மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவில் பந்த்: திருப்பதி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம்
- தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இருந்து நடிகை விஜயசாந்தி நீக்கம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு
- பொதுவான தலைநகராக இருந்தாலும் ஐதராபாத் நிர்வாகத்தை தெலுங்கானா கவனிக்கும்: மத்திய அரசு முடிவு
- உத்தரகாண்ட்: மந்தாகினி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துணை நீதிபதி
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
- பாராளுமன்ற தேர்தல் கதவை தட்டும் நேரத்தில் தனித்தெலுங்கானாவுக்கு அனுமதியா? - மம்தா கடும் தாக்கு
- சாப்பாட்டு செலவுக்காக பிரதமர் - சோனியா காந்திக்கு 5 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பும் பா.ஜ.க.வின் நவீன போராட்டம்
- கோர்ட் அனுமதியின்றி கைதிகளுக்கு கைவிலங்கு போடக் கூடாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
- துடைப்பம் சின்னத்துடன் டெல்லி தேர்தலை சந்திக்கும் ஆம் ஆத்மி கட்சி
- ஒருதலை காதலில் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய டெல்லி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
- கொள்ளையடித்து 4 ஆயிரம் கோடிக்கு சொத்து குவித்த மதுகோடா ஜாமினில் விடுதலை
- தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: 4 ஆந்திர மந்திரி - 6 எம்.எல்.ஏ. - 1 எம்.பி. ராஜினாமா
- நிதிஷ் குமார் பிரதமர் ஆவார் என்று பேசுவதா?: சத்ருகன் சின்ஹா மீது பா.ஜ.க. நடவடிக்கை
- பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் பாதிப்பு- 6 பேர் கவலைக்கிடம்
- அரசின் கொள்கை முடிவுகளை சி.ஏ.ஜி. கேள்வி கேட்க முடியாது- ப.சிதம்பரம்
- பஞ்சாப்: பஸ் கால்வாயில் கவிழ்ந்து 2 பேர் பலி- 40 பயணிகள் மாயம்?
- துபாயில் ரம்ஜான் மாதத்தில் ரத்ததானம் செய்யும் பஞ்சாபியர்கள்
- தெலுங்கானா முதல்–மந்திரி பதவியை பிடிக்க கடும் போட்டி: ஜெய்பால் ரெட்டிக்கு அதிக வாய்ப்பு
- தெலுங்கானாவுக்கு ஆதரவு: உ.பி.யை 4 மாநிலமாக பிரிக்க வேண்டும் -மாயாவதி
- தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஓட்டல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
| ஆந்திராவில் பந்த்: திருப்பதி கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் Posted: 31 Jul 2013 10:39 PM PDT ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்த விவகாரம் ஆந்திராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் பிரிக்கப்பட்டதை கண்டித்து ராயலசீமா, கடலோர ஆந்திராவில் நேற்று 'பந்த்' போராட்டம் நடந்தது. இதனால் பஸ் போக்குவரத்து முடங்கியது. 'பந்த்' காரணமாக திருப்பதிக்கு எந்த பஸ்சும் இயங்கவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ் போக்குவரத்து நடந்தது. |
| தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இருந்து நடிகை விஜயசாந்தி நீக்கம்: சந்திரசேகரராவ் அறிவிப்பு Posted: 31 Jul 2013 10:29 PM PDT நடிகை விஜயசாந்தி ஆந்திராவின் மெதக் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை சேர்ந்த இவர் தெலுங்கானா மாநில கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சில நாட்களாக அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். |
| பொதுவான தலைநகராக இருந்தாலும் ஐதராபாத் நிர்வாகத்தை தெலுங்கானா கவனிக்கும்: மத்திய அரசு முடிவு Posted: 31 Jul 2013 08:56 PM PDT ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரம் பொதுவான தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டு கால கட்டத்தில் ஐதராபாத் நகரில் நிர்வாகத்தை கவனிப்பது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐதராபாத் நகரை தற்காலிகமாக யூனியன் பிரதேசம் ஆக்கி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முதலில் மத்திய உள்துறை திட்டமிட்டது. ஆனால், தெலுங்கானா போராட்டக்காரர்கள் அதை |
| உத்தரகாண்ட்: மந்தாகினி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட துணை நீதிபதி Posted: 31 Jul 2013 08:47 PM PDT ஜூன் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழையினாலும் நிலச்சரிவுகளினாலும்,ஏராளமான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத் கோவில்கள் சேதமடைந்தன..அரசுத்துறை அதிகாரிகள் வெள்ளம் பாதித்த இடங்களில் தங்கி இன்னும் மீட்புப் |
| பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை Posted: 31 Jul 2013 08:19 PM PDT பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 5-ந் தேதி தொடங்குகிறது. 30-ந் தேதிவரை நடைபெறும் அத்தொடரில் 16 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் ஆகும். ஆனால், அந்த தொடரில் நிறைவேற்றுவதற்காக, 116 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார். அக்கூட்டம் இன்று |
| பாராளுமன்ற தேர்தல் கதவை தட்டும் நேரத்தில் தனித்தெலுங்கானாவுக்கு அனுமதியா? - மம்தா கடும் தாக்கு Posted: 31 Jul 2013 04:02 PM PDT கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனித்தெலுங்கான மாநிலம் அமைப்பது தொடர்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திடீர் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது |
| Posted: 31 Jul 2013 02:32 PM PDT தனிநபர் வருமானம் மற்றும் செலவினம் தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் ஓர் புள்ளி விவரத்தை வெளியிட்டது. அந்த புள்ளி விவரத்துக்கும் மக்களின் வாழ்க்கை செலவினத்திற்கும் சம்பந்தமே இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின |
| கோர்ட் அனுமதியின்றி கைதிகளுக்கு கைவிலங்கு போடக் கூடாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 31 Jul 2013 02:15 PM PDT மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் ஒரு மாணவன் மர்மமான முறையில் மரணமடைந்தான். இதனை கண்டித்து இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் |
| துடைப்பம் சின்னத்துடன் டெல்லி தேர்தலை சந்திக்கும் ஆம் ஆத்மி கட்சி Posted: 31 Jul 2013 01:55 PM PDT ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இடம்பெற்றிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த ஆண்டு இறுதியில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட |
| ஒருதலை காதலில் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய டெல்லி மாணவன் விஷம் குடித்து தற்கொலை Posted: 31 Jul 2013 01:38 PM PDT புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆகாஷ்(23) என்ற மாணவர் ரோஷினி(22) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று காலை 11 மணியளவில் ரோஷினியை |
| கொள்ளையடித்து 4 ஆயிரம் கோடிக்கு சொத்து குவித்த மதுகோடா ஜாமினில் விடுதலை Posted: 31 Jul 2013 11:53 AM PDT பீகார் மாநிலத்தை இரண்டாக பிரித்து 2000ம் ஆண்டில் ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக 2006ம் ஆண்டிலிருந்து 2008 வரை பதவி வகித்தவர் மதுகோடா. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, கருப்பு பணம் பதுக்கியது, முறைகேடான முதலீடு |
| தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: 4 ஆந்திர மந்திரி - 6 எம்.எல்.ஏ. - 1 எம்.பி. ராஜினாமா Posted: 31 Jul 2013 11:02 AM PDT தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்ததையடுத்து அதிருப்தியடைந்துள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி எம்.எல்.ஏ.க்களை இன்று ஆந்திர முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி அழைத்து சமாதானப்படுத்தினார் |
| நிதிஷ் குமார் பிரதமர் ஆவார் என்று பேசுவதா?: சத்ருகன் சின்ஹா மீது பா.ஜ.க. நடவடிக்கை Posted: 31 Jul 2013 10:48 AM PDT நிதிஷ் குமாரை பாராட்டி பேசிய சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது. பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு உள்ளது என நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார் |
| பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 12 மாணவர்கள் பாதிப்பு- 6 பேர் கவலைக்கிடம் Posted: 31 Jul 2013 05:28 AM PDT பீகாரில் கடந்த 16-ந்தேதி ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானார்கள். அதனைத்தொடர்ந்து பீகாரில் உள்ள பள்ளியில் மாணவ- மாணவிகள் மதிய உணவு சாப்பிட மறுத்து வந்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பீகார் அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில் பீகாரின் அர்வால் மாவட்டத்தில் உள்ள சாமண்டி தொடக்க பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 12 குழந்தைகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. |
| அரசின் கொள்கை முடிவுகளை சி.ஏ.ஜி. கேள்வி கேட்க முடியாது- ப.சிதம்பரம் Posted: 31 Jul 2013 03:41 AM PDT அரசின் கொள்கை முடிவுகளை மத்திய கணக்கு தணிக்கையாளர் கேள்வி கேட்க முடியாது. ரூ. 1.6 லட்சம் கோடி மதிப்பிலான 157 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அன்னிய முதலீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் 5.5-லிருந்து 6 விழுக்காடாக இருக்கும். |
| பஞ்சாப்: பஸ் கால்வாயில் கவிழ்ந்து 2 பேர் பலி- 40 பயணிகள் மாயம்? Posted: 31 Jul 2013 03:13 AM PDT பஞ்சாப் மாநிலம் பெடேகார்க் மாவட்டத்தில் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 40 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணி அளவில் டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசை நோக்கி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தின் தடுப்புச் சுவரை உடைத்துகொண்டு கால்வாயில் பாய்ந்தது. பஸ்சில் 40-ல் இருந்து 45-பயணிகள் பயணம் செய்ததாக தெரிகிறது. |
| துபாயில் ரம்ஜான் மாதத்தில் ரத்ததானம் செய்யும் பஞ்சாபியர்கள் Posted: 31 Jul 2013 02:50 AM PDT துபாயில் வாழும் பஞ்சாபியர்களின் சங்கமான சர்பட் டா பாலா டிரஸ்ட் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. ரம்ஜான் புனித நாளை ஒட்டி இந்த மாதம் முழுவதும் முஸ்லிம் மக்கள் நோன்பு கடைப்பிடிப்பதால் அவர்களில் பெரும்பான்மையானோர் ரத்த தானம் செய்ய முன்வருவதில்லை. எனவே, அந்த சமயத்தில் ஏற்படும் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் வண்ணம், இந்த சங்கம் நான்கைந்து முறை ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தற்போது துபாயில் வாழும் எஸ்.பி.எஸ். ஓபராய் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த செயல் துபாய் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் |
| தெலுங்கானா முதல்–மந்திரி பதவியை பிடிக்க கடும் போட்டி: ஜெய்பால் ரெட்டிக்கு அதிக வாய்ப்பு Posted: 31 Jul 2013 01:00 AM PDT புதிதாக உதயமாகியுள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு என தனி சட்டசபை அமைக்கப்பட உள்ளது. தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களிலும் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவின் புதிய சட்டசபையில் காங்கிரஸ் கட்சியே அதிக எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் பெரிய கட்சியாக உள்ளது. அந்த கட்சிக்கு தெலுங்கானா சட்டசபையில் 49 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே தெலுங்கானா மாநிலத்தில் |
| தெலுங்கானாவுக்கு ஆதரவு: உ.பி.யை 4 மாநிலமாக பிரிக்க வேண்டும் -மாயாவதி Posted: 31 Jul 2013 12:46 AM PDT தெலுங்கானா தனி மாநிலம் உதயமானதை தொடர்ந்து மேலும் சில மாநிலங்களை உருவாக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து விதர்பா, மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கூர்க்காலந்து, அசாமில் இருந்து போடோலாந்து மாநிலங்களை அமைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தை 4 மாநிலமாக |
| தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஓட்டல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Posted: 31 Jul 2013 12:40 AM PDT ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தனி தெலுங்கானா மாநிலமாக உருவாக்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து உள்ளார். ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் தென்னபடுவை சேர்ந்தவர் குருதாஸ். இவர் குண்டூரில் உள்ள ஓட்டலில் ஒரு வேலை விசயமாக தங்கி இருந்தார். அப்போது ஆந்திரா மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு தனி தெலுங்கானா பிரிவு என்ற அறிவிப்பு வெளியானாது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |