Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு: டெல்லி போலீஸ் தகவல்

Posted: 16 Jul 2013 11:34 PM PDT

6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இப்போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டில்யா,அங்கீத் சவான் மற்றும் தரகர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.

கேதார்நாத் யாத்திரை செல்ல புதிய பாதை அமைக்கப்படுகிறது: முதல்–மந்திரி விஜய்பகுகுணா

Posted: 16 Jul 2013 11:21 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பேரழிவு ஏற்பட்டது. இதில் கேதார்நாத் கோவிலுடன் யாத்திரீகர்கள் நடைபயணமாக செல்லும் மலை பாதையும் கடுமையாக சேதம் அடைந்தது. கேதார்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் வாகனங்களில் கவுரிகுண்ட் சென்று அங்கிருந்து 14 கி.மீ. தூரம் மலைப்பாதையில் நடைபயணமாக சென்று தான் கேதார்நாத் செல்ல வேண்டும். நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் 14 கி.மீ. தூர மலைப்பாதை முழுவதுமாக அடித்து

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

Posted: 16 Jul 2013 11:19 PM PDT

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். இந்த நாட்களில் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். ஆடி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை திறந்து

காவல்துறை சீர்திருத்த நடவடிக்கை: தமிழ் நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்

Posted: 16 Jul 2013 11:15 PM PDT

காவல்துறை சீர்திருத்த நடவடிக்கை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தவறிய தமிழ் நாடு, உத்தரபிரதேசம், மகாரஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியுள்ளது.

லக்னோ: இப்தார் நோன்பு விருந்தில் பீட்சா, பர்கர் வழங்க ஏற்பாடு

Posted: 16 Jul 2013 11:14 PM PDT

இஸ்லாமியர்களின் ரம்சான் நோன்பு கடந்த புதன்கிழமை தொடங்கியது. நோன்பினை முடித்து அவர்கள் எடுத்துக் கொள்ளும் இப்தார் விருந்தில் பொதுவாக பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, கஞ்சி போன்றவை இடம் பெறும். லக்னோவில் உள்ள ஹுசைனாபாத் தொண்டு நிறுவனம், இந்த முறை நோன்பிருக்கும் மக்களும் பல்வேறு சுவையான உணவு வகைகளை வழங்க தீர்மானித்துள்ளது.

பீகாரில் 20 குழந்தைகள் பலி: பொதுமக்கள் போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு

Posted: 16 Jul 2013 11:06 PM PDT

பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் அரசு சார்பில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு நேற்று சரண் மாவட்டத்தில் ஜஜவுலி கிராமத்தில் உள்ள தர்மாசதி ஆரம்ப பள்ளிக்கூடத்தில் 100–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5 சிறுவர்–சிறுமிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தனர். தகவல் கேட்டு பெற்றோர் ஓடி வந்து குழந்தைகளை தூக்கி கொண்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்

திருமலையில் புஷ்ப பல்லக்கு சரிந்து விழுந்து ஒருவர் படுகாயம்

Posted: 16 Jul 2013 10:46 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார அஸ்தானம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஸ்ரீதேவி, பூதேவி புஷ்ப பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதற்காக புஷ்ப பல்லக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வெளி நாடுகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டன. ஒரு டன் மலர்களால் பல்லக்கு அலங்காரம் செய்யப்பட்டு நேற்று மாலை திருமலையில் திருமாட வீதியில் தூக்கி செல்ல

மோடி நாய்குட்டி கருத்து எதிரொலி: டெல்லி பா.ஜ.க துணைத் தலைவர் அமீர் ரசா ஹுசைன் ராஜினாமா

Posted: 16 Jul 2013 09:40 PM PDT

குஜராத் மாநில முதல் மந்திரியும் பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாக்குழு தலைவருமான நரேந்திர மோடி, 2002-ம் ஆண்டு கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது நாய் குட்டி காரில் அடிபடுவதை கலவரத்தில் இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நரேந்திர மோடி கூட்டத்துக்கு நுழைவு கட்டணம் வாபஸ்

Posted: 16 Jul 2013 09:28 PM PDT

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில், அடுத்த மாதம் 11-ந் தேதி குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி பங்கேற்கும் 'யுவ சம்மேளன்' என்ற கூட்டத்தை நடத்த ஆந்திர பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அங்கு மோடி உரையைக் கேட்க நுழைவுக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என்றும் ஆந்திர பா.ஜனதா அறிவித்தது. அதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து,

பீகார்: மதிய உணவு சாப்பிட்டு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Posted: 16 Jul 2013 09:02 PM PDT

பீகாரில் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டதில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பீகார், சரன் மாவட்டம், மஸ்ரத் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதில் 59 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 48 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

குஜராத் பெட்ரோல் சுத்திகரிப்பாலையில் தீ விபத்து

Posted: 16 Jul 2013 08:44 PM PDT

குஜராத் மாநிலம் வடோதராவில் எப்.சி.சி எண்ணெய் சுத்திகரிப்பாலை உள்ளது. இங்கு பெட்ரோல் சுத்திகரிப்புப் பணி நடைபெறுகிறது. நேற்று இரவு இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

‘மிஸ் இந்தியா போட்டி 2013‘: அழகிகள் தேர்வு தொடங்கியது

Posted: 16 Jul 2013 08:38 PM PDT

மிஸ் இந்தியா அமைப்பு, 2013ஆம் வருடத்திற்கான மிஸ் இந்தியா திவா 2013 தேர்வினை இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கியது. பல சுற்றுகளாக நடக்கும் இந்தப் போட்டிகளின் இறுதியில் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், மாஸ்கோவில் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில்

சர்ச்சைக்குரிய கருத்து: நரேந்திரமோடி மீது வழக்கு பதிவு

Posted: 16 Jul 2013 08:21 PM PDT

குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, ஒரு பேட்டியில் கோத்ரா கலவர சம்பவம் குறித்து வருத்தம் உண்டா? என்ற கேள்விக்கு வளர்ப்பு நாயை ஒப்பிட்டு பதில் அளித்தார். இதனை சுட்டிக்காட்டி நரேந்திரமோடி மீது பாட்னா பல்கலைக்கழக புள்ளியியல் துறை ஆசிரியர் பினெய் குமார்சிங் என்பவர் பாட்னா தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு மற்றும் தேச

கேதார்நாத் சேதம் குறித்து தொல்லியல் ஆய்வுத்துறை குழு அறிக்கையில் தகவல்

Posted: 16 Jul 2013 08:01 PM PDT

கேதார்நாத் கோவிலில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு? என்பது குறித்து தொல்லியல் ஆய்வுத்துறை குழு அறிக்கையில் தாக்கல் செய்துள்ளது. கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத பெரு மழை-வெள்ளம் மற்றும் மலைச்சரிவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டது. அங்குள்ள சரித்திரப்புகழ் வாய்ந்த கேதார்நாத் கோவிலும் இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பவில்லை. இந்த கோவிலில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்யும் பொறுப்பு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

ஷிர்டி சாய்பாபா ஆசிரமத்தில் 10 ரூபாய் கட்டணத்தில் பக்தர்கள் தங்க புதிய விடுதி நாளை திறப்பு

Posted: 16 Jul 2013 05:18 PM PDT

ஷிர்டி சாய்பாபா ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் 10 ரூபாய் கட்டணத்தில் தங்கும் வகையில் புதிய விடுதி தொகுப்பு நாளை திறக்கப்பட உள்ளது. சென்னையை சேர்ந்த கே.வி.ரமணி என்ற பக்தர் சாய்பாபா ஆசிரமத்திற்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்கி இளைப்பாறிச் செல்ல விடுதிகளை கட்ட உதவிடும் வகையில் ஆசிரம நிர்வாகத்திற்கு

கருவுற்ற காலத்தில் இருந்து பிரசவம் முடிந்த பின்னரும் பெண்களுக்கு இலவச சிகிச்சை: குலாம் நபி ஆசாத்

Posted: 16 Jul 2013 04:54 PM PDT

கருவுற்ற காலத்தில் இருந்து பிரசவம் முடிந்த பின்னரும் பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் குலாம் நபி ஆசாத் கூறியதாவது

அசாம்: வெள்ளத்தில் சிக்கி 11 பேர் சாவு - பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

Posted: 16 Jul 2013 04:38 PM PDT

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கி நேற்று 11 பேர் பலியாகினர். இதனால், அம்மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது

டெல்லி: 12 வயது சிறுமியை கற்பழித்த 14 வயது 'அண்ணன்' தலைமறைவு

Posted: 16 Jul 2013 03:24 PM PDT

வடக்கு டெல்லியில் வசிக்கும் 12 வயது சிறுமியை அவரது அத்தை மகனான 25 வயது வாலிபர் கடந்த வாரம் கற்பழித்துவிட்டார். இதுதொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

யார் பிரதமர் என்பது முக்கியமல்ல - மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே முக்கியம்: மோடி

Posted: 16 Jul 2013 02:15 PM PDT

ஒடிசா மாநிலம் சென்றிருந்த குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, பூரியில் உள்ள ஓர் ஓட்டலில் நடைபெற்ற ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:- மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும்

புகைப்பட, முகவரிச் சான்றுடன் வரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இனி ஆசிட் விற்பனை: மத்திய அரசு முடிவு

Posted: 16 Jul 2013 01:44 PM PDT

இளம் பெண்களுக்கு எதிராக பெருகிவரும் வன்கொடுமைகள், குறிப்பாக ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட், ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™