Tamil News | Online Tamil News |
- மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க., செயற்குழுவில் பாய்ச்சல் : கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு
- கோவா பா.ஜ., செயற்குழுவை அத்வானி புறக்கணிப்பு: வீடு முன் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
- தொகுதி நிதி ஒதுக்கீட்டில் இந்திரா குடும்பத்தினர் அசட்டை: வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் முடக்கம்
- திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!
- இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட வழக்குகள் சி.பி.ஐ., வசம் மாறுமா?
- தமிழக போலீசில் சிக்கல்: எஸ்.ஐ., முதல் கூடுதல் டி.ஜி.பி., வரை அதிகாரிகள் பற்றாக்குறை
- சரம், சரமாக தொங்கும் குட்கா, பான் மசாலா :காற்றில் பறந்தது தடை உத்தரவு
- உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு? க.ராமையா
- பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு: ஆய்வில் தகவல்
- சாதித்து காட்டுங்க; இல்லையேல் பதவி பறிபோகும்: காங்., முதல்வர்களுக்கு சோனியா எச்சரிக்கை
| Posted: சென்னை : கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும், மத்திய அரசு செயல்படுவதாக, அ.தி.மு.க., கடுமையாக சாடியுள்ளது. கட்சியின் செயற்குழுவில், மத்திய அரசை கண்டித்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், சென்னையில், நேற்று மாலை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார், என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மற்ற கட்சிகளும், அ.தி.மு.க.,வின் முடிவை எதிர்பார்த்தன. வரவேற்பு:பரபரப்பான சூழலில் ... |
| கோவா பா.ஜ., செயற்குழுவை அத்வானி புறக்கணிப்பு: வீடு முன் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் Posted: கோவா, பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்த, அவர் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதை அறிந்த, கட்சியின் மூத்த தலைவர், அத்வானி, அந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி அத்வானி வீடு முன், கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| Posted: ஆண்டாண்டு காலமாக, மத்திய அரசிலும், அரசியலிலும் முன்னணி வகிக்கும் இந்திரா குடும்பத்தினர், தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல், அசட்டையாக உள்ளனர். எம்.பி.,க்கள் தொகுதி நிதியை அவர்கள், மிகக் குறைவாகவே செலவழித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய், தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்படுகிறது. இந்த நிதியை, தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு, எம்.பி.,க்கள் செலவழிக்க முடியும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் பல தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாக, இந்திரா குடும்பத்தினர் ... |
| திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...! Posted: திருப்பதி: திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு போலீஸ் பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 போலீசார் உண்டு. ஆனால், தினசரி, 200 போலீசார் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 போலீசாரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 போலீசாரும், பாதுகாப்பு ... |
| இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட வழக்குகள் சி.பி.ஐ., வசம் மாறுமா? Posted: இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்ட வழக்குகளை, சென்னை, மும்பை, டில்லி என, மூன்று மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். பல மாநிலங்களைச் சேர்ந்த, சூதாட்ட புரோக்கர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்குகளை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை, இந்த சூதாட்டம் தொடர்பாக, 30 பேருக்கு மேல் கைதாகியிருப்பதாக கூறப்படுகிறது. |
| தமிழக போலீசில் சிக்கல்: எஸ்.ஐ., முதல் கூடுதல் டி.ஜி.பி., வரை அதிகாரிகள் பற்றாக்குறை Posted: தமிழக போலீசில், எஸ்.ஐ., முதல் கூடுதல் டி.ஜி.பி., வரையிலான அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு ஆகிய விஷயங்களில், விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.காவல் துறையை பொறுத்தவரை, தேவைக்கேற்பவும், மக்கள் தொகை அடிப்படையிலும், போலீஸ் நிலையங்கள் அதிகரிக்கப்படும் போது, அதிகாரிகள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்திய நிலவரப்படி, காவல் துறையில், டி.ஜி.பி., முதல் கடை நிலை போலீசார் வரை, ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து, 310 பணியிடங்கள், ... |
| சரம், சரமாக தொங்கும் குட்கா, பான் மசாலா :காற்றில் பறந்தது தடை உத்தரவு Posted: கோவை :தமிழகத்தில் குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவு பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கடைகளில் அவற்றின் விற்பனை தாராளமாக உள்ளது. அரசாணையை அமல்படுத்த கமிட்டி அமைக்கும் அதிகாரிகள், காலத்தை விரயமாக்காமல் களத்தில் குதிக்க வேண்டும்.உலக சுகாதார நிறுவன ஆய்வில், "நடுத்தர வயது இளைஞர்கள், பெண்கள், குட்கா, பான்மசாலா, புகையிலை கலந்த உணவுப்பொருட்களை உட்கொள்வதால் பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் தாக்குதலில் 80 சதவீதம் லாகிரி வஸ்துகளால் ஏற்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், பான்மசாலா, குட்கா, புகையிலை ... |
| உரத்த சிந்தனை: கரை சேருமா கச்சத்தீவு? க.ராமையா Posted: தமிழக அரசியலில், இன்று கொதித்துக் கொண்டிருக்கும் பெரிய பிரச்னை, கச்சத்தீவு பற்றியது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களை காவு வாங்கியும், பசியடங்கா காலனின் கொடுமைக்கு காரணமான கச்சத்தீவின் பிரச்னைக்கு, அடிப்படை என்ன? தங்கத் தட்டில் வைத்து, கச்சத்தீவை தாரை வார்த்தது எப்படி சாத்தியமாயிற்று? தமிழகத்திற்கும், இலங்கைக்கும் நடுவே, தமிழகத்தின் தென்பகுதியில், ராமேஸ்வரத்திற்கு அருகில், ஒரு பொட்டு போல, கச்சத்தீவு உள்ளது. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம், 16 கி.மீ., தீவின் பரப்பளவு, 285 ஏக்கர். 20ம் நூற்றாண்டில், ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ... |
| பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு: ஆய்வில் தகவல் Posted: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட, 30 மாவட்டங்களில், 6 வயது முதல், 14 வரை உள்ளோர் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இக்கணக்கெடுப்பின்பின்படி, 2008-09ல், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 11,592 ஆக இருந்தது. 2010-11ல், 52,692 ஆகவும், 2011-12ல், 58,520 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, பள்ளி ... |
| சாதித்து காட்டுங்க; இல்லையேல் பதவி பறிபோகும்: காங்., முதல்வர்களுக்கு சோனியா எச்சரிக்கை Posted: புதுடில்லி : "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் வகையில், காங்., முதல்வர்களும், மாநில காங்., தலைவர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்; இல்லையெனில், பதவி பறிப்பு உட்பட, கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்' என, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா எச்சரித்துள்ளார்.15 மாநிலம்:காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கடந்த சில நாட்களாக, கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர் கூறியதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:காங்கிரஸ் தற்போது, 15 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. கூட்டணி கட்சிகள், இரண்டு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 09,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |