Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காசு,பணம்,துட்டு......!!!!

Posted: 23 Jul 2013 12:25 PM PDT

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் போது, பிணமாக போகும் மனிதன் பணத்திற்கு பறப்பதில் அதிசயமில்லை..!!! காந்தி சிரிக்கும் காகிதத்திற்கு கிடைக்கும் மரியாதை, காந்திக்கு கூட கிடைக்காது, இதில் பணமில்லா வெறும் மனிதனுக்கு எங்கே கிடைக்க போகிறது..?? கிழிந்த பணத்தை கூட ஒட்டி மடித்து காயவைத்து பணம் பண்ண தெரிந்த மனிதனுக்கு மானம் கிழிந்து தொங்கினால் கூட கண்களுக்கு தெரியாது..!! பணத்திற்கு பேயாய் அலைந்து மனித குணம் தொலைத்து இரக்கமில்லாத உடலாய் வீதியில் திரியும் இவர்களுக்கு ...

உறுப்பினர் அறிமுகம்.......(Mano Red)

Posted: 23 Jul 2013 12:19 PM PDT

நான் இத்தளத்தில் புதிதாக இணைந்து கவிதைகள் எழுத போகிறேன்....
என்னுடைய சொந்த கவிதைகள் மட்டுமே......
எனக்கு வழி காட்டுங்கள்..

சோதனைக்குழாய் குழந்தை பற்றி.. ஆன்மிகமும் அறிவியலும்!

Posted: 23 Jul 2013 12:15 PM PDT

சோதனைக்குழாய் குழந்தை இன்றைய அறிவியல் தான், சோதனைக்குழாய் பிறக்க காரணமாக இருந்ததாக பெருமையடித்துக் கொள்பவர்கள், அந்தப் பெருமையை நம் முன்னோருக்கு அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் காந்தாரி என்ற பாத்திரம் வருகிறது. இவள் திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி. கணவனுக்கு கண்தெரியவில்லை என்பதற்காக, தன் கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்வின் இறுதிநாள் வரை அவிழ்க்காத மாதரசி. இவள் தனது கர்ப்பத்தை 108 பானைகளில் போட்டு மூடி வைத்தாள். அவற்றில் பல மூலிகைகள் இருந்தன. அந்த மூலிகைகளைக் ...

பூவனின் புலம்பல்....

Posted: 23 Jul 2013 12:12 PM PDT

பூவனின் புலம்பல்.... நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன். உனை கண்டபொழுது எனக்கு: பாண்ட்ஸ் தரா மணம் டைட் தரா வெண்மை ஹமாம் தரா புத்துணர்சி கோல்கேட் தரா வெண்பற்கள் மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி... எனை காணாது நீ போனவுடன்: ஹிட் அடித்த கரப்பானானேன் வேனிஷ் தாக்கிய ...

என் பெயர் சிவப்பு.....!!

Posted: 23 Jul 2013 11:25 AM PDT

ஏய் சிவப்பே உன்னுள் இருப்பது ஒரு நிறமென்றாலும், சொல்லும் அர்த்தங்கள் ஓராயிரம்..!! எத்தனை நிறங்கள் கண்ணில் தெரிந்தாலும் சட்டென முதலில் ஒட்டிக்கொண்டு கொஞ்சம் காதலும்,கோவமும் ஒருசேர கலந்து தரும் இச்சிவப்பின் பெயர் சிவப்பு நிறம்..!! தலைவன் கண்கள் சிவக்க ரத்தம் சூடேறி அனல் வார்த்தைகளை கக்கினால் அமைதியென இருப்பவனுக்கும் ரத்தம் கொதித்து உணர்ச்சி பிறக்கும்..!! இச்சிவப்பின் பெயர் புரட்சி...!! உயிரின் நாடித்துடிப்பை முடுக்கிவிட்டு கால் முதல் தலை வரை கிடுகிடுக்க செய்து ...

இந்தியா– ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Posted: 23 Jul 2013 11:21 AM PDT

ஹராரே, ஜூலை. 23– வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்று உள்ளது. இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்த 3 நாடுகள் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் கேப்டன் டோனிக்கு ஓய்வு ...

மற்றவருக்கு சிறிதும் தீங்கு இல்லாததாக சொல்வது வாய்மை

Posted: 23 Jul 2013 10:44 AM PDT

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.    குறள் # 291 வாய்மை என்பது என்னவென்றால் மற்றவருக்கு சிறிதும் தீங்கு இல்லாததாக சொல்வது.                பாமரன் பொருள் பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.     குறள் # 292 பொய்யும் வாய்மையின் இடத்தைப் பெறும் குற்றமற்ற நன்மையை விளைவிக்கும் என்றால்,           பாமரன் பொருள் தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.    குறள் # 293. தான்அறிந்த ஒன்றைப்பற்றி பொய்சொல்லக்கூடாது சொன்னால் தன்மனமே ...

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Posted: 23 Jul 2013 09:33 AM PDT

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  .... இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ...... முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,, நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் .. நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் நீங்கள் ஈகரையில்  சுகமே நான் அக்கரையில் சுகமா நீங்கள் ஈகரையில்  சுகமே நான் அக்கரையில் சுகமா நலம் நலம் அறிய ஆவல் உங்கள் நலம் நலம் அறிய ஆவல் தீண்ட வரும் காற்றினையே ...

திருப்பரங்குன்றம் - மதுமிதா

Posted: 23 Jul 2013 09:33 AM PDT

வணக்கம் உறவுகளே, மற்றொரு தலத்தை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..... ஆம் இப்போது நான் கூற போவது மதுரையின் மற்றொரு அடையாளமான திருப்பரங்குன்றம்...... வசந்த் தொலைக்காடசியில் மண் பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர். சாந்தலிங்கம் கூறிய தகவல்களே...... திருப்பரங்குன்றம் என்பது மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பது அனைவரும் அறிந்ததே.... இது முருகனின் 6 படை வீடுகளில் இதுவே முதல் தளம் ஆகும்.... இங்கு தான் முருகபெருமாள் தெய்வசேனாவை திருமணம் முடித்தது..... இது ...

நடிகை மஞ்சுளா காலமானார் :(

Posted: 23 Jul 2013 09:27 AM PDT

பலம்பெரும் நடிகை மஞ்சுளா காலாமானதாக ஒரு செய்தி வந்த்து, அது உண்மையா? ஒரு காலத்தில் பலரது கனவுக்கன்னியாக பவனி வந்தவர் இந்த அழகு தேவதை.  யாராவது முழுமையான செய்தியை இங்கு தர வேண்டுகிறேன்.

வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா

Posted: 23 Jul 2013 08:09 AM PDT

தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Posted: 23 Jul 2013 08:03 AM PDT

'அன்ட்பிட்டா அவிஸ் கெய்ன்ஸ் ரிட்க்லே' என்ற பறவை நாய் போல குரைக்குமாம்! லைப்ரரியில் இருந்து அதிகம் திருடப்பட்ட புத்தகம் என்ற சாதனைக்குரியது கின்னஸ் புத்தகம்! 7வருசத்துக்கு மேல் உங்களோட நட்பா இருப்பவர்கள நினைச்சி பாருங்க(சிலர் தா இருப்பாங்க)சைகலாஜிகலி இவங்க தாஉங்க வாழ்நாள் முழுக்க வரக்கூடிய நட்பு நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில புது கண்ணு உருவாகிடும்! முருக வழிபாடு கிமுல துவக்கம் விநாயகர் வழிபாடு தோன்றியது கிபி பிறகெப்டி முருகனுக்கு விநாயகர் அண்ணனாவார்? உங்களுடைய நோய் ...

BMW - மதுமிதா

Posted: 23 Jul 2013 07:54 AM PDT

the BMW Pininfarina Gran Lusso Coupé

பால்நிலா

Posted: 23 Jul 2013 06:35 AM PDT

ரமணிச்சந்திரனின் 'பால்நிலா' நாவல் கிடைக்குமா? நண்பர்களே.....

ஏழு கடல்/மலை தாண்டி ஒரு கிளி

Posted: 23 Jul 2013 06:33 AM PDT

ஏழு கடல்/மலை தாண்டி ஒரு கிளிக்குள் ஒரு துறவியின் உயிர் உள்ளது என்ற கதை பல இடங்களில் கேள்வி பட்டு உள்ளேன் அந்த கதை பற்றி நண்பர்களே எனக்கு கூற முடியுமா?

மீனாக்ஷி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Posted: 23 Jul 2013 05:55 AM PDT

இத்திரியில் நான் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தகவல்களும் என்னுடைய கல்லூரியில் நான் பண்ணின ப்ராஜக்ட் -ளில் இருந்து எடுத்தது மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம் 1216 – 38 -> ராஜ கோபுரம் 1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம் 1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம் 1372 -> சுவாமி சந்நிதி கோபுரம் 1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம் 1452 -> ஆறு கால் மண்டபம் 1526 -> 100 கால் மண்டபம் 1559 -> சௌத் ...

என்னுள் நீ

Posted: 23 Jul 2013 05:34 AM PDT

பெண்ணே! நூலில் பூவை  கோர்த்தாய் -நீ இதயத்தில் நினைவுகளை கோர்த்தேன் -நான்  பூ வாடியது நூலில் -உன் நினைவுகள் வாட்டியது  என் இதயத்தை     

நினைவெல்லாம் நீ தானே...!!!

Posted: 23 Jul 2013 05:12 AM PDT

எங்கே தான் போனாயோ சொல்லாமலே, நீயின்றி நானும் இங்கே இல்லாமலே, என்ன தான் செய்வதோ புரியவில்லை, ஏனோ தவிக்கிறேன் புரியாமல் இருக்கிறேன்..!!! முன்னும் பின்னும் உன்னை எண்ணி நடந்தேன், கால்கள் பின்னிக்கொண்டு விழுந்தேன், கண் இருந்தும் இல்லை உணர்ந்தேன், இது புதிதாய் வந்த நோயா..?? இல்லை என்னை பிடித்த பேயா..?? யாரோ எவரோ உன்னை பற்றி சொல்ல, என்னுள் காதல் பற்றி கொள்ள, உயிர் இருந்தும் எங்கோ செல்ல, நான் உன்னுள் வந்தேன் மெல்ல, இது தானே நடந்த மாற்றம்..!!! உன் நினைவலையில் நான் எனை ...

என்ன பொண்ணுடா இவள்....!!!!

Posted: 23 Jul 2013 05:12 AM PDT

உன்னை பார்த்த நொடியில் என்னுள் கொதிக்கும் வினா, நானிருப்பது பூமியிலா இல்லை பூக்களின் தெருவிலா..?? சாகடிக்கும் உன்னழகில், சாக கிடக்கும் என் நிழலும் சாகசம் செய்ய துடிக்கும் சாதனை ஒன்றை நடத்தும்...!! கிறங்க வைக்கும் உன் பேச்சு, கிட்டத்தட்ட என்னையும் கிறுக்கு பிடிக்க வைத்து கிறுகிறுக்க செய்கிறது..!! என்னென்ன வித்தைகள் கற்றுக்கொண்டு வந்தாயோ..?? என் திசைகள் எப்போதும் உன் பக்கமே திரும்புகிறது...!! இருந்தாலும் இவ்வளவு அழகா..!! கவிஞனின் வர்ணிப்பில் சிக்காத வரிகள் ...

இதுபோல் காதலி கிடைக்குமா...????

Posted: 23 Jul 2013 05:10 AM PDT

காதல் கொஞ்சம் வேண்டும், சிறு கண்ணீர் எனக்காக வேண்டும், என்னை எப்போதும் நினைத்து உன் நிமிடம் கழிக்க வேண்டும், உயிர் என்னை விட்டு போனாலும் என் நினைவில் நீ வாழ வேண்டும்..!! யாரும் என்னை நினைக்காத நேரம், உன் நினைவால் அந்நேரம் நிரப்பி என்னை ஆட்கொள்ளவேண்டும்..!! பூங்காற்றும் என்னை தேடி உன் அன்பை சொல்ல வேண்டும்..!! பனி படரும் காலையிலே தினம் புதிதாய் என்னை எழுப்பி என் நாட்களை நகர்த்த வேண்டும்..!! ஒருநொடியில் உன் சமையல் சுவையில் உலகை இழுத்து வந்து என் வீட்டை நிரப்ப ...

யாரடி நீ மோகினி...!!!

Posted: 23 Jul 2013 05:02 AM PDT

கனவுகள் அவளது ஊரானால் இரவுகள் எனது முகவரியாகும், மௌனம் அவளது மொழியானால் அமைதி எனது குரலாகும், புன்னகை அவளது சிறப்பானால் ரசிப்பது எனது தொழிலாகும்..!! அவளிடம் என்னை இழந்துவிட்டேன் இருப்பதையும் இழக்க துணிந்து விட்டேன் இறுதியில் இருப்பது எதுவோ தெரியாது...?? சண்டையென எதுவும் வந்தால் அமைதியிலே என்னை கொள்வாள், நான் பேச்சை இழந்து நிற்பேன்..!! கேட்டவுடன் மறுக்காமல் சின்ன காதலினை தந்திடுவாள் அவள் முன்னே காதல் தோற்கும்..!! கோவத்தில் என்னை அவள் அடித்தால் தலை குனிந்து நான் ...

மாசில்லா உண்மைக் காதலே...!!!!

Posted: 23 Jul 2013 05:01 AM PDT

மெய்சிலிர்க்க செய்யும் உந்தன் மெல்லிய கரம் தொட்டு எந்நெஞ்சில் புகுத்திய உன் அழுத்தம் இரும்பு திரையிட்ட இதயத்தை திறந்து விட்டது..!! இது ஒன்றும் அதிசயமல்ல, இனிபெரும் நிகழ்வுகள் இதயத்தினுள்ளே நடந்தேறினால் அது உன்னை சார்ந்தே இருக்கும்..!! எப்படி என்னை சேர வேண்டுமென சிந்தித்தாய் என நீ தெரிவிக்க வேண்டாம், இப்படியெல்லாம் நான் தோற்று போவேன் என எனக்கு நீ காட்டியதே போதும்..!! அதிகம் பேசாத உன் இதழ்கள் திறந்து ஒற்றை வார்த்தை சொன்னால் போதும், இந்த உலகமென்ன உலகம் வேற்று ...

கவிதையில் யாப்பு

Posted: 23 Jul 2013 04:54 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்....!!!

Posted: 23 Jul 2013 04:50 AM PDT

சில நிமிடம் மனித வாழ்க்கையை திரும்பி பார்த்தால், அவன் எதிர்பார்த்து ஏமாந்ததை விட அதுவாக கிடைத்தவையே அதிகம்..!! மனிதன் புதிதாய் ஒன்றை பார்ப்பதற்கு முன்பே கற்பனைகள் செய்து விடுவான்..!! நேரில் அதை பார்க்கும் போது அதுபோல் இல்லையெனில் உடனே கற்பனையில் சில பிழை திருத்தம் செய்து விடுவான்..!! மனிதன் நினைத்தவை எல்லாம் நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பான்..!! எப்படியும் நடக்காதென தெரிந்தே தனக்கு தானே அறிவுரை கூறிகொள்வான்..!! மனிதன் தன்னை எப்போதும் இந்த உலகத்திற்கு அறிவாளியாக ...

\~\~\ பாட்டு பாடுங்க...வார்த்தையில விளையாடுங்க..\~\~\

Posted: 23 Jul 2013 04:47 AM PDT

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்... இந்த விளையாட்டும் பாடல் விளையாட்டு தான்... ஆனால் எழுத்தில் தேர்வு செய்து விளையாடுவது போல பாடலில் உள்ள வார்த்தைகளை தேர்வு செய்யுங்கள்...பின் வருபவர் அந்த வார்த்தையை முதல் வார்த்தையாகக் பாடலை பதிவு செய்து கொண்டு விளையாடுவர்.சரியா... நல்வாழ்த்துகள்... ****************************************************************************************************************************************************** நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் ...

வீரமங்கை வேலு நாச்சியார்

Posted: 23 Jul 2013 04:47 AM PDT

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம். 'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்ல த்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் ...

தரை மேல் பிறக்க வைத்தான்...!!!

Posted: 23 Jul 2013 04:46 AM PDT

எங்கேயோ வேடிக்கை பார்க்கிறான், நம்மை பூமிக்கு அனுப்பி வைத்த இறைவன்..!!! நம்மை பார்த்தால் அவனுக்கு எப்படி தெரிகிறதோ...??? தலையாட்டும் பொம்மையா, இல்லை, சொல்வதெல்லாம் செய்யும் எந்திரமா..?? படைத்தது அவன் தான் என எல்லோர் நெஞ்சிலும் புகுந்து நம்ப வைத்து விட்டான்..!! அது போகட்டும், எதற்காக படைக்கிறான் என்று இதுவரை யாரிடமாவது இறைவன் கூறியது உண்டா..?? அவர் விருப்பத்தில் நம்மை படைப்பாராம், வாழ்க்கையையும் வாடகைக்கு கொடுப்பாராம், இன்பம் வந்தால் துன்பம் வரும், நல்லது ...

புதிய கடவுள் செய்வோம்..!!!

Posted: 23 Jul 2013 04:43 AM PDT

கடவுள் என்பவன் கல்லுக்குள்ளே ஒளிந்திருக்கும் வெறும் காட்சி பொருள் என்றே இந்த மானுடம் எண்ணுகிறது..!!! தவறு செய்தால் மன்னிப்பு கேட்கவும், குற்றம் புரிந்தால் கண்ணை குத்தவும், குறைகளை நிறைவேற்றவும் மட்டுமே இங்கே கடவுள் கடவுளாக காட்சி படுத்தப்படுகிறான்..!! மனிதன் சாகும் வரை கடவுளிடம் வரங்கள் கேட்கிறான், இந்த மனித பிறவியே கடவுள் கொடுத்த வரமென அவன் நம்ப மறுக்கிறான்..!! துன்பத்தில் மட்டும் கடவுளை தேடி குறைகள் சொல்ல தெரிந்தவனுக்கு, இன்பத்தில் கடவுளை நினைக்க விடாமல் ...

என்னதான் வேண்டுமடி உனக்கு...???

Posted: 23 Jul 2013 04:36 AM PDT

திருப்பி திருப்பி கேட்டால் தர மறுத்து விடுவேன், உன் கனவில் நானோ வர மறுத்து விடுவேன்..!! யாரோ போல என்னை கொல்லாதே, என்னை விட்டு எங்கும் செல்லாதே..!! இருப்பதுவோ குறுகிய நெஞ்சம், நீயும் கேட்கிறாய் அதில் கொஞ்சம், காதல் செய்ய என் இதயம் கெஞ்சும், உண்மை காதல் இவ்வுலகை மிஞ்சும்...!!! கண்கள் கலங்கி நீயும் பேச, இதய ஓசை இரவை எழுப்ப, உறங்கி போன நிலவும் கண்ணீர் சிந்துகிறதே...!! கையை பிடித்து இறுக்கி அணைக்க, ரத்த ஓட்டம் இன்னும் தெறிக்க, தொலைந்து போன காதல் எனக்கு மறுபடி ...

ரசித்த கவிதைகள்

Posted: 23 Jul 2013 04:33 AM PDT

சிறகுகள் இல்லை எனக்கு  உன்னை தேடி வர-ஆனால்  இதயம் இருக்கிறது என்றும்  உனாக்காகதுடிக்க         

ரசித்த கவிதைகள்

Posted: 23 Jul 2013 04:33 AM PDT

இதயம் கூட இடைவெளி  விட்டுத்தான்  துடிக்கும்-அந்த இடைவெளி கூட  உன்னைபற்றிதான் நினைக்கும்       

என்னவள்

Posted: 23 Jul 2013 04:26 AM PDT

கிடைக்காத ஒன்றுக்கு  ஆசைபடும்போது- நீ நிலவை கரங்களில்  கேட்கும் குழந்தையாகிறாய்  உன்னை தேற்ற வழி இல்லாமல் -நான்  விழித்துக்கொண்டிருக்கிறேன்      

என்னைப்பற்றி நானே.....!!!!

Posted: 23 Jul 2013 04:24 AM PDT

இது தான் நான் என்று சொல்ல முடியவில்லை, இப்படி தான் நான் எனவும் விளக்க முடியவில்லை..!! என்னை நானே முதுகில் தட்டி கொடுக்கவும், முகத்தில் எச்சில் துப்பவும் செய்திருக்கிறேன்..!! கண்ணாடி பார்த்து கதறி அழுதிருக்கும் நானே, உலகிற்கு கல் நெஞ்சம் கொண்டவனாய் தெரிந்திருக்கிறேன்...!!! மகிழ்ச்சியாகவே இருப்பது போல், நடிக்க கற்று கொண்டதால் என்னவோ, என் சோகம் கூட எப்போதும் பொய்யாகி விடுகிறது..!! எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆசை வந்த பின்னரே, எதெயெல்லாம் இழந்தேன் என தெரிந்து ...

நினைவுகள்

Posted: 23 Jul 2013 04:22 AM PDT

என் கல்லறையிலும் 
எழுதிவையுங்கள் -நாம் 
நீங்காத நினைவுகளுடன் 
வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

காதல்

Posted: 23 Jul 2013 04:19 AM PDT

நீ இல்லாத  சில மணித்துளிகள் கூட  பல நாட்களாய் தெரிகிறதே  இதுதான்  காதலோ......      

தளபதி- (நண்பனுக்கு நண்பன்)...!!

Posted: 23 Jul 2013 04:16 AM PDT

நண்பா உயிர் நண்பா கனவில் தினம் வரும் நண்பா..!! என்னுடன் சிரித்தாய் அழுதாய் என்றால் ஏன் என்னை விட்டு போனாய் என் நண்பா..!! முதலில் பார்த்த போது யாரோ போல என்னை நினைத்து விட்டாய், பின்னாளில் பழகி பார்த்து உன்னுடன் என்னை சேர்த்து விட்டாய்...!! எங்கேயும் எப்போதும் என்னுடனே இருந்தாய்..!! வீணாக சண்டை வந்தாலும் என் அருகிலே நின்றாய்..!! ஊர் சுற்றும் நேரத்தில் தானாக கைகோர்த்து வந்தாய்..!! அடித்தாலும் பிடித்தாலும் கட்டியணைக்கவே செய்தாய்..!! என் சோகம் என் பாசம் எல்லாமே ...

ஆதலால் காதல் செய்வேன்...!!!!

Posted: 23 Jul 2013 04:14 AM PDT

முதல் பார்வையிலே உன்னை செயலிழக்க செய்வேன், துடிக்கும் என் இதயம் வைத்து உன் இதயம் திருடுவேன்..!!! வண்ணம் வண்ணமாக வானம் பறக்கிறதே..?? உன்னை நினைத்து கவிதை எழுத அழைக்கிறதே..!! உன்னை வைத்து நான் சொல்லும் பொய்கள் கூட அழகாகிறதே, இதனால் சில உண்மைகள் கூட சண்டைக்கு வருகிறதே..!! உன்னை பற்றி கேட்காமல் என்னை பற்றி சொல்வேனே.!! நீ தவறுகள் செய்தால் உடனே மறப்பேனே...!! உன் சம்மதம் எனக்கு தேவையில்லை, என் காதல் புரிந்தால் அது போதுமே...!! உன் புரியாத வெக்கம் அது ...

திருட்டு நிலாவும்,திருந்தாத சூரியனும்...!!!!

Posted: 23 Jul 2013 04:12 AM PDT

உனக்காக உயிர் நோக கடலோரம் நான் நின்ற நேரம், நிலவொன்று நிஜமாகி உன்னை தேடி வழி கேட்க, பொய் சொல்ல தெரியாமல் உன் முகவரி தந்து விட பொல்லாத அந்த நிலவோ உன்னழகு திருடி போகுமென கனவில் கூட நான் நினைக்கவில்லை..!! கேட்டவுடன் உன் அழகை நிலவுக்கு தருவாய் என எனக்கு தெரிந்திருந்தால், நிலவை மிரட்டி எனக்காக இன்னும் ஏழெட்டு நிலவுகள் படைத்திருப்பேன்..!!! சதிகார அந்நிலவு இப்படி செய்யுமென நீயும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்..!! ஆம் அந்நிலவு சூரியனிடம் உன்னை பற்றி சொல்ல சூரியனும் ...

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்...!!!

Posted: 23 Jul 2013 04:11 AM PDT

அழகி உன்னை பார்த்து ஈர்க்கப்பட்டதால் என்னவோ வேறு பெண்களை பார்க்க துணிவின்றி கண்களை மூடி நடக்கிறேன்..!!! நிலவில் உன் அழகு பிரதிபலிப்பதாய் எண்ணி தினம் இரவில் தூக்கமின்றி நிலவை நோக்கி நடந்து நடந்தே என்னழகு கூடி விட்டது..!! யாரோ சொன்னார்கள் நீ உண்மை மட்டுமே பேசுவாய் என்று..!! அவர்களுக்கு எப்படி தெரியும் நீ சொல்லும் பொய்கள் எனக்கு மட்டுமே கேட்கிறதே...!! கண்மூடித்தனமாய் காதல் கொண்டால் மூளையில் விளக்கெரியும் என எனக்கு தெரியாது..!! கண்ணாடி பார்த்து என்னுடன் நானே ...

மனிதக் காட்சி சாலை மனிதர்கள்...!!!

Posted: 23 Jul 2013 04:10 AM PDT

அவள் போகாத கோவிலும் இல்லை, சுற்றாத மரமும் இல்லை, இருக்காத விரதமும் இல்லை, இப்படி தன்னை வருத்தி அழித்து தனக்கொரு மகன் பிறக்க மரணம் வரை சென்று மீண்ட தாய்க்கு அன்பு மகனின் பரிசு முதியோர் இல்லம் சேர்ப்பு..!! முதுமையில் அவள் உன்னுடன் இருப்பதை அசிங்கமாய் பார்க்கிறாயே..!! உன் எச்சில் ஊறிய சோறும், அவள் மேல் சிதறிய சிறுநீர் வாசனையும், என்றாவது அவளுக்கு அசிங்கமாய் தோன்றி இருக்குமா...??? எதனை வைத்து அவளை பாரமென நீ எண்ணி விட்டாய்..!! காற்று படாமல் உன்னை பொத்தி பொத்தி ...

அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்.....!!!

Posted: 23 Jul 2013 04:10 AM PDT

எவன் என்ன சொன்னால் என்ன, உன்னை எட்டி உதைத்தால் என்ன, உனக்குள் திறமைகள் இருக்கு அது வெளிவர உன்னை திருத்து..!! வானம் கூட இறகு இன்றி பூமி சுற்றி வருகிறதே, உன் கற்பனை என்னும் சிறகை நீட்டி உலகம் சுற்றி பறந்து விடு..!! ஒரு கிளையில் உன் திறமை இருக்க, மறு கிளையில் உன் அறிவிருக்க, ஒரு மரமாய் நீ இருந்தால் யாரும் உன்னை வெட்ட முடியாது..!! நீ நின்று கேட்டால் அறிவுரைகள் சொல்ல ஆயிரம் பேர் வருவான்..!! உனக்கு அறிவு இருக்கும் போது எதற்கு அவர்களின் அரைகுறை அறிவுரைகள்..!! திருந்தாத ...

கொஞ்சம் சிரிக்கலாமே -part6

Posted: 23 Jul 2013 04:07 AM PDT

ஒரு பெரிய மனிதரின் இறுதிச் சடங்கு..., சவப்பெட்டி இறுதி யாத்திரைக்கு தயாராக இருக்க, அங்கு வந்திருந்த மந்திரி தன் நண்பரின் நற்குணங்களைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.. "மறைந்த நண்பர் கற்பில் ராமன்! எவ்வித தீயப் பழக்கங்களும் அண்டாமல் நெருப்பாய் வாழ்ந்தவர்! ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து உயிர் நீத்தவர்... " இறந்தவரின் மனைவி தன் மகனை அழைத்து, " ராஜா, சவப் பெட்டிக்குள்ள இருக்கறது உங்க அப்பாவா இல்ல வேற யாராவதான்னு கொஞ்சம் பாரு..".         


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™