Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


என்றென்றும் ஆனந்தம்!

Posted: 13 Jul 2013 03:13 PM PDT

ஜூலை 14 ஆனி உத்திரம்!இன்பம் என்றால் என்ன?பணமா, பதவியா, குழந்தைகளா... இவை எல்லாம் தான் இருக்கிறதே! சரி...இதனால், நீங்கள் நிம்மதி அடைந்து விட்டீர்களா? பணம் கூடக்கூட வீட்டில் பிரச்னை; பதவி உயர உயர சோதனை மேல் சோதனை! குழந்தைகள் சிறுவயதில் இருப்பது போல், திருமணத்துக்குபின் இருப்பது இல்லை.எல்லாம் இருந்தாலும், நிம்மதி என்ற ஆனந்தம் இல்லை. அப்படியென்றால், எப்போது தான் நாம் எதிர்பார்க்கிற ஆனந்தம் கிடைக்கும் என்றால், பிறவாமலே இருந்தால் தான் கிடைக்கும்."ஐயோ... நான் பிறந்து அனுபவித்ததெல்லாம் போதும் சாமி; இனியொரு பிறவி வேண்டாம்...'என மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வாய்விட்டு சொல்லி விடுகிறான் அல்லது மனதுக்குள் நினைக்கவாவது செய்கிறான். சரி...பிறப்பற்ற நிலையாகிய நித்ய ஆனந்தத்தை அடைய என்ன செய்வது?நடராஜப் பெருமானின் திருவடி தரிசனமே பிறப்பற்ற நிலையைத் தரவல்லது. அவரை வணங்க அனைத்து நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஒரு ஆண்டின் ஆறு நாட்கள் மட்டும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. அதில், முக்கியமானவை மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும்.மகாவிஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன், ஒரு நாள், பெருமாளின்பாரம் தாங்க முடியாமல் அதற்கானகாரணத்தைக் கேட்டது.அதற்கு பெருமாள், "சிவனின் ஆனந்த நடனக்காட்சியை கண்டு களித்தேன். அவரது திருவடி அசைவைக் கண்டு, ஏற்பட்ட மகிழ்ச்சியால் என் உடல் பெருத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் தான், உனக்குபாரம் தாங்க முடியாமல் போனது...' என்றார்."அவரது திருவடியையும், அந்த அற்புத நடனத்தையும், நானும் பார்க்க வேண்டும்...' என, பெருமாளிடம் கேட்டது ஆதிசேஷன்.அவரது அனுமதியுடன், கைலாயம் சென்று சிவனை எண்ணி தவத்தில் ஆழ்ந்தது. அதற்கு காட்சியளித்தசிவன், "ஆதிசேஷனே... தில்லையில் புலிக்கால் முனிவர் என் நடனத்தைக் காண விரும்பி, தவம் செய்து வருகிறார். நீ, அங்கு மனித ரூபம் தாங்கி செல். அங்கே என் திருவடி தரிசனமும், நடனக்காட்சியும் காணலாம்...' என்று அருள்புரிந்தார்.நடராஜருக்கு, தினமும் புத்தம் புதிய மலர்களால் பூஜை செய்து வந்தார் புலிக்கால் முனிவர். மரங்களில் பற்றி ஏறி பூப்பறிக்க வசதியாக புலிக்காலும், இருளில் கூர்மையாக தெரியும் கண்களையும் சிவன் மூலம் பெற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் இவரை,"வியாக்ரபாதர்' என்றனர்."வியாக்ரம்' என்றால், புலி."பாதர்' என்றால், பாதங்களை உடையவர். புலியின் கால்களை உடையவர் என்று இதற்கு அர்த்தம்.பூமியில் மனிதனாய் பிறக்க விரும்பிய ஆதிசேஷன், அத்திரி மகரிஷி- அனுசூயா தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.அவருக்கு, "பதஞ்சலி' என்று பெயரிடப்பட்டது. அவர், பாம்பின் அம்சம் என்பதால், மனிதத் தலையும், பாம்பு உடலும் பெற்றிருந்தார். வியாக்ரபாதரிடம் சென்று சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார் பதஞ்சலி. இருவரும், சிவபெருமான் நடன தரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அதைக் காண, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூடினர். பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர்.துந்துபி, பானுகம்பன் போன்ற தேவலோக கலைஞர்கள் வாத்தியம் இசைத்தனர். பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான நடராஜப்பெருமான் எழுந்தருளினார். சிவகாமி என்னும் பெயர் தாங்கிய பார்வதிஅருகில் நிற்க, சிவன் ஆனந்த திருநடனம் ஆடினார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனத்தைக் கண்டு, மகிழ்ந்தனர்.ஆனி உத்திரம் திருநாளில், சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அவரது திருவடியைதரிசிப்பவர்கள் ஆனந்தமயமான நிலையை அடைவர். - Varamalar

தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ?

Posted: 13 Jul 2013 11:50 AM PDT

தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுதும் முறைகள்: அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. ...

நானென்றால் நீ

Posted: 13 Jul 2013 11:46 AM PDT

நான் தாக்கிய புயல் நீ, நான் தழுவிய தென்றல் நீ. நான் சூழ்ந்த மேகம் நீ, நான் தரும் சுகமும் நீ. நான் தேகம் உயிர் நீ, நான் தாங்கும் உயிரும் நீ. நான்காதல் கவிதைநீ, நான் வரிகள் கருத்து நீ. நான் அருவி ...ஓடை நீ, நான் தரும் குளிர் நீரும் நீ. நான் உன் இதயத்தில் என் இதயத்தில் நீ, நான் சுவாசிக்கிறேன் இதயத்துடிப்பாய் நீ. நான் கணவன் மனைவி நீ நான் முதல் எனக்கு முதல் நீ, நான் இறுதி அறுதி நீ.

thamizhil pathivida mudiyavillai...

Posted: 13 Jul 2013 11:43 AM PDT

ennaal thamizhil pathivida mudiyavillai...enakku mattumthaanaa?...ellorukkumaa?...சோகம்

சொன்னா கேட்கனும்

Posted: 13 Jul 2013 11:42 AM PDT

நண்பனினின் வலைதளத்தில் இருந்து கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நான் சொல்றத கேளுங்க. கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬Hello.. கீழே போகவேண்டாம் என்று சொன்னேன் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நிறுத்துங்க, கீழே போகவேண்டாம் ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬Okay. என் பேச்சை கேக்க விருப்பம் இல்லனா ╬═╬கீழே போங்க ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬நான் இவ்வளவு சொல்லியும் நீங்க நிறுத்தலயா!! ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬ ╬═╬உங்களுக்கு ...

கொஞ்சம் சிரிக்கலாமே -part4

Posted: 13 Jul 2013 11:27 AM PDT

ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க.... "திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே" டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க, "இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது" அந்தப்பொண்ணு, "சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்" டீச்சர், "ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...." " ...

இதயம் உன் பெயர் சொல்லியே ...

Posted: 13 Jul 2013 11:26 AM PDT

உன் கண்கள் காணாத
என் கண்கள்
குருடாகட்டும் ...!!!

உன் திசையறியாத
என் கால்கள்
முடங்கி போகட்டும் ...!!!

உன் பெயரில்லா
என் கவிதைகள்
வெறும் காகிதமாக ..
இருக்கட்டும் ...!!!

ஆனால் இன்னும்
இதயம் உன் பெயர் சொல்லியே
இயங்கிக்கொண்டிருக்கின்றது....!!!

"போலியோ' இல்லாத இந்தியா எப்போது?

Posted: 13 Jul 2013 11:23 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள "பீட்' மாவட்டத்தில் பத்து மாதக் குழந்தை ஒன்று இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு, கை-கால்கள் செயலிழந்து, லத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஜூன் மாதம் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில், இளம்பிள்ளைவாதம் 2011-ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துவிட்டது. என்றாலும், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில், இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவர்கூட இல்லாத நிலைமை நீடிக்கும் நிலையில், உலகச் சுகாதார ...

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

Posted: 13 Jul 2013 11:21 AM PDT

இந்தோனேஷியா செல்லவேண்டும் என்கிற ஆவலில் சிங்கப்பூரிலிருந்து அதன் அருகில் உள்ள இந்தோனேஷியா தீவுகளில் ஒன்றான பாதம் தீவிற்கு சென்றேன். சிங்கப்பூரிலிருந்து பெர்ரி எனப்படும் படகு மூலமாக 15 நிமிடத்தில் பாதம் தீவினை அடைந்துவிடலாம். வழியில் பல தீவுகள். குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் பல சரக்குக் கப்பல்களையும் பார்க்க பரவசமாக இருக்கும். தீவினுள் சென்று நகரைப் பார்த்தால் நமது ஊரில் உள்ள உணர்வே ஏற்படுகிறது. சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்குமுன் நமது ஊர்களில் ஒரு கழியின் ...

இரண்டும் இல்லாமல் ...

Posted: 13 Jul 2013 11:14 AM PDT

காதல் இல்லாமல்...
கவிதையும் இல்லை!
கவிதைஇல்லாமல் ....
காதலும் இல்லை!
இரண்டும் இல்லாமல் ...
நானும் இல்லை ..!!!

இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்...

Posted: 13 Jul 2013 11:11 AM PDT

இந்தியாவிலேயே முதல் முறையாக கைராட்டின நூல் நெசவுத் தொழிற்சாலை துவக்கப்பட்ட பெருமைக்குரிய ராஜபாளையம் நகரில் 1898 ஜூலையில் பிறந்தவர் பி.எஸ்.குமாரசாமி ராஜா. ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், சென்னை மாகாண முதல்வர் (ஏப்ரல் 6, 1949 - ஏப்ரல் 10, 1952), ஒரிசா மாநில ஆளுநர் (1954-56) என பல்வேறு பதவிகளை வகித்தவர். ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து, தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் உயர்ந்தவர். ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் ...

பிரசவம்: அந்த நிமிடங்கள்.

Posted: 13 Jul 2013 11:10 AM PDT

மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்டவசதியாக முன்பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் ...

அறிமுகம்!

Posted: 13 Jul 2013 11:09 AM PDT

தமிழ் உறவுகளுக்கு யாழ்மொழியாளின் அறிமுக வணக்கங்கள். காற்றை கையில் பிடித்தே வானுலகில் சிங்காதனம் ஏறி - தினம் நிலவில் முகம் பார்த்து - நட்சத்திர திலகம் இட்டு மின்னல் மலர் சூடுவேன். இருநிதிக் கிழவனாம் குபேரனை கரம்பிடித்து - அவன் செல்வங்கள் அத்தனையும் - ஏழை விவசாயிகளின் வீடு நோக்கி மழையென பொழிய வைப்பேன். எழுத்தாளர்களாக இருப்பதை வரமாக நினைக்கிறேன். கவிஞன் உண்மையை சொல்லக் கூடியவன். அவனுக்கு பயம் இல்லை எல்லை இல்லை அவன் போலிகளை விரும்புவதில்லை. அவன் நெருப்பு! ஒளியும் ...

கத்தரிக்காய் தக்காளி சம்பா(தொக்கு)(பானு)

Posted: 13 Jul 2013 11:08 AM PDT

தேவையான பொருட்கள் கத்தரிக்காய்........................................1/4 கிலோ தக்காளி..................................................2 புளி .......................................................எலுமிச்சை அளவு வெங்காயம்.......................................100 கிராம் காய்ந்த மிளகாய்.............................6 எண்ணெய்.....................................4 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை...............சிறிது தாளிக்க கருவேப்பிலை, கடுகு உளுந்து, உப்பு தேவையான் ...

உன் தவிர்ப்பு ...

Posted: 13 Jul 2013 11:08 AM PDT

அழகே உனை....
ஆராதிக்க விரும்புகிறேன் ..
முடியுமானால் இன்று ....
என்கனவில் வந்துவிடு.....!!!
கனவில் உன் செயலை ..
இனிமையாய் ..
தந்துவிடு ...!!!
எப்போதுதான் ..
உன் தவிர்ப்பு ...
என்னவென்று தெரியும் ...!!!

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

Posted: 13 Jul 2013 11:06 AM PDT

தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள் ,கல்லூரிகள் தங்கள் பெயர்களில் சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளன .முதலில் கல்விக்கூடங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வெண்டும் .படித்தவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருக்கும் வகையில் நம் கல்விமுறை அமைய வெண்டும் .பல தனியார் நிறுவனங்கள் சாதி அடிப்படையிலேயே வேலையாட்களைத் தேர்வு செய்கின்றன .ஒவ்வொரு விழாவின் போதும் வைக்கப்படும் பேனர்கள் சாதி வெறியைப் பரப்புகின்றன.அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதியை வெளிப்படுத்தும் பேனர்களின் எண்ணிக்கை வெகுவாக ...

குடி குடியைக் கெடுக்கும்!

Posted: 13 Jul 2013 10:20 AM PDT

கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் ...

பெய்தால் அழிவு... பொய்த்தால் அவதி!

Posted: 13 Jul 2013 10:11 AM PDT

ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புய வீக்கத்திலே உயர் நோக்கத்திலே காக்கத்திறல் கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு'' என்றார் மகாகவி பாரதி. உலகிலேயே எளியோரும், வலியோரும் ஒரே நிலையில் பாதுகாப்புடன் வாழத் தகுதிவாய்ந்த தர்ம தேசமாக பாரதம் விளங்குவதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதையே விவேகானந்தரும் "உலகுக்கு பாரதம் வழிகாட்டும்' என முன்மொழிந்துசென்றார். ஆனால், நமது தேசம் தற்போது சந்தித்துவரும் பிரச்னைகளை ஆராய்ந்தால் நாம் நமது முன்னோர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயல்படுகிறோமா என்ற ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 13 Jul 2013 10:11 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கேட்டதெல்லாம் தரும் ஸ்ரீநல்லாண்டவர்!

Posted: 13 Jul 2013 10:10 AM PDT

மணப்பாறை ஸ்ரீநல்லாண்டவர், மக்கள் கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சமாக இருக்கிறார். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது நல்லாண்டவர் கோயில். மூலவர் பெயர் மானம்பூண்டி நல்லாண்டவர். சுதை சிற்பம். வண்ணப்பூச்சு. ஒருகாலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டும் ஞானநிலையில் அருள்பாலிக்கிறார். அருகே இரு காவல் தெய்வங்கள். 1000 வருடங்கள் பழைமையானது இக்கோயில். தினமும் 4 கால பூஜைகள் நடக்கும் இவ்வாலயத்தின் நல்லாண்டவரை அனைத்து இனத்தவரும் குல தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். மதுரை வீரன், ஏழு கருப்பு, பாரிகாரர் பேச்சியம்மன், ...

மன்னிப்பு பெறுவோம்!

Posted: 13 Jul 2013 10:03 AM PDT

இன்றைய நாளில் நம் விரல் நுனியில் அன்றாட உலக செய்திகளை, அறிவியல் வளர்ச்சிக்கான தகவல்களை ஊடகங்கள் மூலம் நொடிக்கு நொடி தெரிந்து கொள்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அச்செய்திகள் மூலம் நமது அறிவை வளர்த்துக்கொள்ளவும், அதற்கேற்ப நமது வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ளவும் முனைகின்றோம். ஆனால் உலகு சார்ந்த அந்தச் செய்திகளினால் மனித வாழ்வுக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தர இயலாது. திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு நூலில் ""உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்(லூக் 1:19)'' என்று ...

சிரிப்பு வந்தா சிரியுங்க ....!!! (படித்ததில் )

Posted: 13 Jul 2013 09:18 AM PDT

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.

உன் உயிர் மட்டுமல்ல ...!!!

Posted: 13 Jul 2013 09:15 AM PDT

உன் விழி
தாக்கும் சக்தி தாங்க,
இதயத்தால் ..
முடியவில்லை ...!!!

அன்பே சொல்லிவிடு..!

உன் தோள் கொடுப்பாயா..?
எனக்கு..,
நான் சாய்ந்துகொண்டு
கதறி அழ..!
அல்லது,
உன் மடி தருவாயா..?
எனக்கு..,
நான் நிரந்தரமாய்
உறங்கி விட...
இதயம் தருவாயா ...?
உன் நினைவுகளில் ..
வாழ்ந்துவிட ...!!!
உயிரை மட்டும்
தந்துவிடாதே ...
அது உன் உயிர் மட்டுமல்ல ...!!!

நானாக இருக்கக்கூடாதா ...?

Posted: 13 Jul 2013 09:13 AM PDT

உன் முதல் எழுத்து ...
மாறும் வரை
உன்னை காதலிப்பேன் ..!!!
அந்த முதல் எழுத்து ...
நானாக இருக்கக்கூடாதா ...?

கண் அழகுதான் ..

Posted: 13 Jul 2013 08:44 AM PDT

நிலவு அழகு தான்
பௌணமியில்...

மலர் அழகு தான்
செடியில்...

கவிதை அழகு தான்
பொய்யில் ...

கடல் அழகு தான்
அலையில் ...

கண் அழகுதான்
காதலில் ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 13 Jul 2013 08:29 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! உயிருக்காக ஓடியது தப்பியது மான் ! உணவுக்காக ஓடியது தோற்றது சிறுத்தை ! பயமின்றி மின் கம்பியில் மாடப்புறா ! முந்தித் தருவதாகப் பலரின் வாழ்க்கையை முடித்தன ஊடங்கங்கள் ! உடல் உள்ளம் இரண்டுக்கும் நன்மை தியானம் ! வியர்வைத் துடைத்தான் மலர்களுக்கு கதிரவன் ! அணையாத நெருப்பு நெருப்பே இருப்பு ஆதவன் ! சாதியை மற சாதிக்க நினை வெற்றி உமது ! ஜீவன் இழந்தன ஜீவ நதிகள் மணல் கொள்ளை ! சிற்பி இல்லை சிலை ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 13 Jul 2013 08:27 AM PDT

நான் சுவாசிக்க மறந்ததை.....!

Posted: 13 Jul 2013 08:20 AM PDT

உன்னை நினைதேன்
நான் இறந்து விட்டேன்...!
பிறகு தான் தெரிந்தது
உன்னை நினைக்கும் போது
நான் சுவாசிக்க மறந்ததை.....!

அமெரிக்க பெண் ஒருவர் பாடிய தமிழ் பாடல்!

Posted: 13 Jul 2013 08:07 AM PDT

நான்கெழுத்து படித்த தமிழர்களே தங்கள் அரைகுறை ஆங்கிலத்தில் பீட்டர் விடும் இந்த காலத்தில், ஒரு வெள்ளை பெண் தூய தமிழில் பாடுவது, கோடையில் மழையை அனுபவித்த சிலிர்ப்பை தருகிறது!
நன்றி-முகநூல்

https://www.facebook.com/photo.php?v=597881813565447&set=vb.219417821526387&type=2&theater

சிவன்கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நல்லூர் - கல்வெட்டு கண்டுபிடிப்பு

Posted: 13 Jul 2013 07:48 AM PDT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே நவநாரி என்ற ஊரில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபாண்டியனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ÷இக்கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர் ச.ரவி கூறியது: இந்தக் கல்வெட்டின் முன்புறத்தில் 11 வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு எழுத்துக்களும், பின்புறம் சூலாயுதமும் அதன் மேல் வலதுபக்கம் பிறை நிலாவும், கீழ்ப்பகுதியில் இரு பக்கமும் குத்துவிளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டை ஆண்ட முதல் கொங்குப் பாண்டியனான வீரபாண்டியன் காலக் கல்வெட்டு இது. ...

காதலைத் தேடி

Posted: 13 Jul 2013 07:27 AM PDT

நாம் சந்தித்த முதல் சந்திப்பில் தொடங்கி   முதலில் பயணித்த பேருந்தில்    நின்று பேசிய இடத்தில்     கடற்கரை மணலில் நாம் பதித்த சுவடுகளில்      நீ கொடுத்த அனைத்திலும் தேடினேன் நாம் காதலை        

மழை வேண்டி திருஞான சம்பந்தர் பதிகங்கள் படித்த இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர்

Posted: 13 Jul 2013 07:21 AM PDT

மழை வேண்டி சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் அதற்கான பாடல்களை இன்று மாலை படித்தனர். சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு எடுத்து, மழை வேண்டி அனைவரும் வருகிற ஜூலை 12-ம் தேதி திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் உள்ள அதற்குண்டான பாடலை படிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து ...

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Posted: 13 Jul 2013 06:25 AM PDT

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம் விளக்கு ஏற்றும் பொழுது : விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து : இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. பட்டியல்: 1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம் 2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் 3. தீபம் (ஏகதீபம்) ...

'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்

Posted: 13 Jul 2013 06:12 AM PDT

அ, ஆ, ஐ - A Adaikkalam Kaththan     -       அடைக்கலம் காத்தான்   Adaivarkkamudhan      -  அடைவார்க்கமுதன் Adaivorkkiniyan         -       அடைவோர்க்கினியன் Adalarasan              -       ஆடலரசன் Adalazagan              -       ஆடலழகன்   Adalerran               -       அடலேற்றன் Adalvallan              -       ஆடல்வல்லான் Adalvidaippagan         -       அடல்விடைப்பாகன் Adalvidaiyan            -       அடல்விடையான் Adangakkolvan           -       அடங்கக்கொள்வான் Adarchadaiyan ...

உழவன் உழத்தியான கர்த்தர் சிவபெருமான்!

Posted: 13 Jul 2013 05:55 AM PDT

கொங்கு நாட்டிலுள்ள தேவார வைப்புத் தலங்களுள் பேரூரும் ஒன்று. இத்தலத்திற்குத் தட்சிணகயிலாயம், மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, ஞானபுரம், பிறவாநெறித்தலம் முதலான பல பெயர்கள் உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த பேரூரில், கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்டதுதான் பேரூர்ப் புராணம். பேரூர்ப் புராணத்தில் 19-ஆவது படலமாக உள்ளது பள்ளுப்படலம். இதில் 69 பாடல்கள் உள்ளன. மேலும், சுந்தரமூர்த்தி நாயனாரின் வரலாறும் கூறப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சுவையான நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் சென்று, ...

மலிவு விலை காய்கறி கடைகள் இயங்குவது எப்படி?

Posted: 13 Jul 2013 05:54 AM PDT

மலிவு விலை காய்கறி கடைகள் இயங்குவது எப்படி?

முகநூலில் பார்த்தது.. நம் உறவுகளுக்காக இங்கே..!



நன்றி : தமிழ் வலைநுட்பம்

அசோலா எனும் ஓர் அமுதசுரபி!

Posted: 13 Jul 2013 05:43 AM PDT

அசோலா எனும் ஓர் அமுதசுரபி! பாலைப் பெருக்குது... பணத்தையும் கொடுக்குது! "ஊர்ல சொல்வாங்களே... சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த அசோலாவை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும் கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு கையில நிக்கிது" -திண்டுக்கல் ...

நல்லியக்கோடன் உங்கள் வறுமையைப் போக்குவான்!

Posted: 13 Jul 2013 05:43 AM PDT

பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதாக அமைந்த சிறுபாணாற்றுப்படை ஓர் ஆற்றுப்படை இலக்கியம். 269 அடிகளைக் கொண்ட நெடும்பாடல். இது ஓய்மாநாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவரால் பாடப்பட்டது. ஆற்றுப்படையின் தலையாய மாந்தராகிய ஆடி மகிழ்விக்கும் கூத்தரும், பாடிப் பரவசப்படுத்தும் பாணரும், இசைக் கருவியின் மூலம் இன்பமூட்டும் பொருநரும் விறலியும் ஆகிய நாற்பாலரும், அரசர்களையோ, வள்ளல்களையோ பாடிப்புகழ்ந்து தாம் பெற்றுவந்த பெருஞ் செல்வத்தை, எதிர்வந்த தம்போன்ற வறிய கலைஞனும் ...

அன்பு

Posted: 13 Jul 2013 05:38 AM PDT

நீ என்னோடு பேசிய சில மணித்துளிகள் போதும் எனக்கு சந்திக்க தயாராய் இருக்கிறேன் மரணத்தயும் அன்பே !!!!!!!!!       

கொஞ்சம் சிரிக்கலாமே -part3

Posted: 13 Jul 2013 05:29 AM PDT

பையன் : அப்பா! எங்க ஸ்கூலில் 'தந்தையின் உழைப்பு' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது? அப்பா : நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது,.... வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…! அனைத்து ஈகரை உறவுகளுக்கு குறிப்பாக பாசமிக்க பண்புமிக்க பொறுமைமிக்க கடின உழைப்பாளிகள் -> அலுவலகத்திலும், வீட்டிலும் பல வேலை பார்க்கும் சாகச சிங்கங்களுக்கு அற்பணிக்குறேன் ,                 

இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !

Posted: 13 Jul 2013 05:29 AM PDT

இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! ! •வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது. • குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும். • புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) • சராசரி மனிதனின் விழிகள்200 டிகிரி வரை திரும்பும். • தர்பூசணி, தட்டும் போது "ஹாலோ" சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். • கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக ...

நீர் நிலைகளைப் பாதுகாப்போம்

Posted: 13 Jul 2013 05:20 AM PDT

நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. புவியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. மனித உடலும் ஏறக்குறைய அதே கட்டமைப்பில்தான் செயல்படுகிறது. கோடையில் நீர் நிலைகள் ஆவியாகி வற்றுவதுபோல் மனித உடலுக்கும் நீர் தேவை அதிகரித்து விடுகிறது. கோடையில், தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே போகிறது. குறிப்பாக, பாசனத்துக்கும் தண்ணீர் தேவை. நீர்ப் ...

கவிதையில் யாப்பு

Posted: 13 Jul 2013 04:51 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™