ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்த நூல் இருக்கிறதா?
- உதவி தேவை - PART TIME ONLINE JOBS
- panam thavaiya?
- part time job
- சீனாவில் மதக்கலவரம்: 9 போலீசார் வெட்டிக்கொலை - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
- நீ அசைந்து கொண்டு...
- நீ என் விடுதலையை .....
- இதை விட பிரியாமல் .. இருந்திருக்கலாம் ....
- வாழ்வேன் சாகும் வரை...!!!
- என் மனதில் நீ ...!!!
- நெஞ்சோடு வைத்திருப்பதே ...
- உண்மைக்காதல் ...!!!
- சின்ன சின்ன நட்பு கவிதைகள் ...
- தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்
- நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன்
- 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்
- 15000 பதிவுகளிட்டும் பதறாமல் தொடரும் கவிதைப்பேரரசர் பூவேந்திரனை வாழ்த்தலாம் வாருங்கள்
- Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள்
- கண் படும் பாடு
- உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள்
- வேலன்:-ePub பைல்களை PDF-ஆக கன்வர்ட் செய்ய
- கண்ணீர் தான் உரம் போடும் ...
- அகல் மொழி பத்து - பாகம் 5
- ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்
- சொந்தக்கதை....சோகக்கதை.
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
- சென்னையில் ஒரு மாநாடு
- மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு
- Internet Explorer – குறுக்கு விசைகள்
- உலகநாயகனின் ரசிகர்களுக்காக
- உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா?
- காலம் போடும் கட்டளை கோலமோ ?
- உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள்
- தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்?
- தந்திக்கு இணையான சேவை 10 ரூபாய்க்கு அஞ்சல் துறை அளிக்கிறது
- உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
- ரமணியின் கவிதைகள்
- பாம்பு தோல் பை தயாரிக்கும் முறை (வாந்தி எடுத்தா நான் பொறுப்பு இல்ல)
- ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
- அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை
| Posted: 26 Jun 2013 02:35 PM PDT நண்பர்களே எனக்கு india a history by john keay என்ற நூல் மின்நூல் வடிவில்(pdf) வேண்டும். இருப்பவர்கள் உதவ வேண்டுகிறேன் |
| உதவி தேவை - PART TIME ONLINE JOBS Posted: 26 Jun 2013 02:06 PM PDT ஈகரை நண்பர்களுக்கு வணக்கம், பகுதிநேரமாக ஆன்லைன் இல் எப்படி வேலை செய்வது? இது சம்பந்தமான இணயதள முகவரிகள் என்ன? தெரிந்தால் உதவிசெய்ய வேண்டுகிறேன். |
| Posted: 26 Jun 2013 01:49 PM PDT you need money please contact |
| Posted: 26 Jun 2013 01:45 PM PDT part time job venuma? |
| சீனாவில் மதக்கலவரம்: 9 போலீசார் வெட்டிக்கொலை - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு Posted: 26 Jun 2013 11:35 AM PDT மேற்கு சீனாவில் உள்ள உரும்கி பகுதியில் வசிக்கும் துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் அப்பகுதியை தங்களின் தாய்நாடு என்று கூறி உரிமை கோரி வருகின்றனர். தங்களின் மொழி மற்றும் மத உரிமைகளின் மீது சீன அரசு மேலாதிக்கம் செலுத்தி வருவதாக கூறும் இவர்கள் உள்ளூர் மக்களுடன் மோதி வருகின்றனர். மத்திய ஆசியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள போராளி குழுக்களின் ஆதரவுடன் கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டும் சீன அரசு இவர்களை ஒடுக்க தாக்குதல் நடத்தி வருகிறது. உரும்கி ... |
| Posted: 26 Jun 2013 11:26 AM PDT காதலில் ... உனக்கு என்னையும் .. எனக்கு உன்னையும் .. பண்டமாற்றைப்போல் .. பரிமாறிக்கொண்டோம் ... நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு... நான் கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ கவிதையை .. உன்னைக்கொண்டுதான் .. எழுதுகிறாய் ...!!! கஸல் 177 |
| Posted: 26 Jun 2013 11:24 AM PDT உன் ... உள்ளச் சிறையில் நான்... நான் என் விடுதலையை... விரும்பவில்லை..... நீ என் விடுதலையை ..... விரும்பினால்,.... என் உடல் என் உயிரின் ..... விடுதலையை விரும்பும்..... ஒரே ஒரு கவலை ... என் உள்ளத்தில் உன்னை .. சிறைபிடித்து வைத்திருக்கிறேன் ... |
| இதை விட பிரியாமல் .. இருந்திருக்கலாம் .... Posted: 26 Jun 2013 11:12 AM PDT என்னை விட்டு பிரிந்தும், தினம் தினம் பிறந்துகொண்டே இருக்கிறாய் நினைவுகளால்... இதை விட பிரியாமல் .. இருந்திருக்கலாம் .... நிலவு இல்லாத நாட்களும் உண்டு... மண்ணில் மழை இல்லாத நாட்களும் உண்டு... ஆனால், என்னில் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை... |
| Posted: 26 Jun 2013 11:09 AM PDT பூக்களை பறிக்காதே .. பறித்தால் சூடாதே சூடினால் வாட விடாதே ... வாடினான் எறிந்து விடாதே ... எறிந்த மலரைப் போல் என்னை மறந்துவிடாதே.... உன் நினைவுகளில் உயிர் இல்லை ஆனால், நான் உயிர் வாழ காரணம் உன் நினைவுகள் தான்... என்னை தூக்கி நீ எறிந்தாலும் .. எறிந்த அந்த நினைவுகளுடன் .. வாழ்வேன் சாகும் வரை...!!! |
| Posted: 26 Jun 2013 11:08 AM PDT உலகிற்கு, நீ யாரோ...! எனக்கு, நீயே உலகு...! அழகுக்கு நீ யாரோ நீ எனக்கு அழகு ...!!! உறவுக்கு நீ யாரோ .. எனக்கு நீ உறவு ...!!! காதலில் யார்மனத்தில் யாரோ .. என் மனதில் நீ ...!!! |
| Posted: 26 Jun 2013 11:07 AM PDT நட்பு என்பது கரும்பலகை அல்ல, எழுதி எழுதி அழிப்பதற்கு... அது, கல்வெட்டு போன்றது என்றும் நிலைத்திருக்கும்... காதல் காயம் போன்றது .. நட்பு தழும்பை போன்றது மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பதே ... நட்பு ..நட்பு ..நட்பு ...!!! |
| Posted: 26 Jun 2013 11:06 AM PDT இரவு பகல்... நாள் என்பது ஒன்று ... வலது கண் இடது கண் .... பார்வை என்பது ஒன்று.... சிறகுகள் இரண்டு ... பறப்பது என்பது ஒன்று .. இதயம் இரண்டானாலும் .. உயிர் ஒன்றுதான் -அதுதான் உண்மைக்காதல் ...!!! |
| சின்ன சின்ன நட்பு கவிதைகள் ... Posted: 26 Jun 2013 11:05 AM PDT இறப்பது எளிதே எனக்கு... நண்பா உன்னை .. மறப்பதைக் காட்டிலும்... *************************************** அடி, முடி தேடினாலும், அகராதியை புரட்டினாலும், முழுமையான அர்த்தம் புரியாது நம் நட்பு உயிர் தோழா ...!!! **************************************** அன்று இன்றும் என்றும் ஒரே போல் இருப்பது .. நட்பு ஒன்றே ...!!! ***************************************** வாழ்வதை நோக்கமாக எதையும் விட்டுக்கொடுக்காது காதல் ... விட்டுக்கொடுப்பதை .. வாழ்க்கையாக கொண்டது ... நட்பு ....!!! |
| தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம் Posted: 26 Jun 2013 11:04 AM PDT புத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் மீது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்திய இந்து,&நாத்திககர்களுக்கு மிக்க மதிப்பு உண்டு.ஆனால் ஈழ சகோதரர்களைக் கேட்டால் பதில் வேறுவிதமாக வரும். அது ஏன் என்பதையும் பார்ப்போம்.முதலில் தேரவாத பவுத்தத்தின் வரலாறு,கொள்கைகள் பற்றி சுருக்கமாக அறிவோம். ஒரு மதம்,இயக்கம் நடைமுறையில் அன்று முதல் இன்றுவரை என்ன செய்தது,செய்கிறது, என்பதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே அதன் மீது கருத்து சொல்ல முடியும். பவுத்தம் பொ.ஆ.மு 600 ல் கவுதம் சித்தார்த்தர்[566-486 B.C.E.] ... |
| நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம்.27 ஜூன் Posted: 26 Jun 2013 10:53 AM PDT http://friends18.com/img/flowers2/0033.gif நாளை காலை காகம் கரையும்.--சிவா பிறந்த தினம். 27ஜூன் வைகறையில் காகம் கரையும் ஈகரையில் நாளை திருநாளாம் ஈகரையின் வேகம் என்பர் சிலர் ஈகரையில் மோகம் என்பர் சிலர் ஈகரையின் தூண் என்றும், ஓயாத உழைப்பாளி காண் என்பர் சிலர் கருவறை சிசுவை பேணிடும் தாய்போல் . உருவாக்கிய ஈகரையை ,உன்னதமாக்கி உயரிய இடத்தில் உட்கார்த்திட உருவாகும் புதிய உத்திகள் உன்னிடம். வளர்க தமிழ் . வாழ்க தமிழ். வளர்க்கும் தமிழனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சிவா ... |
| 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம் Posted: 26 Jun 2013 10:34 AM PDT http://img811.imageshack.us/img811/1078/ko9i.jpg உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தில் சென்னை கல்லூரி பேராசிரியர் வெங்கடேஷ் (33) சிக்கிக் கொண்டார். இவர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். உயிர் தப்பி சென்னை திரும்பிய இவர் தன்னை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபரையும் சென்னைக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்துள்ளார். பேராசிரியர் வெங்கடேஷ் தெரிவித்த தகவல் நெஞ்சை உருக்குவதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. தனது நண்பர்கள், மாணவர்கள் 7 பேருடன் பேராசிரியர் ... |
| 15000 பதிவுகளிட்டும் பதறாமல் தொடரும் கவிதைப்பேரரசர் பூவேந்திரனை வாழ்த்தலாம் வாருங்கள் Posted: 26 Jun 2013 10:28 AM PDT வாழ்த்துக்கள் பூவன். |
| Sidney Sheldon Novels Collection - ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் Posted: 26 Jun 2013 10:24 AM PDT ஆங்கில நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் நாவல்கள் – Sidney Sheldon Novels Collection 1. A Stranger in the Mirror (1976) 2. Are You Afraid of the Dark? (2004) 3. The Best Laid Plans (1997) 4. Memories of Midnight (1990) 5. Master of the Game (1982) 6. Morning, Noon and Night (1995) 7. Nothing Lasts Forever (1994) 8. Rage of Angels (1980) 9. If Tomorrow Comes (1985) 10. The Doomsday Conspiracy (1991) 11. The Sands of Time (1988) 12. The Sky is Falling (2001) 13. ... |
| Posted: 26 Jun 2013 09:54 AM PDT சொல்லமுடியாது .. அது படும் துன்பம் .. தூக்கத்தை கூட .. வெறுக்கிறது ...!!! உனக்கு தெரியாது .. நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ... நிலாவிடம் .. கேட்டுப்பார் ... நாம் சேர்ந்திருந்த ... நாட்களை கூறும் ... கஸல்..176 |
| உத்தரகாண்ட் மீட்புப் பணியில் தங்கள் திறனை வெளிப்படுத்தும் இந்தியப் பெண் விமானிகள் Posted: 26 Jun 2013 09:53 AM PDT இந்தியா தனது பெண் விமானிகளை போர்க்களத்திற்கு அனுப்புவதில்லை. ஆயினும், இந்த விமானிகள் உத்தரகாண்டில் நடந்துவரும் மீட்புப்பணியில் திறம்பட செயல்பட்டு தங்களது பணித் திறமையை நிரூபிக்கின்றனர். இந்திய விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடர் குஷ்பூ குப்தா தனது சீட்டா ஹெலிகாப்டரில் இதுவரை 55க்கும் மேற்பட்ட பயணங்களைச் செய்துள்ளார். இந்த அனுபவங்கள் உண்மையிலேயே சவாலானவை. மோசமான வானிலையில், தெளிவற்ற சூழ்நிலையில் 11,500 அடி உயரத்தில் பறப்பது என்பது சுலபமல்ல. ஆயினும், பயணத்தின் பாதுகாப்பை முதன்மையாகக் கொள்ளுவதை ... |
| வேலன்:-ePub பைல்களை PDF-ஆக கன்வர்ட் செய்ய Posted: 26 Jun 2013 09:45 AM PDT e-Pub வகை பைல்களை நாம் அதற்காக உள்ள e-Pub ரீடரில்தான் படிக்க முடியும். ஆனால் எல்லோரிடமும் அந்த ரீடர் இருக்காது அல்லவா..அதனால் நம்மிடம் உள்ள e-Pub புத்தககங்களை பிடிஎப் ஆக மாற்றிக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக் குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும. இதில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களிடம் உள்ள e-Pub பைல்களை பிடிஎப்பாக மாற்றுவதற்கும் உங்கள் ... |
| Posted: 26 Jun 2013 09:45 AM PDT எல்லா கப்பல்களும் ... உன் நினைவுகளை .. தாங்கிக்கொண்டு .. இருக்கும் கப்பல் நான் .. நம் காதலுக்கு .. கண் தான் விதை .. தூவும் ... கண்ணீர் தான் உரம் போடும் ... பூவின் மீது ... வண்டு இருக்கலாம் வெடி குண்டு இருக்கமுடியுமா ...?? கஸல் 175 |
| Posted: 26 Jun 2013 09:38 AM PDT http://2.bp.blogspot.com/-ULcYiacYI9U/UcrWT_NaikI/AAAAAAAACV0/sAqGyzryjXQ/s1600/Sil.jpg 41. என்னைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களைக் கண்டு எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றி யாரேனும் பேசிக் கொண்டிருப்பார்கள் 42. தெரியாமல் கூட தவறுகள் செய்யாமல் இருந்தால் அது அழகாக வடிவமைக்கப்பட்ட இயந்திரமாகவே இருக்க முடியும். நான் மனிதன். 43. விதியை மதியால் வென்றாலும் அதுவும் விதியே. 44. ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கும் குத்திக்காட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. இதில் சரியான ஒன்றைப் பயன்படுத்துதல் ... |
| ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் Posted: 26 Jun 2013 09:24 AM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் விமானப்படை அதிகாரிகள் உள்பட 20 பேர் பலியாகினர். இவர்களில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர்களான சுதாகர், அகிலேஷ் பிரதாப் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், "ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் வழங்குவதுடன், ... |
| Posted: 26 Jun 2013 09:18 AM PDT எங்கள் அழகான தாய்நாட்டை.. நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம். என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது. எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம். விழித்தகண் விழித்ததுதான். - எங்கள் உடல் தான் கனடாவில். உயிர் எங்கள் தாய் மண்ணில்... மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை. நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை. சோகமான வாழ்க்கைதான். எங்கள் அம்மா, அப்பா, தம்பி. பெரியக்காவின் மகன்,மகள். சின்னக்காவின் மகன்.... இவர்கள் எல்லாம் எங்களை விட்டு இறைவனிடம் ... |
| Posted: 26 Jun 2013 09:03 AM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ? Posted: 26 Jun 2013 07:32 AM PDT பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்கள் ,சதிகாரர்கள் . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பணம் .இன்று மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருப்பது நம் வாழும் காலத்தின் கோலம் . நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ,நம் உண்மையான தேவையை உணர்ந்து பணத்தைப் பயன்படுத்தினால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம் . நம் கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதிக்கும் ... |
| Posted: 26 Jun 2013 06:53 AM PDT தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் சார்பில் "திருக்குறள் தேசிய நூல் மாநாடு" சென்னை மாநகரம் அம்பத்தூரில் 16 – 06 – 2013 ல் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர், செம்மொழிப் போராளி கவிஞர் க. ச. கலையரசன் அவர்களின் அழைப்பை ஏற்று பெங்களூரில் இருந்து நானும் கலந்துகொண்டேன். கவியரங்கம், கருத்தரங்கம், ஆய்வரங்கம் என்று பலபிரிவுகளில் நிறையப்பேர் சிறப்புரையாற்றினர். சென்னை இலயோலா கல்லூரியிலும், புதுவை பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றித் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் ... |
| மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு Posted: 26 Jun 2013 06:46 AM PDT வாஷிங்டன் : வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியை விட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என வாஷிங்டன் வின்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ... |
| Internet Explorer – குறுக்கு விசைகள் Posted: 26 Jun 2013 06:34 AM PDT அடிக்கடி பயன்படுத்தக் கூடிய Internet Explorer-க்கான shortcut keys என தனியே உள்ளவற்றைப் பட்டியல் செய்து தந்துள்ளேன். பல ஏற்கனவே பழக்கமான பொதுவானவை. சில Internet Explorer-க்கு மட்டுமே பயன்படக் கூடியவை. F1 – உதவி பெற F3 – search panel இயக்கவும் மூடவும் F4 – Address bar கீழ் விரிக்க F5 – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை refresh செய்திட; மீண்டும் புதியதாய் இறக்கம் செய்திட. F6 – Address bar focus செய்திட F11 – முழுத் திரைப் பயன்பாட்டினை இயக்கவும், நிறுத்தவும். Alt + ... |
| Posted: 26 Jun 2013 06:20 AM PDT அன்பு ஈகரை உள்ளங்களே, நான் புதிதாக துவங்கிய ஒரு வலைப்பூவை பற்றிய பதிவுதான் இது. இந்த வலைப்பூவில் உலகநாயகன், பத்மஸ்ரீ, சகலகலாவல்லவன், டாக்டர். கமல்ஹாசன் அவர்களை பற்றிய என்னால் முடிந்த தகவல்களை திரட்டி உள்ளேன். இந்த வலைப்பூவில் நீங்கள் உலக நாயகனின் அறிய புகைபடங்கள், உலகநாயகனின் பேட்டிகள், உலக நாயகனின் திரைப்படங்கள், உலக நாயகனின் திரைப்பாடல்கள், உலகநாயகனை பற்றிய தகவல்கள் போன்றவற்றை கண்டுகளிக்கலாம். இந்த வலைபூவிற்கான லிங்குகள் - முகப்பு பக்கம் - http://ranhasan.blogspot.com/2011/08/blog-post_3201.html வலைப்பூவின் ... |
| உங்களுக்கென்று ஒரு வெப்சைட் ஆரம்பிக்கனுமா? Posted: 26 Jun 2013 06:03 AM PDT வணக்கம் நண்பர்களே, நம்ம ஒவ்வொருத்தர் மனதிலுமே நமெக்கென ஒரு வெப்சைட்டை சிறிய அளவிலாவது ஆரம்பித்துவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கானா தேவைகள்தான் மாறுபடும், ஒருசிலர் அவர்களின் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழிலின் பெயரிலேயே வெப்சைட் ஆரம்பித்து அவர்களைப்பற்றியும் அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றியும் அதில் கொடுத்து அதிக வாடிக்கையாளர்களை கவர விரும்புவர். ஒருசிலர் அவர்களைப்பற்றியும் அவர்களின் எண்ணங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வெப்சைட் ... |
| Posted: 26 Jun 2013 06:02 AM PDT காற்றோடு பேசிய வார்த்தைகள் கரைந்து போய்விடும் என கவிதை வடித்து வைத்தேன் கவிவரிகளும் கண்ணீரில் காண்போரின் கண்களும் கண்ணீரில் கரையாத சோகமாக நின்றதே ! கவிவரிகள் கனவு என கலையும் காலங்கள் தான் இப்போது கார்கால மேகமாக கவிதை சிந்திய கண்ணீர் வரிகள் இனிமேல் காண்பதற்கு பூக்குமோ இனிவரும் காலங்கள் தான் கேட்குமோ ! கற்ற கல்வியில் கற்காத கல்வி கற்ற காலங்களில் கற்காத கல்வி கவிவரிகள் மட்டும் கற்றது எப்படியோ ? கண்கள் உப்பு மொட்டவிழ்க்க கண்ணீர் பூக்கள் ... |
| உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள் Posted: 26 Jun 2013 05:51 AM PDT உணவு கலப்படம் அதை கண்டறிக்கும் சில வழிமுறைகள் 1) பாலில் / வெண்ணை ஸ்டார்ச் சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது Tincture சேர்தல் பால் நீல நிறமாக மாறிவிடும். 2) நெய் இல் வனஸ்பதி சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய சிறிது அளவு ஹிய்ட்ரோச்ளோரிக் ஆசிட் சேர்தல் நெய் சிகப்பு நிறமாக மாறிவிடும் 3) தேன் இல் சர்க்கரை பாகு சேர்க்கபட்டு இருந்தால் அதை கண்டறிய தேன் கரண்டியில் எடுத்து அதை நெருப்பில் கட்டினால் சர்க்கரை பாகு உருகி விடும் தேன் உருகாது. 4) சர்க்கரை பாகு நீரில் கரைந்துவிடும் தேன் ... |
| தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம்? Posted: 26 Jun 2013 05:47 AM PDT இன்று பேஸ்புக் -ளில் தலைவா படம் ரத்து செய்ய சொல்லி போராட்டம் நடப்பதாக கேள்வி பட்டேன் இது உண்மை தானா?என்ன காரணம் என்று யாருக்காது தெரியுமா உறவுகளே ? ![]() |
| தந்திக்கு இணையான சேவை 10 ரூபாய்க்கு அஞ்சல் துறை அளிக்கிறது Posted: 26 Jun 2013 05:44 AM PDT தந்தி சேவை முடிவுக்கு வர உள்ள நிலையில் அதே மாதிரியான சேவையை குறைந்த கட்டணத்தில் நீண்ட காலமாக வழங்கி வருவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' தந்தி சேவையை போன்றே ''ஈ,போஸ்ட்'' என்ற மின், அஞ்சல் சேவையை வழங்கி வருகிறோம். ஒரு பக்க (ஏ4) செய்தியை அனுப்ப 10 ரூபாய் மட்டுமே கட்டணம். தந்திக்கு வசூலிக்கும் கட்டணத்தை விட இது குறைவான கட்டணமாகும். அனுப்ப விரும்பும் செய்தியை அச்சிட்டோ, எழுதியோ கொடுக்கலாம். அதனை ஸ்கேன் செய்து முகவரியில் உள்ள ... |
| உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர் Posted: 26 Jun 2013 05:43 AM PDT மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 ஆயிரம் பேர் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக ஜங்கிள் சாட்டி பகுதியில் அனைவரும் சிக்கிக் கொண்டனர். பெரு வெள்ளத்தால் அந்த பகுதி துண்டிக்கப்பட்டது. சாலையும் முற்றிலும் சிதைந்து விட்டது. இதனால் 2 ஆயிரம் பேரும் அங்கு தவித்தனர். தங்களை மீட்க மீட்பு படையை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்கள் அங்கு சிக்கி இருப்பதை மீட்பு படைக்கு எப்படி தெரிவிப்பது என்பது தெரியாமல் குழம்பினார்கள். அப்போது சுற்றுலாப் ... |
| Posted: 26 Jun 2013 05:29 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| பாம்பு தோல் பை தயாரிக்கும் முறை (வாந்தி எடுத்தா நான் பொறுப்பு இல்ல) Posted: 26 Jun 2013 04:11 AM PDT பாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் தோல் பை (Hand Bag) செய்யப்படுகின்றது என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அது எப்படி என அறியும் ஆவல் உங்களுக்கிருக்கும் என்பதால் எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதை படத்தொகுப்பாகத் தருகிறோம். அருவருப்பான படங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள். |
| Posted: 26 Jun 2013 03:30 AM PDT ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் ஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை தெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று. அவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் அனைவரின் சார்பாக. இதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு: போட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா. தலைப்புகளையும், ... |
| அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை Posted: 26 Jun 2013 03:00 AM PDT மும்பையின் புறநகர் பகுதியான பொரிவலியில் சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. 1974ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பூங்கா சுமார் 104 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குன்றுகள், ஏரிகள் சூழ்ந்த பசுமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. மும்பையின் பொழுதுப்போக்கு அம்சங்களில் ஒன்றாக கருதப்படும் சஞ்சய் காந்தி தேசிய வனவிலங்கு பூங்கா, ஆசியாவிலேயே அதிக பார்வையாளர்களை கவரும் பூங்காவாக திகழ்கிறது. ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் இந்த பூங்காவை கண்டு களித்துச் செல்கின்றனர். இந்த பூங்காவினுள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
