Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பழநியில் 47 ஆண்டுகளாக 'நிற்காத வின்ச்': 'ரோப் காரில்' தொடருது சோகம்

Posted:

பழநி : பழநியில் 2004ல் துவக்கப்பட்ட ரோப்காரில், இதுவரை 2 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ஜப்பான் தொழில்நுட்பத்துடன் இயங்கும், முதலாவது "வின்ச்', 47 ஆண்டுகளாக, எவ்வித பழுதும் ஏற்படாமல், ஓடிக் கொண்டிருக்கிறது.தரையில் இருந்து, 426 மீட்டர் உயரத்தில் உள்ள, பழநி மலைக்கோயிலுக்கு, படிப்பாதை (689படிகள்), யானைப்பாதை வழி செல்லலாம். எளிதாக, மலைக் கோயிலுக்கு செல்ல வசதியாக, "வின்ச்' (மின் இழுவை ரயில்), "ரோப்கார்' உள்ளன.

@subtitle@47 ஆண்டுகள்:@@subtitle@@
முதல் "வின்ச்' க்கான இயந்திர, உபகரணங்கள், ஜப்பானில் இருந்து (ஹிட்டாச்சி) வரவழைக்கப்பட்டன. மின் இணைப்பிற்கான பணிகளை, தேவஸ்தானம் ...

தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் "ஒயிட் காலர்' குற்றங்கள்

Posted:

தமிழகத்தில், திருட்டு, கொள்ளை குற்றங்கள் ஓரளவு குறைந்து வரும் நிலையில், இன்டர்நெட், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தொடர்பான, "ஒயிட் காலர்' குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, மக்கள் தொகையும் உயர்ந்து வருகிறது; குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.கடந்த, 10 ஆண்டுகளாக, தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் அதிகரித்து விட்டன. அதுவும், ஆன்-லைன் பேங்கிங், ஆன்-லைன் வர்த்தகம், டெபிட், கிரெடிட் கார்டுகள் வந்துவிட்ட பின், பொதுமக்கள், வங்கிக்கோ, கடைகளுக்கோ நேரில் செல்வதை குறைத்துக் கொண்டனர். வசதியுள்ள பலரும், ஆன்-லைனில், தங்களுக்கு ...

மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Posted:

சென்னை : "இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தொடர்ந்து, இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள, ராணுவ பயிற்சி கல்லூரியில், இலங்கை ராணுவ அதிகாரிகளான, விங் கமாண்டர் பண்டார தசநாயகே, மேஜர் ஹரிஷ் சந்திரா ஹெட்டியராசிச்சி ஆகிய ...

இலங்கை அரசின் அடாவடி: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Posted:

சென்னை :"இலங்கை அரசியல் சட்ட, 13வது திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை, தடுத்து நிறுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.பிரதமருக்கு, கருணாநிதி எழுதிய கடித விவரம்:கடந்த, 1987ல் ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை அரசியல் சட்ட, 13வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, சிங்கள பயங்கரவாத குழுவான, "ஜாதிகா ஹெலா உருமய' என்ற அமைப்பு இறங்கியுள்ளது.இதுகுறித்து, தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இலங்கையில், செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் ...

தமிழகத்தில் 26.5 சதவீத மின் பற்றாக்குறை இருக்கும்: மத்திய மின் ஆணையம் கணிப்பு

Posted:

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின், 17 மாநிலங்களில், கணிசமான அளவு மின் பற்றாக்குறை நிலவும். இதில், தமிழகத்தில் தான், மிக அதிகமாக, 26.5 சதவீத மின்பற்றாக்குறை இருக்கும் என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

@subtitle@புள்ளி விவரம்:@@subtitle@@
நாட்டின் மின் தேவை எவ்வளவு, எந்த அளவு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது என்பது குறித்து, மத்திய மின் ஆணையம், அவ்வப்போது புள்ளி விவரம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு நிதியாண்டில், மின் பற்றாக்குறை எந்த அளவு உள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டிலேயே மிக அதிகமாக, மின் பற்றாக்குறையால் ...

எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாத போலீசாருக்கு ஓராண்டு சிறை

Posted:

புதுடில்லி: "முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) உடனடியாக பதிவு செய்யாத போலீசார், அதிகபட்சம், ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்படுவர். எனவே, குற்றங்கள் நிகழ்ந்த, தகவல் அறிந்த உடனேயே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்' என, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.டில்லியில், கடந்த ஆண்டு, மருத்துவ மாணவி, கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும், 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்திலும், போலீசார், உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை என்பது, புகாராக ...

அம்மாடியோவ்...! ரூ.642 கோடி: மன்மோகன் வெளிநாட்டு பயணச்செலவு

Posted:

புதுடில்லி:"கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக, 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது' என, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தகவல் பெறும் உரிமைச் சட்டத் தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கான செலவு குறித்து கேட்கப்பட்ட தகவலுக்கு, பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் தெரிவித்து உள்ளதாவது:பிரதமர், மன்மோகன் சிங், 2004ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு வரை, 67 நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், 63 பயணங்களுக்கான செலவுகள் குறித்த விவரங்கள் பதிவு ...

லோக்சபா தேர்தல் பிரசார குழு தலைவரானார் மோடி: அத்வானியை தாண்டி இளைய அணி பா.ஜ.,வில் தயார்

Posted:

பனாஜி:அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைய தலைவர்கள் அணியை முன்னிறுத்தி, மோடிக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளது. இவர்கள் தலைமையில், கட்சியில் அமைய உள்ள புதிய பாதை, இரண்டு லோக்சபா தேர்தலில் கட்சி சந்தித்த தோல்வியை, இந்த முறை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

@subtitle@விவாதம்:@@subtitle@@
பாரதிய ஜனதா கட்சியின், இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், கோவா மாநிலம், பனாஜியில், நேற்று முன்தினம் துவங்கியது. இந்தக் கூட்டத்தில், ...

தமிழகம் முழுவதும் 900 நர்சரி பள்ளிகள் மூடல்: கல்வித் துறை கெடுபிடியால் குழப்பம்

Posted:

சென்னை: அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள், இன்று துவங்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடு குறித்து அரசு அறிவிக்காததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 7,000த்திற்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகளும், 4,500க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.தனியார் பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், தேவராஜன் ...

வாஜ்பாய்க்கான மருத்துவ செலவு எவ்வளவு? விவரம் தர மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

Posted:

புதுடில்லி:"முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கான மருத்துவ செலவு எவ்வளவு என்பதை, 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்' என, சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பா.ஜ., கட்சியைச் சேர்ந்த வாஜ்பாய், 1996ம் ஆண்டில், 13 நாட்களும், 1998 - 1999ம் ஆண்டுகளில், 13 மாதங்களும், 1999 முதல் 2004 வரை, ஐந்தாண்டுகளும் பிரதமராக பதவி வகித்தார். அப்போது, அவருக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை உட்பட, பல விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன."இந்த சிகிச்சைகளுக்கான செலவுகள் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும்' எனக்கோரி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்தில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™