Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நிலத்தடி நீரும் விற்பனைக்கு

Posted: 07 Jun 2013 02:45 PM PDT

சென்னை மாநகரம். ஒரு கோடி மக்களின் வசிப்பிடம். ஒரு ராட்சசச் சக்கரம் இடைவிடாமல் சுழல்வதுபோல இந்நகரம் கணப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும் கூட ஒரு புதுவாழ்வைத் தேடி தினமும் பலர் சென்னைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அனைவரையும் தாங்கிப் பிடித்தபடி இந்நகரமும் முக்கி முனகி தனது ராட்சச பாதங்களை தட்டு தடுமாறி வைத்தபடி நகர்ந்து கொண்டும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டும் இருக்கிறது. இந்நகரத்தின் கூட்ட நெரிசலில் நாமும் சிக்கிக்கொண்டு ...

பசியால் பரிதவிக்கும் பாலகன்

Posted: 07 Jun 2013 02:42 PM PDT

இந்த படம் இலங்கையில் போரின் போது எடுக்கப்பட்டது. தமிழ் சிறுவர்கள் போரினால் தங்கள் பெற்றோரை இழந்து நிற்கும் கொடுமையான காட்சி . உம் கோலத்தை தளத்தில் பாத்ததும் எம் கண்ணீர் கரைகண்டதடா நா தண்ணீர் வரண்டதடா பெற்றவரை இழந்த உன் தவிப்பு மனதில் தீ நெருப்பு சோற்றுக்கு இரக்கும் உன் அழைப்பு நெஞ்சில் பெரும் வெடிப்பு தேற்றுவோர் இல்லா உன் பதைப்பு சிரத்தில் உடைப்பு இளைத்து போன பாலகன் அழுவது பசி களைப்பிலா - இல்லை பால்கொடுத்து பாதுகாத்து பார்த்து வளர்த்த தாய் இறப்பிலா - இல்லை உங்களை பலிவாங்கபோகும் ...

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!

Posted: 07 Jun 2013 01:20 PM PDT

வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைத் தான் பயன்படுத்துவோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு ...

சிக்கல் தரும் சிக்ஸ் பேக்

Posted: 07 Jun 2013 01:17 PM PDT

இன்றைய இளைஞர்களிடம் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்கின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதீயில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு ...

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

Posted: 07 Jun 2013 01:14 PM PDT

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள ...

77 வருஷம்... தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘சூப்பர் ஸ்ட்ராங்க்’ டி.வி!

Posted: 07 Jun 2013 01:12 PM PDT

லண்டன்: நேற்று வாங்கிய டிவி இன்று ரிப்பேராகி டென்ஷனைக் கொடுக்கும் இக்காலத்தில், லண்டனில் கடந்த 77 வருடமாக ஒரு டிவி எந்த ரிப்பேரும் இல்லாமல் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறதாம். கடந்த 1936ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டிவி இது. இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறதாம் அந்த டிவி. இதுதான் இங்கிலாந்திலேயே மிகவும் வயதான ஆனால் சூப்பர் ஸ்டிராங்கான டிவியாம். கருப்பு, வெள்ளை டிவி... கருப்பு வெள்ளை மார்கோனிபோன் 702 டிவியான இது அக்காலத்தில் மிக் சிறிய விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ...

பேசியலுக்கு அதிக செலவாகிறதா?

Posted: 07 Jun 2013 12:59 PM PDT

பெண்கள் முகத்தில பேசியல் என்னும் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவு செய்கிறார்கள். ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் இருக்கிறது. சிலரால் அடிக்கடி செய்ய முடியாது. வருத்தப்படாதீங்க இப்போது நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம். ஒன்னும் பெருசா எதுவும் தேவையில்லைங்க. காய்ச்சாத பால் ஏதாவது பழக்கூழ் ( பழத்தை நல்ல அரைச்சுக்க வேண்டியதுதான்) பத்து விரல் மசாஜ் செய்யும் போது மசாஜை மேல் நோக்கி செய்ய வேண்டும். கிளன்சின் லோசனாக பாலைப் பயண்படுத்தி கழுத்திலிருந்து ...

பாடி பில்டராக ஆசையா? அப்ப இத படிங்க...

Posted: 07 Jun 2013 12:58 PM PDT

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை பராமரித்துக் கொள்ளுதல் மிக அவசியம். சிலர் உடல் கட்டுமானத்துடன் வைத்து கொள்ள விரும்புவர். அப்படி உடல் கட்டுமானத்துடன் இருக்கையில், எத்தகைய உணவுகளை உண்ண வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறையைக் கடைபிடிக்காமல், எந்த ஒரு உடற்பயிற்சியை செய்தாலும் அது பலன் தராது. இவ்வாறு மேற்கொள்வதால் நம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி, உடலுக்கு ஏற்ற எடையை தயார் செய்து, ஆரோக்கியமான உடலமைப்பைக் கொடுக்கும். இப்போது எதை சாப்பிடலாம், எதை சாப்பிடகூடாது மற்றும் எந்த வகையான ...

கனவுகளுக்கு சக்தி உண்டு (கனவு காணுங்கள்)

Posted: 07 Jun 2013 12:55 PM PDT

கனவுகளுக்கு சக்தி உண்டு. அப்துல் கலாம் அடிகடி சொல்வார் கனவு காணுங்கள் அது நிச்சயம் நடக்கும், பலிக்கும் என்று. அது உண்மை தான். ஒருவர் தான் இதுபோல் ஆகவேண்டும் அல்லது இதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு வெறித்தனமாக அதைபற்றியே கனவு காண காண அவருக்கு தெரியாமேலே அந்த கனவு அவரின் இலக்கை அடைய அவருடைய கையை பிடித்து அழைத்து செல்லும். ஒரு சிறு எடுத்துக்காட்டு: எதோ ஒரு காரியத்திற்காக நாம் இரவு தூங்கும்போது காலை சரியாக 5 மணிக்கு விழிக்கவேண்டும் என்று நினைத்துகொண்டே இருப்போம், ஐயோ கலையில் 5 மணிக்கு விழிக்கவில்லை ...

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Posted: 07 Jun 2013 12:48 PM PDT

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும். இந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ...

மனம் மயங்கியதே ....

Posted: 07 Jun 2013 12:47 PM PDT

மலர் அது மலரும் மணம் அதுவும் மலரும் மனமும் சேர்ந்தே மலரந்ததே மலர் போன்ற உன்னை கண்டே ... மண்ணோடு மலர்ந்திடும் மழைச்சாரல் போலவே மணம் வீசிடும் மண் போலவே மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ... மணி காட்டிடும் கடிகாரம் கூட மாறுதல் காட்டிடுதோ என மணிக்கு ஒரு முறை மறக்காமல் மனம் பார்த்திடுதே .... மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ மதுவருந்திய வண்டு போலவே மயக்கத்தில் தள்ளாடுதே மனமும் கொண்டாடுதே ... மயிலாடிடும் கார்காலம் போலவே மனமும் களிப்பு கொண்டாடியதே ...

***ஸ்டிக்கர் பொட்டு***

Posted: 07 Jun 2013 12:30 PM PDT

ஸ்டிக்கர் பொட்டு



தமிழ்த்தாயே
நாங்கள்
அவசரம் அவசரமாக
அலுவலகம்
கிளம்பும்
வேளையிலும்
பளபளக்கும்
ஸ்டிக்கர் பொட்டை
ஒட்ட மறப்பதில்லை
உன் பட்டு முகத்தில்
ஹைக்கூ
கவிதைகளாக!!

9000 பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்கு வாழ்த்துகள்!

Posted: 07 Jun 2013 12:20 PM PDT

சிறந்த பதிவுகளுடனும், அனைவருடனும் நட்பு பாராட்டும் பின்னூட்டங்களுடனும் 9000 பதிவுகளைக் கடந்துள்ள முத்து முகமதுவுக்கு பாராட்டுக்கள்!

வியர்க்குருவைத் தடுக்கும் வைட்டமின்

Posted: 07 Jun 2013 10:47 AM PDT

கோடைக்காலம் என்றாலே வியர்வை ஊற்றெடுக்கும். வியர்வை வெளியேற்றத்தால் களைப்பு ஏற்படுகிறது. இதனை கோடை அயர்வு என்கிறார்கள். இந்த அயர்வை போக்கிட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாகவே கோடை காலத்தில் செய்யப்படும் வேலைகளுக்கு பிறகு பருவ காலங்களை விடிவும் கூடுதலான சக்தி செலவிட வேண்டியுள்ளது. கூடுதல் சக்தியின் தேவைக்கேற்ப வைட்டமின் தேவையும் கூடுகிறது. இந்த அடிப்படையிலான ஆய்வுகளில் கோடை அயர்வு நீங்குவதற்கு வைட்டமின் 'சி' துணைபுரிவதாக அறியப்பட்டுள்ளது. சற்றே கூடுதவான வைட்டமின் 'சி' தேவைப்படுவது ...

இதயம் காக்க 25 வழிகள்!

Posted: 07 Jun 2013 10:46 AM PDT

'நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், ...

சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பதற்கான சில சூப்பர் டிப்ஸ்...

Posted: 07 Jun 2013 10:38 AM PDT

தற்போது உலகளவில் நீரிழிவு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் இந்த நீரிழிவு நோய்க்கு பெரியோர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அளவுக்கு அதிகமான அளவில் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய சர்க்கரையானது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, இந்நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கும் தான் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் அதிகப்படியான அளவில் சர்க்கரையை சாப்பிட்டால், ...

கேரளா ஸ்டைல் பரோட்டா ரெசிபி

Posted: 07 Jun 2013 10:32 AM PDT

இந்தியாவில் கேளரா ஸ்டைல் பரோட்டா மிகவும் பிரபலமானது. இந்த பரோட்டாவின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் மென்மைத்தன்மை தான். அதுமட்டுமல்லாமல், இதில் நெய் சேர்த்து அருமையான முறையில் ஊற வைத்து பரோட்டாக்களாக செய்வதும் தான். இத்தகைய மென்மையான பரோட்டாவை சாப்பிட வேண்டுமெனில் கேரளாவிற்கு சென்றால், அதிகம் சாப்பிடலாம். ஆனால் இந்த பரோட்டாவிற்காக கேளரா செல்வதற்கு பதிலாக, இந்த பரோட்டாவை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே! இந்த பரோட்டா செய்ய வேண்டுமெனில் சற்று பொறுமை வேண்டும். ஏனெனில் நன்கு ஊற வைத்து செய்தால் தான், ...

முகத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள்

Posted: 07 Jun 2013 10:17 AM PDT

* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும். * முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும். * வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும். * அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும். * மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை ...

பூந்தலைச் சிறு கோல்

Posted: 07 Jun 2013 10:14 AM PDT

[/justify] [justify]"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் "சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் புறநானூற்றுப் பாடல். பெற்றோர் இக்கடன்களை நிறைவேற்றுகின்றனரா என்றால், கடனே என்று நிறைவேற்றுகின்றனரோ என்று ஐயமே எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனது செய்முறைத் தேர்வுக்கு முந்தைய தினம் மருத்துவ மனைக்கு வருகிறான். முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிகிறது. என்ன என்று கேட்டால், படி என்று சொன்னவுடன் ...

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. ப்ளஸ் மனுஷ்யபுத்திரன் !

Posted: 07 Jun 2013 10:00 AM PDT

பார்ப்பனர்.. பார்ப்பனர்.. பார்ப்பனர்.. இந்த வார்த்தை ஒலிக்காத சாதிய இணையதளங்களோ, பேஸ்புக், ட்விட்டர் போன்று எந்த சமூக வலைதளங்களோ இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த இன மக்கள்மேல் வெறிகொள்ள நமது சமுதாயம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது தீவிரவாத முத்திரை குத்தி அந்த மதத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவைத்த நமது சமூகம் இந்த பார்ப்பனர் என்ற வார்த்தையும் விட்டு வைக்கவில்லை. இவர்கள் சொல்வதுபோல் பார்ப்பனர்கள் கெட்டவர்களாகவே ...

விண்வெளி மோதல்

Posted: 07 Jun 2013 09:52 AM PDT

அண்டவெளி ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோள்களும் அக்கோள்களின் துணைக்கோள்களும் இணைந்த சுற்றுவட்டப்பாதை சூரிய குடும்பத்தை அமைக்கிறது. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என ஒன்பது கிரகங்கள் சூரியனை சுற்றுகின்றன என்ற வரலாறு மாறி புளுட்டோஎன்பது கிரகமே இல்லை என்ற நிலைக்கு ஆய்வுகள் கூர்மையாகியுள்ளன. விண்வெளியில் ஏற்பட்ட ஒரு மோதல் நிகழ்வே பூமியின் மீதான பல்வேறு அழிவுகளுக்கும், உருவாக்கங்களுக்கும் காரணமாக அமைகிறது என்றால் நம்ப முடிகிறதா? ...

நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து

Posted: 07 Jun 2013 09:50 AM PDT

நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. ஆஸ்டிரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள். நீண்ட நேரம் ...

அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.

Posted: 07 Jun 2013 09:47 AM PDT

தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் (ANDROID) என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது. :- ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Operating system) (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை ...

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Posted: 07 Jun 2013 09:42 AM PDT

இருதயப் பிரச்சனையா? ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லாமலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோருகிறது. ரத்தக்குழாய்களுக்குள் டியூப்கள் வழியாக சிறுசிறு உபகரணங்களை செலுத்தி இருதய சிகிச்சை செய்யும் முறையே அது! ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற முறையில் தற்போது வெறும் அடைப்பு நீக்கம் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும், பழுதடைந்த வால்வ்களை மாற்ற நெஞ்சை பிளக்கவேண்டிய முறைதான் பெரும்பாலும் உள்ளது. தற்போது பைபாஸ் சர்ஜரியே தேவையில்லை எனறு ஒரு ...

தமிழ் கல்வெட்டுகளை அழிக்கும் கர்நாடகா... கண்டு கொள்ளாத தமிழகம்!

Posted: 07 Jun 2013 09:41 AM PDT

சுமார் நூறு வருடங்களாக பதிப்பிக்கப்படாமல் கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. கல்வெட்டு தலைமை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாறியதன் விளைவாக ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமலே அழிந்து போய் விட்டதாகப் புகார் கிளம்பி உள்ளது. இது குறித்து 'காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?' என்ற தலைப்பில் கடந்த 18.06.06 தேதியிட்ட ஜுவி இதழில் வெளியான கட்டுரையின் ஃபாலோ அப் செய்தி... நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் ...

'தினமும் தியானம் செய்!' - நகைச்சுவை

Posted: 07 Jun 2013 09:38 AM PDT

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது. கூடவே, 'உன்னால் முடியுமா...?' என்று உள் மனம் கேள்வி கேட்டது. 'அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே... என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன். கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில். "மாநில செய்திகள் ...

முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 07 Jun 2013 09:32 AM PDT

முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . மணிமேகலை பிரசுரம் .4.தணிகாசலம் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .17. விலை ரூபாய் 13. "முயன்றால் முடியும் " நூலின் தலைப்பே தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழிந்து எழுதிய அற்புத நூல் .பாராட்டுக்கள் . "புலிக்குப் பிறந்தது பூனையாகாது " என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் .அவர்களின் மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் ...

உங்கள் கனவு பலிக்கிறதா?

Posted: 07 Jun 2013 09:32 AM PDT

* வானில் நிலவைப் பார்ப்பது போன்று கனவு வந்தால் கனவன், மனைவி இடையே அன்பு பெருகும். * ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றினால் பதவி உயர்வு வந்து சேரும். * விவசாயி நிலத்தை உழுவது போன்று கனவு வந்தால் பதவி, பணம், செல்வாக்கு உயரும். * இறந்தவர் சடலம் கனவில் வந்தால் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்ற சூழல் வரும். * ஆசிரியர் பாடம் நடத்துவது போன்று கனவு தோன்றினால் நினைத்தது எல்லாம் நடக்கும். * சிறு குழந்தைகளைக் கண்டால் நோயில் இருந்து நிவாரணம். * இறந்தவருடன் பேசுவது போன்று கனவு வந்தால் அதிகாரம், ...

தகவல் துளிகள்

Posted: 07 Jun 2013 09:26 AM PDT

தபால் பெட்டியின் நிறம்: தபால் பெட்டிக்கு ரத்த சிவப்பு நிறம் கொண்ட பெயின்டை ஏன் பூசினார்கள் தெரியுமா? நிறங்களில் எல்லாம் பளிச்சென்று தோன்றும் நிறம் ரத்தச் சிவப்புதான். இவ்வாறு தபால் பெட்டிகளுக்கு ரத்த சிவப்பு நிறம் பூசும் வழக்கம் கி.பி.1876-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. பின்னர் உலகில் ஏனைய நாடுகளுக்கும் இவ்வழக்கம் பரவியது. அதென்ன நாளைக்கு? பாரதிதாசன் எந்தக் காரியத்தையும் மறுநாளைக்குச் செய்யலாம் என்று ஒத்திப்போட மாட்டார். ""அதென்ன நாளைக்கு? இப்போதே செய்யேன்'' ...

நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

Posted: 07 Jun 2013 09:22 AM PDT

நம் அனைவரையும் ஆட்டுவிக்கும் அடிப்படை சக்தி எது ?

கத்தார் மணல் புயல் 07-06-2013 - காணொளி

Posted: 07 Jun 2013 09:17 AM PDT



உணவு வீணாவதைத் தவிர்ப்பீர்!

Posted: 07 Jun 2013 09:09 AM PDT

> உலக அளவில் 1.3 பில்லியன் டன் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் விளைநிலத்திலிருந்து சந்தைக்கு வந்து, நுகர்வோரிடம் சேரும் முன்பாகவே அழுகிவிடுகின்றன. > இந்தியாவைப் பொருத்தவரை, 2009 கணக்கெடுப்பின்படி, 230 லட்சம் டன் உணவு தானியங்கள், 120 லட்சம் டன் பழங்கள், 210 லட்சம் டன் காய்கறிகள் வழியிலேயே அழுகிப்போகின்றன. > ஒரு கிலோ கோதுமை அல்லது அரிசியை உற்பத்தி செய்ய அந்தத் தாவரம் சுமார் 1,300 லிட்டர் தண்ணீரை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது. > ஒரு தக்காளி, 15 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகிறது. இந்த "உறிநீர்'அளவு ...

ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Posted: 07 Jun 2013 08:50 AM PDT

மாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது செயலாக்கத்தின் பொழுதோ உணவானது தூய்மைக்கேடு அடைகிறது. இதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. இன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள் முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பதும், சேமிப்பதும் ...

நம்மாளுகள் அழிவது

Posted: 07 Jun 2013 08:40 AM PDT

நேற்று
உறவுக்குப் பகை கடன்
இன்று
உறவுக்குப் பகை பணம்
நாளை
பணம், கடன் இரண்டாலுமே
நம்மாளுகள் அழியலாம்...
அடே! யாழ்பாவாணா!
இன்றே
நம்மாளுகள் அழிவது
பணம், கடன் இரண்டாலுமே!

இன்சுவை தரும் இடியாப்பங்கள்

Posted: 07 Jun 2013 08:40 AM PDT

எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளில் இடியாப்பத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதற்காக இடியாப்பத்தையே மீண்டும் மீண்டும் செய்து பரிமாறினால், அலுப்பு தட்டிவிடும் என்பதும் உண்மைதானே! இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ, இடியாப்பத்தில் 30 வகை சுவையான ரெசிபிகளை இங்கே பரிமாறும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா, ''பருப்பு உசிலி இடியாப்பம், பாஸந்தி இடியாப்பம், டிரைஃப்ரூட் இடியாப்பம் என்று வெரைட்டியாக கொடுத்துள்ளேன்... செய்து பரிமாறி பாராட்டுகளை அள்ளுங்கள்'' என்று உற்சாகமூட்டுகிறார். குறிப்பு: 30 ...

படிச்சும் என்ன பயன்?

Posted: 07 Jun 2013 08:26 AM PDT

விடிய விடிய படிச்சுப் படிச்சு தேர்வுகள் எழுதி எழுதிச் சித்தியடைந்து பட்டங்கள் பட்டங்களாகப் பெற்று மக்களுக்குப் பணி(சேவை) செய்யாத உறவுகளால் என்ன பயன்? முன்னோர்கள் கூறிய "யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெறவேண்டும்!" என்பது பிழையான வழிகாட்டலா? படிச்ச படிப்பின் பெறுமதி சான்றிதல் எண்ணிக்கையிலோ பணத் தாள்களின் எண்ணிக்கையிலோ இருந்தென்ன பயன்? "படிச்ச ஆளுகள் பணி(சேவை) செய்கிறாங்க..." என்ற மக்கள் கூறும் பாராட்டே படிச்ச படிப்பின் பெறுமதி!

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!

Posted: 07 Jun 2013 08:18 AM PDT

தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள். அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், ...

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 07 Jun 2013 08:17 AM PDT

தஞ்சை பெரிய கோவில் உருவம் பதித்த 1,000 ரூபாய் நோட்டு

Posted: 07 Jun 2013 08:12 AM PDT

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் ...

சாலைகளில் உள்ள மைல்கல்

Posted: 07 Jun 2013 08:11 AM PDT

சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள நிறத்தை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க... மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை .......................................................................................................... பச்சை மற்றும் வெள்ளை நிறம் என்றால் மாநில நெடுஞ்சாலை ....................................................................... நீலம், ...

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

Posted: 07 Jun 2013 08:04 AM PDT

* துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கும். * கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களில் அடியில் காணப்படும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழத்தின் சிறு சிறு துண்டுகளைப் போட்டு அதில் பாதிக்கு மேல் தண்ணீர் விட்டு குலுக்கவும். * சாம்பார் நன்றாக கொதித்து இறக்கியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். * எலுமிச்சை, ...

Texture மென்பொருட்கள்

Posted: 07 Jun 2013 07:58 AM PDT

Texture தேவையா அழகான சித்திரங்கள் கணினியில் வரைவீர்களானால் அவற்றிற்கு அழகுபடுத்த Texture எனப்படும் மேல்மினுக்கிகல் பாவிப்பது இலகுவாக வரைய் வைப்பதோடு அழகையும்கொடுக்கும். ஆதவது bryce 3 போன்ற முப்பரிமாணப் மென்பொருட்களுகு நீஙகள் இப்படி பட்ட Texture கள் முழு உதவியாக இருக்கும் இவற்றை இலவசமாகப்பெற ஆன்லைன் http://www.mayang.com/textures/Architectural/html/Tiles/index.html மென்பொருட்களாக தரவிறக்கம் செய்ய http://www.mapzoneeditor.com/?PAGE=DOWNLOAD 2. http://www.mapzoneeditor.com/?PAGE=DOWNLOAD

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -19)

Posted: 07 Jun 2013 07:01 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ...

குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு

Posted: 07 Jun 2013 06:39 AM PDT

தோழர்களே, சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,, பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ...

டாக்டர் மகாதீரின் ‘இனவாத’ வலைப்பதிவுக்கு எதிராக போலீசில் புகார்

Posted: 07 Jun 2013 05:59 AM PDT

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/970231_503580359715066_645411393_n.jpg சீன வாக்காளர்களுக்கு எதிராக அண்மையில் 'நேர்மையற்ற தாக்குதலை' தொடுத்துள்ள டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எதிராக அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அலோர் ஸ்டார் எம்பி கூய் சியாவ் லியூங்-கும் அவரது ஆதரவாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அந்த முன்னாள் பிரதமருடைய "முற்றிலும் நியாயமற்ற நேர்மையற்ற" வலைப்பதிவுக்கு எதிராகவும் தாம் போலீசில் புகார் செய்துள்ளதாகவும் ...

ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங் கேள்வி

Posted: 07 Jun 2013 05:46 AM PDT

ஒரு தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் புதிய உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடி இனியும் உள்துறை அமைச்சராகத் தொடர்வது நியாயமா என ஜசெக ஆலோகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார். "யார் இந்த லிம் கிட் சியாங் என ஆணவமாகவும், திமிராகவும் கேட்டுள்ள இந்த அகமட் சாஹிட் யார் என்பதைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஜசெகவின் சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் எழுப்பியுள்ள விவகாரம் தொடர்பில் சாஹிட் இனியும் உள்துறை அமைச்சராக தொடர்வது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது" ...

சித்திரம் எழுப்பிய கவிதை

Posted: 07 Jun 2013 05:32 AM PDT

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம். (கலி விருத்தம்) அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள் இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில் நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில் கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று! --ரமணி, 01/03/2013 *****


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™