Tamil News | Online Tamil News |
- சவுதியில் இருந்து இந்தியர் வெளியேற்றம் : அழைத்து வர மத்திய அரசு அவசர ஏற்பாடு
- சாப்பாட்டிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட முதல்வர்
- கேதார்நாத் கோவில் புனரமைப்பை மோடியிடம் ஒப்படைக்க மறுப்பு
- காங்., - தி.மு.க., கூட்டணி இப்போது இல்லை : காங்., பொறுப்பாளர் வாஸ்னிக் திட்டவட்டம்
- ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் : விஜயகாந்த் சொல்வது என்ன?
- புதிதாக பணி நியமனம் தொடர்ந்த போதும் தமிழக போலீசில் பற்றாக்குறை நீடிப்பு
- ஆள் பிடிக்கும் தனியார் மருத்துவமனைகள் : அரசு மருத்துவமனைகளில் நேரடியாக களமிறங்கி ஆதிக்கம்
- கடுமையான விதிமுறைகளை மீறி சிறுநீரக விற்பனை அதிகரிப்பு
- சி.பி.ஐ., குறித்த அமைச்சரவை முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும்: ஜெட்லி கருத்து
- காங்., - தி.மு.க., கூட்டணி இப்போதைக்கு இல்லை : ஸ்டாலின் "தடாலடி'
| சவுதியில் இருந்து இந்தியர் வெளியேற்றம் : அழைத்து வர மத்திய அரசு அவசர ஏற்பாடு Posted: துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து ... |
| சாப்பாட்டிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட முதல்வர் Posted: உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த மாதம், 17ம் தேதி ஏற்பட்ட பேய் மழை, பெருவெள்ளம், நாட்டின் எந்த மாநிலமும் இது வரை சந்தித்திராதது. இது போன்றதொரு பேரழிவை, பிற மாநிலங்கள் சந்தித்திருந்தால், அந்த மாநில முதல்வர், முதலில் தன் பதவியை ராஜினாமா செய்து வெளியேறியிருப்பார்.அந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது; சேதத்திற்கு பிந்தைய பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, பொறுப்புகளில் இருந்து வெளியேறும் எண்ணம் கொண்டவரில்லை; திட மனதுக்காரர். எது வந்தாலும், எதிர்த்து நிற்கும் மன வலிமை கொண்டவர். அரசியலுக்கு, தானாக வந்தவரில்லை; ... |
| கேதார்நாத் கோவில் புனரமைப்பை மோடியிடம் ஒப்படைக்க மறுப்பு Posted: டேராடூன் : கேதார்நாத் கோவிலை புனரமைக்கும் பணியை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை, உத்தரகண்ட் முதல்வர், விஜய் பகுகுணா நேற்று புறக்கணித்தார்.பேய் மழை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால், உருக்குலைந்து போன உத்தரகண்ட் மாநிலத்தை சீர் செய்ய, இன்னும், மூன்றாண்டுகளுக்கு மேலாகும் என கூறப்படுகிறது.உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின், புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கிய கேதார்நாத் சிவன் கோவில், இயற்கை சீற்றத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, இந்துக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. ... |
| காங்., - தி.மு.க., கூட்டணி இப்போது இல்லை : காங்., பொறுப்பாளர் வாஸ்னிக் திட்டவட்டம் Posted: சென்னை : ""தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, இன்னும் முடிவு எடுக்கவில்லை'' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் தெரிவித்தார்.சென்னை, சத்தியமூர்த்திபவனில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலருமான முகுல்வாஸ்னிக் நேற்று அளித்த பேட்டி:தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின், முதன்முறையாக சத்தியமூர்த்திபவனுக்கு வந்துள்ளேன். இங்கு கட்சியின் முன்னணி தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களிடம் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து, ... |
| ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் : விஜயகாந்த் சொல்வது என்ன? Posted: ""கட்சி உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, ஏழு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச் செயலர் ஆகிய நானும், கொறடாவும் கடந்த, 19 மற்றும் 20ம் தேதி கடிதம் எழுதியிருந்தோம்.ஆனால், நீங்கள் மாற்று கட்சிக்கு ஓட்டளித்ததாக அறிகிறேன். இதன்மூலம், ... |
| புதிதாக பணி நியமனம் தொடர்ந்த போதும் தமிழக போலீசில் பற்றாக்குறை நீடிப்பு Posted: தமிழக போலீசில், புதிதாக ஆள் தேர்வு, பதவி உயர்வு மூலம் பணி நிரப்புதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பற்றாக்குறை என்பது தொடர் கதையாக உள்ளது. இப்பற்றாக்குறை காரணமாக, தற்போது பணியில் உள்ள போலீசார், உயர் அதிகாரிகள் விழிபிதுங்கி வருகின்றனர். ஏராளமாக காலியிடம்: தமிழகத்தில், 1,540 போலீஸ் ஸ்டேஷன், 35க்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சாதாரண கான்ஸ்டபிள் முதல், கூடுதல் டி.ஜி.பி., வரையிலான பணியிடம் வரை, தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.தமிழக போலீசின் இணையதள தகவலின்படி, போலீஸ் பற்றாக்குறை ... |
| ஆள் பிடிக்கும் தனியார் மருத்துவமனைகள் : அரசு மருத்துவமனைகளில் நேரடியாக களமிறங்கி ஆதிக்கம் Posted: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களை, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், சலுகை காட்டி, ஆள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், அரசு மருத்துவமனைகளில், ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 18 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தொழிலாளர்கள் ஈட்டுறுதி மருத்துவமனைகளில், டாக்டர், நர்ஸ், துப்புரவு பணியாளர், தொழில் நுட்ப பணியாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.அரசின் பணம், சலுகைகளை பெற்று படித்து வெளிவரும் டாக்டர், நர்ஸ், தொழில் ... |
| கடுமையான விதிமுறைகளை மீறி சிறுநீரக விற்பனை அதிகரிப்பு Posted: தர்மபுரியில், சிறுநீரகம் (கிட்னி) விற்க முயன்றவர் மற்றும் கிட்னி வாங்கி விற்பனை செய்த புரோக்கர் உள்ளிட்ட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்ய கடுமையான சட்டம் இருந்த போதும், அதை மீறி கிட்னி விற்பனை செய்யப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்த சட்டம், 1994ம் ஆண்டு அமலுக்கு வந்தது. உறுப்பு தான அறுவை சிகிச்சை சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மூலம், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ரத்த உறவு முறையில் உள்ளவர்கள், உடல் உறுப்புகளை ... |
| சி.பி.ஐ., குறித்த அமைச்சரவை முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும்: ஜெட்லி கருத்து Posted: புதுடில்லி: ""சி.பி.ஐ.,யை சுதந்திர அமைப்பாக மாற்றும் வகையில், மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு, குழப்பத்தை ஏற்படுத்தும்,'' என, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார்.சி.பி.ஐ., இயக்குனரை, மத்திய அரசே நேரடியாக நியமனம் செய்யும், தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒரு குழுவின் மூலம், தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்தக் குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றிருப்பர். இந்த மூன்று பேரும் சேர்ந்தே, சி.பி.ஐ., இயக்குனரின் தேர்வை இறுதி செய்வர். ... |
| காங்., - தி.மு.க., கூட்டணி இப்போதைக்கு இல்லை : ஸ்டாலின் "தடாலடி' Posted: மதுரை: ""தமிழகத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது இப்போதைக்கு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுத்தேர்தலின் போது மக்களிடம் ஓட்டு கேட்பது போல் தான், ராஜ்யசபா தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சி என்ற, உரிமையில் ஆதரவு கேட்டோம். அவ்வளது தான். இதனால், பொதுத் தேர்தல்களிலும், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 01,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |