Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சிட்பண்ட் நிறுவனங்களுக்கு எதிரான மசோதா: மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை: மம்தா

Posted:

கோல்கட்டா: ""சிட்பண்ட் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மேற்கு வங்க அரசு கொண்டு வந்த நிதி நிறுவனங்கள் தொடர்பான மசோதாவை, மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை; சில விளக்கங்களை மட்டுமே கேட்டுள்ளது,'' என்று, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

@subtitle@பரபரப்பு:
மேற்கு வங்கத்தில், சாரதா குழும சிட்பண்ட் மோசடி வெளிச்சத்துக்கு வந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் பலர், கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதித்த பணத்தை, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி, சாரதா சிட்பண்ட் கம்பெனியில், ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் தலைகீழாக பறந்தது தேசியக்கொடி

Posted:

கோவை:கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடி தலைகீழாக பறந்தது; பொதுமக்கள் சுட்டிக்காட்டியதும், சரி செய்யப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலக பிரதான கட்டடம் தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் தினமும் காலை 6:00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாலை 6:00 மணிக்கு இறக்கப்படுவது வழக்கம். கலெக்டர் அலுவலக இரவு காவலர், இப்பணியை மேற்கொள்கிறார்.நேற்று காலை வழக்கம் போல், தேசியக்கொடி ஏற்றப்பட்டது. காலை 10:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் கூட்டம் அதிகரித்தது. வேளாண் துறை அமைச்சர் தலைமையில், வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டம் நேற்று ...

பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள் : ஓசூரில் 6 மாதத்தில் இரண்டு பேர் கொலை

Posted:

ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம் தேதி, இவரை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பேஸ்புக் மூலம், பிரவீன் காதலியை, ராகவ் வசியப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரமே, இந்த கொலைக்கு காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதே போல், 2012 டிச., 26 ல், ஓசூர், ராயக்கோட்டை, ஹட்கோவை சேர்ந்த செல்வம், 24, என்பவரும், பேஸ்புக் காதல் ...

ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தி கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது

Posted:

நியூயார்க் :சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல ...

"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

Posted:

கோவை :எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.விழிப்புணர்வு:குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், முதல் பருவ புத்தகத்தில், ஒன்பதாவது பாடமாக, "இப்படி நடந்தால்...' என்ற தலைப்பில், அந்த ...

கூடுதலாக 88,537 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: அரசு இலக்கு

Posted:

மத்திய மின் அமைச்சகம், 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், அனல், புனல் மற்றும் எரிவாயு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களின், மொத்த உற்பத்தி திறனை, ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக, 88,537 மெகாவாட் வரை அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளது.நாட்டின் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின், மொத்த உற்பத்தி திறன், 2, 23, 343.60 மெகாவாட். மத்திய அரசு, மின் நுகர்வோருக்கு, தரமான மற்றும் சீரான மின்சாரம் வழங்கல், தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பு (உற்பத்தி, பகிர்மான இழப்பு) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறது.நாளுக்கு நாள், தனி நபர் மின் நுகர்வு மற்றும் ...

இலங்கை பிரச்னைக்கு வெளிநாட்டிலிருந்து தீர்வு காணமுடியாது:அதிபர் ராஜபக்ஷே தகவல்

Posted:

கொழும்பு :இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழு, தமிழக மீனவர்கள் கைது குறித்து, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவிடம் பேசினர்.பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் தலைமையில், ஐந்து பேர் குழு, இலங்கை பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினர்.சமீபத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 49 தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத்தில், மாற்றம் செய்யும் இலங்கை அரசின் திட்டம் குறித்தும், இந்த குழு விவாதித்தது.""இலங்கையில், தமிழர் பிரச்னைக்கு, இந்தியாவால் ...

சோனியா உதவியாளருக்கு எதிரான வழக்கு : ஆதாரங்கள் இல்லாததால் முடித்தது சி.பி.ஐ.,

Posted:

புதுடில்லி:சோனியாவின் உதவியாளர், வின்சென்ட் ஜார்ஜ்க்கு எதிரான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, சி.பி.ஐ., முடித்துக் கொண்டது.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன்னாள் தனிச் செயலர் மற்றும் தற்போதைய உதவியாளர் வின்சென்ட் ஜார்ஜ். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, 2001ல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. 12 ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில், இந்த வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கு முடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., வட்டாரங்கள் ...

பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானி ஆப்சென்ட்!

Posted:

கோவாவில் நடைபெறும், பாரதிய ஜனதா தேசிய முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில், அத்வானியும், அவரது ஆதரவாளர்களும் பங்கேற்காதது, பா.ஜ.,வில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

@subtitle@பிரதமர் வேட்பாளராக :@@subtitle@@
அடுத்த ஆண்டு, லோக்சபாவுக்கு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி அறிவிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதை ஏற்பதற்கு, மூத்த தலைவர் அத்வானி தயாராக இல்லை என்பது, கட்சி முன்னணியினரின் கருத்தாக உள்ளது.இந்நிலையில், கோவாவில் ...

அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? ஐந்து பேர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

Posted:

சென்னை: தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிகிறது. இப்பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு இடங்கள், அ.தி.மு.க.,விற்கு உறுதியாகி விட்டது. மீதியுள்ள, இரண்டு இடங்கள் யாருக்கு, என்பது உறுதியாகாத நிலையில், இன்று மாலை, சென்னையில் நடைபெறும், அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், அரசியல் கட்சியினரிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டம் முடிவில், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் ஐந்து பேர் பட்டியலை, முதல்வர் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது.தமிழகம் சார்பில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™