Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேலன்:-அரசாங்கத்தின் முக்கிய இணையதள முகவரிகள்.

Posted: 22 Jul 2013 11:14 AM PDT

கம்யூட்டர் எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசமான பொருளாக மாறியதோ அதுபோல இணையமும் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இன்றைய நவீன உலகி்ல் இணையத்தின் மூலமே அனைத்து அரசாங்க சான்றிதழ்களும்.விண்ணப்ப படிவங்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடிகின்றது. இணையத்தில் உலா வருகையில் கிடைத்த சில பயனுள்ள இணையதள்ங்களின் முகவரிகள் உங்கள் பார்வைக்கு:- சான்றிதழ்கள் பெறுவதற்கு:- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) ...

சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட மனிதன்

Posted: 22 Jul 2013 11:14 AM PDT

ஒரு மனிதன் காட்டு வழியா பயணம் செய்துட்டு இருக்கும்போது ஒரு சிங்கம் அவரை பிடிச்சிட்டுதாம். சிங்கம் நான் பயங்கர பசியா இருக்கேன் அதனால் உன்னை அடிச்சு சாப்பிடபோறேன்னு சொல்லிச்சாம். மனிதன் , "என்னை அடிச்சு சாப்பிடு பரவாயில்லை , நான் ஒரு தமிழறிஞர் அதனால் நான் ஒரு கவிதை சொல்லுறேன் அதை கேட்டுட்டு அப்புறமா நீ என்னை கொன்னுக்க" என்று சொல்ல சிங்கம் சரின்னுச்சாம். நம்ம ஆள் , கவிதை சொல்ல ஆரம்பிச்சார்.... சொன்னாராம் சொன்னாராம் சொல்லிட்டே இருந்தாராம். அப்ப திடீரென்று சிங்கம் மயங்கி விழுந்து செத்து ...

உலகின் தலைசிறந்த டாக்சியாக 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் அம்பாசிடர் கார் தேர்வு

Posted: 22 Jul 2013 11:13 AM PDT

புதிது புதிதாக ஆயிரம் தான் நவீன-சொகுசு கார்கள் நாள்தோறும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பாதுகாப்புக்கும் வசதிக்கும் அம்பாசிடர் காருக்கு இணையாக வேறு எந்த காரும் இருக்க முடியாது என சில மூத்த குடிமக்கள் பெருமையாக குறிப்பிடுவதுண்டு. மூத்தோர் வாக்கு பொய்த்ததில்லை என்ற முதுமொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி 'இந்தியாவின் பெருமிதம்' என்றழைக்கப்படும் ...

போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி!

Posted: 22 Jul 2013 11:10 AM PDT

மாட்ரிட், ஜூலை. 21–  ஸ்பெயின் நாட்டில் முர்சியா என்ற இடத்தில் உள்ளூர் திருவிழாவையொட்டி பீர் குடிக்கும் போட்டி நடந்தது. அதில் அப்பகுதியை சேர்ந்த கிரேசியா (45) என்பவர் கலந்து கொண்டார்.  அப்போது, அவர் 20 நிமிடத்தில் 6 லிட்டர் பீர் குடித்தார். அதைத்தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட்டது.  அதை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய அவரை ஆல்கஹால் விஷம் தாக்கியது. இதனால் வயிற்று வலியால் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 22 Jul 2013 11:06 AM PDT

சூப்பருங்க மகிழ்ச்சி

உறுப்பினர் அறிமுகம்

Posted: 22 Jul 2013 11:00 AM PDT

வியபதி
திருக்குறளுக்கு எளிய வார்த்தைகளில் பொருள் எனது வலைத் தளத்தில் எழுதிவருகிறேன்.

குடி குடியைக் கெடுக்கும்!

Posted: 22 Jul 2013 09:45 AM PDT

1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ...

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Posted: 22 Jul 2013 09:45 AM PDT

நண்பர்களே... ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்... வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி... (ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் ... இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் ...

நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி போட்டோ :)

Posted: 22 Jul 2013 09:27 AM PDT

உறவுகளே, ஒரு சந்தோஷமான செய்தி, நம் உறவுகளில் ஒருவர் செய்த குல்பி இது பார்த்து மகிழுங்கள்   இவ்வளவு அருமையாக செய்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்  

எங்கள் டூர் வீடியோக்கள் :)

Posted: 22 Jul 2013 09:25 AM PDT



என்னுடைய பயணக்கட்டுரை இல் போட்டிருந்தேன் இந்த வீடியோக்களை நிறைய பேர் பார்வை இடணும் என்று மீண்டும் இங்கு போடுகிறேன் புன்னகை

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

Posted: 22 Jul 2013 09:20 AM PDT

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக ...

அறிமுகம்.

Posted: 22 Jul 2013 09:15 AM PDT


எனது பெயர் ஜயந்தன். வணக்கம் நண்பர்களே!!

ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .

Posted: 22 Jul 2013 08:55 AM PDT

நியூயார்க்: சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் ...

ப(பா)டம் - முகநூலில் ரசித்தவை

Posted: 22 Jul 2013 08:46 AM PDT

நக்கல் நாயகம் !

Posted: 22 Jul 2013 08:32 AM PDT

மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்: ஆணையாளர் தகவல்:- மதுரை / 22 July 2013 / மதுரை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பழமையான, பழுதடைந்த கட்டடங்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாகவும், இந்த கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணையாளர் தெரிவித்தார். பார்த்துப்பா! இதை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோயிலை இடிச்சிடப்போறீங்க! இதைப் போல கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு நக்கல் செய்யுங்கள்! 1. பள்ளிகளுக்கு அழுகிய முட்டை விநியோகம் : அதிகாரிகள் ...

நமீதாவுக்கு எனர்ஜி கொடுத்த டைரக்டர்கள்!

Posted: 22 Jul 2013 08:24 AM PDT

சில ஆண்டுகளாக நமீதாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. என்றாலும் அவர் தமிழ் நாட்டை விட்டு வெளியேறவில்லை. அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்தாலும் தமிழ் நாடே என் தலைமையகம் என்று இங்கேயே முகாமிட்டிருந்தார் நமீதா. அதோடு, சினிமாவில் நடிப்பதற்கான தொடர் முயற்சிகளையும் செய்து வந்தார். அப்படி அவர் முயற்சி செய்ததற்கு பலன் கிடைக்கவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இருந்த அவரது காத்திருப்புக்கு பலனாக இப்போது ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ...

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Posted: 22 Jul 2013 08:08 AM PDT

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா நான் : யினியவரே வருத்தமா யினியவரே வருத்தமா பூவன் கவிதை வேணுமா தூங்காதே அதை படித்து நோகாதே அடுக்குமா நிம்மதி கிடைக்குமா? இனியவர் : என்ன சொல்லுவேன் செல்லும் வேலை செய்யல  குவாட்டர் வாங்கினேன் அதுவும் புடிக்கலே நான் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை அவர் கவிதை பார்க்க ஈகரையில் ஆளில்லை இனியவர் : ஏதோ அவர் ...

கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 22 Jul 2013 07:59 AM PDT

கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . பதிப்பு .ஜெயதாரணி அறக்கட்டளை .1784.லட்சுமி G.2 - HIG.பிரதான சாலை ,T.N.H.B.காலனி , வேளச்சேரி .சென்னை .42. விலை ரூபாய் 50. நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .அவர்கள் மறைந்தும் மறையாத துருவ நட்சத்திரங்களான கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாற்றை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரு நூலில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நூலிற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் .விஸ்வநாதன் ...

பிடித்து இருந்தால் நீங்களும் ரசியுங்கள்..! - மதுமிதா

Posted: 22 Jul 2013 06:40 AM PDT

* பெயரில்லாதது இவ்வுலகில் ஏது? பெயரில்லாதது ஒன்று உண்டு எனில் அதற்கும் பெயர் வைப்பார்கள் பெயர் உள்ளவர்கள்...! ஒன்றும் இல்லாத ஒன்றை வெற்றிடம் என்று கூறலாம்.. அவ்வெற்றிடத்தின் உள்ளிலும் உள்ளதல்லவா வெறுமை என்னும் ஒன்று...! * கொலைகள் நிகழ்த்தியவன், நிகழ்த்திய பிறகு அதை ரசிப்பதில்லை. வருந்துகிறான் எப்போதாவது எந்த இடத்திலாவது.. ஒரு குரூரன் கூட...! * மனம் பூட்டிய ஆயிரம் விலங்குகளை உடைத்துக் கொண்டு, லட்சம் சிறகுகளை ஏந்தி மேலே உயர்ந்து, சகதியில் புரண்டு, ஆலய வாசலில் துவட்டி, ஆசை மூட்டை ...

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

Posted: 22 Jul 2013 06:38 AM PDT

சென்ற இதழில் விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள் குறித்த கட்டுரை வெளியிட்டதனைத் தொடர்ந்து, பல வாசகர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த பல வினாக்களை எழுப்பி உள்ளனர். கடிதங்கள், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் வழியாக இவை கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான பதில்கள் இங்கு தரப்படுகின்றன. 1. விண்டோஸ் 8.1 என்பது என்ன? விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 22 Jul 2013 06:25 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

என்னவள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 22 Jul 2013 06:18 AM PDT

என்னவள் ! கவிஞர் இரா .இரவி ! நடந்து வரும் நந்தவனம் ! நடமாடும் நயாகரா ! வலம் வரும் வானவில் ! வஞ்சி வற்றாத ஜீவநதி ! பசிப் போக்கும் அட்சயப்பாத்திரம் ! பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம் ! சிரித்தால் ஜொலிக்கும் நட்சத்திரம் ! சிங்காரி அவள் சித்தன்னவாசல் ! கண்களால் பேசும் சிலை ! கண்டால் பேரின்ப நிலை ! மண்ணில் உள்ள சொர்க்கம் ! மாறாத நிரந்தர மார்கழி ! கர்வம் இல்லாக் கண்ணழகி ! காந்தப் பேச்சுக் குரலழகி ! வாசம் வீ சும் வனப்பழகி ! நேசம் காட்டும் பாச அழகி ! உலக அழகுகள் வியக்கும் ...

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு

Posted: 22 Jul 2013 06:18 AM PDT

"நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்' என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது. உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை. திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளமான, கரோனரி ரத்த நாள முழு அடைப்பு. கரோனரி ஆஞ்சியோகிராமில் அடைப்பு இல்லாதவர், திடீர் மரணமடைகிறார். ஏன்? ரத்த ...

முதல் 1000 கடந்த பார்த்திபன் வாழ்த்தலாம் வாங்க

Posted: 22 Jul 2013 06:17 AM PDT



தொடர்ந்து இணைந்திருந்து பல்லாயிரம் பதிவுகள் இட வாழ்த்துகள் பார்த்திபன்

வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழையமுடியாது..!!

Posted: 22 Jul 2013 05:51 AM PDT

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்டபோது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது . அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. எந்த ஒரு சேட்லைட்டாலும் முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா? அனுகுண்டைச் சுற்றி வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே..! வெங்காயச்சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழையமுடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போக மகரிஷி. கம்ப்யூட்டரில் அதிகமாக வேலைசெய்யும் இளைஞர்களுக்கு, ஆண்மைக்குறைவும், ...

நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

Posted: 22 Jul 2013 05:23 AM PDT

இறைவனின் தொண்டர்களை நாளும், கோளும் என்ன செய்துவிடும்? அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாமோ நாளையும் கோளையும் கண்டு நடுநடுங்குகிறோம். நாளும் நட்சத்திரமும் நம்மைக் கோழைகளாக்க அனுமதிக்கிறோம். நட்சத்திரங்களிடமும், கிரக நிழல்களிடம் பிச்சைக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறோம். ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தால் இது நன்றாக விளங்கும் என்று நினைக்கிறேன். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்களுக்கு, மாதத்திற்கு 28 நாட்கள், இந்த 28 நாட்களில் 14 நாட்கள் நல்ல நாட்கள் இல்லை. இந்தப் பதினான்கு நாட்களிலும் ...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

Posted: 22 Jul 2013 05:20 AM PDT

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! ************************************************** மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் ...

தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம்

Posted: 22 Jul 2013 04:55 AM PDT

பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை ! '' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை.... வேட்டி சட்டை தான் ! இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது. அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது. கதர் வேட்டிதான். வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் ...

அவனுக்கு நான் அழகு

Posted: 22 Jul 2013 03:18 AM PDT

அவனுக்கு நான் அழகு நாவல் online reading வேண்டும் நண்பர்களே உதவுங்கள்....! சோகம்

புத்தகங்கள் தேவை S ராமகிருஷ்ணன்

Posted: 22 Jul 2013 03:02 AM PDT

S  ராமகிருஷ்ணன் புத்தகங்கள் PDF  வடிவில் தாருங்கள்.

கீழே உள்ள புத்தகங்களும் வேண்டும்.

கோபுரத்தாக்குதல் ஆ.சிவசுப்பிரமணியமும்
தெய்வம் என்பதோர் ---தொ.பரமசிவன்

ஐஸ்கிரீம் (வெனிலா)

Posted: 22 Jul 2013 02:35 AM PDT

தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் – 3/4 டின் பால் – 1/2 லிட்டர் பால் க்ரீம் – 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக ...

ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!

Posted: 22 Jul 2013 02:21 AM PDT

ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும். மனிதர்கள் நடந்து வரும்போது மட்டுமல்லாது, கார், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்லும் போது இந்த நவீன தெரு விளக்குகள் தானாகவே எரிந்து வெளிச்சம் கொடுக்கும். வாகனங்கள் கடந்து சென்ற பின்பு, ஒளியின் அளவு குறைந்து தானாகவே அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் ...

வீட்டுக் குறிப்புகள்

Posted: 22 Jul 2013 02:12 AM PDT

கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி நன்றாக துடைத்துவிடவும். இரும்புக் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பர் வாங்கி வந்து இலுப்பக்கட்டி/ தோசைக்கல்லில் அலம்பிவிட்டு இந்தக் காகிதத்தில் ஒரு சிறு துண்டு வெட்டி தேய்த்தால் கறுப்பெல்லாம் மறைந்துவிடும். வருடக்கணக்கில் பிசுக்குப் பிடித்திருந்தால் சில தடவைகள் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும். வீட்டில் வாசற்படி, ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் மண்ணெண்ணெய் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு, ...

தமிழகத்தில் அரசியலாக்கப்பட்ட கல்விமொழிக் கொள்கை

Posted: 22 Jul 2013 02:10 AM PDT

உலகமெங்கும் கல்விமொழிக் கொள்கையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே கல்விமொழிக் கொள்கை அனைத்தும் அரசியலாக்கப்பட்டன. இந்தியை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாநில ஆட்சி கைப்பற்றப்பட்டது. இது ஆங்கிலத்தை ஆதரிக்கும் இயக்கமும் ஆயிற்று. இந்தியை வரவிடாமல் தடுக்கும் கேடயம் என விளக்கப்பட்டது. "தமிழ் வாழ்க' என்ற முழக்கம் வானை முட்டியது. ஆயினும் ஆங்கில மோகம் வளர்க்கப்பட்டதே தவிர, தமிழைப் பாடமொழியாக்க, அதனை நிலைநிறுத்தப் பல வகையிலும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்படவில்லை. இது "வாழ்த்திக்கொண்டே, ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 22 Jul 2013 01:48 AM PDT

நான் ரசித்தவை - மது

Posted: 22 Jul 2013 01:35 AM PDT

புறநானூறு

Posted: 22 Jul 2013 01:16 AM PDT

நண்பர் ( அலுவலகத்தில் என் ஜூனியர் ) ஒருவருடன் ஒரு உரையாடலின் போது – வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் , புது இடம் , புது மனிதர்கள் என்கிற தயக்கம் அவன் பேச்சில் இருந்தது ..உடனே நான் "விடுய்யா …இந்த வயசு ல யாதும் ஊரே யாவரும் கேளிர் .. னு போக வேண்டியது தானே .." என்று கூறி முடித்தேன் … உடனே அவன் "என்னாங்க சினிமா டயலாக் லாம் விடுறீங்க " என்று கூறினான் …. மேற்கொண்டு நான் ஏதும் பேசவில்லை ……… சினிமா டயலாக் என்று சொல்பவனிடம் கணியன் பூங்குன்றனார் என்று கூறியிருந்தால் , பதில் இது யாரு?.. ...

இது உங்கள் இடம்..!

Posted: 22 Jul 2013 12:48 AM PDT

நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ...

ஆண்ட்ராயிடு அலைபேசி மென்பொருட்கள் - தொடர் பதிவு (தினமும்)

Posted: 22 Jul 2013 12:26 AM PDT



235 ஆண்ட்ராயிடு மென்பொருட்கள்



தரவிறக்க

Code:


http://billionuploads.com/ipxwbgkygnyn



இயற்கை அழகு சாதனங்கள்

Posted: 22 Jul 2013 12:19 AM PDT

ப்ளிச்சிங் தேவையானவை பால் - 4 தே.க லெமன் ஜூஸ் - 2 ஒரு சின்ன பௌலில் இரண்டையும் விட்டு நன்றாக கலக்கவும். பாலும் லெமனும் சேரும் போது பால் திரிந்து விடும். அது தான் இதற்கு வேண்டியது. அந்த கலவையை எடுத்து உடல்+முகம் எல்லா இடத்திற்கும் பூசி ஐந்து நிமிடம் கழிந்தபின் கழுவினால் நேச்சுரல் ப்ளிச்சிங் மாய்சரைஸர் தேவையானவை வெண்ணெய் - 25 கிராம் மிளகு - 5 கிராம் சாமி கற்பூரம் - 5 கிராம் சந்தனம் - 5 கிராம் செய்முறை: மிளகுத்தூள், பொடித்த கற்பூரம், சந்தனத்தூள் ...

அழகான பாதத்திற்கு

Posted: 22 Jul 2013 12:16 AM PDT

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™