா பாட்டி வீட்டில் இருந்த பொருட்களை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு பானையை எடுத்து விளையாடியபோது எதிர் |
| தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்: மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் சோனியாகாந்தி உறுதி Posted: 06 Jul 2013 10:27 PM PDT ராமேசுவரம், மண்டபம், நாகை போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்கி, கடத்தி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து பேச வந்திருந்தனர். தமிழக கடலோர விசைப் படகு மீனவர் சங்க தலைவர் வேணுகோபால், ஆலோசகர் தேவதாஸ், இலங்கை–இந்திய |
| திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது 3 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் வரிசை Posted: 06 Jul 2013 09:08 PM PDT திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது 3 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் வரிசை |
| பீகாரில் தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் படுகாயம் Posted: 06 Jul 2013 08:58 PM PDT பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் மகாபோதி எனும் புத்தமத கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேற்கு பகுதியில் புனித போதி மரம் (அரச மரம்) உள்ளது. அந்த அரச மரத்தடியில் தியானம் செய்தபோது கவுதம புத்தர் ஞானம் பெற்றார். துறவியாக நாடெங்கும் சுற்றித்திரிந்த அவருக்கு அந்த போதி மரத்தடியில்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இதையடுத்தே அந்த இடத்தில் மகாபோதி கோவில் கட்டப்பட்டுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 60 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகம் முழுவதும் வாழும் புத்த மதத்தவர்களுக்கும் முதன்மையான புனிதத்தலமாக திகழ்கிறது. |
| பத்ராவதியில் செயல்பட்டு வரும் இரும்பு ஆலையில் 7 பிரிவுகளில் உற்பத்தி திடீர் நிறுத்தம் Posted: 06 Jul 2013 05:16 PM PDT சிமோகா மாவட்டம் பத்ராவதியில் மத்திய அரசின் எம்.விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3 ஷிப்ட் முறையில் மொத்தம் 1,500 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். |
| மும்ரா கட்டிட விபத்து: கட்டுமான அதிபர்கள் ஜாமீன் மனுவை திரும்ப பெற விருப்பம் Posted: 06 Jul 2013 02:58 PM PDT தானே மும்ரா, ஷீல்பாட்டாவில் கடந்த ஏப்ரல் மாதம் 7 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 74 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான கட்டுமான அதிபர்கள் அப்துல்சலீம் சித்திக், ஜமீல் அகமது சேக் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். |
| அரியானாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை Posted: 06 Jul 2013 12:53 PM PDT அரியானா மாநிலம் கார்வார் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பல்வான் சர்மா (வயது 51) மற்றும் போலீஸ்காரர் ஹர்விந்தர்சிங் ஆகியோர், பெண் ஒருவர் மாயமான வழக்கு விசாரணைக்காக கேரிசாத் கிராமத்துக்கு சென்றனர். |
| ஊழலுக்கு காரணமான காங்கிரஸ், நாட்டின் ஒரு தேசியப் பேரழிவு: ராம் தேவ் Posted: 06 Jul 2013 12:43 PM PDT ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த யோகா குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி குறித்து ராம் தேவ் கூறியதாவது:- |
| உத்தரகாண்டில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பதுக்கிய 1000 மூட்டை வெள்ள நிவாரணம் பறிமுதல் Posted: 06 Jul 2013 10:41 AM PDT உத்தரகாண்டில் கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் கொட்டிய பேய் மழைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிராயுதபாணியாக தவிக்கவிடப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருந்து, உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. |
| மக்களவை ஏமாற்றிய நிதிஷ் குமாருக்கு பாடம் கற்றுக் கொடுப்போம்: மோடி Posted: 06 Jul 2013 09:39 AM PDT பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தனக்கு எதிராக விமர்சனம் செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, பீகார் மாநிலத்தில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளிடம் டெலிகான்பரன்ஸ் வசதி மூலம் இன்று உரையாற்றினார். |
| டெல்லியில் உகாண்டா பெண் மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது Posted: 06 Jul 2013 08:46 AM PDT டெல்லியில் உகாண்டா நாட்டுப் பெண்ணை மானபங்கம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். உகாண்டாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் மருத்துவ விசாவில் இந்தியா வந்துள்ளார். இன்று அதிகாலை அவர் குர்கானில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது காரில் வந்த 4 மாணவர்கள், அவருக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், காரை வேறு பாதையில் ஓட்டிச் சென்றதுடன், அந்த பெண்ணை 4 மாணவர்களும் மானபங்கம் செய்துள்ளனர். அவர்களின் சில்மிஷத்தை தாங்க முடியாத அவர், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். |
| தேசிய கீதம் அவமதிப்பு வழக்கில் இருந்து சசி தரூர் விடுவிப்பு Posted: 06 Jul 2013 07:41 AM PDT கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு வங்கி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி சசி தரூர், அனைவரும் தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்தபோது திடீரென இடைமறித்து பேசினார். அப்போது, அமெரிக்கர்களைப் போன்று வலது கையை இடது மார்பில் வைத்தபடி நிற்க வேண்டும் என்று பார்வையாளர்களிடம் கூறினார். அவர் இவ்வாறு நடந்துகொண்டது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி, ஜாய் கைதாரத் என்பவர் கொச்சி நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றபோது வழக்கை வாபஸ் |
| உத்தரகாண்டில் மீண்டும் மழை: நிவாரணப் பணிகள் பாதிப்பு Posted: 06 Jul 2013 06:16 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வான்வழியாக மட்டுமே நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக், சாமோலி மற்றும் உத்தரகாசி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இன்று |
| அமெரிக்காவில் நடைபெறும் மலாலா தின விழாவில் பங்கேற்க ஒடிசா மாணவன் தேர்வு Posted: 06 Jul 2013 04:38 AM PDT பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை சரமாரியாக |
| பஞ்சாப்: சிறைக்குள் போதைப்பொருள் விற்ற வார்டனுக்கு 3 ஆண்டு ஜெயில் Posted: 06 Jul 2013 04:02 AM PDT சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் விற்ற ஜெயில் வார்டனுக்கு பஞ்சாப் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் சிறைக்குள் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக ஜெயில் தலைமை சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. |
| மத்திய பிரதேசத்தில் பெண்கள் மட்டுமல்ல, பையன்களும் பாதுகாப்பாக இல்லை: திக்விஜய் சிங் Posted: 06 Jul 2013 03:50 AM PDT மத்திய பிரதேச நிதி மந்திரி ராக்வாஜி (79) வீட்டில் எடுபிடி வேலை செய்து வந்தவர் ராஜ்குமார். அவருக்கு நிரந்தர அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்த ராக்வாஜி பாலியல் ரீதியாக அவருடன் தவறாக தொடர்பு வைத்திருந்ததாக ராஜ்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். |
| உத்தரகாண்டில் வெள்ள நிவாரணப் பொருட்களை திருடிய அரசு அதிகாரி சஸ்பெண்ட் Posted: 06 Jul 2013 03:34 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசின் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு முறையாக வழங்க வேண்டிய ஒரு அதிகாரியே |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |