ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
- முக்கியமாகச் செய்யவேண்டியது முழு உடல் பரிசோதனை
- கவிஞர் வாலி காலமானார்
- நிதி நிர்வாகம்
- எக்ஸெல் உதவி தேவை ?
- எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம்
- 3000 பதிவுகள் கடந்த நம்ம டெக்லஸ் ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க .....
- முதல் 1000 கடந்த பார்த்திபன் வாழ்த்தலாம் வாங்க
- படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
- 500 மதிப்பீடுகள் கடந்த நம்ம மதுமிதா...
- வாலிக்கு ஓர் ஒப்பாரி!!!
- இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை - ஆதிரா
- எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
- சாபுதானா கிச்சடி
- நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை )
- மகனாக வந்தவன்!
- ஆலு ஸ்டஃப்ட் பரோட்டா
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க...!
- அப்பாவின் மனசு!
- ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
- அதே சிரிப்பு!
- அஞ்சலி - ஒரு பக்க கதை
- பதிமூணாம் எண் வீடு!
- பாசம் என்னும் ப்ரணவம்!
- மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- குக்கர் பராமரிப்பு
- கொலவெறியின் கலைவெறி
- இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...
- ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் )
- புருவங்களின் அழகுக்கு...
- ?..
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- நான் காதல் கண்ணுடன் ..
- இன்று - ஜூலை 18: நெல்சன் மண்டேலா பிறந்தநாள்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- மதுவுக்கு ஏன் விலக்கு?
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
| பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!! Posted: 18 Jul 2013 11:27 AM PDT பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!! ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி "லைக்" செய்யும் முறையை அறிமுக படுத்தியுள்ளார். 2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம் பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை! 3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை. 4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும் "poke" (உசுப்பி விடுதல்) ... |
| முக்கியமாகச் செய்யவேண்டியது முழு உடல் பரிசோதனை Posted: 18 Jul 2013 11:24 AM PDT கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்... ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. ... |
| Posted: 18 Jul 2013 11:22 AM PDT ஒரு தளத்தில் கவிஞர் வாலி காலாமானார் என்ற செய்தியைப் படித்தேன், இது உண்மையா? |
| Posted: 18 Jul 2013 11:21 AM PDT இல்லத்தரசிகளை …… உள்துறை அமைச்சர் நிதித்துறை அமைச்சர் என்கிற இரண்டு செல்ல வார்த்தைகளில் குறிப்பிடுவது உண்டு. இவை வெறுமனே அலங்காரத்துக்காக சொல்லப்படுபவை அல்ல. நூற்றுக்கு நூறு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என்பது…………." பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை விரைவில் அலங்கரிக்க காத்திருக்கும் அருந்ததி பட்டாச்சார்யா " மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நலிவுற்றிருந்த இந்தியன் வங்கியை ரஞ்சனா குமார் எனும் பெண் மீண்டும் தலைதூக்க வைத்தபோதே…… பணத்தை நிர்வகிக்கும் திறன் ... |
| Posted: 18 Jul 2013 11:00 AM PDT 6/2/2012 இந்த date formateஐ 6-feb-12 இந்த date formateக்கு எப்படி மாற்றுவது ? fomate cells சென்று மாற்றினால் 6/2/2012 என்பது 2-jun-12 என்று மாறி விடுகிறது .....monthல் மாற்றம் வந்து விடுகிறது (feb>jun) |
| எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள்(1.09GB)- தரைவிறக்கம் Posted: 18 Jul 2013 09:57 AM PDT எழுத்தாளர் சுஜாதாவின் தொகுப்புகள் சுமார் 162 கோப்புகள் Torrent வடிவில் தரைவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த அளவு 1.09GB லிங்க் இதோ http://btdigg.org/search?info_hash=b4da033d7cd5cebec7b522cdb8dc04ce011c4017&q=ilayaraja (குறிப்பு : சில புத்தகங்கள் ஏற்கனவே ஈகரையில் உள்ளது) |
| 3000 பதிவுகள் கடந்த நம்ம டெக்லஸ் ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ..... Posted: 18 Jul 2013 09:01 AM PDT 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள் அண்ணா , மேலும் பல பயனுள்ள பதிவுகளை பதியவும் வாழ்த்துகள் ...... |
| முதல் 1000 கடந்த பார்த்திபன் வாழ்த்தலாம் வாங்க Posted: 18 Jul 2013 08:58 AM PDT தொடர்ந்து இணைந்திருந்து பல்லாயிரம் பதிவுகள் இட வாழ்த்துகள் பார்த்திபன் |
| படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 18 Jul 2013 08:57 AM PDT படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி ! ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை ! ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு ! ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிடடாலும் ! கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி ! திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி! திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி ! மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி! மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி ! சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி ! சொக்க வைக்கும் பாடல்களின் ... |
| 500 மதிப்பீடுகள் கடந்த நம்ம மதுமிதா... Posted: 18 Jul 2013 08:57 AM PDT மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் கடக்க வாழ்த்துகள் மது |
| Posted: 18 Jul 2013 08:37 AM PDT ஒப்புக்குச் சொல்லி அழ உன் பாடல்தான் துணைக்கு வருகிறது பாடல்களுக்கு இறுதி ஒப்பனையா? ஒப்பனை கலைத்தால் நிஜ முகம்தானே உனக்கு மட்டும் ஏன் மரணம்? தாலாட்டுப் பாடும்போதே பாடல் கற்றவன் நீ அன்று மடியில் படுத்தாய் சிரித்தார்கள் மண்ணில் படுக்கிறாய் அழுகிறார்கள் இரங்கல் சொல்லும் போதே உன் பாடல்கள் நெஞ்சில் அழுகிறது காதலர்களுக்கு சுகமும் துக்கமும் தந்தவன் நீ மரணத்த தருவாயில் நீ காதலர்களுக்கு எழுத நினைத்தப் பாடலை இனி யார் எழுதுவார்? கற்ற வலியை பாடலில் பழியாக்கியவன் கண்ணதாசன் பெற்ற இன்பத்தை ... |
| இலங்கை முன்னணி இதழ் ‘கலைக் கேசரியில்’ என் கட்டுரை - ஆதிரா Posted: 18 Jul 2013 08:26 AM PDT |
| Posted: 18 Jul 2013 08:15 AM PDT வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்… ''இவ்வளவு பெரிய அட்டாக்… நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!'' தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக அமைகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு, அதைக் காரணம் என்று குழப்பிக்கொள்வது முட்டாள் தனம் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். காரணம் இருக்கிறது என்று நம்பினால், தப்பித்தது அவர் ... |
| Posted: 18 Jul 2013 08:06 AM PDT தேவையானவை: சாபுதானா (ஜவ்வரிசி)- 2 கப் பச்சைமிளகாய்- 2 வேர்க்கடலை- 1 கப் சீரகம்- 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு-1 எண்ணெய்- 2 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை- சிறிதளவு உப்பு- தேவையான அளவு செய்முறை: ஜவ்வரிசியைக் களைந்து சிறிது தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை இந்த ஜவ்வரிசியை வடிதட்டில் கொட்டி நீரை வடிக்கவும். வேர்க்கடலையில் ஒரு மேசைக்கரண்டி தனியாக எடுத்து வைத்துவிட்டு மீதியை வெறும் வாணலியில் வறுத்து தோல் நீக்கிப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை ... |
| நட்பால் இணைந்த உறவு , (படித்ததில் பிடித்த கதை ) Posted: 18 Jul 2013 08:01 AM PDT . எளிதாய் அமைந்தது அந்த சந்திப்பு. இன்றும் மறக்கமுடியவில்லை!ஒரே பள்ளி, ஒரே காலனி என்பதால் சிரமப்படாமல் நம் நட்பும் கைகூடியது. எண்ணங்களில், ரசனைகளில், விருப்பு வெறுப்புகளில் பலதூர இடைவெளி இருந்தும் இத்தனையாண்டு காலங்கள் கைகோர்த்தே பயணித்தது நம் புரிதலால் மட்டுமே என்ற போதும் பலமுறை அஃது புரியாத புதிர்தான்! உன் வீட்டின் செல்ல மகாராணியாய் நான். என் அப்பா அம்மாவின் செல்ல பிள்ளையாய் நீ என ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் வீட்டில் செய்த விளையாட்டுக்கு அளவெங்கே? உன் அம்மாவின் மடியில் தலைவைத்து ... |
| Posted: 18 Jul 2013 07:51 AM PDT அலுவலகத்திலிருந்து களைத்து வீடு திரும்பினான் விஷ்ணு. ஆவி பறக்கும் காபியுடன் அம்மா ஆஜர். ""ஏம்மா... இப்படி வீட்டு வேலையெல்லாம், நீ மட்டும் தனியா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யறது போதாதுன்னு, நான் எப்ப ஆபீசிலிருந்து வருவேன்னு காத்துக்கிட்டிருந்து காபி போட்டுக் கொண்டு வருவது, கொஞ்சம் கூட நல்லாயில்ல. ஒரு வேலைக்காரியை வெச்சுக்கச் சொன்னா, அதுவும் கேக்கமாட்டேங்கிற.'' வழக்கமான அங்கலாய்ப்புடன் காபியை உறிஞ்சினான் விஷ்ணு. ""அதுக்குத்தான் கூடிய சீக்கிரத்துல, இந்த வீட்டுக்கு ஒரு மருமகளைக் ... |
| Posted: 18 Jul 2013 07:51 AM PDT தேவையானவை: மேல் மாவுக்கு: மைதா- 1 கப் கோதுமை- 1/2 கப் நெய்- 4 தேக்கரண்டி எண்ணெய்- 1 மேசைக்கரண்டி ஸ்டஃபிங் செய்ய: வேக வைத்த உருளைக்கிழங்கு- 3 மிளகாய்தூள், தனியாத்தூள், சீரகம்- 1/2 மேசைக்கரண்டி மஞ்சள்தூள்- சிறிதளவு கரம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி நெய்- 1 மேசைக்கரண்டி கொத்துமல்லித்தழை- 1 கைப்பிடி உப்பு- தேவையான அளவு செய்முறை: மேல்மாவு செய்ய தேவையான பொருள்களை தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஸ்டஃபிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துப் ... |
| இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவரையும் வாழ்த்தலாம் வாங்க...! Posted: 18 Jul 2013 07:46 AM PDT பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்....வித்தியாசன்.... அய்யம்பெருமாள்... அனைவருக்கும் மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஈகரை உறவினர் அனைவருக்கும் ஈகரை சார்ப்பாக வாழ்த்துகள் ...! |
| Posted: 18 Jul 2013 07:39 AM PDT மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் ... |
| ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Posted: 18 Jul 2013 07:31 AM PDT அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே! கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்! |
| Posted: 18 Jul 2013 07:27 AM PDT "வாம்மா அர்ச்சனா... அம்மாவுக்கு எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொல்றாரு' என்று அகிலா மாமி கேட்டபோது, பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை அர்ச்சனாவால். "அப்படியேதான் இருக்காங்க. மூச்சு விடறது மட்டும்தான் இருக்கு. வேறு எந்த அசைவும் இல்லை. நாங்க யார் வரோம், போறோம்னு ஒண்ணும் தெரியாது. டாக்டர்கள் பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. வேற என்ன சொல்றதுன்னு புரியலை மாமி.' மேலே பேச முடியாமல் நெஞ்சை அடைத்தத. "ஓய்வே இல்லாம உழைச்சிருக்கா உங்கம்மா! அதான் கடவுளா பார்த்து கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துருக்கார்னு நெனைச்சுக்கோ. ... |
| Posted: 18 Jul 2013 07:12 AM PDT "வனஜா நேத்து ராத்திரி உன்கிட்ட கொடுத்த முன்னூறு ரூபாயைக் கொடு. இறந்துபோன நம்ம ராமசாமி உடலுக்கு மாலை போடணும்' என்றார் ஆறுமுகம். "எல்லாம் நூறு ரூபாய்க்கு மாலை போதும். மாலையை வாங்கிட்டு தெருமுனைக்கு வந்ததும் மிஸ்டுகால் கொடுங்க... நானும் வர்றேன்..' என்ற மனைவியை மனசுக்குள் கடிந்தவாறே நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு மாலை வாங்கச் சென்றார். மாலை வாங்கிவிட்டு வரும்போது வனஜாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். கையில் இரண்டு பெரிய தூக்கு வாளிகளைச் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தாள் வனஜா. ஆறுமுகம், "என்னது இது?' ... |
| Posted: 18 Jul 2013 07:08 AM PDT பண்டிகைக் கால வியாபாரம் முடிந்ததும், தன் பேன்சி ஸ்டோருக்கு, ஒரு நாள் விடுமுறை விட்ட அசோக், அன்று ஊருக்குப் போய், பெற்றோரைப் பார்த்து வர தீர்மானித்தான். "ஒரு முறை, உங்க ஊரை வந்து பார்க்கணும் அசோக்' என்று சொல்லிக் கொண்டிருந்த கடை ஊழியனும் தோழனுமான சங்கரை,"ஊருக்கு வர்றீயா?' என்று கேட்க, அவனும் சம்மதித்தான். சிட்டியிலிருந்து, நூறு கி.மீ., தொலைவில் உள்ளது ஊர். புது பைக்லேயே சங்கருடன் பயணமானான் அசோக். அசோக்குக்கு, பழகிப்போன வழி சங்கருக்கு புதுமையாக இருந்தது. அவன், வழியெங்கும் வேடிக்கை பார்த்து, அனுபவித்துக் ... |
| Posted: 18 Jul 2013 07:07 AM PDT எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. ஹரி ஏன் இப்படி? புரியவில்லை. உறவுகளெல்லாம் புறப்பட்டு விட்டது அம்மா மட்டும் உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தம்பி தன் மனைவியுடன் கிளம்பியவன் அருகில் வந்தான். "அக்கா கவலைப்படாதே, நாங்கள்லாம் இருக்கோம், உன்னையும், கார்த்தியையும் நல்ல பார்த்துக்குவோம். ஆனா, மாமா உங்களை பார்த்துகிட்டா மாதிரி, எங்க யாராலயும் பார்த்துக்க முடியாதுக்கா' ... |
| மதுரை மாணவர்கள் பலி: முதல்வர் - ஆசிரியர்கள் 3 பேர் கைது Posted: 18 Jul 2013 07:00 AM PDT திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தூத்துக்குடி சுற்றுலா சென்ற மதுரை திருநகர் தனியார் பள்ளி மாணவர் நான்கு பேர் ஜூலை 12 அன்று தெர்மல் நகர் கடற்கரை கடலில் குளிக்கும் போது, ராட்சத அலையில் சிக்கி இறந்தனர். இதனால் இறந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருநகர் சி.எஸ். ராமாச்சசாரி மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் 113 பேர் ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றனர். ... |
| Posted: 18 Jul 2013 06:42 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 18 Jul 2013 06:37 AM PDT குக்கரின் அடிப்பகுதியில் படியும் கரியைப் போக்க அதைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்துவிடும். குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் ஃப்ரிஜ்ஜில் ஒரு நாள் வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும். குக்கரின் அடியில் பழுப்பு நிறம் சேர்ந்து விட்டால் அதை எலுமிச்சைத் தோலால் தேய்க்கலாம். மாத்திரைகள் மடித்து வரும் அலுமினியம் பேப்பரால் தேய்த்தாலும் குக்கர் பளிச்சிடும். |
| Posted: 18 Jul 2013 05:47 AM PDT கொலவெறியோடு திரிபவனை கொலவெறியோடு போட்டுத் தள்ளனும் கலைவெறியோடு திரிபவனை கலைவெறியோடு ரசித்துத் தள்ளனும் கொலவெறி கொண்டவன் கலைவெறியோடு திரிந்தால் என்ன செய்யணும்? கொலவெறி அகற்றி கலைவெறி மட்டும் இருக்கக் கற்று கொடுக்கணும் கற்றவை கற்றபின் படைப்பதை ரசிக்கக் கற்று கொள்ள / கொல்ல வேண்டும் கொல்பவனை கொல்வதில் தவறில்லையே? என்னங்க நா சொல்றது சரிதானுங்களே? |
| இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்... Posted: 18 Jul 2013 05:16 AM PDT இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன். இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன். கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது. இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன். கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன். தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன். கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன. மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது. மேல் மூச்சு ... |
| ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்(கட்டிபுடி வய்த்தியம் ) Posted: 18 Jul 2013 04:50 AM PDT ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியா கத் தெரிவிக்கின்றனர். அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசை யோடு கட்டி அனைப்பதுதான். காதல ர்களோ, ... |
| Posted: 18 Jul 2013 04:35 AM PDT முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், ... |
| Posted: 18 Jul 2013 04:33 AM PDT இப்படி என் மீது உள்ள காதலை எல்லாம் இப்படி கவிதைகளாய் எழுதி திர்த்துகொண்டிருக்கிராயே, ஒருவேளை முற்றிலும் திர்ந்துவிட்டால் என்ன செய்வாய் என்றாய்?? ஒருவேளை நீ சொல்வது போல் உன் மீதான என் காதல் முற்றிலும் திர்ந்துவிட்டால் , கண்டிப்பாய், என் உதிரம் உறைந்து போயிருக்கும், என் இமைகள் வேலை நிறுத்தம் செய்திருக்கும், என் இருதயம் துடிக்க மறந்திருக்கும் , என் மூளை முடங்கி போயிருக்கும் , என் விழி நிரந்தரமாய் விழித்தே இருக்கும், மொத்தத்தில் " சுருக்கமாய் " சொன்னால் நான் இறந்திருப்பேன் " ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 18 Jul 2013 03:56 AM PDT |
| Posted: 18 Jul 2013 03:48 AM PDT நீ என்னையும் ... நான் உன்னையும் ... கண்னால் கைது .... செய்துவிட்டோம் ...!!! மரணம் மட்டும்தான் ... வாழ்க்கையில் .. இறைவன் தந்த ... பெரும் பரிசு ....!!! நான் காதல் கண்ணுடன் .. அலைகிறேன் நீயோ ... நித்திரையாக இருக்கிறாய் ...!!! கஸல் 231 |
| இன்று - ஜூலை 18: நெல்சன் மண்டேலா பிறந்தநாள் Posted: 18 Jul 2013 03:47 AM PDT இன்று - ஜூலை 18: நெல்சன் மண்டேலா பிறந்தநாள் அந்தச் சிறுவனை எல்லாரும் 'ரோலிலாலா' என்று அழைத்தார்கள். கறுப்பின மொழியான க்சோஸா மொழியில் ரோலிலாலா என்றால், நிறையத் தொல்லைகொடுப்பவன் என்று அர்த்தம். ஆப்பிரிக்க மோராரோ இனக் குழுவின் கறுப்பின மண்டேலா பிரிவில் பிறந்த அவன், நான்கு வயதில் ஆடு, மாடுகள் மேய்த்தபடி வெள்ளை எஜமானர்களுக்கு பல தொல்லைகளைக்கொடுத்தான். வெள்ளையர் பெயர்களைத் தெரிந்துகொண்டு, தான் வளர்த்த நாய்களுக்கு அந்தப் பெயர்களைச் சூட்டி, ஊரையே மிரளவைத்தான். அந்தக் காலத்தில் தென் ஆப்பிரிக்க ... |
| Posted: 18 Jul 2013 03:19 AM PDT ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 18 Jul 2013 03:14 AM PDT மக்கள் ஆரோக்கியத்துக்காக குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழ்நாடு தடை செய்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் தமிழக அரசைப் பாராட்டவும் விழையும் அதே வேளையில், "டாஸ்மாக்' விற்பனையின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் 2012-13-ஆம் ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைவதா, இல்லை வருத்தப்படுவதா? ... |
| Posted: 18 Jul 2013 03:10 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |