Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வெள்ளூரில் இலவச யோகா பயிற்சி வகுப்பு

Posted: 30 Jun 2013 01:13 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் இலவச யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருச்செந்தூரில் 9 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்

Posted: 30 Jun 2013 01:13 PM PDT

திருச்செந்தூரில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கிரிக்கெட் விளையாட்டில் மோதல்: மூவர் கைது

Posted: 30 Jun 2013 01:13 PM PDT

மெஞ்ஞானபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இளைஞரைத் தாக்கியதாக மூன்று பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அரசியல் சாசன அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் காங்கிரஸ்

Posted: 30 Jun 2013 01:12 PM PDT

சி.பி.ஐ. மட்டுமின்றி மற்ற அரசியல் சாசன அமைப்புகளையும் காங்கிரஸ் கட்சி தவறாகப் பயன்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

படிப்பை சுமையாகக் கருத வேண்டியதில்லை

Posted: 30 Jun 2013 01:12 PM PDT

பள்ளிப் படிப்பை சுமையாகக் கருதாமல் சுவையாகக் கருதி படித்தால், எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம்

திருவள்ளுவர் மன்றக் கூட்டம்

Posted: 30 Jun 2013 01:12 PM PDT

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வுக் கூட்டம் விஸ்வகர்மா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற துணைத் தலைவருக்கு மிரட்டல்: அதிமுக பிரமுகர் கைது

Posted: 30 Jun 2013 01:12 PM PDT

  காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவரை மிரட்டியதாக அதிமுக பிரமுகரை ஆறுமுகனேரி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

டாக் தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 30 Jun 2013 01:12 PM PDT

தூத்துக்குடியில் அண்மையில் மூடப்பட்ட டாக் தொழிற்சாலையை திறக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்

Posted: 30 Jun 2013 01:11 PM PDT

லியாண்டர் பயஸூக்கு எதிரான காசோலை மோசடி வழக்கு தள்ளுபடி

Posted: 30 Jun 2013 12:50 PM PDT

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸýக்கு எதிரான காசோலை மோசடி வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

13ஆவது சட்டத்திருத்தம்: ஜூலை 4}ல் பசில் ராஜபட்ச இந்தியா வருகை

Posted: 30 Jun 2013 12:50 PM PDT

இலங்கை அரசியல் சாசனச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நீக்குவது தொடர்பாக இந்திய அரசுடன் விவாதிக்க அதிபர் ராஜபட்சவின் சிறப்புத் தூதராக அவரது இளைய சகோதரர் பசில் ராஜபட்ச ஜூலை 4ஆம் தேதி தில்லி செல்கிறார்.

நக்சல் நடமாட்ட பகுதிகளில் கவச வாகனங்களை பயன்படுத்துவது நிறுத்தம்

Posted: 30 Jun 2013 12:48 PM PDT

நக்சல் பாதிப்பு மிக்க பகுதிகளில் கவச வாகனங்களைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தெரிவித்துள்ளது.

நேபாளம்: கட்சிப் பதவியிலிருந்து விலகினார் பட்டராய்

Posted: 30 Jun 2013 12:48 PM PDT

நேபாள முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டராய் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மண்டி இடைத்தேர்தல்: இமாசல் முதல்வர் மனைவி வெற்றி

Posted: 30 Jun 2013 12:45 PM PDT

இமாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற மண்டி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரதிபா சிங் வெற்றி பெற்றுள்ளார்.

பிருத்விக்கு பதிலாக "பிரஹார்' ஏவுகணைகளை ஈடுபடுத்த முடிவு

Posted: 30 Jun 2013 12:44 PM PDT

இப்போது இந்திய பாதுகாப்பு படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிருத்வி ஏவுகணைக்கு பதிலாக "பிரஹார்' ஏவுகணைகளை ஈடுபடுத்த பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

உலகின் சிறந்த இடங்களில் தாஜ்மகாலுக்கு 3-வது இடம்

Posted: 30 Jun 2013 12:42 PM PDT

உலகில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்களில் காதலின் நினைவுச்சின்னமான தாஜ்மகால் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு விவகாரம்: உத்தரகண்ட் அரசு-வானிலை ஆய்வு மையம் மோதல்

Posted: 30 Jun 2013 12:41 PM PDT

வானிலை முன்னறிவிப்பு விவகாரம் தொடர்பாக உத்தரகண்ட் மாநில அரசுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், கொல்கத்தாவில் கனமழை: 4 பேர் உயிரிழப்பு

Posted: 30 Jun 2013 12:40 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் கொல்கத்தா நகரில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் மழை பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர்.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

Posted: 30 Jun 2013 12:39 PM PDT

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்களை அளித்த முதல் அரசியல் கட்சியென்ற பெருமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கிறது.

"பதிவு செய்யாத அமர்நாத் யாத்ரிகர்களுக்கும் உடனடி அனுமதி'

Posted: 30 Jun 2013 12:39 PM PDT

பதிவு செய்யாத அமர்நாத் யாத்ரிகர்களுக்கும் உடனடி அனுமதியை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு வழங்கி வருகிறது.

ஏர்போர்ட் மெட்ரோவை இயக்குகிறது டிஎம்ஆர்சி

Posted: 30 Jun 2013 12:30 PM PDT

தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில் சேவையை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

பெண்ணிடம் நகை பறிப்பு: தடுக்க முயன்ற போலீஸ்காரர் சுடப்பட்டார்

Posted: 30 Jun 2013 12:30 PM PDT

தில்லியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரு நபர்களைத்  தடுக்க முயன்ற போலீஸ்காரர் சுடப்பட்டார். இச்சம்பவம் கிழக்கு தில்லி மயூர்விஹார் பேஸ்-1 பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது.

பிரிந்து வாழும் மனைவிக்கு ரூ. 25,000 ஜீவனாம்சம்

Posted: 30 Jun 2013 12:30 PM PDT

கணவரை விட்டுப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வாழும் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சமாக மாதம்தோறும் ரூ. 25,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உருளைக்கிழங்கு வியாபாரி சுட்டுக் கொலை

Posted: 30 Jun 2013 12:29 PM PDT

தெற்கு தில்லி மெஹ்ராலியில் உள்ள காய்கறிக் கடையில் உருளைக்கிழங்கு வியபாரம் செய்துவந்த மனோகர் லால் (51) என்பவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம்: மத்திய அரசின் ஏமாற்று வேலை

Posted: 30 Jun 2013 12:29 PM PDT

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்திருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகளுடன் மாதந்தோறும் ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Jun 2013 12:29 PM PDT

: தில்லி அரசின் திட்டங்களை மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்த குடியிருப்பு நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் வருவாய்த் துறை துணை ஆணையர் மாதந்தோறும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டார்.

தில்லியில் இந்த வாரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted: 30 Jun 2013 12:28 PM PDT

வட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், தில்லியில் இந்த வாரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விலங்குகளிடம் பரிசோதிக்கத் தடை

Posted: 30 Jun 2013 12:28 PM PDT

அழகு சாதனப் பொருள்களையும், அவற்றைத் தயாரிக்கப்  பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களையும் விலங்குகளிடம் பரிசோதிக்க இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விதித்துள்ள தடை உத்தரவை வரவேற்பதாக "பீட்டா' (பீப்பிள் ஃபார் எத்திகல் ட்ரீட்மென்ட்ஸ் ஆஃப் அனிமல்ஸ்) விலங்குகள் நல உரிமைப் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

மாம்பழக் கண்காட்சி: 1.5 கிலோ மாம்பழம் சாப்பிட்ட பெண்ணுக்கு முதல் பரிசு

Posted: 30 Jun 2013 12:28 PM PDT

தில்லி சுற்றுலா நிறுவனத்தின் சார்பில், பீதம்புராவில் நடைபெற்ற மூன்று நாள்கள் மாம்பழக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

"தேசிய நாடகப் பள்ளி இயக்குநர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும்'

Posted: 30 Jun 2013 12:27 PM PDT

இரண்டு மாதங்களாக காலியாக உள்ள, தேசிய நாடகப் பள்ளி இயக்குநர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நாடக நடிகை மாயா கிருஷ்ண ராவ் கேட்டுக் கொண்டார்.

பாலியல் வழக்கு: இளைஞர் விடுதலை

Posted: 30 Jun 2013 12:27 PM PDT

திருமணம் செய்வதாக ஆசை காட்டி 19 வயது பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞர் லோகேஷ் என்பவரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும்

Posted: 30 Jun 2013 12:27 PM PDT

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கத் தேவையான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரத்துக்கான நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது.

தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்வெங்கடாசலத்தின் பிறந்தநாள் விழா

Posted: 30 Jun 2013 12:26 PM PDT

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் வெங்கடாசலத்தின் 105-ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தொழிற்பேட்டை வசதி மேம்படுத்தும் பணிகள்: 4-ம் தேதி தொடக்கம்

Posted: 30 Jun 2013 12:26 PM PDT

2010-12-ஆம் ஆண்டுக்கான தொழில் கொள்கையைப் பின்பற்றும் வகையில், தில்லியில் உள்ள பட்பர்கன்ஞ், ஓஹ்லாவில் தொழிற்பேட்டைகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் 4-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன.

ரயிலில் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே மோதல்: 18 பேர் காயம்

Posted: 30 Jun 2013 12:26 PM PDT

ரயில் பயணத்தின் போது "இடம்' பிடிப்பதில் பிரச்னை ஏற்பட்டு,தில்லி நாங்லோய் ரயில் நிலையம் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக மைனர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 1 கோடி கடன்: தம்பதி உள்பட மூவர் கைது

Posted: 30 Jun 2013 12:25 PM PDT

போலி ஆவணங்கள் அளித்து தனியார் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்றதாக தில்லி சுபாஷ் பிளேûஸச் சேர்ந்த சுஷில் குமார், பவன் குமார் கோயல் மற்றும் அவரது மனைவி நிகிதா கோயல் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சியில் கோடீஸ்வர வேட்பாளர்கள்

Posted: 30 Jun 2013 12:25 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விண்ணப்பத்துள்ளவர்களில் சிலர் கோடீஸ்வரர்களாவர்.

ரூ. 18 கோடி ஏமாற்றியதாக 2 ரியல் எஸ்டேட் அதிபர்கள் கைது

Posted: 30 Jun 2013 12:25 PM PDT

மும்பையில் வீடுகள் விற்பனை செய்வதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் ரூ. 18 கோடி வசூலித்து ஏமாற்றியதாக ரியல் எஸ்டேட் அதிபர்களான பவன் தத்தா (52), ககன் தீப் சாவ்லா (42) இருவரும் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.

வாய் பேச முடியாத சிறுமி பலாத்காரம்

Posted: 30 Jun 2013 12:24 PM PDT

வாய் பேச முடியாத 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மூவரில் ஆசிஃப் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தில்லி பல்கலை. மாணவர் சேர்க்கை: மாற்றுத் திறனாளிகள் புகார்

Posted: 30 Jun 2013 12:24 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

செஞ்சி நகரில் லாரிகளில் குடிநீர் விநியோகம்

Posted: 30 Jun 2013 12:24 PM PDT

செஞ்சி நகரின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதென, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

"மக்களின் தேவை அறிந்து செயல்படுபவர் முதல்வர்'

Posted: 30 Jun 2013 12:23 PM PDT

தமிழக மக்களின் தேவை அறிந்து, அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே வழங்கக் கூடியவர் தமிழக முதல்வர் என்று சட்டப்பேரவை உறுப்பினர்  சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மாதிரிப் பள்ளி: முதல்வர் திறந்துவைப்பு

Posted: 30 Jun 2013 12:23 PM PDT

திருக்கோவிலூர் அருகே திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக மாறிப்போன மாதிரிப் பள்ளியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் (காணொலி காட்சி) முறை மூலம் சென்ற புதன்கிழமை திறந்து வைத்தார்.

அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 30 Jun 2013 12:23 PM PDT

செஞ்சி அரிமா சங்கத்தின், 2013-2014-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் சேவைப்பணி ஏற்பு விழா  செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

குடும்பம் உயர பெண் கல்வி அவசியம்: அமைச்சர்

Posted: 30 Jun 2013 12:22 PM PDT

ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பமே சிறப்பாக இருக்கும் என்று, சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் கிராமப்புற

மொபெட் திருடியவர் கைது

Posted: 30 Jun 2013 12:22 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே, மொபெட்டை திருடிய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிக்குப் பாராட்டு

Posted: 30 Jun 2013 12:22 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அகலூர் எம்.தமிழரசிக்கு நேரு யுவகேந்திரா சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொது இடத்தில் தகராறு: மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கைது

Posted: 30 Jun 2013 12:22 PM PDT

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூரில், பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட இரு மினி பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பள்ளிகளுக்கு ஸ்டேட் வங்கி நல உதவி

Posted: 30 Jun 2013 12:21 PM PDT

பாரத ஸ்டேட் வங்கியின் பண்ருட்டி பஜார் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை வங்கி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

என்.எல்.சி. பங்கு விற்பனையை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 30 Jun 2013 12:21 PM PDT

என்எல்சி நிறுவனப் பங்குகள் விற்பனையைக் கண்டித்து நெய்வேலி நகர அதிமுக சார்பில் மெயின்பஜாரில் வெள்ளிக்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

என்.சி.சி. கலந்தாய்வு கூட்டம்

Posted: 30 Jun 2013 12:21 PM PDT

சிதம்பரம் அண்ணாமலை நகர் 4-வது தமிழ்நாடு தொழில்நுட்ப தேசிய மாணவர் படை அலுவலக வளாகத்தில் வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்புடன் தொழில் திறன் பயிற்சி:இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 30 Jun 2013 12:20 PM PDT

வேலைவாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சிக்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெற உள்ளது.

புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள்

Posted: 30 Jun 2013 12:20 PM PDT

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில நெய்வேலி மாணவர்கள் தேர்வு

Posted: 30 Jun 2013 12:20 PM PDT

நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்ப நிலையங்களான இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பயில நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 23 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டம்

Posted: 30 Jun 2013 12:20 PM PDT

சிதம்பரம் கே.என்.ஆர்.எஸ்.ஜி. அசோசியேட்ஸ் சார்பில் பட்ஜெட் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜூலை 9-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 30 Jun 2013 12:19 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் சமுதாய வளைகாப்பு

Posted: 30 Jun 2013 12:19 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 210 கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Jun 2013 12:18 PM PDT

உத்தரமேரூரில் தே.மு.தி.க. சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Posted: 30 Jun 2013 12:18 PM PDT

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளியில் மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களைப் போலீஸார் சமரசம் செய்தனர்.

உத்தரமேரூரில் அறிவியல் இயக்க மாநாடு

Posted: 30 Jun 2013 12:18 PM PDT

உத்தரமேரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க 17-வது கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உத்தரகண்ட்வெள்ளம்: பா.ஜ.க. நிவாரண நிதி

Posted: 30 Jun 2013 12:18 PM PDT

காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. சார்பில், உத்ரகண்ட் நிவாரண நிதியாக பொதுமக்களிடம் உண்டியல் மூலம் முதல் கட்டமாக சேகரிக்கப்பட்ட ரூ.11 ஆயிரத்தை தலைமையிடத்தில் ஒப்படைத்தனர்.

பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 30 Jun 2013 12:17 PM PDT

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிசெல்லா குழந்தைகள்: தகவல் அளிக்க ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 30 Jun 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்து தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்துள்ளார்.

பாம்பு கடித்து மாணவி சாவு

Posted: 30 Jun 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில், 10-ஆம் வகுப்பு மாணவி இறந்தார்.

சாலை விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் சாவு

Posted: 30 Jun 2013 12:17 PM PDT

காஞ்சிபுரத்தில் நடந்த சாலை விபத்தில் காங்கிரஸ் சேவா சங்க நிர்வாகி இறந்தார்.

மின்சாரம் பாய்ந்து பசு, கன்று சாவு

Posted: 30 Jun 2013 12:16 PM PDT

வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கியதில், மின்சாரம் பாய்ந்து பசுவும், கன்றும் ஞாயிற்றுக்கிழமை இறந்தன.

உலக சாம்பியன்ஷிப்பை நோக்கி ஓடுகிறேன்!

Posted: 30 Jun 2013 12:16 PM PDT

4x100 மீ. தொடர் ஓட்டத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் தமிழக வீரர் விஜயகுமார்.

"புதுவை மாநில அந்தஸ்து தேவையும் - தீர்வும்' நூல் வெளியீடு

Posted: 30 Jun 2013 12:16 PM PDT

"புதுவை மாநில அந்தஸ்து தேவையும் - தீர்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொருளாதார முன்னேற்ற பட்ஜெட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 30 Jun 2013 12:15 PM PDT

புதுச்சேரியில் மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ள

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. பேரணி

Posted: 30 Jun 2013 12:15 PM PDT

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, பா.ஜ.க. சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. இப்பேரணியை, மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

"அரசு பொறியியல் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது'

Posted: 30 Jun 2013 12:15 PM PDT

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

நீச்சல் பயிற்சியாளர் விபத்தில் சாவு

Posted: 30 Jun 2013 12:14 PM PDT

புதுச்சேரியில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் நீச்சல் பயிற்சியாளர் உயிரிழந்தார்.

இறைச்சிக் கடைகளை முறைப்படுத்த ஆலோசனை

Posted: 30 Jun 2013 12:14 PM PDT

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

யு.ஜி.சி. ஆசிரியர் தகுதித் தேர்வு

Posted: 30 Jun 2013 12:14 PM PDT

புதுச்சேரியில் யு.ஜி.சி. ஆசிரியர் தகுதித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருத்துவம், பொறியியல் பயில மேலைநாடுகளில் ஆர்வம் இல்லை

Posted: 30 Jun 2013 12:13 PM PDT

மேலைநாடுகளில் உள்ளவர்களிடம், மருத்துவம், பொறியியல் கல்வி பயில ஆர்வம் இல்லை. அவர்கள் உடற்கல்வி பயில்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தமிழ்நாடு

அரசம்பட்டில் பாலம் கட்ட நடவடிக்கை: அமைச்சர்

Posted: 30 Jun 2013 12:13 PM PDT

அரசம்பட்டு கிராமத்தில் புதிய பாலம் அமைக்க சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

சென்னை மாரத்தான்: முன்பதிவு தொடக்கம்

Posted: 30 Jun 2013 12:13 PM PDT

விப்ரோ சென்னை மாரத்தான் போட்டிக்கான "ஆன்லைன்' முன்பதிவு தொடங்கியுள்ளது.

நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை

Posted: 30 Jun 2013 12:13 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜூலை 2-ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் வெள்ளம்: பாஜக நிதியுதவி

Posted: 30 Jun 2013 12:12 PM PDT

: உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி வழங்க செஞ்சியில் பா.ஜ.க.வினர் வெள்ளிக்கிழமை வீதி வீதியாக நிதி திரட்டினர்.

தேசிய மல்யுத்தம்: தில்லி அணி சாம்பியன்

Posted: 30 Jun 2013 12:12 PM PDT

கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் தில்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜூலை 01 மின் தடை

Posted: 30 Jun 2013 12:12 PM PDT

காந்தி சிலை அருகே மேம்பாலம்

Posted: 30 Jun 2013 12:12 PM PDT

விழுப்புரம் காந்திசிலை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக நீதிப்பாதுகாப்பு இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

எழுது பொருள், அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு

Posted: 30 Jun 2013 12:11 PM PDT

சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் உள்ள காலியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2017-ல் இங்கிலாந்தில் நடக்கிறது

Posted: 30 Jun 2013 12:11 PM PDT

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் சுனாமி பாதித்த மாணவர்கள் தவிப்பு

Posted: 30 Jun 2013 12:11 PM PDT

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 3,602 மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2012-13-ஆம் கல்வி ஆண்டுக்கான சுனாமி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

சென்னை மாரத்தான்: முன்பதிவு தொடக்கம்

Posted: 30 Jun 2013 12:11 PM PDT

விப்ரோ சென்னை மாரத்தான் போட்டிக்கான "ஆன்லைன்' முன்பதிவு தொடங்கியுள்ளது.

மலேரியா தடுப்பு மாத விழா

Posted: 30 Jun 2013 12:11 PM PDT

சிதம்பரம் அருகே உள்ள வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசிய தடகள சங்கத் தலைவர் பதவி: கல்மாடி-ஹாமத் இடையே கடும் போட்டி

Posted: 30 Jun 2013 12:10 PM PDT

ஆசிய தடகள சங்கத் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் சுரேஷ் கல்மாடி, கத்தார் தடகள சங்கத் தலைவர் அல் ஹாமத் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

Posted: 30 Jun 2013 12:10 PM PDT

பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றித் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுற்றுச்சூழல் தின விழா

Posted: 30 Jun 2013 12:10 PM PDT

நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், செரீனா

Posted: 30 Jun 2013 12:10 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மது கடத்தல்: நடிகர் உள்பட 5 பேர் கைது

Posted: 30 Jun 2013 12:10 PM PDT

கடலூரில், நான்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய சோதனையில், சினிமா நடிகர் உட்பட, ஐந்து பேர், கைது செய்யப்பட்டனர்.

குடியிருப்புப் பகுதியில் பாம்பு

Posted: 30 Jun 2013 12:09 PM PDT

சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் புகுந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டனர்.

ரூ. 47 லட்சம் பொருள்கள் திருட்டு: 4 பேர் கைது

Posted: 30 Jun 2013 12:09 PM PDT

சென்னையில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.47 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் களவுபோன வழக்கில், லாரி ஓட்டுநர் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரை பண்ருட்டி போலீஸார் கைது செ

காளான் வளர்ப்புக் குடில்

Posted: 30 Jun 2013 12:09 PM PDT

நெய்வேலியில் என்எல்சி தோட்டக் கலைத் துறை சார்பில் காளான வளர்ப்புக் குடில் அமைக்கப்பட்டு, அதை என்எல்சி மனிதவளத்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா வியாழக்கிழமை திறந்துவைத்தார். என்எல்சி தோட்டக்கலை மற்றும் நகர நிர்வாகம் ஆகியவை இணைந்து நெய்வேலியில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதை அமல்படுத்திவருகிறது. அந்த வகையில்

பிரிட்டிஷ் கிராண்ட்ப்ரீ: ரோஸ்பெர்க் வெற்றி

Posted: 30 Jun 2013 12:09 PM PDT

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட்ப்ரீ போட்டியில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு கலந்துரையாடல்

Posted: 30 Jun 2013 12:09 PM PDT

சிதம்பரம் அருகே தெம்மூர் கிராமத்தில் சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5.20 கோடி மானியம்

Posted: 30 Jun 2013 12:08 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5.20 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ் தெரிவித்தார்.

திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் இன்றுமுதல் மின்தடை நேரம் மாற்றம்

Posted: 30 Jun 2013 12:07 PM PDT

திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் உள்ள துணை மின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு ஜூலை முதல் தேதியில் இருந்து மின்தடை நேரம் மாற்றப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: 20 ஆயிரம் பேர் பங்கேற்கத் தீர்மானம்

Posted: 30 Jun 2013 12:07 PM PDT

என்.எல்.சி., பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்க தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™