Tamil News | Online Tamil News |
- ம.பி., தேர்தல்: வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்க காங்., திட்டம்
- ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க.,வியூகம்! தி.மு.க.,வை ஓரங்கட்ட புது திட்டம்
- காங்.,குக்கு "அடி!' : லோக்சபா இடைத்தேர்தலில் படுதோல்வி
- இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: முதல்வர் ஜெ.,
- இலங்கையில் 13ஏ சட்ட பிரிவில் மாற்றம் செய்ய அரசு திட்டம்
- தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் "டெங்கு' காய்ச்சல்
- பொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வம் இல்லை
- "மாஜி' என்பதால் பாதுகாப்பு கோருவதா? சுப்ரீம் கோர்ட் நெத்தியடி உத்தரவு
- 250 அடி உயரம்... அந்தரத்தில் நின்ற பழநி "ரோப்கார்'
- அமைச்சர்கள், அதிகாரிகளை மாற்றியது தான் அ.தி.மு.க.,வின் சாதனை: ஸ்டாலின் சாடல்
| ம.பி., தேர்தல்: வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்க காங்., திட்டம் Posted: போபால்: ""மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள், ஆறு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்,'' என, ம.பி., சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், அஜய் சிங் கூறினார். ம.பி.,யில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக, காங்கிரசை சேர்ந்த அஜய் சிங் உள்ளார். ம.பி.,யில், இந்தாண்டு இறுதிக்குள், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.போபாலில், நேற்று முன் தினம் நடந்த பேரணியில் பங்கேற்ற, அஜய் சிங் கூறியதாவது: ம.பி., சட்டசபைக்கு நடக்கும் ... |
| ராஜ்யசபா சீட்டைப் பெற தே.மு.தி.க.,வியூகம்! தி.மு.க.,வை ஓரங்கட்ட புது திட்டம் Posted: தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டைப் பெற, விஜயகாந்தின், தே.மு.தி.க., கட்சி புது வியூகம் வகுத்து வருகிறது. தி.மு.க.,வை ஓரங்கட்டி விட்டு, மா.கம்யூ., ஆதரவுடன், வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கட்சியுடன் ரகசிய பேச்சு வார்த்தையில், தே.மு.தி.க., தலைமை இறங்கி உள்ளது.தமிழகத்தில், அடுத்த மாதம் காலியாக உள்ள, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், இம்மாதம், 27ம் தேதி நடக்கிறது. ஐந்து எம்.பி., பதவிகளை, அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. மீதியுள்ள ஒரு எம்.பி., பதவியை யார் கைப்பற்றுவது என்பதில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே போட்டி ... |
| காங்.,குக்கு "அடி!' : லோக்சபா இடைத்தேர்தலில் படுதோல்வி Posted: ஆமதாபாத்:குஜராத், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த, நான்கு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும், மத்தியில் ஆளும் காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது. இந்த நான்கு தொகுதிகளில், ஒன்றை கூட, அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. இதனால், அடுத்த ஆண்டின் லோக்சபா தேர்தலில், காங்கிரசின் வெற்றி எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில், தலா ஒரு லோக்சபா தொகுதியிலும், சமீபத்தில், இடைத் தேர்தல்கள் நடந்தன. அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள ... |
| இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: முதல்வர் ஜெ., Posted: "இலங்கை தமிழர்கள் பிரச்னையை, மத்திய அரசு, சரியான முறையில் அணுகவில்லை. தமிழக மீனவர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கும், கச்சத்தீவை, இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.மத்திய அரசு பாராமுகம்:டில்லியில் நேற்று நடைபெற்ற, உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையை, அமைச்சர் முனுசாமி வாசித்தார். அதில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்ததாவது:இலங்கையில், தமிழர்கள், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் துயரங்கள், நாளுக்கு ... |
| இலங்கையில் 13ஏ சட்ட பிரிவில் மாற்றம் செய்ய அரசு திட்டம் Posted: கொழும்பு : இலங்கையில், வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது சட்டப் பிரிவில் பல்வேறு திருத்தங்களை செய்ய, அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செப்., மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13ஏ சட்டம், தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வழி செய்கிறது.இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி, இலங்கை ஆளும் கூட்டணியில் உள்ள, ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சி, பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. எனவே, வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13ஏ சட்டத்தில் திருத்தம் செய்ய, இலங்கை அமைச்சரவை ... |
| தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் "டெங்கு' காய்ச்சல் Posted: தண்ணீர் தட்டுப்பாடு, தென்மேற்கு பருவமழை துவங்கியதன் எதிரொலியாக, "டெங்கு' காய்ச்சல் மீண்டும் பரவ துவங்கி உள்ளது.கடந்த ஆண்டு, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்களில், தமிழகத்தை, "டெங்கு' காய்ச்சல் வெகுவாக வாட்டி வதைத்தது.அப்போது, நெல்லை மாவட்டத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்டோர், இக்காய்ச்சலுக்கு பலியாகினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், ஆயிரக்கணக்கானோர், "டெங்கு' பாதிப்பிற்கு ஆளாகி அவதியுற்றனர். ஐந்து மாத இடைவெளிக்கு பின், தற்போது, தமிழகத்தில், மீண்டும் "டெங்கு' காய்ச்சல் பரவ துவங்கி ... |
| பொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வம் இல்லை Posted: சென்னை: பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம் விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள், 1.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். @subtitle@ "ரேண்டம்' எண் வெளியீடு: @@subtitle@@ கடந்த மாதம், பி.இ., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை வழங்கியது. 2.35 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. ஆனால், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவர்கள் அனைவருக்கும், ரேண்டம் எண்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி, அண்ணா ... |
| "மாஜி' என்பதால் பாதுகாப்பு கோருவதா? சுப்ரீம் கோர்ட் நெத்தியடி உத்தரவு Posted: புதுடில்லி :"நீங்கள் முன்னாள் அமைச்சர் என்பதால், அரசிடம் இருந்து பாதுகாப்பை எதிர்பார்ப்பது சரியல்ல; தேவைப்பட்டால், நீங்கள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி முதல்வராக இருந்த போது, அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர், ராம்வீர் உபாத்யாயா. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சமாஜ்வாதி கட்சி பொறுப்பேற்றதும், உபாத்யாயாவுக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.இதை எதிர்த்து அவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்; அங்கு ... |
| 250 அடி உயரம்... அந்தரத்தில் நின்ற பழநி "ரோப்கார்' Posted: பழநி :பழநி "ரோப்கார்' பெட்டிகள் 250 அடி உயரத்தில் பழுதாகி நின்றதால், அதிலிருந்த பக்தர்கள், குழந்தைகள் அலறினர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் இவர்கள் "டோலி' மூலம் மீட்கப்பட்டனர்.தமிழக கோயில்களில் "ரோப்காரில்' பயணிக்கும் வாய்ப்பு பழநியில் மட்டுமே உள்ளது. கடந்த 2004 நவ., 3ல் துவக்கப்பட்ட ரோப்காரில் 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லலாம். ஒரு மணி நேரத்தில் 800 பேர் வரை பயணிக்க முடியும். 2007 ஆக., 27ல் ரோப்கார் நழுவி விழுந்ததில் 4 பேர் இறந்தனர். இதன்பின் ரோப்கார் இயக்கும் விதம் மாற்றி அமைக்கப்பட்டது. எட்டு பெட்டிகள் மூலம் ஒரு மணி நேரத்தில் 400 பேர் பயணிக்கும் ... |
| அமைச்சர்கள், அதிகாரிகளை மாற்றியது தான் அ.தி.மு.க.,வின் சாதனை: ஸ்டாலின் சாடல் Posted: மதுரை:""அமைச்சர்கள், அதிகாரிகளை அடிக்கடி மாற்றி, "பந்தாடியது' தான் அ.தி.மு.க.,வின் இரண்டு ஆண்டு கால சாதனை என,'' தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.கருணாநிதி பிறந்த நாள் மற்றும் கட்சிக்கு நிதியளிக்கும் பொதுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில், அவர் பேசியதாவது:சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில்வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது இத்திட்டம் பயனற்றது எனக்கூறி, நாடகம் ஆடுகிறது. "அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தேன்' எனக் கூறிய வைகோ,தா.பாண்டியன் போன்றோர் கூட தேர்தல் கூட்டணியை மனதில் வைத்துக்கொண்டு வாய் திறக்க ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 06,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |