Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே !

Posted: 11 Jul 2013 01:23 PM PDT

லக்னோ : சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதிரடியாக அலகாபாத் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், காங்., மற்றும் பா.ஜ., வரவேற்றுள்ளது. சாதி பெயரால் பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன் ஆங்காங்கே மோதல்களும் வெடித்து வருகின்றன, இது போன்ற பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உமாநாத்சிங் ...

Android ல் நம் ஈகரை apps

Posted: 11 Jul 2013 01:05 PM PDT

நான் Android (sony xperia s ) மொபைல் பயன்படுத்துகிறேன். Android apps எப்படி உருவாக்குவது என்று google ல் search செய்தபோது http://www.appsgeyser.com/ கிடைத்தது.இந்த site ல் இலவசமாக Android apps உருவாக்க முடியும் என்று தெரிந்தது. நம் ஈகரை க்கு ஒரு apps உருவாக்கினேன் ... Android apps டவுன்லோட் செய்ய http://www.appsgeyser.com/getwidget/Eegaraiapps இங்கு செல்லவும்.... இந்த apps மிகவும் எளிமையாக உள்ளது.(Opera வில் தெரிவது போல) நான் ஆபீஸ் இருக்கும்போது கம்ப்யூட்டர் முலம் ஈகரை உடன் இணைந்து ...

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Posted: 11 Jul 2013 11:58 AM PDT

உறவுகளே ! ஒரு 'tablet' வாங்கணும் , எது cheap and best என்று சொல்லுங்களேன் புன்னகை

தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை

Posted: 11 Jul 2013 10:56 AM PDT

புதிய வார/மாத இதழ்கள் நமது பத்திரிக்கை சூறாவளி தமிழ்நேசன் அவர்கள் வழங்கும் புதிய வார/மாத இதழ்கள். குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சட்டம் தொடர்பான சிறு உதவி வேண்டும் - கரூர் கவியன்பன்

Posted: 11 Jul 2013 10:03 AM PDT

வணக்கம் நண்பர்களே எனது நண்பர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவலினை கேட்டுள்ளார்.அவர் கேட்டு 49 நாள் இன்றோடு ஆகிவிட்டது.(தகவல் தர அதிகபட்சமாக 45 நாள் காலக்கெடு என்கிறார்கள் ).ஆனால் இன்று சுமார் 14,000 பக்கங்கள் வரும் அதனால் சுமார் 28,000 ரூபாய் தொகை கட்டுங்கள் என வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் கேட்ட விவரங்கள் சுமார் 300 பக்கங்கள் கூட வருவது சந்தேகம். உறுதியாக இவ்வளவு வரவே வராது அவர் கேட்ட தகவல்களுக்கு. இவாறு இருக்கையில் மேற்கொண்டு அவர் செய்ய வேண்டிய விவரங்களை கூறுங்கள். வேறு ...

கணினியிலிருந்து உங்கள் ஆன்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்தவது எப்படி

Posted: 11 Jul 2013 10:02 AM PDT

தற்போது ஸ்மார்ட்போன்கள் வெகுவாக பல வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக கணனி - ஆன்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில்  இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன. இந்த பதிவில்  கணனி - ஆன்ராய்டு  இணைக்கும்  தொலைமுக(Remote) பயன்பாடுகளை பற்றி தெரிந்துகொள்ளபோகிறோம். இந்த பயன்பாடுகள் சோதனை செய்யப்பட்டு ...

சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :)

Posted: 11 Jul 2013 09:58 AM PDT

மற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது  நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை நான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக  செய்யும் இட்லிக்கும்  எனக்கும் போன ஜன்மத்துப்பகை ஆமாம் ... எனக்கு  'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி  சொல்லணும் என்றால்....." நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்" அவ்வளவுதான்.     ஆனாலும் எங்க ...

சுக துக்கத்துக்கு காரணம் இறைவனல்ல

Posted: 11 Jul 2013 09:34 AM PDT

நமது இன்பங்களுக்கும் , துன்பங்களுக்கும் ,

இறப்பிற்கும் , பிறப்பிற்கும் ,வினைதான் காரணம்.

அவரவர்கள் எழுதிய எழுத்திற்கு ஏற்ப மதிப்பெண் போடுவது போலே

அவரவர் செய்த நல்வினை , தீவினைக்கு ஏற்ப சுகதுக்கங்கள் அமைகின்றன.

ஆகவே சுக துக்கத்துக்கு காரணம் இறைவனல்ல நாம் செய்த நல்வினை தீவினையே.


திருமுருக கிருபானந்த வாரியார்.

வறண்டது குளிருமா ..?

Posted: 11 Jul 2013 09:19 AM PDT

தண்ணீர் உள்ள குளத்துக்கு ...
கொக்குகள் வருவதில் தப்பில்லை ...

ஒரே ஒருகொக்கு மட்டும்
தினமும் வருகின்றது
வறண்டு போன என் குளத்தில்
காதல் தவம் புரிகிறது.

அது இதயக்குளத்தை...
சொந்தமாகக் கேட்கின்றது
என்ன பதில் சொல்ல?
வறண்டது குளிருமா ..?
வறண்டது வெடிக்குமா ..?

கொய்யாலே ...

Posted: 11 Jul 2013 09:18 AM PDT

ஒருவன் உங்களுக்கு ...
ஒரு செருப்பால் எறிந்தால் ...
பொறுமையை காத்திடுங்கள் ...
மறு செருப்பை எறியும் வரை ...
எறிந்தபின் தூக்கி கொண்டு ஓடுங்கள் ..
கொய்யாலே ...
அவன் வெறும் காலோடு ..
போகட்டும் ....!!!

முதலும் முடிவும் ஆனாய்.

Posted: 11 Jul 2013 09:17 AM PDT

புரியாமல்
கேட்கின்றேன்
புரிந்துதான்
செய்கிறாயா ...?

வேண்டாமடி
எண்ணாதே ..
எனை - நீ
கண்ணால் தின்னாதே...!!!
விழியாலே
கொல்லாதே
முகவரியின்றி
தவிக்கும்
மனிதன் போல்
எனை மாற்றாதே ...!!!

கல்லாக இருந்த என்னை ..
சிற்பமாக்கியவள் நீ...
எதுவானாலும் நீதான் ..
முதலும் முடிவும் ஆனாய்.

கொஞ்சம் நகைசுவையாய் கவிதை ...!!!

Posted: 11 Jul 2013 09:17 AM PDT

கூந்தலில் அழகுக்காக ...
பூக்களை சூடும் மங்ககையே ...
சூடமுன் ஒருமுறை தலையை ...
பேன் பார்த்துவிடுங்க்கள் ...
நீங்கள் தலையில் சூடிய ..
எங்களின் நறு மணத்தால் ...
பேன்கள் குடும்பம் நடாத்துகின்றன ...!!!

மூன்று ,நான்கு வரி கவிதைகள் ...!!!

Posted: 11 Jul 2013 09:12 AM PDT

அதீத இன்பத்தை ...
அளிக்கவும் அழிக்கவும்..
உன்னால் மட்டும் தான் முடியும்...!

வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 11 Jul 2013 08:46 AM PDT

வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 140. நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .அவர்கள் மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள் .மதுரையில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்தது முதல் அவரை நான் மட்டுமல்ல மதுரை மக்கள் பலரும் அறிவார்கள் .எல்லோருடனும் அன்பாகப் ...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Posted: 11 Jul 2013 08:32 AM PDT

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? கண்டு பிடித்தது 30 வருடங்கள் முன்பு. கணினி உலகில் புரட்சி ஒன்றை உண்டாக்கினாய். தமிழன் என்ற பெருமை முதன்மையாகவும் இந்தியன் என்ற பெருமை அதை தொடரவும் சிவா அய்யாதுரை அவர்களே உம் பாதம் பணிகிறேன். உன் கண்டுபிடிப்புக்கு மரியாதை உந்தன் இமெயில் மூலமே. ரமணியன். பிகு. இமெயில்  ஈகரை உறுப்பினர் இல்லாவிட்டாலும், நாம் இன்று கலந்து உறவாடி குலாவுவது இமெயில் உதவியால் தானே. காலையிலேயே பதிவிட்டு இருக்க வேண்டிய பதிவு. தாமதத்திற்கு ...

ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி

Posted: 11 Jul 2013 08:26 AM PDT

ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும். இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. ...

நான் இறக்கும்வரை....

Posted: 11 Jul 2013 07:50 AM PDT

நான் இறக்கும்வரை
உன்னைத்தான்
நினைத்திருப்பேன்...!!!

அன்பே..!
உன்னை கண்டபோதே ...
இறந்துவிட்டேன் ...!!!

கொடியது கொடியது (கஸல் )

Posted: 11 Jul 2013 07:36 AM PDT

கொடியது கொடியது
காதல் கொடியது
அதனிலும் கொடியது
உன் காதல் எனக்கு
கொடியது

இனியது இனியது
தனிமை இனியது
அதனிலும் இனியது
உன்னால் நான்
தனிமையானது

வலியது வலியது
என் காதல் வலியது
அதனிலும் வலியது
நீ தந்த வலியானது

நான் செய்த குற்றம் (கஸல்)

Posted: 11 Jul 2013 07:35 AM PDT

நான் செய்த குற்றம்
உன்னை கண்டது
காதலித்தது

என்னிடம்
ஒரு உறவும் இல்லை
உன் இதயம் மட்டும்
இருக்கிறது

நீ திரும்பிப்பார்க்கும்
போதெல்லாம்
இறந்துவிடுகிறேன் ................

மாலையில் நீ அழுகிறாயா ...?

Posted: 11 Jul 2013 07:34 AM PDT

நீ காதல் பரிசாக ...
தந்த ரோஜா செடி ..
பூத்திருக்கிறது ...
பூப்பூப்பது ...
அவள்....
புன்னகையில்..!
மாலையில் ..
வாடும் போதுதான் ..
அன்பே தாங்க முடியல்ல ..
மாலையில் நீ அழுகிறாயா ...?

இதயம் குளிர தா ...!!!

Posted: 11 Jul 2013 07:34 AM PDT

அ ன்பு கொண்டேன் ....
அ ணைக்க துடித்தேன் ...
அ த்தனையும் கனவானது ..
அ த்தை மகளே.....!!!

ஆ தவன் நான் ...
ஆ னந்தம் கொள்வது ..
ஆ ண்டவனுக்கும் பொருந்தும் ...
ஆ கையால் கண்ணே ...
ஆ சையோடு ஏற்றுக்கொள் ...!!!

இ தயம் இருக்கும் பெண்ணே ..
இ ரும்பாய் ஏனடி இருக்கிறாய்
இ ல்லாத ஒன்றாய் கேட்கவில்லையே ..
இ தயம் குளிர இதமாய் தா ...!!!

வராத கவிதைகள்,

Posted: 11 Jul 2013 07:33 AM PDT

அன்று ...!!!
அவளைக் கவரவே நான்
கவிதையெலுதத் துணிந்தேன்,
அவள் அருகிலிருந்து
கொஞ்சியபொழுது
வராத கவிதைகள்,
என்னை விலகிச்செல் என்று
கெஞ்சியபொழுது வந்தது,
என்னை மறுதலித்து மாற்றானை
அவள் மணமுடித்தால்
அவளை மறந்துவிட்டு கவிதையை
கரம் பிடித்தேன்...
இன்று ...!!!

பலதும் பத்துமாய் சிரிப்பு ...

Posted: 11 Jul 2013 07:32 AM PDT

சலூனில் இருவர் பேசியது;
மதுக்கும் விஷத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
எனக்கு முதல் சமாசாரம் மட்டும்தான்டா தெரியும்…
ரெண்டாவதா சொன்னியே அதப்பத்தி தெரியாதுடா ……
மது குடிச்சா நாம ஆடுவோம் . விஷம் குடிச்சா நம்ம முன்னாடி மத்தவங்க ஆடுவாங்க …..

பயபுள்ள மீண்டும் ...

Posted: 11 Jul 2013 07:32 AM PDT

மகளே......
உனக்கு கல்லை கொண்டு ஒருவன் எறிந்தால்.,
பூவை கொண்டு எறிந்து விடு...!!!
பயபுள்ள மீண்டும் ...
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால் .,
பூ தொட்டியைக் கொண்டு எறியுங்கள் ,
சாவட்டும் .!

பூக்களை சூடும் மங்ககையே ...

Posted: 11 Jul 2013 07:31 AM PDT

கூந்தலில் அழகுக்காக ...
பூக்களை சூடும் மங்ககையே ...
சூடமுன் ஒருமுறை தலையை ...
பேன் பார்த்துவிடுங்க்கள் ...
நீங்கள் தலையில் சூடிய ..
எங்களின் நறு மணத்தால் ...
பேன்கள் குடும்பம் நடார்த்துகின்றன ...!!!

அடுத்த நானீ ! ரிட்டர்ன்...

Posted: 11 Jul 2013 07:25 AM PDT

'இ' டா 'இ' டா 'இ' டா !
இது இளவரசன் 'இ' டா !

வந்து விட்டேன் நான் டா !
இனி நொந்து நொந்து போ டா !

சாதி மதம் அழிப்பேன் !
என் திவ்யாவ நான் ரசிப்பேன்!

உன்ன அணு அணு வா கெடுப்பேன் !
அப்புறம் நான் சிரிப்பேன்!
ஹி ஹி ஹி........



எனை அழைக்காமல் விட்டுவிடாதே....!

Posted: 11 Jul 2013 07:14 AM PDT

என் அன்பு நண்பனே...
காதல் போதையில்
தடுமாறி விழுந்ததால்
நம் களியாட்ட போதையை
அருந்தாமல் விட்டுவிட்டேன்...
அதற்காக அடுத்த பார்டியில்
எனை அழைக்காமல்
விட்டுவிடாதே....!

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள் !

Posted: 11 Jul 2013 07:13 AM PDT

நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் ...

ஏய் மூச்சு காற்றே ...!!!

Posted: 11 Jul 2013 07:12 AM PDT

ஏய் மூச்சு காற்றே ... நான் சொல்வதை .. என்னவளிடம் சொல்வாயோ ...!!! கணமேனும் அவளை மறவேன் - என்று அவள் காதருகில் சொல்வாயோ? நினைவெல்லாம் அவளாக நித்திரையைத் தொலைத்து விட்டேன் உயிரெல்லாம் அவளாக உண்பதையும் நிருத்திவிட்டேன் என்றவள் மனமறிய சொல்வாயோ? உயிர் தான் பிரிந்தனவே உடலிருந்து என்ன பயன் என்றவள் எண்ண வேண்டாம் அவள் உயிரை மீட்டெடுத்து சேர்ப்பேன் என்று உரைப்பாயோ?

நடிகர் ரித்திக் ரோஷனுக்கு மூளை அறுவை சிகிச்சை முடிந்தது: நலமாக உள்ளார்

Posted: 11 Jul 2013 06:56 AM PDT

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு இன்று மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பிற்பகலில் மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு சுமார் 50 நிமிடங்கள் அறுவை சிகிச்சை நடந்தது. மதியம் 3 மணிக்கு அறுவை சிகிச்சை அறையில் இருந்து அவர் வெளியே கொண்டு வரப்பட்டார். அவருக்கு துணையாக அவரது பெற்றோர், ...

சாதனைகள் சாத்தியமே ! - படிக்கட்டுகள்

Posted: 11 Jul 2013 05:31 AM PDT

சாதனைகள் சாத்தியமே சிந்திப்போம்,  செயல்படுவோம் மனித உறவுகளை மேம்படுத்துவோம் அறிவைப் பேணுவோம் உணர்வைக் கட்டுப்படுத்துவோம் வித்தியாசமாக சிந்திப்போம் நேரத்தை நிர்வகிப்போம் திட்டமிடுவோம்,  பகிர்ந்து புரிவோம் நிதியை நிர்வகிப்போம் வெற்றி பெறுவோம் சந்தோஷப்படுவோம்,  சந்தோஷப்படுத்துவோம் பாராட்டும் பண்பை வளர்ப்போம் தொடர்ந்து முன்னேறுவோம் சாதனை புரிவோம் சமூக நலம் பேணுவோம் தொடக்கத்திலிருந்து சாதனை வரை வரிசைக்கிரமப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

Keylogger அபாயமும் அதற்கான பாதுகாப்பும்

Posted: 11 Jul 2013 05:31 AM PDT

அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும் இன்னும் இது போல எத்தனையோ, முன்பெல்லாம் வைரஸ் என்பது பெரிய பிரச்சினையாக இருந்து இப்போதெல்லாம் வைரஸ் கூட பெரிய பிரச்சினை இல்லையென்றே நினைக்க தோன்றுகிறது ...

அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......

Posted: 11 Jul 2013 05:27 AM PDT

அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......          வாழ்துக்கள் கவியே        

என் காதல் ஐஸ் போன்றது ..!!! (கஸல் )

Posted: 11 Jul 2013 05:25 AM PDT

என் காதல்
குச்சியில் இருக்கும்
ஐஸ் போன்றது
இப்போ -குச்சி
என்னிடம் இருக்கு
ஐஸ்சைக்கானவில்லை ..

மனம் என்னும் -என்
வயிறு பசிக்கிறது
நீ
சமைக்கவில்லை
என்கிறாய்

சிறுவயதில்
நடந்த நிகழ்வு
கனவில் வந்ததுபோல்
நீ வருகிறாய்
மங்கலாக ...!!!

இனிமைதரும் நீ ..

Posted: 11 Jul 2013 05:24 AM PDT

கண் மூடினால் .
இனிமைதரும் நீ ..
கண்முன் வரும் போது ...
ஏன் இத்தனை வலியை..
தருகிறாய் ...?

கே‌ இனியவன் ஹைக்கூ ...

Posted: 11 Jul 2013 05:19 AM PDT

தன்னை அழித்தாலும்
இறுதிவரை மூச்சுதரும்
- மரம்-

நான் இரண்டுக்கும் நடுவில் (கஸல் )

Posted: 11 Jul 2013 05:17 AM PDT

காதலில் தோற்றவன் ..
கண்ணீர் விடுகிறான்
காதலை விரும்புபவன்
கண்ணை தேடுகிறான்
நான் இரண்டுக்கும் நடுவில்
தத்தளிக்கிறேன் ....

நான் எரிகிறேன் நீயோ
சூரிய குளியல்
குளிக்கிறாய்

நான் என் விருப்பத்தை
சொன்னேன் -அவள்
தன் மறுப்பை சொன்னாள் ...!!!

என் காதலன்!

Posted: 11 Jul 2013 05:06 AM PDT

சின்ன சின்ன தூரல்களால் தேகம் மொத்தம் தேன் ஊற்றுகிறான். மங்கை எனை அலங்கரிக்க மழைத் துளி - எனும் மணிகள் சிந்துகிறான்! குளிர் காற்றெனும் கரங்கள் கொண்டு எனை! கட்டித் தழுவுகிறான்! மல்லிகை வாசமாக மண் வாசம் வீச செய்கிறான்! நடுக்கத்தில் நான் விலகும் நேரம் மோகத்தில் - தன் முகம் கருக்கிறான். உச்சி தொடர்ந்து நெற்றி அடைந்து - நெஞ்சப் பள்ளத்தில் வளைந்து சிற்றிடை வழி நெளிந்து உள்ளங்கால் வரை பயணம் செய்கிறான்! சில்லென சில்லென சின்னவள் உடலெங்கும் செல்லமாய் ...

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!

Posted: 11 Jul 2013 05:03 AM PDT

டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ,எம்.பிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பின்படி நாட்டில் 30% எம்.எல்.ஏ, எம்.பிகள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை தொகுத்துள்ளன. அதே போல http://myneta.info இணையத்தளம் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி.யின் சொத்து விவரம், குற்ற வழக்கு விவரம் ...

விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும் எவ்வாறு

Posted: 11 Jul 2013 03:16 AM PDT

ஒருசிலர் லினக்ஸ்இயக்கமுறைமையானது கணினியின் செயல்பாடுகளில் மிக கற்றுகுட்டித்தனமானது என்றும் வேறுசிலர் இதனை விண்டோ போன்று எளிதாக புரிந்துகொணடு உடனடியாக செயல்படுத்தமுடியாது என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி விதன்டாவாதம் செய்வார்கள் ஏனெனில் அந்தஅளவிற்கு விண்டோவின் தாக்கம் அனைவரின் மனதிலும் நிறைந்துள்ளது மேலும் அந்த தாக்கத்தினால் இவ்விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதற்கு தயங்கி கொண்டு மேலேகூறிய வாதங்களை முன்வைப்பார்கள் அதனால் முதலில்  பின்வருமாறான ஏராளமான பயன்கள் ...

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Posted: 11 Jul 2013 03:09 AM PDT

சூரியன் பூமியை விட பெரியது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சூரியனுக்குள் எத்தனை பூமி கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது?

பதில் இன்று இரவு 8,00 மணிக்கு ...

உறவுகளின் பதில்களை அறிந்த பிறகு  ...

நான் உன்னை காதலித்ததும் ..

Posted: 11 Jul 2013 01:59 AM PDT

கடவுள் இதுக்கும் ..
இடம் கோயில் ...
நீ என் இதயத்தில் ..
இருப்பதால் தான் ..
என் இதயத்தை ...
இதயக்கோயில் ..
என்கிறேன் ...!!!
கோயிலுக்கு செல்வது ..
மனிதனாக ...என்றால்
நான் உன்னை காதலித்ததும் ..
மனிதனாகத்தான் ....


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™