Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சோனியா சொன்ன குட்டி கதை -- அந்த 99 ரூபாய் என்னாச்சு ?

Posted: 03 Jul 2013 12:56 PM PDT

சமீபத்தில் காங்.தலைவர் சோனியா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு கதை சொன்னார்,ஒரு அப்பா தனது மூன்று மகன்களை அழைத்து ஒவ்வொருவருவர் கையிலும் நூறு ரூபாய் கொடுத்தார்,இந்த பணத்தைக் கொண்டு இந்த அறையை நீங்கள் முழுமையாக நிறைக்கவேண்டும் என்று சொன்னார். முதல் மகன் நூறு ரூபாய்க்கு மரப்பலகைகளை வாங்கிவந்து அறையில் போட்டார்,ஆனாலும் அறை முழுமையடையவில்லை,இரண்டாவது மகன் நூறு ரூபாய்க்கு பஞ்சு வாங்கிவந்து அறையை நிரப்பினார்,ஆனாலும் அறையானது நிரம்பவில்லை,மூன்றாவது மகன் ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுதிரி வாங்கிவந்து, ...

வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

Posted: 03 Jul 2013 12:37 PM PDT

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள் தோன்றும் நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடுகட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. வீட்டை கட்டிப்பார் திருமணம் நடத்திப் பார் என்பது பழமொழி ஆனால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்துவிடலாம், அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வீட்டுக்கான ...

இந்தியர்களின் தனித்தன்மை

Posted: 03 Jul 2013 11:34 AM PDT

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/994147_393514870758681_993544829_n.jpg மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் நமது ராணுவம், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை, கடற்படை, விமானப்படை, துணை ராணுவப்படையினர் என ஆயிரக்கணக்கான படை வீரர்கள் துரித கதியில் செயல்பட்டு 90,000-த்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர். இதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனாலும், மீட்புப் பணியின் போது மோசமான வானிலை காரணமாக மிக் 17-ரக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது ...

சுகாதார ஆலோசனைக்கு "104′

Posted: 03 Jul 2013 11:26 AM PDT

ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைபெறச் சென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சற்று தாமதமாகச் சென்றால், சில நாள்களில் மருத்துவர் இருப்பதில்லை. சில நாள்களில் மருத்துவர், பயிற்சிக்குச் சென்றுவிடுவார். மருந்தாளுநர் அல்லது செவிலியர்களிடம் நோயாளிகள் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற்றுச் செல்வர். இதுதான் தமிழக ஆரம்பச் சுகாதார நிலையங்களின் இன்றைய நிலை. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில், சாதாரண சிகிச்சைகளை மேற்கொள்ள, "ஆயுஷ்' மருத்துவர்களே போதும், எம்.பி.பி.எஸ். ...

இந்தியாவின் நிஜ கதாநாயகர்கள்..

Posted: 03 Jul 2013 11:13 AM PDT

http://www.caclubindia.com/articles/images/indian-army.jpg கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு திரையில் சாகசம் செய்யும் நம் திரைப்பட நடிகர்கள், பெரும் புகழ் மற்றும் பண மழையில் நனைந்து குதூகலிக்கும் விளையாட்டு வீரர்களைத்தான் நாம் நம் வாழ்வின் கதாநாயகர்களாக எண்ணி வாழ்ந்து வருகிறோம். ஆனால், தங்கள் இளம் வயதிலேயே பெற்றோர், மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலில் நாட்டின் எல்லையைக் காப்பதற்காக தங்கள் இன்னுயிரையும் விடத் தயாராக இருக்கும் லட்சோபலட்ச ராணுவ மற்றும் ...

உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்

Posted: 03 Jul 2013 10:35 AM PDT

உலகின் மிக உயரமான கட்டிடம் Burj Khalifa , Dubai இல் உள்ளது. இக்கட்டிடத்தின் உச்சி வரை சென்று கூகிள் Street view குழுவை சேர்ந்த பெண் (Project Manager) ஒருவர்  மூலம் 360' காட்சிகளை பதிவு செய்து கூகிள் தனது Street view இல் இணைத்துள்ளது. இதுவே கூகிள் முதன் முறையாக மிக உயரத்துக்கு சென்ற சந்தர்ப்பம். அதாவது 828 meters (2,717 ft) வரை உயரமான Burj Khalifa கட்டடத்த்தில் சென்று படமாகி உள்ளானர். High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர். ...

வேலன்:-டிவிடி கிரியேட்டர்

Posted: 03 Jul 2013 10:26 AM PDT

டிவிடிக்களில் படங்களை பர்ன்(Burn)செய்ய டிவிடி ப்ளேயருடன் கொடுக்கப்படும் சாப்ட்வேரினையும் -நீரோ சாப்ட்வேரினையும் பெருபாலும் பயன்படுத்துவோம். ஆனால் தனியாக நமது விருப்பபடி காப்பி செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.45 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் உள்ள Add File மூலம் நம்மிடம் உள்ள வீடியோக்களை தேர்வு செய்யவும்.இதில் வலதுபுறம் மெனு கொடுத்துள்ளார்கள். அதில் General.Holiday.Special ...

இமெயில்களை வைத்து இதெல்லாம் தான் செய்யக் கூடாது

Posted: 03 Jul 2013 10:21 AM PDT

இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிரெட்டி.காம் மற்றும் ஐடென்டிட்டி தெப்ட் 911 ஆகியவற்றின் நிறுவனர் ஆதம் லெவின் இமெயிலை வைத்து செய்யக் கூடாத 11 விஷயங்களை தெரிவித்துள்ளார். என் இமெயில் கணக்கை ஹேக் பண்ணிட்டாங்களே, என் பாஸ்வேர்டை எனக்கே தெரியாமல் யாரோ மாற்றிவிட்டார்களே, இமெயிலில் வந்த விளம்பரத்தை பார்த்து மோசம் போனேனே என்று சொல்பவர்களுக்காகத் தான் இந்த செய்தி. 1. இன்டர்நெட் மையம் : இன்டர்நெட் மையம், நூலகம் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி இமெயிலை செக் பண்ண ...

உடல் யார்... உயிர் யார்??!!

Posted: 03 Jul 2013 10:19 AM PDT

நானும் நீயும் இணையாய்
இணைந்தெடுத்த நிழற்படங்கள்
எல்லாம் நிஜமானவை...!!!

உயிரில்லா அந்த உருவப்படங்கள்
உயிரோட்டத்தை உணர்த்தும்
நம் நினைவுகள் ....!!!

இத்தனை நாளும் இணைபிரியாமல் ..
இருக்கிறோம் ...
இறப்பிலும் இணையாகத்தான்
போவோம் ...
உடலைவிட்டு உயிர் போனபின்
ஒருவர் இருந்தென்ன பலன் ..??
ஆமாம் நம்மில்
உடல் யார்...
உயிர் யார்??!!

காதலிக்கு அன்புக்கவிதைகள் ...!!!

Posted: 03 Jul 2013 10:13 AM PDT

பூக்கள் பூக்கின்ற ..
போது அழகாக ...
இருக்கவும் ..
வாசமாக இருக்கவும் ...
எது காரணம் என்று ..
நினைக்கிறாய் ...?
நீ அதனருகில் ...
இருப்பதுதான் ...!!!

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்

Posted: 03 Jul 2013 09:48 AM PDT

லண்டன் : செல்போன் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டுமெனில் அதை 50 சதவீதம் சார்ஜ் செய்தால் போதும். இது பற்றி, லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் எரிக் லிமெர் கூறியதாவது: செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் ...

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி ?

Posted: 03 Jul 2013 09:24 AM PDT

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking ...

அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 03 Jul 2013 08:59 AM PDT

அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் ! கவிஞர் இரா .இரவி ! வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம் வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் ! மாடு மேய்த்தால் சோறு கிடைக்கும் பள்ளிக்கு வந்தால் சோறு கிடைக்குமா ? சோறு போட்டால் பள்ளிக்கு வருவாயா ? சோறு போடுகிறேன் பள்ளிக்கு வா ! மதியஉணவு பள்ளிகளில் வழங்கிய வள்ளலார் ! மாணவர்களின் பசிப் போக்கிய தாயுமானவர் ! மாட்டுக்குச்சிப் பிடித்த கரங்களில் எல்லாம் ! ஏட்டுப் புத்தகங்களை ஏந்திட வைத்தவர் ! படிக்காத பாமரர்களையும் ...

கல்யாணச் சந்தை!

Posted: 03 Jul 2013 08:37 AM PDT

சங்கரபாண்டியனைப் பார்க்க, அவர் நண்பர் வந்திருந்தார். ""வா சக்தி,'' என அவரை வரவேற்று, சோபாவில் அமரச் செய்த சங்கரபாண்டியன், மனைவி பத்மாவதியிடம் காபி போடச் சொல்லி, நண்பனின் அருகில் அமர்ந்தார். ""சொல்லு சக்தி. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கே, என்ன விஷயம்? எல்லாம் சவுக்கியம் தானே?'' ""எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்குப்பா. என் பையனுக்கு பொண்ணு பாத்துட்டு வந்திருக்கேன்,'' என்றார் சக்திவேல். ""அடடா...என் பையனுக்கும் நிச்சயமாகி இருக்கு. ரெண்டு பேருக்கும் சேர்த்து, ஒரே முகூர்த்தத்தில கல்யாணம் ...

வரம் வேண்டி தவமிருக்கும் ... காதல் .....

Posted: 03 Jul 2013 08:34 AM PDT

உன்னில் காதல் வந்த பின்னரே .... மண்ணில் உதித்ததின் .... மகிமை விளங்கியது ... ஒவ்வொரு சந்திப்பிலும்.... என் பிறப்பின் புனிதத்தை ... உணர்ந்தேன் ....!!! இப்போதெல்லாம் என் பலம் இருமடங்காய்.. என்னுள் நீயும் இருப்பதால் ...!!! வருடங்களுக்கு மட்டுமே வயதுபோகிறது ... எனது இளமை மெருகேறுகிறது ...!!! இத்தகைய காதல் ... சாவதில்லை ... தோற்பதில்லை ... வரம் வேண்டி தவமிருக்கும் ... காதல் ......!!!

அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு நகைகள் வாங்கப்பட்டன

Posted: 03 Jul 2013 08:26 AM PDT

தமிழ் தெலுங்கில் தயாராகும் 'ருத்ரமாதேவி' படத்தில் நடிக்கும் அனுஷ்காவுக்கு ரூ.5 கோடிக்கு ஒரிஜினல் தங்க, வைர நகைகள் வாங்கப்பட்டு உள்ளது. 'ருத்ரமா தேவி' அரசியின் வரலாற்றை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ருத்ரமாதேவி ராணி கேரக்டரில் வருகிறார். ராணா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் நடிக்கின்றனர். ரூ.40 கோடி செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிப்பதற்காக அனுஷ்கா குதிரையேற்றம் யானை சவாரி பயிற்சிகள் பெற்றார். வாள் சண்டையும் கற்றார். ஏற்கனவே 'அருந்ததி' படத்தில் அரசி வேடத்தில் ...

சுகமான சுமை! (ஜூலை 4 - கூர்ம ஜெயந்தி!)

Posted: 03 Jul 2013 08:03 AM PDT

புராண காலங்களில், அரக்கர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தது போல, தற்காலத்தில் மதுவெனும் அரக்கன், குடும்பங்கள் பலவற்றை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான். குடிகாரர்களால் இளைய சமுதாயம் ரொம்பவே கெட்டுப் போகிறது. ஒரு குடிகாரத் தந்தை, தாயை காரணமின்றி அடிக்கும்போது, அதைப் பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்கள் வெந்து போகின்றன. பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்தது ஏன் தெரியுமா? பெற்ற குழந்தைகளை சரிவர கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான். "கூர்மம்' என்றால், ஆமை. ஆமையை தன் அவதார நோக்கத்திற்கு அவர் பயன்படுத்தக் காரணம் ...

ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்!

Posted: 03 Jul 2013 08:02 AM PDT

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தை வரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடு களில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமும் ஒளிந்து இருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் ...

2001-2010: தீவிர பருவநிலை மாற்றங்களின் தசாப்தம்

Posted: 03 Jul 2013 07:16 AM PDT

http://wscdn.bbc.co.uk/worldservice/assets/images/2011/05/30/110530165331_global_warming_304x171_ap.jpg 2001ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டு காலகட்டத்தில் உலகம் முன்னெப்போதுமில்லாத தீவிர காலநிலை மாறுதல்களை பதிவுசெய்துள்ளது உலக வானிலை ஆய்வுக் கழகம் கூறுகிறது. முந்தைய தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பமும் குளிரும் பல்வேறு நாடுகளில் பதிவாகியிருப்பதாக அக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்த பத்தாண்டு காலத்தில் கொளுத்துக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ...

ஆப்கான் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் பலி

Posted: 03 Jul 2013 07:06 AM PDT

காபுலில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேட்டோ நேசப் படையினருக்கு தேவையான பொருட்களை வழங்கும் நிறுவனத்தின் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் குறைந்த்து 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 4 பேரும், ஆப்கானிய ஒட்டுனர்கள் 2 பேரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரும் இதே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. காபுலில் ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 03 Jul 2013 07:00 AM PDT

குலுங்க குலுங்க சிரிக்க

Posted: 03 Jul 2013 06:57 AM PDT



நன்றி முகநூல்

மொக்க ஜோக்ஸ்

Posted: 03 Jul 2013 06:55 AM PDT

நண்பர்கள் எல்லாம் தண்ணி அடிச்சிட்டு மொக்க ஜோக் அடிக்கரங்க மச்சான் இன்ன மேலுக்கும் நாம்ப எல்லாரு குடிக்க கூடாது மச்சா சத்தியம் பன்னு மச்சா ஓக்கே மச்சா இன்னுமேலுக்கும் நாம எல்லாம் பச்ச தண்ணி கூட குடிக்க கூடாது மச்சா/ (ராமு) வேர்வை சிந்த உழைக்கிறோம் ஆனா ரத்தம் சிந்த தூங்க வேண்டி இருக்கு ஏன? ஒரே கொசுக்கடியா இருக்குப்பா/ (அரவப்பா) தூங்கும் போது ஏன் தலகாணிக்கு கீழே ஸ்கேல் வச்சிருக்க? ஏனா அளவோடு தூங்கிடத்தான் (மஞ்சுரி) சார் 12 B பஸ் எப்பவரும் 10 /12 க்கு வரும் ...

வலிக்கவில்லை ..???

Posted: 03 Jul 2013 06:52 AM PDT

சுற்றிக்கொண்டே
இருந்திருகிறேன்
அவள் பின்னால்
பலநாட்கள் ...!!!

அவள்
தொலைபேசியில் அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
பார்த்துக்கோண்டிருக்கிறேன் ...
தொலைபேசியில் அவள் முகத்தை ...

சுற்றி சுற்றி காலும் வலிக்குது ..
பார்த்து பார்த்து கண்ணும் வலிக்குது ...
ஏங்கி ஏங்கி இதயம் வலிக்குது....
உனக்கு மட்டும் ஏன் ஒன்றும்...
வலிக்கவில்லை ..???

தவிர்ப்பு வலி எல்லாமே சுகம்தான் ...!!!

Posted: 03 Jul 2013 06:40 AM PDT

நம் உள்ளங்கள்
சேர்ந்த செய்தி
ஊருக்கு மட்டும்
ஏன்
வதந்தியாய்
போயிற்று!?
ஊர் காதல் உறுதியானது ...
இறுதிவரை வருவது ...
அண்ணனுக்கு பயம் ..
தம்பிக்குபயம் ...
மாமாவுக்கு பயம் ...
ஒழித்து ஒழித்து நாம் பேசியதை ..
ஊர் வதந்தியாக எடுக்கிறது ...
கிராமத்தில் காதலித்துப்பார் ...
காதலின் புனிதம் ஏக்கம் ...
தவிர்ப்பு வலி எல்லாமே சுகம்தான் ...!!!

ஊர் நாம் காதலை விரும்பும் ..!!!

Posted: 03 Jul 2013 06:31 AM PDT

இதுவரை
சொல்லிக்கொண்டதில்லை
இருவரும்..
நாம் காதலை ...
ஆனால் நாம் இருவரையும் ..
தவிர எல்லோரும் ..
நம்காதல் பற்றித்தான் பேச்சு ..!!!
இனி நாம் விரும்பாது விட்டாலும் ...
ஊர் நாம் காதலை விரும்பும் ..!!!

எண்ணாத்தால் வர்ணம் ...

Posted: 03 Jul 2013 06:20 AM PDT

நீ........
அருகிலிருக்கும்
பொழுதுகளில்!
காலம் வரைந்து விடுகிறது ...
நீ அருகில் இல்லாத ..
நேரங்க்களில் நீ தந்த ...
நினைவுகளுக்கு ..
எண்ணாத்தால் வர்ணம் ...
தீட்டி பார்க்கிறேன்
காதல் தூரிகையால் ...!!!

மீன் வலைபோல் ..

Posted: 03 Jul 2013 06:06 AM PDT

உன் ..
நினைவுகளால் ...
மீன் வலைபோல் ..
பின்னப்பட்டிருக்கிறேன் ...
அந்த வலையில் அகப்பட்ட ..
மீன் நான் தான் ....!!!

இரவு வந்தால் ..
சந்தோசம் கனவோடு ...
கதைப்பேன் ...!!!

பூக்களில் சகுனமான பூ
சகுனமற்ற பூ
என்று எதுவுமே இல்லை
உன்னைப்போல் ...!!!

கஸல் 196

நான் தூங்கி பல நாட்கள் ...!!!

Posted: 03 Jul 2013 06:05 AM PDT

நீ உன் குணத்தை ..
மாற்றப்போவதில்லை ...
மாற்றாவிட்டாலும் ...
பரவாயில்லை ..
புரிந்து கொள் ....!!!

நீ நிலவில் மலர்ந்த ...
செந்தாமரை ...
சந்திரனால் பூத்த ...
சூரிய காந்தி ...!!!

நான் சற்று தூங்கினால் ...
போதும் ...
கனவில் வந்தும் ..
வலிதருகிறாய் ...
நான் தூங்கி பல நாட்கள் ...!!!

கஸல் ; 197

ஆன்லைனிலேயே உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்யலாம்...!

Posted: 03 Jul 2013 06:03 AM PDT

ஆன்லைனில் வெப்சைட் டிசைன் செய்ய உதவும் சேவைகளில் ஒன்றுதான் RVSiteBuilder. இதன் மூலம் நாம் எந்தவொரு வெப் டிசைனிங் பயிற்சியும் இல்லாமல்  நமது வெப்சைட்டை நாமே நிர்வகிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்புகள்(Designs) இலவசமாகவே தருகிறார்கள். அதிலிருந்து உங்களுக்கு பிடித்த ஒரு வடிவமைப்பை தேர்ந்தெடுத்து உபயோகித்துக்கொள்ளலாம். உங்களுக்கான வடிவமைப்பை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். வெறும் ஐந்தே நிமிடங்களில் உங்களுக்கு பிடித்தமான டிசைனில் உங்கள் வெப்சைட்டை ...

'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்'

Posted: 03 Jul 2013 05:55 AM PDT

ஒருவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம் என அனைத்திலும் பிரஞ்சு மொழியே கோலோச்சுகிறது என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும். அல்லது அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம் என அனைத்திலும் இத்தாலி மொழியே கோலோச்சுகிறது என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும். அல்லது அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம் என அனைத்திலும் ...

முகநூலில் ரசித்தவை-2

Posted: 03 Jul 2013 05:36 AM PDT



சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் ..

யூரியா, சோப்பு பவுடர், பெயின்ட் கலப்பு 68% கலப்பட பால் தடுக்க நடவடிக்கை

Posted: 03 Jul 2013 05:17 AM PDT

பாலில் யூரியா உரம், சோப்பு பவுடர், பெயின்ட் கலந்து விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுவாமி அச்சுதானந்த் தீர்த் என்பவர் உட்பட பலர் கலப்பட பால் விற்பனையை தடுத்து நிறுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், யூரியா உரம், சோப்பு பவுடர், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளை பெயின்ட் கலந்து கலப்பட மற்றும் செயற்கை பால் தயாரிக்கப்படுகிறது. ...

’T’ போட்ட டி-சர்ட் போட்டா பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்

Posted: 03 Jul 2013 05:17 AM PDT

லண்டன்: வெள்ளை டி-சர்ட்டில் கறுப்பில் 'T' என்ற எழுத்து எழுதப் பட்ட டி-சர்ட் போட்ட ஆண்கள் மிகவும் வசீகரமாகத் தெரிவார்களாம் பெண்களுக்கு. இது ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். ஆள் பாதி, ஆடை மீதி என்பார்கள். ஆடையை வைத்து தான் பெரும்பாலும் மத்தவர்களைக் கவர முடியும் என்பது சிலரது கருத்து. அதுமட்டுமில்லாது, உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளுள் ஆடையும் ஒன்று. ஆடைகளுக்கும், வண்ணங்களுக்கும் என சில தனிப்பட்ட பண்புகளும், குணங்களும் உண்டென்று கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். லேட்டஸ்டாக வெறும் ...

அகல் மொழி பத்து - பாகம் 6

Posted: 03 Jul 2013 05:15 AM PDT

http://4.bp.blogspot.com/-yEPBWx1iXDM/UdLXwOY5c7I/AAAAAAAACZ0/rKlTB5Fbj1o/s640/5723007515_b765d11942_z.jpg 51. பெரும்பாலான நேரங்களில், ஒரு கருத்தை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அந்த கருத்தின் ஆழத்திற்காக இல்லாமல், அதைச் சொன்னவரின் மீதுள்ள விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. 52. நம்பிக்கையில்லை என்பதும் ஒரு நம்பிக்கையே. 53. அறப் போராட்டமா ? ஆயுதப் போராட்டமா ? என்பதை ஒரு போராட்டத் தலைவன் தீர்மானிப்பதில்லை. போராட்டக்களம் தீர்மானிக்கிறது. 54. எதுவும் தெரியாது என்று சொல்பவனைவிட ...

அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???

Posted: 03 Jul 2013 05:08 AM PDT

கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி, ஒடிசா (பழைய பெயர் - ஒரிசா) மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டனா கிராமத்தில், POSCO இரும்பு ஆலை அமைவதற்கான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் இறந்து போயினர். ஒருவர் படுகாயமுற்று கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போதும்,இதற்கு தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரசு இயந்திரமும், காவல் துறையும் யாருக்காக பணி செய்தன? என்பதை உண்மை அறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில் தெரிவிக்க விழைவதே இக்கட்டுரையின் ...

2 தலை ஆமைக்குட்டி

Posted: 03 Jul 2013 04:52 AM PDT

அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் சான் ஆண்டனியோ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் பல சிறப்புகளில் ஒன்று 2 தலை விலங்கு பிறப்பதாகும். அங்குள்ள கடல் ஆமை சமீபத்தில் 2 தலையுள்ள குட்டி போட்டது. அது நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் பார்வைக்கு வைக்க கால்நடை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். அந்த அரிய விலங்கினை சிறுவர்கள் முதல் முதியோர் வரையில் கண்டுகளிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்த பூங்காவில் இதற்கு முன்பு 2 தலை எலி, 2 தலை பாம்பு ஆகியவை பிறந்து பார்வையாளர்களை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ...

அப்பப்ப கொஞ்சம் பக்கத்த காணோம்

Posted: 03 Jul 2013 04:40 AM PDT

நம்ம வாழ்க்கை பாதையில், நாம எத்தனையோ பேர சந்திக்கிறோம், எத்தனையோ விஷயங்களை கற்று கொள்கிறோம், ஆன சிலரோட மட்டும் தான் உண்மையான நட்போட,கை கோர்த்து நடந்து செல்கிறோம்! அப்படிபட்ட ஒரு நபரை, நண்பரை பற்றி தான் இந்த பதிவு.. இவர் எனக்கு 2001 வருடத்தில் தான் அறிமுகமானார், அப்பவே அவர் ரொம்ப ஸ்மர்ட்.. மூன்று, நான்கு தடவை, அவரை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன், அதற்கு அப்புறம், அவரை தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவே இல்லை! கிட்டதட்ட நிறைய வருடங்கள் கழித்து, 2010 இல் தான் திரும்பவும் ...

உன் ஸ்பரிசம்..!

Posted: 03 Jul 2013 04:40 AM PDT



பூக்களை
காணும் போதெல்லாம்
அதன் நறுமணத்தை
உணர்கிறேனோ
இல்லையோ - அதில்
உன் ஸ்பரிசத்தை
உணர்கிறேன்..!

தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை.

Posted: 03 Jul 2013 04:21 AM PDT

இதுநாள் வரை பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த வரலாற்றுப் பாடங்கள் அனைத்தும் வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துகளைச் சார்ந்தவையே. அவர்கள் தங்களுடைய மாநிலங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்து விரிவாகப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிலும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தமிழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. ...

ஜனநாயகம்

Posted: 03 Jul 2013 04:19 AM PDT

ஜனநாயகம் அரிசியை சிந்திவிட்டு உமிக்காக அடுப்பெரிக்கும் முதுகிலே கண்முளைத்த நாட்டில்....! வேட்டியை விற்றுவிட்டு நிர்வாணத்திடம் கோவனத்திற்காய் பல்லிளிக்கும் கூனல் சனநாயகம்... இங்கே.! விளையாட்டுப்போட்டிக்கும் பலகோடி சடடமன்ற்த்தில் தலையாட்டும் போட்டிக்கும் பலகோடி வாக்களித்தமக்களுக்கோ தெருக்கோடி....! மின்மினிகள் கண்ணடிக்க-இங்கே தாரகைகள் எங்கோ தலைமறைவாய் வாழும்... கூழாங்கற்களின் குன்று மூலையின் கீழ் வைரத்துண்டுகள்-பாவம் வருமை பள்ளத்தின் வயிற்று மடிப்பில் இடிகளின் ...

Whatsapp சாதனை - ஒரே நாளில் 2700 கோடி மெசேஜ்

Posted: 03 Jul 2013 04:17 AM PDT

வாட்ஸ் அப் Whatsupp என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும். வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ஒரு போன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இலவசமாக எஸ். எம்.எஸ். சேவை தரப்படுவதால், எஸ். எம்.எஸ். கட்டணம் அதிகமாகவுள்ள இந்தியா ...

மிஸ் யூ …..

Posted: 03 Jul 2013 03:54 AM PDT

நம்ம வாழ்க்கையில், ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில், அவர்களுடைய அருமை நமக்கு தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில் கூட நினைத்ததில்லை! அவர் ...

அந்தரங்கம் இனி ரகசியமில்லை!

Posted: 03 Jul 2013 03:43 AM PDT

உலகமே அதிர்ச்சியில் சமைந்திருக்கிறது. 29 வயதேயான எட்வர்ட் ஸ்நோடென்னை, அமெரிக்க அரசின் ஒற்றாடலை உலகத்துக்குத் தெரியவைத்த "நாயகன்' என்று போற்றுவதா இல்லை தனது அரசின் நம்பிக்கையைத் தகர்த்த "துரோகி' என்று தூற்றுவதா என்பது அவரவர் பார்வையைப் பொருத்த விஷயம். அமெரிக்க அரசின் ஒற்று நிறுவனமான சி.ஐ.ஏ.வில் மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்த ஸ்நோடென், கூகுள், மைக்ரோ சாப்ட், யாகூ, ஆப்பிள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதள நிறுவனங்களிலிருந்தும், வேறு பல வழிகளிலும் உலகளாவிய அளவில் தனிநபர்களாலும், அரசுகளாலும் ...

தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா?

Posted: 03 Jul 2013 03:30 AM PDT

தமிழ் இனத்தின் தனி அடையாளமே அதன் சீரிளமைத் திறம் வாய்ந்த தமிழ்மொழிதான். அதற்குச் செம்மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தத் தமிழை மாநில அளவில் சிறப்பாக வைத்திருக்கிறோமா? அரசு நிர்வாகத்தில் தமிழ்தான் கோலோச்சுகிறதா? அதிகாரிகள் குறைந்தபட்சம் தமிழிலாவது கோப்புகளில் கையெழுத்திடுகிறார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்கிறதா? தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எல்லோரும் தமிழ் படிக்கிறார்களா? தமிழ்நாட்டு ஆலயங்களில் தன்னைப்போல தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறதா? செம்மொழி ...

உறவுகளுக்கு வணக்கம்! TALLY 9 மின்னூல் வேண்டும் உதவ முடியுமா?

Posted: 03 Jul 2013 03:29 AM PDT

உறவுகளுக்கு வணக்கம்! TALLY 9 மின்னூல் வேண்டும் உதவ முடியுமா? தமிழில் வேண்டும்

இன்னும் சில தினங்களில் அமெரிக்காவிறகு காக்கை பறக்கிறது...

Posted: 03 Jul 2013 03:25 AM PDT

விசா கிடைத்து பல மாதங்கள் காத்திருப்பிற்குபின் அமெரிக்காவிற்கு நாடு கடத்த எனது அலுவலக வட்டாரம் தயாராகிவிட்டது. ஏறக்குறைய எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டது. இன்னும் 10-15 நாட்களில் கிளம்புவேன் என்று எதிர்பார்க்கிறேன். என்னை, எனது எழுத்துக்களை விரும்பிய, வெறுத்த ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் . இங்கே எவரது மனதையும் காயப்படுத்தி இருந்தால் எனது மன்னிப்புக்கள். பல பொறுப்புகளைத் தன்னந்தனியே சுமக்கும் பொறுப்பாளன் என்ற முறையில், எனது புழுதி பறக்கும் கிராமத்தைவிட்டு சில வருடங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™