ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நினைவுகளின் பதிவு - ஆதிரா
- ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
- பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை ; இதுவரை நடக்காத புதிய சர்ச்சை !
- திரு மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
- வேலன்:-விதவிதமான அப்ளிகேஷன்கள்-ஒரே சாப்ட்வேரில்.
- சிங்கப்பூரில் இணையத் தள அனுமதிக்கு எதிராக வலைப்பதிவாளர்கள் பேரணி
- பாலகுமாரன் நாவல் - 1
- இந்திய ஆட்சி பணியாளர் சகாயம் பேச்சு : அமெரிக்க தமிழ் சங்கம் காணொளி !கண்டிப்பாக பார்க்கவும் !!!!!!!!!!!!!
- மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..!
- விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!
- காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை
- குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும்
- வரும்... ஆனால் வராது...!
- ருசியான ஊறுகாய்கள் - ஆவக்காய் - photo
- தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை
- அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
- திரு கே. பாலா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள்
- நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி!
- போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி.......மேலே படியுங்கோ :)
- ஐஸ்கிரீம் வகைகள் - 'குல்பி' - போட்டோவுடன்
- வழக்கொழிந்த அளவுகள்
- தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு
- ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்....
- பண்டைத் தமிழனின் வானியல் ஆய்வு!
- சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
- Mummyயும் அம்மாவும்...
- இலக்கண இன்பம்
- அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை
- இதுவரை ஈகரையில் பதிவிடப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் பகுதி - ஒரே பதிவில்!
- மனித நோய் தீர்க்கும் மயக்கும் ராகங்கள்
- குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
- வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள்
- புகை பிடிப்பவரா நீங்கள்?... அப்போ அவசியம் இதைப் பாருங்க...
- பிலிப்பைன்சில் மலைப்பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 12 பேர் பலி
- நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானை!
- தன்னேரிலாத தமிழ்
- கவிதையில் யாப்பு
- கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்!
- தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு!
| Posted: 09 Jun 2013 11:44 AM PDT நாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் "அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா?" என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் "எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்" என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். "சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா" என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக "செங்கல்பட்டுக்கா? ... |
| ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே Posted: 09 Jun 2013 11:25 AM PDT ஈகரையின் சிறப்புக் கவிஞராக உயர்வு பெற்றுள்ள திரு ரமணி அவர்களை நமது ஈகரை சார்பாக வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் சிறப்பான கவிதை மற்றும் படைப்பால் ஈகரை மென்மேலும் மெருகூடும் என்பது திண்ணம். தாங்கள் கவிதையில் ஒரு யாப்பு நாங்கள் தெரிந்து கொள்ள நல் வாய்ப்பு உங்கள் பதிப்பு காட்டும் இலக்கண சிறப்பு எங்களுக்கு என்றென்றும் சிறப்பு வகுப்பு. கவியை கவிதையால் வரவேற்பது மரபென்றோ |
| பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை ; இதுவரை நடக்காத புதிய சர்ச்சை ! Posted: 09 Jun 2013 11:12 AM PDT போபால்: மத்திய பிரதே மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தி வைக்கப்பட்ட மாஸ் திருமணத்தில் தாலி கட்டும் முன்னதாக பல பெண்களுக்கு கன்னித்தன்மை குறித்த சோதனையும், கர்ப்பம் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டது. இது இந்த மாநில அரசுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. முதல்அமைச்சர் 'கன்யா தான் யோஜனா' என்ற திட்டத்தின்படி இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு இங்கு பெரும் வரவேற்பு உள்ளதால் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல், ... |
| திரு மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! Posted: 09 Jun 2013 10:59 AM PDT இன்று தனது 40-வது திருமண நாளைக் கொண்டாடும் திரு மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! ![]() |
| வேலன்:-விதவிதமான அப்ளிகேஷன்கள்-ஒரே சாப்ட்வேரில். Posted: 09 Jun 2013 10:36 AM PDT XTREME CALCULATOR என பெயரிட்டுள்ள இந்த சாப்ட்வேரில் நோட்ஸ்.ஜியோமென்ட்ரி.தேதி வித்தியாசம் காண.விதவிதமான கால்குலேசன் மற்றும் கூடுதல் கணக்கீடுகளை உள்ளக்கி உள்ளது. 14 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செயதிடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் இடதுபுறம் Notes.Geomentry.Date Differnece.Main Calculating and Equations என 5 விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வலதுபுறம் தேதியின் காலண்டரும் கெடிகாரமும் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள ... |
| சிங்கப்பூரில் இணையத் தள அனுமதிக்கு எதிராக வலைப்பதிவாளர்கள் பேரணி Posted: 09 Jun 2013 10:21 AM PDT சிங்கப்பூரில் உள்நாட்டு செய்தி இணையத் தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய அனுமதி நிபந்தனைகளை மீட்டுக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் பொருட்டு ஹொங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் அரங்கில் 2,500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். #FreeMyInternet என அழைக்கப்பட்ட வலைப்பதிவாளர் குழு ஒன்று அந்த அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜுன் முதல் தேதி செய்தி இணையத் தளங்கள் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. அந்த நடவடிக்கை தணிக்கை செய்வதற்கான முயற்சி என்றும் இணையத்தில் ... |
| Posted: 09 Jun 2013 09:40 AM PDT நாவல் வரிசையில் இன்னொரு நாவல் : பாலகுமாரனின் - சரிகை வேட்டி (Sarigai Vetti - Balakumaran) கீழேயுள்ள லிங்கில்..... Download : பாலகுமாரனின் - சரிகை வேட்டி - http://depositfiles.com/files/qopdxctwy நேரடி லிங்க் : http://try2get.blogspot.com/2010/11/1.html Author: பாலகுமாரன் Type: PDF Size: 4.2 MB ------------- Download செய்து படித்து மகிழுங்கள். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன, பின்னூட்டங்களை பொறுத்தே மேலும் பல நாவல்கள் வலையேற்றம் செய்யப்படும். (முக்கிய குறிப்பு: ... |
| Posted: 09 Jun 2013 09:38 AM PDT |
| மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து..! Posted: 09 Jun 2013 09:36 AM PDT டெல்லி: பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும் வாழ்த்து தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவில் நடந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, தேசிய பிரசாரக் குழுத் தலைவராக நியமித்து அறிவித்தார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அவருக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,மோடிக்கு அத்வானியின் ... |
| விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது! Posted: 09 Jun 2013 09:19 AM PDT https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash4/485612_504231496316619_159504384_n.jpg திருத்தணி: திருவள்ளூர் டிடி மருத்துவக் கல்லூரி தாளாளர் தீனதயாளன் நாயுடு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் குன்னவலத்தில் உள்ள டி.டி மருத்துவக் கல்லூரியின் தலைவர் தீனதயாளன் நாயுடு அனுமதியின்றி மருத்துவக்கல்லூரி தொடங்கி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூல் செய்தார் என்பது தீனதயாளன் மீதான புகாராகும். இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தீனதயாளனை ... |
| காதலில் தோப்பது ஆண்களா பெண்களா மனோரஞ்சன் எழுதும் சிறிய கட்டுரை Posted: 09 Jun 2013 09:14 AM PDT காதலில் தோப்பது ஆண்களா பெண்களா காதலில் தோப்பது அதிகம் ஆண்கள் என்று தான் நினைப்பீர்கள் ஆனால் காதலில் அதிகம் தோப்பது பெண்கள் தான் என்று யாருக்கும் தெரியாது காதல் தோல்வியில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தான் உண்மை காதல் தோல்வி இருவருக்கும் அதிகம் உண்டு காதல் தோல்வியற்ற ஆண் என்ன செய்வார்கள் தெரியுமா என்னை ஏமாற்றிவிட்டால் இந்த பொப்பலிங்களே இப்படி தான் நம்ப வச்சி கயித்த அருத்துவிட்டால் என்று அப்படி இப்படி என்று பேசுவதால் அதிகம் காதல் தோல்வி ஆண்கள் தான் ஆகிறர்கள் என்று ... |
| குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும் Posted: 09 Jun 2013 09:05 AM PDT |
| Posted: 09 Jun 2013 07:34 AM PDT தமிழ் எழுத்துகளில் ண, ழ, ள, ற, ன என்னும் எழுத்துகள் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அதேபோல "ற்' என்ற மெய்யெழுத்து மட்டும் சொல்லுக்கு இறுதியில் வராது. ந், ண், ன் ஆகிய மூன்று மெய்யெழுத்துகள் எந்தெந்த இடங்களில் வரும் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும். சிலர் இரண்டு சுழி "ன்' னா? மூன்று சுழி "ண்' னா? என்றெல்லாம் கேட்பார்கள். இதை அறிய மிகச் சுலபமாக வழி: தகர வரிசைக்கு முன் இந்த "ந்' தான் வரும். (எ.கா.) சந்து, மந்தி, பொந்து, தொந்தி, முந்து, குந்தி, பந்து, பந்தி, சிந்து, நந்தி. டகர வரிசைக்கு ... |
| ருசியான ஊறுகாய்கள் - ஆவக்காய் - photo Posted: 09 Jun 2013 07:33 AM PDT ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம். இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது |
| தமிழுக்கு பெருமை! - ஜூன் 12 - சேக்கிழார் குருபூஜை Posted: 09 Jun 2013 07:31 AM PDT பெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர். சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை சேக்கிழார் கவனித்து வந்ததால், அரசு நிர்வாக காரியங்களில் கை தேர்ந்தவர் ஆனார். அதனால், தந்தைக்குப் பின் சேக்கிழாருக்கு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சேக்கிழாரின் ... |
| அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா? Posted: 09 Jun 2013 07:21 AM PDT உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. 'ஒருவன்' என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். 'ஒருத்தி' என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்! 'ஒருவர்' என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை ... |
| திரு கே. பாலா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள் Posted: 09 Jun 2013 07:17 AM PDT திரு கே. பாலா அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள் இன்று பிறந்த நாள் காணும் நம் பாலா சாருக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள். |
| நள்ளிரவில் பிணங்களை எரிக்கும் வெட்டியான்(ள்) வைரமணி! Posted: 09 Jun 2013 07:15 AM PDT https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/7158_504221239650978_1992923057_n.jpg பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் பெரும்பாலோர் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்களாகத்தான் உள்ளனர், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது. இது போன்ற காரணங்களினால், எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில்தான் ... |
| போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி.......மேலே படியுங்கோ :) Posted: 09 Jun 2013 06:51 AM PDT சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி சென்று கொண்டிருந்தார். அவரைப்பார்த்த மாத்திரத்திலேயே, அவருக்கு பின்னால் ஒரு சுவராசியமான தகவல் இருக்கும் என்று தஞ்சாவூர் தினமலர் புகைப்படக்காரர் மணிகண்டனின் மனதில் பட, அதற்கான தேடலை தொடங்கினார். 57 வருடங்களாக தெருவில் போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி, தனது ஏழு பிள்ளைகளையும் திருமணம் ... |
| ஐஸ்கிரீம் வகைகள் - 'குல்பி' - போட்டோவுடன் Posted: 09 Jun 2013 06:44 AM PDT ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் |
| Posted: 09 Jun 2013 06:37 AM PDT = = = = = = வழக்கொழிந்த அளவுகள் 1 = = = = = = . . . . . . . . . . . . . பரப்பளவு . . . . . . . . . . . இன்றைய இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, இன்று வழக்கத்தில் இல்லாத பழைய அளவு முறைகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 144..சதுர அங்குலம்..= 1 சதுர அடி 9......சதுர அடி............= 1 சதுர கஜம் 484..சதுர கஜம்.........= 1 சதுர சங்கிலி 10...சதுர சங்கிலி......= 1 ஏக்கர் 436.....சதுர அடி.........= 1 செண்ட் 100.....செண்ட்............= ... |
| தலித் மாணவன் தலையில் செருப்பு சுமக்க வைத்து தண்டனை… போலீஸ் வலை வீச்சு Posted: 09 Jun 2013 06:19 AM PDT மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செருப்பு அணிந்து நடமாடிய தலித் மாணவனை தலையில் செருப்பை சுமக்க செய்து தண்டனை வழங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6அம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறுபிரிவைச் ... |
| ஹாலே பெர்ரியின் இளமை ரகசியத்துக்கு காரணம் சக்கரை வியாதியாம்.... Posted: 09 Jun 2013 06:15 AM PDT ஹாலிவுட்டின் பிரபல நடிகை, ஹாலே பெர்ரி. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர். நடிப்பு திறமைக்காக, ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ள, பெர்ரிக்கு, இப்போது, 46 வயது. ஆனாலும், ஹாலே பெர்ரியின் மனதில் மட்டுமல்ல தோற்றத்திலும், இளமை ஊஞ்சலாடுகிறது. இந்த வயதில், அம்மணி கர்ப்பமாக இருக்கிறார். "உங்கள் இளமை ரகசியம் என்ன' என, பத்திரிகையாளர்கள் கேட்டபோது," எனக்கிருக்கும் சக்கரை வியாதி தான், என் இளமை ரகசியத்துக்கு காரணம்' என, குண்டை தூக்கி போட்டார். மேலும், அவர் கூறுகையில், ... |
| பண்டைத் தமிழனின் வானியல் ஆய்வு! Posted: 09 Jun 2013 06:14 AM PDT பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய "நெடுநல்வாடை' என்னும் நூலில் வரும் பாடலில் "இருகோல் குறிநிலை' என்ற சொற்றொடர் வருகிறது. அதைப் பற்றி விரிவாகக் காண்போம். பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில் வேலையைத் தொடங்குகிறார்கள். "....... ...... ....... மாதிரம் விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம் இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து -" (நெடு 72-75) இதன் பொருள்: "திசைகள்(எல்லாவற்றிலும்) ... |
| சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி Posted: 09 Jun 2013 04:29 AM PDT தமிழின் சுவை சொல்வதற்கரியது, சுவைக்க சுவைக்க தெவிட்டாத தித்திக்கும் தேன்சுவை நம் தமிழின் சுவை. காதலர் ஒருவரை ஒருவர் காணும் பொழுது, முன்பின் காணாதவர் போல் நடந்துகொள்வர். இது காதலரின் இயல்பென வள்ளுவரும் வக்காலத்து வாங்குகிறார். மற்றவருக்கு புரியாவண்ணம் ஜாடையாக பேசி, தங்களுக்குள் தகவல் பரிமாறும் திறமை காதலருக்குண்டு. காதலன் காதலியிடன் தன் ஆசையை சொல்ல தகுந்த சூழ்நிலை அமையாதிருக்கும் தருணத்தில் தன் ஆசையை சுற்றி வளைத்தெழுதிய இப்பாடலின் தமிழ்ச்சுவையை பருகுவோம். ஒருநான்கு மீரரையு மொன்றே ... |
| Posted: 09 Jun 2013 03:05 AM PDT ![]() நன்றி:FB |
| Posted: 09 Jun 2013 02:23 AM PDT < < < < < இலக்கண இன்பம் - 1 > > > > > இந்த புதிய இழையில் இலக்கணம் பற்றி சில பகுதிகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த முதல் இலக்கணப் பகுதியில் ஒருபொருட் பன்மொழி என்ற சொல்லிலக்கண பகுதியினை அவதானிப்போம். - - - - - ஒருபொருட் பன்மொழி - - - - - இமயமலைத் தொடரானது உயர்ந்து ஓங்கிய மலைத் தொடராகும். இந்த சொற்றொடரில் உயர்ந்து,ஓங்கிய-என்ற இரு சொற்க(மொழி)ளும் உயர்ந்தது என்ற ஒரே பொருளைத்தான் அளிக்கின்றன. இங்ஙனம் செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு ஒரே பொருளைக் தரும் ... |
| அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை Posted: 09 Jun 2013 02:22 AM PDT திருநெல்வேலி: பள்ளிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடையின் கொடிய தாக்கத்தால் 10ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. எனினும், பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தொடர்ந்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு ... |
| இதுவரை ஈகரையில் பதிவிடப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் பகுதி - ஒரே பதிவில்! Posted: 09 Jun 2013 02:18 AM PDT . ...............ஆ!!! by ராஜ்அருண் 1 1-2-3 Magic: Effective Discipline for Children (123 Magic) by kavinele 3 3D ENGLISH GRAMMER SOFTWARE by selva_84k 3டி சினிமா பற்றிய ஒரு தொகுப்பு தமிழில்... by பிரசன்னா 4 4Shared Folderல் - அமரர் கல்கியின் 10 நாவல் மற்றும் 75 சிறுகதைகள் by பிரசன்னா 4shared link ல் - வாரமலர் , கு. ரி , ஆ .வி, குமுதம் ..... by பிரசன்னா 1 10 Most Powerful Health Foods by kavinele 11 Steps to Create a Successful Web Site by kavinele 17 Collection ... |
| மனித நோய் தீர்க்கும் மயக்கும் ராகங்கள் Posted: 09 Jun 2013 02:00 AM PDT இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மனிதன் பிறக்கும் பொது " ஆ…. என்ற ஒலியை எழுப்பியவாறே பிறக்கிறான்.பிறந்த பின் தாலாட்டும், இறந்த பின் ஒப்பாரியும் இக்குழந்தைக்கு பிற மனிதர்களால் பாடப்படுகிறது. ஆக இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், அவ்வாறு மன அழுத்தம் ஏற்படுகிறபோது அதிலிருந்து ... |
| குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Posted: 09 Jun 2013 01:40 AM PDT குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . செல் 8428729494.kavignareagalaivan@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் ,சன்னியாசிகுண்டு ,சேலம் .636015. விலை ரூபாய் 60. நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு ... |
| வேலன்:-உலகில் உள்ள அனைத்து நாட்டின் கொடிகள் Posted: 09 Jun 2013 12:04 AM PDT இருந்திடலாம் நாட்டில் பல வண்ணகொடி -எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி...பறக்கவேண்டும் என்றும் ஒரு சின்ன கொடி...என புரட்சிதலைவர் அவர்கள் விவசாயி படத்தில் பாடலை பாடுவார். சில நாடுகளின் கொடிகள் நமக்கு தெரியும். தெரியாத நாடுகள் தெரியாத கொடிகள் ஏராளம். உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கொடிகளை பற்றி இந்த புத்தகத்தில் கொடுத்துளளார்கள். 30 எம்.பி. கொள்ளளவு கொணட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இந்த் புத்தகத்தில் விதவிதமான நாடுகள் அதனுடைய கொடிகளின் டிசைன்கள். மற்றும் அந்த டிசைனுக்கு ... |
| புகை பிடிப்பவரா நீங்கள்?... அப்போ அவசியம் இதைப் பாருங்க... Posted: 08 Jun 2013 11:26 PM PDT நன்றி: FB |
| பிலிப்பைன்சில் மலைப்பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 12 பேர் பலி Posted: 08 Jun 2013 10:03 PM PDT https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/972151_504241046315664_521977509_n.jpg பிலிப்பைன்சின் வடக்கு பகுதி மலைகள் நிறைந்த லா ட்ரினிடாட் பகுதியில் அரசியல் கூட்டத்திற்கு சென்று விட்டு மக்கள் பேருந்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 262 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தனர். படுகாயமடைந்த 9 பேருக்கு ... |
| நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானை! Posted: 08 Jun 2013 09:58 PM PDT இக்காலத்துப் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை ஒரு கலையாகவே கற்றுள்ளனர். மேலும், "என் மகன் பத்து வேலைகளைப் பத்து விரல்களால் செய்வான்' என்று பாராட்டிப் பேசுவதைப் பல வீடுகளில் கேட்கலாம். சங்ககாலத் தாய், போருக்குச் சென்ற தன் மகனைப் பற்றிப் பெருமிதத்தடன் பேசும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. இவை எல்லாம் ஆறறிவு படைத்த மனித குலத்தோரின் திறமைகள். ஆனால், நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி ஓர் அற்புதமான ஆற்றலைக் கொண்டது சோழ மன்னன் ... |
| Posted: 08 Jun 2013 09:51 PM PDT "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்" – தண்டியலங்காரவுரை மேற்கோள் 4000 ஆண்டுகளுக்கு முன் ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல் திராவிட மொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற திராவிட மொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ... |
| Posted: 08 Jun 2013 07:45 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Posted: 08 Jun 2013 07:00 PM PDT முருகன் என்றாலே அழகன். அவன் கோவில் கொண்டுள்ள தலங்களும் அழகானவை என்று சொல்லவா வேண்டும்! அத்தகையதோர் எழில்மிக்க தலம் வயலூர். எங்கெங்கும் பசுமை தவழும் வயல்கள்... இனிய சூழல்... இயற்கையாகவே இறைநாட்டம் நம்மைவந்து அரவணைக்கும் உணர்வு. வயலூர் என்றாலே நமக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவுக்கு வருவார். சில நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரியாரும் மனதில் தோன்றுவார். சித்தர்கள் தேடிவந்து முக்திபெற விரும்பும் தலம் வயலூர் என்பார்கள். இங்கே ஆலயம் அமைந்த வரலாறு என்ன? முற்காலத்தில் சோழமன்னன் ... |
| தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு! Posted: 08 Jun 2013 05:10 PM PDT ஆதாளியை ஒன்று அறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கிறைவா வேதாள கணம் புகழ் வேலவனே மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

