Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிரஞ்சீவி மருமகன் பா.ஜனதாவில் சேர்ந்தார்: நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Posted: 04 Jul 2013 11:03 PM PDT

நடிகரும், மத்திய மந்திரியுமான சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஷாவின் கணவர் ஜி.ஆர்.பரத்வாஜ். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது விவாகரத்து வழக்கு குடும்பநல கோர்ட்டில் உள்ளது. இந்த நிலையில் ஜி.ஆர். பரத்வாஜ் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். இதை ஆந்திர மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் விஷ்ணு வர்த்தன் ரெட்டி உறுதி செய்துள்ளார். பா.ஜன தாவில் இளைஞர்

பீகார் கால்நடை தீவன ஊழல்: கால்நடைத்துறை அதிகாரிகள் 6 பேர் டிஸ்மிஸ்

Posted: 04 Jul 2013 10:56 PM PDT

ஜார்கண்ட் என்ற தனி மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது ஒன்றுபட்டிருந்த பீகார் மாநிலத்தில் 1996ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கால்நடை தீவன ஊழல் நடைபெற்றது. லல்லு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது கால்நடை பராமரிப்பு துறையில் ரூ.950 கோடி அளவுக்கு ஊழல்

மும்பை கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Posted: 04 Jul 2013 10:42 PM PDT

மும்பையின் பிவண்டி பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மும்பையின் தானே மாவட்டத்தில் அனுமதி பெறாத கட்டிடங்களும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

மோடி பிரதமராக அதிக ஆதரவு: கருத்து கணிப்பில் தகவல்

Posted: 04 Jul 2013 09:54 PM PDT

வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று ஆங்கில பத்திரிகை ஒன்று கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 197 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணிக்கு 184 இடங்கள் கிடைக்கும். இதர கட்சிகள் 162 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலில் 37.2 சதவீதம் வாக்குகள் பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 31.7 சதவீதம்

ஜார்க்ண்ட் சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு அர்ஜூன் முண்டா கோரிக்கை

Posted: 04 Jul 2013 09:37 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கொடுத்த ஆதரவை கடந்த ஜனவரி 8-ம் தேதி வாபஸ் பெற்றது. இதனால் அர்ஜுன் முண்டாவின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ஜனவரி 18-ம் தேதி முதல் அம்மாநிலத்தில்

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

Posted: 04 Jul 2013 05:45 PM PDT

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றுவது என்பது, காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியாகும். அத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை தேர்தலுக்காக கொண்டுவரவில்லை: காங்கிரஸ் சொல்கிறது

Posted: 04 Jul 2013 05:12 PM PDT

உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை தேர்தலை கருத்தில் கொண்டுவரவில்லை, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே கொண்டு வந்தோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. உணவு பாதுகாப்பு மசோதா, கடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது

முலாயம்சிங்கை விமர்சிக்க தடை விதிப்பதா?: காங்கிரசில் இருந்து விலக தயார் - பெனிபிரசாத் வர்மா ஆவேசம்

Posted: 04 Jul 2013 02:04 PM PDT

காங்கிரஸ் மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா, உத்தரபிரசேதத்தில் சாதிரீதியாக செல்வாக்கு பெற்றவர். முன்பு, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் இருந்தவர். சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் இணைந்த அவர், முலாயம்சிங்கை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார்

காசநோய் மருந்துகளை வெளிச்சந்தையில் விற்க தடை: மத்திய அரசு பரிசீலனை

Posted: 04 Jul 2013 12:06 PM PDT

உலக அளவில் இந்தியாவில்தான் காசநோயாளிகள் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. காசநோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களின் பரிந்துரையில் வெளிச்சந்தையில் மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அன்றாடம் மருந்து எடுத்துக் கொள்ளாததால், நோய் குணமாகாத நிலை காணப்படுகிறது

ஆடி அமாவாசையில் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு

Posted: 04 Jul 2013 08:25 AM PDT

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆடி அமாவாசை (06.08.2013) தினத்தன்று ராமேஸ்வரம் சென்று வர சுற்றுலாவினை ஏற்பாடு செய்துள்ளது. 04.08.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் இருந்து இந்த

நாட்டின் கல்வி முறையில் சீர்சிருத்தம் வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 04 Jul 2013 06:53 AM PDT

பல்கலைக்கழகங்கள் அமைப்பதை மாநில அரசின் கீழ் கொண்டு வருவதற்கான சட்டத்திருத்தத்திற்கு மத்திய பிரதேச அரசு முடிவு எடுத்தது. இதற்கு எதிராக மகரிஷி மகேஷ் ஜோகி வித்தியாலயா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உலக பாதுகாப்புத் திட்டத்திற்கு கேரள மாநிலம் தேர்வு

Posted: 04 Jul 2013 06:46 AM PDT

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இடுக்கி மாவட்டமும், திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகளும் பசுமை எழில் சூழ்ந்த மலைப் பகுதிகள் நிறைந்தவை. இந்தப் பகுதிகளை பசுமை சூழல் பாதுகாப்புப் பகுதிகளாக்க வேண்டி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இதற்கான திட்ட வடிவமைப்பு, உலக சுற்றுசூழல் அமைப்பினாலும், ஐ.நா மேம்பாட்டு திட்ட அமைப்பினாலும் தயாரிக்கப்பட்டு கேரள அரசிடம், அவர்களின்

ரெயில்வே முறைகேடு வழக்கில் பன்சால் சாட்சியாக சேர்ப்பு

Posted: 04 Jul 2013 06:25 AM PDT

ரெயில்வே வாரியத்தில் பதவி உயர்வு பெற்றுத் தருவதற்காக ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய் சிங்லா கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்சம் கொடுத்த ரெயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் சர்ச்சையில் சிக்கிய பன்சால் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மும்பையில் கோடி கணக்கில் பணம் பறிமுதல்: வைரம் கொண்டு செல்வோர் வருத்தம்

Posted: 04 Jul 2013 05:20 AM PDT

கடந்த ஒன்றாம் தேதி மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், கோடி கணக்கான ரூபாய் நோட்டுகளும், ஏராளமான தங்க, வைர நகைகளும் 4 லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவை தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தில் வைர வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளின் பணமாகவும் இருக்கலாம் என்றும்

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஷிண்டே

Posted: 04 Jul 2013 05:03 AM PDT

குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு, கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போலியான என்கவுண்டர் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. தனது முதல் குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது.

மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு: 200 சரக்கு வாகனங்கள் சிக்கித் தவிப்பு

Posted: 04 Jul 2013 04:25 AM PDT

மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தலைநகர் இம்பாலையும், சில்சார் நகரையும் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் அந்த சாலையைக் கடக்க முடியாமல் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றன.

உணவு பாதுகாப்பு அவசர சட்டம் காங்கிரஸ் அரசின் அரசியல் சூழ்ச்சியே: ராஜ்நாத் சிங்

Posted: 04 Jul 2013 03:14 AM PDT

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை கிலோ ரூ.1 முதல் ரூ.3 விலையில் பெறுவதற்கான இந்த மசோதா இன்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தயாளுஅம்மாள் மனுவை விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு: சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தரவு

Posted: 04 Jul 2013 01:07 AM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சைனி கடந்த மே மாதம் 31-ந்தேதி தள்ளுபடி செய்தார். மேலும் ஜூலை 8-ந்தேதி தயாளூ அம்மாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சி.பி.ஐ. கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தயாளுஅம்மாள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நேற்று நீதிபதி வீணா

பார்வையற்றவர்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி: ஆந்திராவில் உருவாகிறது

Posted: 04 Jul 2013 12:42 AM PDT

ஹைதராபாத்தில் வாழும் கண்மருத்துவரான சாய் பாபா கோட், தேவனார் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை சார்பாக பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்றை பெரிய அளவில் நடத்தி வருகின்றார். இவர்களின் பள்ளியில் படித்த மாணவர்களில் எட்டு பேர் சாதாரண முறையில் பயிற்றுவிக்கும் பொறியியல் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதிலும் ஒருவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் இத்தகைய மாணவர்களுக்கு உதவும்படியாக ஒரு பொறியியல் கல்லூரியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் கோடாவுக்குத் தோன்றியது.

திருப்பதி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்: 45 பேர் கைது

Posted: 04 Jul 2013 12:41 AM PDT

திருப்பதி அடுத்த சந்திரகிரி காட்டில் சந்தன கட்டைகளை வெட்டி கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுககு தகவல் கிடைத்தது. இதையொட்டி வனதுறை அதிகாரிகள் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™