Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நம்புங்கள்!… இவர் உண்மையான மனிதர் தான்.

Posted: 28 Jun 2013 11:18 PM PDT

நம்புங்கள்!… இவர் உண்மையான மனிதர் தான்.

This posting includes an audio/video/photo media file: Download Now

BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 28 Jun 2013 10:36 PM PDT

சிறந்த தொலைபேசி வகைகளுள் ஒன்றான BlackBerry இன் புதிய வெளியீடான BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசியானது கடந்த வாரம் டுபாயில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட், 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன. இது தவிர 2GB RAM பிரதான நினைவகத்தினைக் கொண்டுள்ள இவற்றில் 8GB [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பங்களாதேசுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக சலுகை அமெரிக்காவினால் வாபஸ்-அதிர்ச்சியில் பங்களாதேஸ்

Posted: 28 Jun 2013 10:27 PM PDT

பங்களாதேசுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக சலுகை நடைமுறையை மீளப்பெற்றுக் கொள்ள அமெரிக்க அரசு எடுத்துள்ள முடிவினை பங்களாதேஸ் அரசு விமர்சித்துள்ளது. பங்களாதேசில் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் நிலைமைகள் அபாயகரமானதாக உள்ளதாக சுட்டிக்காட்டியே அந்நாட்டுடனான சிறப்பு சலுகைத் திட்டம் அமெரிக்காவினால் வாபஸ் பெறப்படுகின்றது. இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக பங்களாதேஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆடைத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊக்குவிக்க தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஸ் கூறுகிறது. கடந்த ஏப்ரலில் தலைநகர் டாக்கா அருகே தொழிற்சாலை கட்டிடமொன்று [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்நோடனை மன்னிக்க இயலாது – ஒபாமா அறிக்கை

Posted: 28 Jun 2013 10:22 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட ஸ்நோடென்னை மன்னிக்க முடியாது. அதே சமயம் மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள அவரை கொண்டுவர அமெரிக்காவின் விமான படை விமானத்தை அனுப்ப இயலாது. சட்டத்தின் வழிமுறைகளின்படி இந்த விவகாரம் கையாளப்படும். இந்த விவகாரத்தில் ரஷ்யா, சீனாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன என்று கூறியுள்ளார். இதனால் அந்த நாடுகளுடன் நட்புறவு பாதிக்குமா என நிருபர்கள் கேட்டதற்கு, ஒரு சில நடவடிக்கைகளை வைத்து இரு [...]

இலங்கை ராணுவத்தினரால் 578 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது – வைகோ

Posted: 28 Jun 2013 09:54 PM PDT

சிங்கள ராணுவத்தினரால், இதுவரை 578 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், இப்பிரச்னைக்கு தீர்வு காணாமல் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ பேசினார். ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான்கரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன். மக்கள் பிரச்னைக்காக 5,000 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். தன்மானம், சுயமரியாதை எங்களுக்கு இரு கண்கள். நாங்கள் இமயமாக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறோம். “ஸ்டெர்லைட்’ ஆலை பிரச்னைக்காக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிவசங்கர் மேனனின் வருகைக்கு முன்பு பஷில் ராஜபக்ஷ இந்தியா விஜயம்!

Posted: 28 Jun 2013 09:48 PM PDT

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜூலை 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூதுவராகவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடெல்லிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விஜயம் அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் வடக்கு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ரைம் சஞ்சிகை இலங்கையில் தடைசெய்யப்படுமா?

Posted: 28 Jun 2013 09:38 PM PDT

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மியான்மாரில் தலைமை தாங்கும், பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் சிறிலங்காவில் தலைதூக்கும் பௌத்த பிக்குகளின் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்னாள் போராளிகளுக்கு பயிற்சியளிக்கவுள்ள அமெரிக்கர்!

Posted: 28 Jun 2013 09:28 PM PDT

அமெரிக்கா பென்சல்வேனியா கால்பந்தாட்ட பயிற்சியாளரான மெட் பில்மன் வடக்கிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். ஜுலை 21 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 05 ஆம் திகதிவரை வடக்கில் அவர் தங்கியிருப்பதுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியளிக்கவுள்ளார். அவர், வடக்கில் சுமார் 500 பேருக்கு கால்பந்தாட்ட பயிற்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி, சமுகத்திறன், விளையாட்டுத்திறன் மற்றும் போசாக்கு நிறைந்த ஒரு பொதுவழியாகவே கால்பந்தாட்டத்தை அவர் இனங்கண்டுள்ளார். இவர் ஆபிரிக்காவிலும் இவ்வாறான பயிற்சிகளை அளித்துள்ளதாகவும் அவருடன் இன்னும் சில பயிற்சியாளர்களும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு மாத காலத்துக்குள் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்

Posted: 28 Jun 2013 09:25 PM PDT

இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

கெய்ல் அதிரடி : இலங்கை 6 விக்கெட்டுக்களால் தோல்வி

Posted: 28 Jun 2013 09:18 PM PDT

இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பமானது. இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய முதல்நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்த தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™