Tamil News | Online Tamil News |
- முன்பதிவு ரயில் கட்டணம் திரும்ப பெறுவதில் கெடுபிடி: ஜூலை 1ம் தேதி முதல் அமல்
- சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு அதிரடி
- காங்., ஆதரவுக்கு கனிமொழி நன்றி
- தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி? பின்னணி அம்பலம்
- அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடம் மொபைல் போனில் ஆதரவு
- உத்தரகண்ட் சோகத்திலும் விளம்பரம் தேடிய காங்.,
- உத்தரகண்டில் பெய்த பேய் மழை, நிலச்சரிவால் ஏற்பட்ட சேதம் ரூ.3,000 கோடி
- ராஜ்யசபா தேர்தலுக்கு இன்று ஓட்டுப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரம் : ஓட்டு போடுவது எப்படி என எம்.எல்.ஏ.,க்களுக்கு "பாடம்!'
- குவைத்தில் மரண தண்டனை தப்பித்த தமிழக இளைஞர்கள்
| முன்பதிவு ரயில் கட்டணம் திரும்ப பெறுவதில் கெடுபிடி: ஜூலை 1ம் தேதி முதல் அமல் Posted: புதுடில்லி:முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்து, கட்டணம் திரும்ப பெறுவதில், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக, ரத்து செய்தால் தான், டிக்கெட் தொகையில், முழு கட்டணம் திரும்ப கிடைக்கும்; ரயில் புறப்பட்ட பிறகெனில், இரண்டு மணி நேரத்திற்குள் ரத்து செய்ய வேண்டும்' என, விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. |
| சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு அதிரடி Posted: புதுடில்லி:தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கர்நாடக முதல்வர், சித்தராமைய்யா, மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது, தமிழக அரசு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்துள்ள, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு விவரம்:தமிழகத்திற்கு உரிய பங்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என, இம்மாதம், மே, 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.அதன் படி, தண்ணீர் திறப்பை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் அமைக்கப்பட்ட, மேற்பார்வை குழு கூட்டத்தில் ... |
| காங்., ஆதரவுக்கு கனிமொழி நன்றி Posted: சென்னை:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததை ஒட்டி, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, நேற்று காலை, சத்தியமூர்த்தி பவன் சென்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு நன்றி தெரிவித்தார்.ராஜ்யசபா தேர்தல், இன்று நடைபெறவுள்ளது. ஆறாவது எம்.பி., சீட்டிற்கு, தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கும், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று காலை, 11:45 மணிக்கு தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு, கனிமொழி வந்தார்.அவருடன் டி.ஆர்.பாலு, வேலு, ... |
| தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி? பின்னணி அம்பலம் Posted: ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவிக்க, கூட்டணி தொடர்பான, சில நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்து உள்ளது. அதை தி.மு.க., தரப்பு ஏற்றுக் கொண்டதால், காங்கிரஸ் தன் ஆதரவை தி.மு.க.,வுக்கு அளித்து உள்ளது.டில்லி, ரகாப்கஞ்ச் சாலையில் உள்ளது, "வார் ரூம்' எனப்படும் போர் அறை. அங்கு வைத்து தான், காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முடிவு எடுக்கப்படுவது வழக்கம். |
| அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடம் மொபைல் போனில் ஆதரவு Posted: தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர், அ.தி.மு.க., மற்றும் இந்திய கம்யூ., வேட்பாளர்களுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், அவர்களிடம், மொபைல் போன் மூலம் தே.மு.தி.க., தரப்பில் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வின், 29 ஓட்டுகளுடன், அ.தி.மு.க., வசம் உபரியாக உள்ள, ஐந்து ஓட்டுகள், சேரும் பட்சத்தில், அக்கட்சி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.ஆனால், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேர் ஓட்டு, யாரை சென்றடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்., ஆதரவு கிடைக்கும் என கடைசி வரை ... |
| உத்தரகண்ட் சோகத்திலும் விளம்பரம் தேடிய காங்., Posted: டேராடூன் : உத்தரகண்ட் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானோரை, ராணுவத்தினர் தங்கள் உயிரை பணயம் வைத்து மீட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர், சோனியா, அவர் கட்சியை சேர்ந்த முதல்வர், விஜய் பகுகுணாவின் சிரித்த முகத்துடனான நோட்டீஸ் வினியோகம், அப்பகுதி மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.உத்தரகண்டில் பேய் மழை பெய்ததில், ஏராளமானோர் தவிக்கின்றனர். இவர்களை, ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டுள்ள மாநில மக்களுக்கு தெம்பூட்டும் வகையில், முதல்வர், விஜய் பகுகுணா தலைமையிலான, ஆளும் காங்கிரஸ் அரசு, நோட்டீஸ் ... |
| உத்தரகண்டில் பெய்த பேய் மழை, நிலச்சரிவால் ஏற்பட்ட சேதம் ரூ.3,000 கோடி Posted: டேராடூன்:""உத்தரகண்ட் மாநிலம், பழைய நிலையை அடைய, இன்னும், மூன்றாண்டுகள் ஆகும்; சேதத்தின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது,'' என, அம்மாநில காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா கூறினார்.முன்கூட்டியே துவங்கிய பருவ மழை, உத்தரகண்ட் மாநிலத்தை உலுக்கி எடுத்து விட்டது. இயல்பாக, கடந்த, 22ம் தேதி துவங்க வேண்டிய தென் மேற்கு பருவ மழை, கடந்த, 15ம் தேதியே துவங்கியது. துவங்கிய வேகத்தில், பேய் மழையாக உருவெடுத்து, இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்தது.இதில், வரலாறு காணாத சேதத்தை அந்த மாநிலம் சந்தித்தது. முக்கிய வழிபாட்டுத் தலங்களான, கேதார்நாத், பத்ரிநாத், ... |
| Posted: சென்னை : தமிழகத்தில், ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும், எவ்வாறு ஓட்டு போட வேண்டும் என, தங்களுடைய கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு பாடம் நடத்தியுள்ளன.தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஆறு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில், நான்கு பேர், இந்திய கம்யூ., - தி.மு.க., - தே.மு.தி.க., சார்பில், தலா ஒருவர் என, மொத்தம், ஏழு பேர் போட்டியிடுகின்றனர். பயிற்சி: ராஜ்யசபா தேர்தலுக்கு, 17 ஆண்டுகளுக்கு ... |
| குவைத்தில் மரண தண்டனை தப்பித்த தமிழக இளைஞர்கள் Posted: துபாய்: குவைத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த இருவரின், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், முத்துபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 30. கும்பகோணத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 32. இவர்கள் கடந்த, 2008லிருந்து, குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த, 2008ல், இலங்கையை சேர்ந்த பாத்திமா என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், சுரேஷ், காளிதாஸ், இலங்கையை சேர்ந்த நித்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், நித்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சுரேஷ், காளிதாசுக்கு மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டது.கடந்த ஏப்ரல், 18ல் இவர்களுக்கு தண்டனை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 27,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |