Tamil News | Online Tamil News |
- தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி: தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதிகாரிகள் "ரெய்டு'
- பழநி மலைக்கோயிலில் ஸ்டாலின் மனைவி துர்கா: குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை
- லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., "மண்ணை கவ்வும்': விஜயகாந்த் ஆவேசம்
- தகுந்த முடிவெடுக்கும் வரை தாயுடன் தங்க பெண் விருப்பம்: நாயக்கன் கொட்டாய் கலப்புத்திருமண வழக்கில் திருப்பம்
- ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
- வாஸ்துக்காக சட்டசபை கட்டட சுவர் இடிப்பு: சிக்கலில் கர்நாடக அமைச்சர்
- 3 ஆண்டுகளில் காங்கிரசுக்கு ரூ.500 கோடி வருவாய்: எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் ரூ.425 கோடி திரட்டியுள்ளது
- மகாராஜ்கஞ்ச் லோக்சபா தொகுதி வெற்றியால் தேசிய அரசியலில் திருப்பம்?
- தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முடியாது: கர்நாடக அரசு முடிவு
- ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதித்த பசுமைதீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அப்பீல்
| Posted: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, மாவட்ட வாரியாக அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள், "ரெய்டு' நடத்தி வருகின்றனர். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா மற்றும் இயக்குனர்கள் குழு, மாவட்டங்களுக்குச் சென்று நடத்தி வரும், கிடுக்கிப்பிடி விசாரணையால், தலைமை ஆசிரியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், மாநில அளவில், அரசுப் பள்ளி மாணவர்கள் ஜொலிக்கவில்லை. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தன. இந்நிலையில், பிளஸ் 2 ... |
| பழநி மலைக்கோயிலில் ஸ்டாலின் மனைவி துர்கா: குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை Posted: பழநி: "கடவுள் நம்பிக்கை இல்லை' என கூறும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மருமகள், பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, பழநி மலைக்கோயிலில், சுவாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல்லில், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. இதில், பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, 10.30மணிக்கு, ஸ்டாலினும், அவரது மனைவி துர்காவும் வந்தனர். நேற்று காலை, 10 மணிக்கு, கட்சி நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பகல் 12.10 மணிக்கு, பழநிக்கு, ஸ்டாலின் மனைவி துர்கா வந்தார். "வின்ச்' மூலம், 12.20 மணிக்கு, மலைக்கோயிலுக்கு சென்றார்; அங்கு நடந்த, "போகர் ஜெயந்தி' விழாவில் பங்கேற்றார்; ... |
| லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., "மண்ணை கவ்வும்': விஜயகாந்த் ஆவேசம் Posted: திருவண்ணாமலை: ""வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மண்ணை கவ்வும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருவண்ணாமலையில், 2012 ஆகஸ்ட், 28ம் தேதி, தே.மு.தி.க., சார்பில் நடந்த கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவதூறாக பேசியதாக, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், வழக்குத்தொடரப்பட்டது. இவ்வழக்கில், விஜயகாந்த் நேற்று காலை, திருவண்ணாமலை கோர்ட்டில், நீதிபதி நாகநாதன் முன் ஆஜரானார். வரும் ஆகஸ்ட், 12ம் தேதி வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். @subtitle@நிருபர்களிடம், விஜயகாந்த் கூறியதாவது: ... |
| Posted: சென்னை: தர்மபுரி மாவட்டத்தில், கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண், ஐகோர்ட்டில் நேற்று ஆஜரானார். தாயுடன் தங்கியிருக்க அவர் விருப்பம் தெரிவித்ததால், ஐகோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த பெண்ணுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், கலப்பு திருமணம் நடந்தது. இதையடுத்து பெண்ணின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இந்நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி தாக்கல் செய்த மனு: என் மகள் திவ்யாவை கடத்திச் ... |
| ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் Posted: ராமேஸ்வரம்: "கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள், 49 பேரை, இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், நேற்று காலை, மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜூன், 20ம் தேதி வரை, அனுராதபுரம் சிறையில் அடைக்க, கோர்ட் உத்தரவிட்டது. @subtitle@மேலும் 25 பேர் கைது: இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு, இந்திய - இலங்கை கடல் எல்லையில் ... |
| வாஸ்துக்காக சட்டசபை கட்டட சுவர் இடிப்பு: சிக்கலில் கர்நாடக அமைச்சர் Posted: பெங்களூரு: கர்நாடக சட்டசபை கட்டடமான, "விதான் சவுதா'வில், வாஸ்துக்காக, அமைச்சர் ஒருவர், தன் அலுவலகத்தின் சுவரை இடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையை தலைமையிலான, காங்கிரஸ் அமைச்சரவை, சமீபத்தில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இடம் பெற்றிருப்பவர் ரமாநாத் ராய். @subtitle@சரியில்லை: இவருக்கு, கர்நாடக சட்டசபை கட்டடமான, "விதான் சவுதா'வில், அறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அந்த அறை வாஸ்துப்படி சரியில்லை என, நினைத்த ரமாநாத், தன் அறைக்கும், அடுத்த அறைக்கும் ... |
| Posted: புதுடில்லி: கடந்த, 2009 முதல், 2011 வரையிலான, மூன்று ஆண்டுகளில், நன்கொடைகள் மற்றும் டெபாசிட்களுக்கு வட்டி என, காங்கிரஸ் கட்சி, 750 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வுக்கு 425 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. @subtitle@எதிர்ப்பு: "தகவல் அறியும் உரிமைச் சட்டம், அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். அதனால், கட்சிகளின் செலவுகள் மற்றும் வருமானம் குறித்து, பொதுமக்கள் கேட்கும் தகவல்களை தர வேண்டும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கட்சிகள் செய்ய வேண்டும்' என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த ... |
| மகாராஜ்கஞ்ச் லோக்சபா தொகுதி வெற்றியால் தேசிய அரசியலில் திருப்பம்? Posted: லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் அதிர்ச்சியை அளித்து உள்ளன. இதனால், தேசிய அரசியலில் புதிய திருப்பங்கள் நிகழலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு, 15வது லோக்சபாவின் பதவிக்காலம், 2014ம் ஆண்டு, மே மாதம் முடிவடைவதால், அப்போது தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தல் வரலாம் என்ற நிலை காணப்படுகிறது. @subtitle@மோடி செல்வாக்கு: ... |
| தமிழகத்திற்கு 134 டி.எம்.சி., தண்ணீர் வழங்க முடியாது: கர்நாடக அரசு முடிவு Posted: பெங்களூரு: "காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு, ஜூன் - செப்டம்பர் காலத்தில் வழங்க வேண்டிய, 134 டி.எம்.சி., தண்ணீரை வழங்க முடியாது' என தெரிவித்துள்ள கர்நாடகா, வரும், 12ம் தேதி கூட உள்ள, காவிரி மேற்பார்வை குழுவில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் அளவை, 97.82 டி.எம்.சி.,யாக குறைக்க கோர உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டம், முதல்வர், சித்தராமைய்யா தலைமையில் நேற்று நடந்தது. அதில், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர், குமாரசாமி, கே.ஜே.பி., தலைவர் எடியூரப்பா உட்பட பலர் கலந்து ... |
| ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதித்த பசுமைதீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அப்பீல் Posted: புதுடில்லி: "தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்படலாம்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரியம் மனுத்தாக்கல் செய்துள்ளது.தூத்துக்குடிக்கு அருகேயுள்ளது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தாமிர உருக்காலையான இங்கிருந்து, நச்சு வாயு வெளியேறியதாக, கடந்த மார்ச், 23ம் தேதி, பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலையை மூட, அதே மாதம், 29ம் தேதி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.@subtitle@சரியானதே:@@subtitle@@ இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் சார்பில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 07,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |