Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முத்தத்திற்கு காபி இலவசமாம்!… ரொம்பவே வினோதமா இருக்கு

Posted: 07 Jun 2013 10:41 PM PDT

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேநீர் கடையொன்றில் முத்தத்துக்கு இலவசமாக காப்பி வழங்கும் திட்டமொன்றை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இதையொட்டி அங்கு ஜோடிகள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த 'முத்த காப்பி' திட்டம் இம்மாதம் மட்டும், அதுவும் காலை 9 மணி முதல் 11 வரை தான் செல்லு படியாகுமாம். இந்த திட்டத்தின் படி கடைக்கு வரும் திருமணமான தம்பதிகளோ அல்லது காதலர்களோ தங்களுக்கிடையே முத்தத்தை பரிமாறிக் கொண்டால் அவர்கள் ஆர்டர் செய்யும் காபிக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லையாம். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Posted: 07 Jun 2013 02:25 PM PDT

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 2-வது லீக் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பர்ஹட் மற்றும் ஜம்ஷெட் விளையாடினார்கள். பர்ஹட் 2 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த முகமத் ஆபிஸ் 4 ரன்னிலும்,  சகிப் 0 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் வந்த மிஸ்பா [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

3ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 9ம் வகுப்பு மாணவன் கைது… புதுச்சேரியில் கொந்தளிப்பு

Posted: 07 Jun 2013 02:18 PM PDT

 புதுச்சேரியில் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். நேற்று இரவு சிறுவன் [...]

ராஜ்யசபா தேர்தல்: அதிரடியாக 6வது வேட்பாளரை நிறுத்த ஜெ. ப்ளான்?

Posted: 07 Jun 2013 02:08 PM PDT

ராஜ்யசபா தேர்தலில் தமிழக பிரதான அரசியல் கட்சிகள் குழம்பிப் போய் தவிக்கும் நிலையில் ஆளும் அதிமுகவோ அதிரடி வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் அக்கட்சியின் சார்பாக தேர்வாவது உறுதியானது. எஞ்சிய எம்.எல்.ஏக்களின் ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிப்பதாக அதிமுக கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழா்களுக்கான அரசியல் தீர்வொன்றை இறக்குமதி செய்ய முடியாது! இந்திய குழுவிடம் ஜனாதிபதி!

Posted: 07 Jun 2013 02:06 PM PDT

தமிழர்களின் குறைகளைத் தீர்க்கும் நிறைவான அரசியல் தீர்வொன்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது எனவும் அது ராஜபக்ச – சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரை இன்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்த கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. அரசியல் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங், தயாநிதி மாறன் பெயரை சேர்க்க கோரிய மனு தள்ளுபடி!

Posted: 07 Jun 2013 02:00 PM PDT

ஸ்பெட்க்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்களை சேர்க்கக் கோரிய மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த நபருக்கு ரூ20 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் விதித்தது. ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளரான விகேக் கார்க் என்பவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் பிரதமர் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழ். போதனா வைத்தியசாலை நிகழ்வில் அழையா விருந்தாளியாக நுழைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Posted: 07 Jun 2013 01:57 PM PDT

யாழ். போதனா வைத்தியசாலையின் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அழையா விருந்தாளியாக அமைச்சர் ஒருவர் கலந்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கிழக்கு ரோட்டரிக் கழகத்தினால் யாழ். போதனா வைத்தியசாலை சிறுவர் புற்றுறோய் விடுதிக்கு நவீன வசதிகளுடனான கட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. காலை 11 மணிக்கு ரோட்டரிக் கழகத்தினால் குறித்த விடுதி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் சப்பிரதாய பூர்வமாக கையளிக்கப்படவிருந்த வேளை திடீரென நுழைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

எக்னெலிகொடவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: அருந்திக எம்.பி

Posted: 07 Jun 2013 01:55 PM PDT

தலையை மொட்டையடித்துக் கொண்டு பிரான்ஸில் மறைந்திருந்து தாய் நாட்டுக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொடவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினரும் உளவுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டுமென அருந்திக பெர்ணான்டோ எம்.பி. இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த 5ஆம் திகதி பத்திரிகை பேரவை சட்ட மூல விவாதத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொடவை பிரான்ஸில் அருந்தித பெர்ணான்டோ எம்.பி. சந்தித்ததாக கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் அச்சு இலத்திரனியல் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் இயங்கும் ரொறன்ரோவின் குரல் அமைப்பினால் 18 லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ வாகனம் கிளிநொச்சியில் கையளிப்பு!

Posted: 07 Jun 2013 01:51 PM PDT

கனடாவில் அதிகளவு தமிழ் அன்பர்களை இயக்குனர்களாக கொண்டு இயங்கிவரும் Toronto Voice of Humanity என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் மனிதாபிமானத்திற்கான ரொறன்ரோவின் குரல் என்னும் அமைப்பினால்… …18 லட்சம் ரூபா பெறுமதியான வாகனம் சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களினால் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் நா.வை. குகராசா மற்றும் உப தவிசாளர் வ. நகுலேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.. கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் சுகயீனம் காரணமாக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியல்வாதிகளுக்கும் விலைமாதுக்களுக்கும் வேறுபாடு இல்லை!- தி ஐலண்ட்

Posted: 07 Jun 2013 01:48 PM PDT

ஒழுக்கம் தொடர்பில் கதைக்கும் அரசியல்வாதிகளுக்கும் கற்பு தொடர்பில் கதைக்கும் விலை மாதுக்களுக்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை என கொழும்பிலிருந்து வெளியாகும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. ஊடக ஒழுக்கக் கோவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலமொன்றை கொண்டுவர அரசாங்கம் மேற்கொள்ளும் பிரயத்தனத்திற்கே ‘தி ஐலண்ட்’ பத்திரிகையின் நேற்றைய ஆசிரியர் தலையங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களை நிர்வகிப்பதற்காக மடிக்கணனி மற்றும் பிரம்புகளின் பிரவேசத்துடன் அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்கக் கோவை ஒன்றை திடீரென அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் அதில் விளக்கப்பட்டுள்ளது. மடிக்கணனி [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™