Tamil News | Online Tamil News |
- ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளுக்கு நெருக்கடி: ஒரு சீட்டுக்காக குட்டி கட்சிகளிடம் கெஞ்சல்
- மாநில முதல்வர்கள் மாநாடு: ஜெயலலிதா புறக்கணிப்பு
- அவசர சட்டமாக உணவு பாதுகாப்பு மசோதா அமலாகிறது?
- "ஆங்கிலம்தான்' உத்தரவு எதிரொலி: இனியாவது முதல்வர் கவனம் செலுத்துவாரா?
- ஐ.ஐ.டி.,யில் சேர நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?
- புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பை பறித்தது அரசு!
- சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? நிபுணர் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
- ஆலங்குடி கோயிலில், ஆளுங்கட்சியினர் வியாபார நோக்கில் பக்தர்களுக்கு மிரட்டல்
- கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்: 75 மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை
| ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையை, ஒழுங்குமுறைப்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று கூடி, ஆலோசனை நடத்தியது. இதில், ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையம் அமைக்கும் மசோதா குறித்து, விவாதிக்கப்பட்டது. இறுதியில், இந்த மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:இந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டால், சட்ட ரீதியான அனைத்து ஒப்புதல்களையும், சம்பந்தபட்ட அரசு துறைகளிடம் ... |
| தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகளுக்கு நெருக்கடி: ஒரு சீட்டுக்காக குட்டி கட்சிகளிடம் கெஞ்சல் Posted: சென்னை:தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்கள், ஆறு பேரை, தேர்வு செய்வதற்கான தேர்தல், இம்மாதம் 27ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி, ஐந்து இடங்களை கைப்பற்றுவது உறுதியான நிலையில், ஆறாவது இடத்தை கைப்பற்றுவதில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆதரவு கேட்டு, குட்டி கட்சிகளிடம் அக்கட்சிகள் கெஞ்சி வருகின்றன.தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்களாக, தேர்வு செய்யப்பட்ட, அ.தி.மு.க.,வை சேர்ந்த மைத்ரேயன், இளவரசன்; தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி, சிவா; காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானதேசிகன்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா ... |
| மாநில முதல்வர்கள் மாநாடு: ஜெயலலிதா புறக்கணிப்பு Posted: சென்னை:"டில்லியில் இன்று நடைபெற உள்ள, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில், என் உரையை, தமிழகத்தின் மூத்த அமைச்சர் முனுசாமி வாசிப்பார்' என, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:உங்கள் தலைமையில், இன்று நடைபெற உள்ள, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த, முதல்வர்கள் மாநாட்டு அழைப்பிதழ், மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து வந்துள்ளது. இது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இது, மாநிலத்தில், சட்ட - ஒழுங்கைப் பராமரிக்கும் மாநில அரசுகளின் தலையாய பணி தொடர்பானது.எனினும், மத்திய அரசால் ... |
| அவசர சட்டமாக உணவு பாதுகாப்பு மசோதா அமலாகிறது? Posted: ஜனநாயக நெறிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, "உணவுப் பாதுகாப்பு மசோதா'வை, அவசர சட்டமாக நிறைவேற்ற, காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இதன்மூலம் நினைத்ததை சாதிக்க அக்கட்சி மும்முரமாக களமிறங்கியுள்ளது.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு, குறைந்த விலையில், உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பல மாதங்களாக, காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனாலும், மற்ற அரசியல் கட்சிகள், போதிய ஒத்துழைப்பு தராததால், மசோதா நிறைவேறுவது தள்ளிப்போனது. |
| "ஆங்கிலம்தான்' உத்தரவு எதிரொலி: இனியாவது முதல்வர் கவனம் செலுத்துவாரா? Posted: சென்னை:அரசுக்கு, நெருக்கடி ஏற்படும் வகையில், உயர்கல்வி துறையில், முக்கிய முடிவுகளை, தன்னிச்சையாக எடுத்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாநில உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் பதவியிலிருந்து, சிந்தியா பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.உயர்கல்வி தரத்தை மேம்படுத்தவும், புதிய திட்டங்கள், கொள்கைகளை வகுக்கவும், தமிழ்நாடு, மாநில உயர்கல்வி மன்றம் செயல்படுகிறது. இம் மன்றத்தின் துணைத் தலைவராக, அ.தி.மு.க., அமைப்பு செயலர், பி.எச்.பாண்டியன் மனைவியும், பேராசிரியருமான சிந்தியா பாண்டியன் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, 2012, பிப்., 29ம் தேதி அவர் பதவியேற்றார். ... |
| ஐ.ஐ.டி.,யில் சேர நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்? Posted: பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால், ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும், 16 ஐ.ஐ.டி.,யில், 9,647 இடங்களும், 36 என்.ஐ.டி., யில், 20 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு ஒரே நுழைவு தேர்வு(ஜெ.இ.இ.,) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில் சேர முடியும். |
| புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பை பறித்தது அரசு! Posted: சென்னை:தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில் போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள், பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை உள்ளது. இத்துறை, 1944ல் துவக்கப்பட்டது.விவசாயம், சமூகப் பொருளாதாரம், மாநில வருவாய், தொழிற்சாலை கணக்கெடுப்பு, விலைப்புள்ளி விவரம் சேகரிப்பு ஆகியவை, முக்கியப் பணிகளாகும். இத்துறை ஊழியர்கள், ... |
| சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? நிபுணர் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு Posted: புதுடில்லி:"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.டில்லியை சேர்ந்த, தினாத் பத்ரா என்பவர், அம்மாநில ஐகோர்ட்டில், இந்த விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கிலத் திறன் அறியும் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளதால், இந்தி மற்றும் இதர மாநில மொழிகளை பேசும், மாணவ மாணவியர் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்' என, ... |
| ஆலங்குடி கோயிலில், ஆளுங்கட்சியினர் வியாபார நோக்கில் பக்தர்களுக்கு மிரட்டல் Posted: வலங்கைமான் அருகே, ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களை, உள்ளூர் ஆளுங்கட்சியினர், வியாபார நோக்கில் மிரட்டுவதால், அச்சத்தில் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில் வரலாற்று சிறப்பு மிக்க குருபகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் நெய்தீபம், அர்ச்சனை பொருட்கள் மற்றும் பிரசாத விற்பனைக்கு, முறைப்படி டெண்டர் விடப்பட்டு, கடைகள் இயங்குகின்றன. இதில், கோவில் உள்ளேயும் சில கடைகள் உள்ளன. நெய் தீபம், 24,எண்ணிக்கை கொண்ட ... |
| கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்: 75 மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை Posted: சென்னை: கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில், 11 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. கத்திப்பாரா அருகே, ஜி.எஸ்.டி., சாலை, 100 அடி சாலை இடையே, தூண்களின்றி, 75 மீ., நீளத்திற்கு, மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே, வரும், 2014, ஜனவரியில், ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதற்காக, இப்பகுதிகளுக்கு இடையே, மெட்ரோ ரயில் பாதை பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம், சிமென்ட் தூண்கள் மீது பாலம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 05,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |